புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி
வலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை!
புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்
ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.
''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.
இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
அரசு மனம் வைக்கட்டும்!
- பா.பிரவீன்குமார்

************************************************************************
பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே - 45: 19.11.86
கைது செய்யப்பட்ட செய்தி கொழும்பு நகரில் படுவேகத்தில் பரவியது!
பொதுவாகப் புது வருடம் அன்றுதான் அங்கே இரவெல்லாம் கொண்டாட்டமாக இருக் கும். சனிக்கிழமை இரவை ஒரு புது வருடம்போல, கொழும்பு நகரில் சிங்களர்கள் குடித்துக் குதித்துக் கோலா கலமாக, போராளிகள் கைதான செய்தி யைக் கொண்டாடினார்கள் - 'சியர்ஸ் டு ராஜீவ் காந்தி’, 'சியர்ஸ் டு எம்.ஜி.ஆர்.’ என்ற கோஷங்கள் பல இடங்களில்!
விடுதலைப் புலிகள் மீது எடுத்த நடவடிக்கைபற்றி எப்படி 'ரியாக்ட்’ செய்வது என்று புரியாமல் தமிழ்நாடு திணறிக்கொண்டு இருந்தது! ஆனால், ஒரு விஷயம்... சூளைமேடு சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு சூழ்நிலையை உருவாக்கத் திட்டமிட்டு முயற்சிகள் செய்யப்பட்டது என்னவோ உண்மை!
சில பெரிய போலீஸ் அதிகாரிகள், 'இவர்களை எல்லாம் ஒரே ரவுண்டில் பிடித்து உள்ளே தள்ளிவிடுவோம்’ என்று நிருபர்களிடம் மார் தட்டியதும் உண்டு. சில பத்திரிகையாளர்களிடம் புலிகளுக்கு எதிரான மக்கள் கருத்து உருவாக்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். 'எதிரான கருத்து உருவாகிவிட்டது’ என்ற பிரமையைத் தோற்று வித்த பிறகே போலீஸ் கைது நடவடிக்கையில் இறங்கியது!
கண்டனமே இல்லை!
ஆரம்பத்தில் போலீஸ் நடவடிக்கையைக் கண்டிக்கவே ஆள் இல்லை. அமிர்தலிங்கத்தின் 'தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி’யின் கூட்டம் அவசர அவசரமாகக் கூட்டப்பட்டது. மூன்று மணி நேரம் காரசாரமான விவாதம் நடந்தது. ''புலிகளைக் கைது செய்தது, காட்டிக்கொடுத்த செயல்... அவர்கள் இனி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பார்களா? அவர்கள் இல்லாமல் நாம் இங்கே உட்கார்ந்து எதைச் சாதிக்க முடியும்?'' என்று ஆத்திரப்பட்டவர்களை அடக்கினார் அமிர்தலிங்கம். ''இந்திய அரசுக்கு எதிராக மூச்சுவிடக் கூடாது... கப்சிப்!'' என்று சொல்லிவிட்டார் அவர். பொறுப்பான அமிர்தலிங்கம் கட்சியே தம்பிகளுக்குப் பரிந்து வரத் தயாராக இல்லை!
தமிழ்நாட்டில் தி.மு.க. இந்தி எதிர்ப்பில் சிக்கி இருக்கிறது. ஆகவே, அங்கேயும் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ஈழப் போராளிகள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
இந்திய அரசு ஒரு சமரசத் திட்டத்தை ஏற்க விடுதலைப் புலிகளை வற்புறுத்தி வருகிறது. அந்தத் திட்டத்தில் உருப் படியாக எதுவும் இல்லை என்ற சோர்வு புலிகள் கோஷ்டிக்கு. சமீபத்தில், மத்திய அமைச்சர் ப.சிதம் பரம் சென்னை வந்தபோது, தன்னை சந்திக்கப் போராளிகளின் தலைவர்களை அழைத்தார். காலை யில் இருந்து காத்திருந்தார் சிதம்பரம். இரவுதான் அவரைச் சந்திக்கத் தலைவர்கள் வந்தார்கள். 'இனி பேசுவதற்கு என்ன இருக்கிறது?’ என்பதே அவர்கள் தயக்கத்துக்குக் காரணம். பொறுமை இழந்த சிதம்பரம், அவர்களைப் பார்த்து ''உங்கள் மனத்தில் என்னதான் இருக்கிறது? இனிமேல் பேச எனக்கு நேரம் இல்லை... காலை ஃப்ளைட்டில் டெல்லி போகிறேன்!'' என்று சொல்லி, திருப்பி அனுப்பிவிட்டார். போராளிகளைப் பணிய வைக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கைது ஆனபோது...
