ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அபகரிக்கப்பட்ட வார இதழ் வெளியிட்டுள்ள செய்தி;நிலமோசடியையும் பாஜக தலைவர்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். கர்நாடக பாஜக எம்.ஏ., சோமாலிங்கப்பா, அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டது.சோமாலிங்கப்பா அரசு நிலத்தை அக்கிரமித்துள்ளார் என்று பாஜக மேலிடத்திற்கு தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது தலைமை எடுக்காது.
அதே சமயம் தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்வதையும் பாஜக நிறுத்தாது. மற்ற கட்சிக்கார்கள் ஊழல் செய்தால் அதை பாஜக எதிர்க்கும். காரணம் ஊழல் செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று பாஜக நம்புகிறது. பாஜகவின் இந்த மோசடியை புரிந்து கொண்டால் பாஜகவின் ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அபகரிப்பு வார இதழின் மேற்கண்ட செய்தியை படித்த நாம், நமக்குத் தெரிந்த உண்மையை மையமாக கொண்டு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று எழுதிப்பார்த்தோம். அதை நீங்களே இப்போது படியுங்கள்;அபகரிப்பையும் அண்ணனையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். அண்ணன் முதலில் தமுமுகவுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டு சொத்துக்களை அபகரித்தார். பின்பு பாக்கருக்கு சொந்தமான அமைப்பை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் பாக்கருக்கு வழக்கு வகையில் பல்லாயிரம் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. பாக்கருக்கு மட்டுமல்ல. அபகரித்த அமைப்பை தக்கவைப்பதற்காக அண்ணன், அழைப்புப்பணிக்காக அப்பாவி மக்கள் தந்த பணத்தை செலவு செய்து இழப்பை ஏற்படுத்தினார்.
அண்ணன், பாக்கரின் அமைப்பை அக்கிரமித்துள்ளார் என்று அண்ணன் ஜமாஅத் மேலாண்மைக்குத் தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது மேலாண்மை எடுக்காது. அதே சமயம் தன்னை தூய்மையான இயக்கம் என்று சொல்வதையும் அண்ணன் ஜமாஅத் நிறுத்தாது. மற்றவர்கள் அபகரிப்புச் செய்தால் அதை அண்ணன் ஜமாஅத் எதிர்க்கும். காரணம் அபகரிப்பு செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அண்ணன் ஜமாஅத் நம்புகிறது. அண்ணன் ஜமாத்தின் இந்த மோசடியை புரிந்து கொண்டால், அண்ணன் ஜமாத்தின் அபகரிப்பு-ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
என்ன சகோதரர்களே! வர வர நாட்டுல அபகரிப்பு பத்தி யார் எழுதுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சுதானே!
********************************************************************************************
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
அபகரிக்கப்பட்ட வார இதழ் வெளியிட்டுள்ள செய்தி;
நிலமோசடியையும் பாஜக தலைவர்களையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். கர்நாடக பாஜக எம்.ஏ., சோமாலிங்கப்பா, அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் அரசுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டது.சோமாலிங்கப்பா அரசு நிலத்தை அக்கிரமித்துள்ளார் என்று பாஜக மேலிடத்திற்கு தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது தலைமை எடுக்காது.
அதே சமயம் தன்னை ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்வதையும் பாஜக நிறுத்தாது. மற்ற கட்சிக்கார்கள் ஊழல் செய்தால் அதை பாஜக எதிர்க்கும். காரணம் ஊழல் செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று பாஜக நம்புகிறது. பாஜகவின் இந்த மோசடியை புரிந்து கொண்டால் பாஜகவின் ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
அபகரிப்பு வார இதழின் மேற்கண்ட செய்தியை படித்த நாம், நமக்குத் தெரிந்த உண்மையை மையமாக கொண்டு இப்படி எழுதினால் எப்படி இருக்கும் என்று எழுதிப்பார்த்தோம். அதை நீங்களே இப்போது படியுங்கள்;அபகரிப்பையும் அண்ணனையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. ஆம். அண்ணன் முதலில் தமுமுகவுக்கு சொந்தமான முஸ்லிம் டிரஸ்டு சொத்துக்களை அபகரித்தார். பின்பு பாக்கருக்கு சொந்தமான அமைப்பை அபகரித்து, தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்து கொண்டார். இதனால் பாக்கருக்கு வழக்கு வகையில் பல்லாயிரம் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டது. பாக்கருக்கு மட்டுமல்ல. அபகரித்த அமைப்பை தக்கவைப்பதற்காக அண்ணன், அழைப்புப்பணிக்காக அப்பாவி மக்கள் தந்த பணத்தை செலவு செய்து இழப்பை ஏற்படுத்தினார்.
அண்ணன், பாக்கரின் அமைப்பை அக்கிரமித்துள்ளார் என்று அண்ணன் ஜமாஅத் மேலாண்மைக்குத் தெரியும். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் அவர்களது மேலாண்மை எடுக்காது. அதே சமயம் தன்னை தூய்மையான இயக்கம் என்று சொல்வதையும் அண்ணன் ஜமாஅத் நிறுத்தாது. மற்றவர்கள் அபகரிப்புச் செய்தால் அதை அண்ணன் ஜமாஅத் எதிர்க்கும். காரணம் அபகரிப்பு செய்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று அண்ணன் ஜமாஅத் நம்புகிறது. அண்ணன் ஜமாத்தின் இந்த மோசடியை புரிந்து கொண்டால், அண்ணன் ஜமாத்தின் அபகரிப்பு-ஊழலுக்கு எதிரான பேச்சை மக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
என்ன சகோதரர்களே! வர வர நாட்டுல அபகரிப்பு பத்தி யார் எழுதுறதுன்னே விவஸ்தை இல்லாம போச்சுதானே!
0 comments:
Post a Comment