ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
நடைபெறவுள்ள உள்ளாட்சித்தேர்தலில் தமிழகம் காணாத அளவில் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், பாமக ஆகியவைகள் தனித்து போட்டியிடுகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, மமக, புதியதமிழகம், கம்யூனிஸ்டுகள் இப்பது அதிமுக கூட்டணியில் இல்லாமல் தனித்து நிற்கின்றன. இதில் மமக அதிமுக கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்ட காரணத்தை அபகரிக்கப்பட்ட வார இதழ் உணர்வு ஆய்வு[?] செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டு காரணங்களை அடுக்கியுள்ள உணர்வு, இறுதியாக அண்ணன் பணியில் ஒரு அசத்தல் முடிவை சொல்லியுள்ளது. அதை படித்து விட்டு சிரித்து உங்கள் வயிறு வலித்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
இதையெல்லாம் விட ஜெயலலிதா மமக மீது அதிருப்தி கொண்ட ஒரு முக்கிய விஷயம் உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு ஆகும். அதிமுக ஆட்சியமைத்தவுடன் அதில் இடம்பெற்ற ஒரு கூட்டணிக் கட்சியான மம கட்சி செய்த அராஜக ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகப்பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆட்சியமைத்த சில நாட்களிலேயே ஆளும் கட்சிக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியது இவர்களின் ஆக்கிரமிப்புச் செயல். இனி இவர்களை வைத்திருந்தால் ஆட்சிக்கே களங்கத்தை உண்டாக்கி விடுவார்கள்; என நினைத்துதான் இவர்கள் கழற்றி விடப்பட்டார்கள் என பரவலாக தகவல்கள் கிடைக்கின்றன.
என்ன படித்தீர்களா? அதிமுக கூட்டணியிலிருந்து மமக வெளியேற்றப்பட்டதற்கு பிரதான காரணம் அவர்கள் உணர்வு அலுவலகத்தை ஆக்கிரமித்ததும், அதை எதிர்த்து அண்ணன் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கண்டும் மிரண்ட ஜெயலலிதா, இவர்களை வெளியேற்றி விட்டார் என்று உணர்வு உளறுகிறது. உணர்வு அலுவலக விசயத்தில் அண்ணன் ஜமாஅத்தின் பலத்திற்கு கிடைத்த மதிப்பு என்ன? போலீஸ் ஸ்டேஷனில் இவர்கள் கொடுத்த புகாரை ஒரு பெட்டிகேசுக்கு நிகராக கூட மதிக்கவில்லை என்று இவர்களே புலம்பினார்கள். இவர்களின் பில்டப் ஆர்ப்பாட்ட அறிவிப்பை கண்டு அதிகாரிகள் அரண்டுபோய் அரண்மனைக்காரன் தெருவில் அழுது புரண்டு, அய்யா! அந்த பில்டிங் உங்களோடது தான்; ஒன்பதாம் தேதி சாவி உங்க கைக்கு வரும் என்று சொன்னதாக புளுகினார்களே! சாவி இன்று வரை கைக்கு வந்ததா? இவர்கள் ஆர்ப்பாட்டத்தை கண்டு ஜெயலலிதா மிரண்டுபோயிருந்தால் ஆர்ப்பாட்டம் நடந்த மறுநாளே சாவி அண்ணனின் கைக்கு வந்திருக்கணுமே! வந்துச்சா? கத்தி கூப்பாடு போட்டதை தவிர வடமரைக்காயர் தெரு பக்கம் தலை வைத்து படுக்க முடிந்ததா? இந்த லட்சணத்துல இதுக்காகத்தான் ஜெயலலிதா மமகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டார் என்று வெற்று ஜம்பம் வேறு.
வர வர அபகரிக்கப்பட்ட வார இதழ் அநியாயத்திற்கு காமெடி பன்ன ஆரம்பித்து விட்டது. 'ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக பொறுப்பு ஏற்றிருந்த நேரத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளுக்கும் கத்னா செய்வதற்கு உத்தரவிட்டார்' என்ற செய்தியை சொல்லி சிரிப்பு மூட்டிய உணர்வு, இப்போது மமக விசயத்தில் கிச்சு கிச்சு மூட்டியுள்ளது. உணர்வு வார இதழ் என்பதற்கு பதிலாக, உணர்வு சிரிப்பிதழ் என்று மாற்றிக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்.
0 comments:
Post a Comment