சூளைமேடு சம்பவத்தை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு, போராளிகள் இருக்கும் இடங்களைப் பட்டியல் எடுத்தது போலீஸ். பிரபாகரன் தலைவராக உள்ள எல்.டி.டி.ஈ. அமைப்பிடம் நேரில் வந்து முகவரிகளைப் பெற்றது போலீஸ். தாராளமாகக் கொடுத்தார்கள்.
சனிக்கிழமை போலீஸ் வீட்டில் நுழைந்தபோது, எல்லா ஆயுதங்களையும் போலீஸிடம் ஒப்படைக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டார். முதலில், ஒரு சில ஆயுதங்களைத்தான் அவரது போராளிகள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 'பிரபாகரனுக்கு எதிரிகள் அதிகம். பாதுகாப்புக்குத் தேவை ஆயிற்றே’ என்று அந்த போராளிகள் கவலைப்பட, ''ஆயுதங்கள்தான் நம்மைப் பாதுகாக்கும் என்பது வீரர்கள் சொல்லக்கூடிய வார்த்தை அல்ல!'' என்று சொல்லி, ஆயுதங்களைத் திரட்டி போலீஸில் ஒப்படைத்தார் பிரபாகரன். ''பிரபாகரனே தமிழக போலீஸ் அதிகாரிபோல செயல்பட்டார்...'' என்றார் ஒரு போராளி வியப்புடன்!
எல்லா இயக்கத்தினரும் 'விடுதலைப் புலிகள்’ என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், அந்தப் பெயருக்கு அசல் உரிமையாளர்கள் பிரபாகரன் இயக்கத்தினர்தான். கட்டுப் பாடான பிரபாகரன் இயக்கத்தினர், தமிழ் நாட்டில் இதுவரை ரகளைகள் எதுவும் செய்ததாகக் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், தன் இயக்கத்துக்கும் சேர்த்தே கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தவர்தான் பிரபாகரன். அண்ணா நகரில் உள்ள பிரபாகரனின் நண்பர் ஒருவர் சில நாட்கள் முன் அவரைப் பார்க்க வந்தபோது, ''பஸ்ஸில் மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் தெரியுமா? சூளைமேட்டில் ரகளை பண்ணிய விடுதலைப் புலி பிரபாகரனை போலீஸ் கைது செய்துவிட்டதாமே? என்று பேசுகிறார்கள்...'' என்று கூறினார்.
''எங்கள் இயக்கத்தினர் தஞ்சம் புகுந்த இடத்தில் கண்ணியம் காப்பவர்கள்...'' என்று பல முறை பிரபாகரன் குறிப்பிட்டு இருக்கிறார். பிரபாகரனே அதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு - முதன் முதலாக பாண்டிபஜாரில் நடந்த ஒரு கோஷ்டி மோதலில் 'விடுதலைப் புலி’ என்பது தெரியாமல், இவரை சென்னை நகர போலீஸ் கைது செய்தது. போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் அடிக்கப்பட்டார். பிரபாகரன் இடுப்பில் 'லோட்’ செய்யப்பட்ட பிஸ்டல் இருந்தது. லாக்-அப்பில் அவரைத் தள்ளும்போது, இடுப்பில் இருந்த பிஸ்டலை அவரே போலீஸிடம் ஒப்படைத்தார். அதிகாரிகள் திகைத்தார்கள்!
'வேறு அமைப்பைச் சேர்ந்த போராளிகள் சில சமயம் தங்களது துப்பாக்கிகளை நகரில் சில பேரிடம் விற்றபோது, அதைக் கண்டுபிடித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்துக் கைப்பற்றச் செய்திருக்கிறது பிரபாகரன் அமைப்பு. ஆகவே, இவர்களால் மக்கள் அமைதிக்குக் குந்தகம் எதுவும் ஏற்பட்டது கிடையாது.
அவமானம்!
தாங்கள் கைது செய்யப்பட்டதையும், காவலில் வைக்கப்பட்டு இருப்பதையும்கூட போராளிகளின் தலைவர்கள் பெரிதாக நினைக்கவில்லை. போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட விதம்தான் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ''நேராக ஐ.ஜி. அலுவலகத்துக்கு எங்களை அழைத்துச் சென்று இருக்கலாம். உள்ளூர் காவல் நிலையத்தில் ரவுடிகளை ஆஜர்படுத்துவது போல எங்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டுமா?'' என்று மனம் வருந்தினார் ஒரு போராளித் தலைவர். அத்தனை பேருடைய புகைப்படங்களும் போலீஸிடம் ஏற்கெனவே இருக்க, இவர்களை எதற்கு அங்கே ஒரு முறை படங்கள் எடுத்தார்கள் என்பதும் ஒரு கேள்விக்குறி. பிரபாகரனை பல போஸ்களில் படம் எடுத்தார்கள். எதற்கு என்று தெரியாமல் அவர் ஆச்சர்யப்படுகிறார்.
ஒரு காலத்தில் பிரபாகரன் எப்படி இருப்பார் என்று தெரியாமல் சங்கடப்பட்டது உண்டு இலங்கை அரசு. பிரபாகரன் புகைப்படத்தைக் கவலைப்படாமல் முதலில் இலங்கை அரசுக்குக் கொடுத்து உதவியது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே தமிழக போலீஸ் மீது சொல்லப்படுவது உண்டு.
இது தவிர, தலைவர்களுக்குக் காவல் நிலையங் களில் உரிய மரியாதை தரப்படவில்லை. 'ஈராஸ்’ அமைப்பு பாலகுமாருக்கு அன்று முழுவதும் குடிக்க தேநீர்கூடத் தரப்படவில்லை.
பிரபாகரன் பேட்டி
''எனக்கு மனவேதனையைவிட இப்படியும் செய்வார்களா என்ற ஆச்சர்யம்தான் ஏற்பட்டது. அன்று போலீஸ் நடத்திய விதம் மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டது. இந்தியாவிலேயே பண்பாட்டுக்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் இடம் தமிழகம். தமிழகத்தின் பண்பாட்டைக் கோரப்படுத்திவிட்டது போலீஸ்...'' என்றார் பிரபாகரன். அவர் சொன்னார்... ''இனிமேல் சென்னை நகரில் எங்களுக்கு வீடுகள் வாடகைக்குத் தர மக்கள் முன்வருவார்களா? அந்த அளவுக்கு போலீஸார் அவமானப்படுத்திவிட்டனர். கொலைகார சிங்கள ராணுவத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கும் எங்களை இப்படிக் கேவலமாக நடத்தி இருக்கலாமா? இந்த வடு எங்கள் மனத்தில் மிக ஆழமாகப் பதிந்திருக்கும். எத்தனை காலமானாலும் நீங்காது.
முதலமைச்சரை சந்தித்து நடந்ததைச் சொன் னோம். வருந்தினார். இனிமேல் அவ்வாறு நடக் காது பார்த்துக்கொள்ளப்படலாம். ஆனால், அவமானம் என்பது ஒரு முறை இழைக்கப்பட்டால் போதாதா?
தமிழ் ஈழப் பிரச்னையில் தீர்வு காண வேண்டு மானால், எங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்பதை மறுத்துவிடக் கூடாது. ஒருவேளை எங்களை மிரட்டிப் பணியவைக்க இவ்வாறு நடத்தப்பட்டதாக இருந்தால் - எங்கள் கொள்கையில் உறுதியாக இருப் போம் என்பதே எங்கள் பதில்...'' - என்று பிரபாகரன் உணர்ச்சிவசப்பட்டார்.
''எங்கள் ஈழ மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பு இருக்கும் சூழ்நிலைகூட இல்லை என்றால், அந்த சமரசத் தீர்வுக்கு எப்படி ஒப்புக்கொள்வது? ஜெயவர்த்தனாவை வழிக்குக்கொண்டு வர முடியாமல், எங்கள் மீது மிரட்டல் நடவடிக்கை எடுப்பது பலன் தராது. இந்திய அரசு தனது பலவீனத்தை வெளிக்காட்ட முடியாமல் எங்களைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி சமரசத்துக்குக் கை கொடுக்க முயற்சி செய்யப் பார்க்கிறதா? இப்போது எடுத்த நடவடிக்கை ஜெயவர்த்தனாவைத்தான் திருப்திப்படுத்தும்...'' என்றார் பிரபாகரன்.
பெங்களூரில் தெற்காசிய நாட்டுத் தலைவர்களின் மாநாடு முடியும் வரை தாங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறார் பிரபாகரன். காவல் நீடிக்கப்பட்டால்...?
இந்தக் கேள்விக்கு பிரபாகரன் கம்பீரமான புன்னகையையே பதிலாக அளித்தார்.
போராளிகள் அவமானப்படுத்தப்பட்டதால், இலங்கை அரசுக்குத் திடீர் துணிச்சல் ஏற்பட்டு இருப்பதாக பிரபாகரன் கூறினார். ''ஒரு மாதமாக யாழ் பகுதியில் இலங்கை ராணுவம் குண்டு வீசவில்லை. நாங்கள் கைது செய்யப்பட்ட மறுநாளில் இருந்து குண்டு வீச்சை ஆரம்பித்துவிட்டார்கள். கொலை வெறியோடு தமிழர்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடக்கிறது... இது இலங்கை அரசு, இந்திய அரசை அவமதிக்கும் செயல் அல்லவா?'' என்று கேட்டார் பிரபாகரன்.
ஜெயவர்த்தனா ரகசியத் திட்டம்...
மேலோட்டமாகப் பார்க்கும்போது தெரியாவிட்டாலும், பிரபாகரன் உள்ளுக்குள் வேதனைப்படுகிறார். 'பிரபாகரன் இங்கே தானாக வரவில்லை... அரசு அழைத்துத்தான் வந்தார்’ என்பதை ஒரு போராளி நினைவுபடுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் இன்னொரு செய்தி பரவியிருக்கிற நேரம் இது. பிரபாகரனுடன் சமரசம் பேச 'தளபதி கிட்டு’ மூலம் ரகசியமாகத் தொடர்புகொள்ள முயன்று வருகிறாராம் ஜெயவர்த்தனா. 'யாழ்ப்பாணத்துக்கு முதல மைச்சர் ஆகத் தயாரா?’ என்று ஜெயவர்த்தனா கேட்டு அனுப்பியதாகக் கேள்வி. பிரபாகரன் இதற்கெல்லாம் உடன்படவில்லை. தூக்கி எறிந்தார். ''இப்படிப்பட்ட ஒரு மாபெரும் தலை வனை சாதாரணக் காவல் நிலையத்துக்கா அழைத்துப் போய் ஒரு நாள் முழுக்க உட்கார வைப்பது?'' என்று கேட்டார் ஓர் ஈழப் பிரமுகர்.
பேச்சுவார்த்தை தொடருமா?
இனி சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குப் போராளிகள் - குறிப்பாக பிரபாகரன் ஒத்துழைப்பு தருவாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. பிரபாகரன் இயக்கத்தினர், சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் முகாம்களைக் கலைத்துவிட்டு யாழ் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். எந்தக் கட்டாயத்துக்கும் லட்சியத்தை விலை பேச முடியாத நெஞ்சுறுதி மிக்கவர் பிரபாகரன். மற்ற பல தலைவர்களும் அப்படியே!
இந்த நிலையில், மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? மாநில அரசு அதற்கு எப்படி துணை போகப்போகிறது?
- கழுகு
மற்றும் நமது விசேஷ நிருபர்
சேகரித்த தகவல்கள்
*********************************************************************************
கயிறே, என் கதை கேள்!
காவு வாங்கும் கையெழுத்து!
இலங்கையில் நான் இருந்தபோது போலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. காரணம், அங்கே அந்தக் கட்டமைப்புகள் அரிது. ஆனால் ராஜீவ் வழக்கில் சிக்கி, அனுதினமும் போலீஸின் கையில் நான் அனுபவித்த சித்ரவதைகளும், ஏறி இறங்கிய நீதிமன்ற அவஸ்தைகளும் கொஞ்ச
நஞ்சம் அல்ல. 'குற்றம் சாட்டுபவர்கள் அதற்குரிய தகுந்த, நம்பகமான உண்மைகளை சாட்சியச் சான்றுகளை முன்வைத்து நிரூபணம் செய்ய வேண்டும்!’ என்பதுதான் உலகம் முழுக்கப் பின்பற்றப்படும் குற்ற நடைமுறைச் சட்டங்களின் அடிப்படைக்கூறு! ஆனால், எமது விடயத்தில் இந்த அதிமுக்கியமான மனித சமூக விழுமியத்தினைப் பாதுகாக்கும் இந்த சட்டக் கோட்பாடு, கருணை இன்றி தவறாகக் கையாளப்பட்டது. சட்டக் கோட்பாடு மீறப்பட்டதற்கும், அதன் குரூர நாக்குகள் எங்களைக் கொத்தியதற்கும் காரணம், எம்மையோ அல்லது வேறு யாரையோ தண்டித்துவிட வேண்டும் என்ற அதிகாரப் பேராசைதான்! ஒரு மனிதன் தான் செய்யாத தவறுக்கு அநேகமான சூழ்நிலைகளில் சாட்சிய சான்றுகள் காட்ட முடியாது என்பது இயற்கையின் நியதி மட்டும் அல்ல; அறிவியல், தர்க்கவியல் உண்மையும்கூட!
குறிப்பிட்ட குற்றம் நடந்த இடத்தில் நான் இல்லை என்றும், அந்த நேரத்தில் நான் என் வீட்டில்தான் இருந்தேன் என்றும் நிரூபணம் செய்ய என் வீட்டார்தான் சாட்சியம் சொல்ல வேண்டும். ஆனால், என் வீட்டாரையே குற்றவாளிப் பட்டியலிலும் அரசுத் தரப்பு சாட்சிப் பட்டியலிலும் சேர்த்துவிட்டு, 'உன்னை நிரபராதி என நிரூபி’ என்றது சட்டம். யாரைப் பிடித்து நான் நிரூபிக்க முடியும்? நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. நாட்டையே குலுங்கவைத்த கொலை. தமிழகத்தின் சட்ட நிலைமைகள், நீதிமன்ற விவகாரங்கள், போலீஸ் நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாது. சிக்கிச் சின்னாபின்னமாகி, மரணத்தின் வாசலை அனுதினமும் தொட்டுத் திரும்பிய வேளையில்தான், போலீஸ் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பது புரியத் தொடங்கியது.
அதில், அதிகாரிகளின் குரூரச் சித்ரவதை ஒன்றை உங்களிடம் அவசியம் சொல்ல வேண்டும். ஒப்புதல் வாக்குமூலத்தில் என்னிடம் வற்புறுத்திக் கையெழுத்து வாங்குவதற்காக அதிகாரிகள் இந்தச் சித்ரவதையை என் மீது பாய்ச்சினார்கள். அதாவது, ஒரு மேஜை மீது என்னைக் குப்புறத் தள்ளி, இரு பாதங்களும் வெளியே தொங்கும்படி படுக்கவைத்து, இரு கால்களையும் கட்டுவார்கள். பின்னர் என் மீது நாலைந்து பேர் ஏறி அமர்ந்துகொள்ள, குதியில் (பாதத்தில்) கட்டையால் தொடர்ச்சியாகப் பலமாக அடிப்பார்கள். உச்சி மண்டையே உடைந்து சிதறும் அளவுக்கு வலி பெருக்கெடுக்கும். இன்னும் ஓர் அடி அடித்தால் உயிர் நின்றுவிடும்போல் தோன்றும். இந்தச் சித்ரவதையின் விளைவு என்ன என்றால், குறைந்தது மூன்று நாட்களுக்கு எழுந்து நிற்கவே முடியாது. காலைத் தரையில் வைத்தால் உயிரே போய்விடும். அது மட்டும் அல்ல... இந்த சித்ரவதைக்கு அடிக்கடி ஆளாகுபவர்களால் ஜென்மத்துக்கும் ஓடவோ, வேகமாக நடக்கவோ முடியாது. பாத நரம்புகள் முழுமையாக செயல் இழந்துவிடும்.
இந்தச் சித்ரவதையின் இன்னொரு பகுதியாகத் தலைகீழாக அந்தரத்தில் கட்டித் தொங்கவிட்டு அடிப்பார்கள். பின்பக்கம் பழுத்து வீங்கிவிடும். அன்றாடக் கடன்களைக் கழிக்கக்கூட திண்டாடித் தவிக்க வேண்டிய நிலையாகிவிடும். ஒருவரை அடிக்கும்போது, மற்ற ஓர் எதிரியை அழைத்துவந்து காட்டுவார்கள். அப்போது ஏற்படும் பீதி, அடி வாங்குவதைவிடக் கொடுமையானது. என்னைத் தலைகீழாகக் கட்டும்போது மரண ஓலமிடத் தோன்றும். ஆனாலும், பல்லைக் கடித்தபடி அடக்கிக்கொள்வேன். காரணம், என் அலறல் என் கர்ப்பிணி மனைவிக்குக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக. ஆனால், நகக் கணுவின் இடுக்கைக்கூட ஆராய்ந்து கண்டுபிடித்துவிடும் அதிகாரிகளுக்கு நான் அலறாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. தலைகீழாகத் தொங்கவிட்டு, அடி, உதைகளை அரங்கேற்றியபடியே, 'உன் எதிரே யார் நிக்கிறதுன்னு பார்’ என்றார்கள். அடி, உதையின் மயக்கமும், தலைகீழாகத் தொங்கும் அவஸ்தையும் கண்களைக் கிறுகிறுக்க வைத்திருக்க, எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. விம்மி வெடிக்கும் அழுகுரல் கேட்டு, கண்களைத் திறந்தால் எதிரே என் கர்ப்பிணி மனைவி நளினி.
'என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள்... கொல்லுங்கள். ஆனா, அவளை அனுப்பிடுங்க சார்... அவளால தாங்க முடியாது!’ எனக் கதறினேன். அந்தக் கதறல் அதிகாரிகளுக்குப் பிடித்திருந்தது. நளினியை பார்க்கவைத்தபடியே தொடர்ந்து என்னை அடித்தார்கள். கதறக் கதற எனது விரல்களைப் பின்னோக்கி வளைத்தார்கள். இதேபோல் எந்தப் பக்கம் எல்லாம் வளைக்க முடியாதோ, விரிக்க முடியாதோ... அந்தப் பக்கம் எல்லாம் உறுப்புகளை வளைத்து அலற வைத்தார்கள்.
என் விரல் இடுக்குகளில் குச்சிகள், பென்சில்கள், பேனாக்களைவைத்து புண்ணாகும் வரை நெரித்தார்கள். இந்தச் சித்ரவதைகளை நளினிக்கும் செய்தார்கள். சிமென்ட் தரையில் சிறு கற்களைத் தூவி அதன் மீது முட்டிபோட்டு, மணிக்கணக்கில் கைகளை முன்பே நீட்டியபடி நிற்க வைப்பார்கள். கற்கள் முழங்கால்களை ரத்தமாக்க, கைகள் ஒடிந்துவிடுவதுபோல் வலிக்கும். முழங்காலை ஒரு பாகை கோணத்தில் மடித்து கைகளை முன்பே நீட்டிய வண்ணம் (நாற்காலி வடிவில்) மணிக்கணக்கில் நிற்க வைப்பார்கள். ஆரம்பத்தில் ஏதோ உடற்பயிற்சி போலத்தான் இருக்கும். ஆனால், நேரம் ஆக ஆக நரம்புகளே அறுந்துபோகிற அளவுக்கு வலி எடுக்கும். சிறிது நேரத்திலேயே நிற்க முடியாமல் கீழே விழுந்துவிடுவேன். அதற்காகவே காத்திருந்தவர்களைப்போல் சரமாரியாகத் தாக்குவார்கள்.
இன்னொரு விசாரணை அதிகாரிக்கு சினிமாக்களில் வரும் சண்டைக் காட்சிகளைப்போல் செய்து காட்ட ஆசை. அதற்காக என்னை நிலத்தில் அமரவைத்து, அவர் ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்துகொள்வார். அவர் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதே, 'எங்கிட்டேயே பொய் சொல்றியா நாயே...’ என்றபடியே நாற்காலியைச் சுழற்றிச் சுழற்றி காலால் உதைப்பார். முடிவில், பெரிதாக எதையோ சாதித்துக் கிழித்துவிட்டவரைப்போல், 'எப்படி நம்ம அடி?’ என என்னிடமே கருத்துக் கேட்பார்.
விசாரணை அலுவலகத்தில் வெறும் ஆறு அடி நிலப்பரப்பில்தான் என் வாழ்க்கை. புரண்டு படுக்கக்கூட இடம் இருக்காது. போய்ச் சேரும் காலத்தில்தான் ஆறு அடி நிலம் தேவை என்பார்கள். வாழும் காலத்திலேயே அந்த அவஸ்தையை அனுபவித்தவன் நான். மூன்று பக்கம் இரும்பு அலமாரியின் கதவுகளும், ஒரு பக்கம் நாற்காலியும் போடப்பட்டு இருந்தன. தொடர்ந்து 60 நாட்களாக அதே குறுகிய இடம்தான்... அதே அவல வாழ்க்கைதான்!
கையில் விலங்கு மாட்டி, அதற்கு ஒரு தொடர்பு சங்கிலி போட்டு அருகில் உள்ள நாற்காலியின் காலில் கட்டி வைத்திருந்தனர். சாப்பிடும் போதுகூட என் இரு கைகளிலும் அந்த விலங்கு அப்படியே இருக்கும். 15 நாட்கள் வரை என்னைக் குளிக்கக்கூட அனுமதிக்கவில்லை.
எங்களுக்கான சித்ரவதைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்ல ஒரே ஆதாரம் கோடியக்கரை சண்முகம். ராஜீவ் கொலை வழக்கில் தானாக முன்வந்து சரண் அடைந்த தொழில் அதிபர் அவர். 14.6.91 அன்று முதல் நாங்கள் அவருடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். சண்முகம் மிகுந்த பணக்காரர். அரசியல்வாதிகள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர் மர்மமான முறையில் 19.7.91 அன்று இறந்துபோனார். அவர் இறந்த பின்னணி குறித்து அப்போதே மீடியாக்கள் பல விதமான சந்தேகங்களையும் பட்டியல் இட்டன.
சண்முகம் மரணத்துக்குப் பின்னர் அவர் குடும்பத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வீரசேகரன் அவர்கள் மீது தடா வழக்கின் கீழ் பொய் வழக்குப்போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மிகவும் பண வசதியும், செல்வாக்கும்கொண்ட சண்முகத்துக்கும், அவருக்காக ஆஜரான ஒரு வழக்கறிஞருக்குமே இப்படியான கதி என்றால், என்னைப்போன்ற வெகு சாதாரண ஜீவன்களை எல்லாம் ஒரு புழுவுக்கு நிகராகத்தானே அதிகாரிகள் பார்த்திருப்பார்கள்?!
60 நாள் போலீஸ் காவல் முடிவதற்கு முதல் நாள் ஒப்புதல் வாக்குமூலம் எனப்படும் தாள்களில் என்னிடம் கையெழுத்து வாங்க வந்தார்கள். அதாவது, அடிக்க வேண்டிய அத்தனைவிதமான அடிகளையும் அடித்து, உடலின் அத்தனை பாகங்களையும் சொரணை இழக்கவைத்து, 'உயிர் மட்டுமே மிச்சம்’ என்கிற நிலையில் 8.8.91 அன்று மாலை 6.30 மணி அளவில் ஓர் அதிகாரி முன்னிலையில் என்னைக் கொண்டுபோய்விட்டனர். என்னை எதிரே நிற்க வைத்துவிட்டு, அவர் வெள்ளை பேப்பரில் அவர் மனதுக்குத் தோன்றிய கற்பனைகளை எல்லாம் எழுதினார். எழுதிய பகுதிகளை என்னிடம் காட்டாமல் மறைத்தபடி என்னிடம் கையெழுத்து கேட்டார். அவர் எழுதியதை என்னிடம் காட்டாவிட்டாலும், என்னை வசமாகச் சிக்கவைக்கும் விதமாகவே அது எழுதப்பட்டது என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அதனால், கையெழுத்துப்போட மறுத்துக் கதறினேன்.
கேட்கக் கூசும் ஆபாச வார்த்தைகளால் என் மனைவியையும், தாயாரையும் கேவலப்படுத்திப் பேசினார்கள்.
'இத்தனை நாள் அடி வாங்கியும் நீ திருந்தலையா... உன்கிட்ட எப்படிக் கையெழுத்து வாங்குகிறேன் பார்!’ என்றபடி என்னைத் தனி அறைக்கு அனுப்பிவைத்தார். மீண்டும் இரவு 8 மணிக்கு என்னை அழைத்தார். அந்த அறையில் அவரது கையின் அருகில் ஏற்கெனவே என்னை அடித்து சிதைந்துபோன ஒரு தடியும், ஒரு புதிய தடியும் வைக்கப்பட்டு இருந்தன. அவருடன் என்னை மிகக்கொடுமையாக அடித்த இன்னொரு அதிகாரியும் உடன் இருந்தார். அவர்களின் விஷமத்தனமான பார்வையே அவர்கள் நிகழ்த்தப்போகும் பேராபத்தை எனக்குப் புரியவைத்தது. கையெழுத்துப் போடாவிட்டால், அந்த இடத்திலேயே என்னைக் கொலை செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்.
'கையெழுத்துப் போடுறியா... இல்லை, உயிரை விடுறியா?’ என உக்கிர வெறியோடு கேட்டார்கள். உயிரை விடுவதற்கா இத்தனை நாட்கள் இவர்களிடம் உதை வாங்கிக்கிடந்தேன்? சிறு குழந்தையாக நளினியின் வயிற்றில் வளரும் என் தளிரின் முகத்தை எப்போது பார்ப்பேன்... சிறைக் கொட்டடியில் இருந்து என் தளிரை வெளியே அனுப்பிவைக்கும் வரை எப்படி என் உயிரை இழப்பேன்? என் குழந்தையின் முகத்தைக் காணும் வரை என்னைக் கொன்றுவிடாதீர்கள் என்று அவர்களிடம் எப்படிச் சொல்வேன்? இனியும் தயங்கினால், கோடியக்கரை சண்முகத்துக்கு ஏற்பட்ட சாவே எனக்கும் ஏற்படும் என்பது உறுதியானது.
என் வாரிசின் முகம் பார்க்காமல் உயிரைவிட எனக்கு விருப்பம் இல்லை. அதேநேரம், அவர்கள் அடித்தே கொன்றுவிடுவார்களே என்கிற பயத்துக்கும் பதில் இல்லை. என்னைக் காத்துக்கொள்ள அப்போது எனக்கு இருந்த ஒரே வழி... அவர்கள் சித்திரித்திருந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுவதுதான். 'ஏதோவொரு ஆபத்து என்னைச் சூழ்கிறது’ என்கிற நடுக்கத்துடனேயே கைகள் துடிக்கக் கையெழுத்துப் போட்டேன். எட்டு வருடங்களுக்கு முன்னால் என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நான் போட்ட கையெழுத்தே, என் உயிரைக் காவு வாங்கும் சாட்சியாக மாறிப்போனதுதான் என் ஜென்மத் துயரம்!

- காயங்கள் ஆறாது
0 comments:
Post a Comment