இதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்!
வந்தாச்சு ஹைபிரிட் சிகிச்சை
இதயத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் ஹைபிரிட் முறையை, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 50 பேருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பார்த்த பின்னரே, அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.
இதுகுறித்து, மருத்துவமனையின் இதய அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.
''இதய அறுவை சிகிச்சை செய்வது என்றால், மார்பக எலும்பை வெட்டித்தான் செய்யமுடியும். அப்படி உள்ளே சென்றால்தான் இதயத்தின் எல்லா அறைகளையும் நேரடியாகப் பார்த்து அறுவைசிகிச்சை செய்யலாம். ஆனால், அதிக நாட்கள் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்.
வயிற்றுப் பகுதியில் அதாவது பித்தப்பை, சிறுநீரகம் அகற்றம் போன்ற எந்தப் பிரச்னை என்றாலும் வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரிதான் செய்துவந்தனர். பிறகு லேப்ராஸ்கோப்பி வந்ததும், சிறு துளை மட்டுமே போட்டு அகற்றி விடுகிறார்கள். 99.9 சதவீதம் இதயத்தில் சரிபார்ப்பு மட்டுமே செய்யமுடியும் என்பதால் நிறையத் தையல்கள் போடவேண்டும். தையல் போடப் பயன்படும் இழையின் அளவு, தலைமுடியின் பருமனில் பாதிதான் இருக்கும். மனித உடல் முப்பரிமாணம் ஆகும். அதை இரு பரிமாண ஸ்கோப் (கேமரா) மூலம் படம் எடுத்து, மானிட்டரில் பார்த்து அறுவை சிகிச்சை மற்றும் தையல் போடுவது சிக்கலானது.
இப்போது விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ஹைடெபனிஷன் கேமரா, மானிட்டர் வந்துவிட்டன. இதனால் தெளிவாகப் படம் எடுக்க முடிவதால், மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் சிறுதுளை மூலம் செய்யும் அளவுக்கு அதிரடி மாற்றங்கள் வந்துவிட்டன. மார்பு எலும்பை வெட்டாமல் 3 முதல் 4 செ.மீ. அளவுக்கு மட்டுமே துளையிட்டு, கூடுதலாக 2 மி.மீ. அளவுக்கு சிறு துளைகள் போட்டு அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமாகிவிட்டது. 2.5 மி.மீ. அளவு ரத்தக் குழாயைக்கூடத் திரையில் தேவையான அளவுக்குப் பெரிதாக்கிப் பார்க்கமுடிகிறது. சிறிய அளவு மட்டுமே வெட்டப்படுவதால், வலியும் குறைகிறது. நோயாளிகளும் விரைவில் குணம் அடைகின்றனர். இப்போது இந்த மினிமலி இன்வேஸிவ் தொழில் நுட்பத்துடன், மற் றொரு தொழில்நுட்பத்தையும் சேர்த்து ஹைபிரிட் இதய அறுவை சிகிச்சையை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கி றோம்.
இதயத்தில் ஓட்டை இருந்தால், அதை இழுத்துவைத்துத் தைப்பது கிடையாது. உலோகத் தகட்டை வைத்து மூடுவோம். ஓப்பன் சர்ஜரியாக இருந்தால் பிரச்னை இல்லாமல் தகட்டை எளிதில் உள்ளே கொண்டு போய்விடலாம். ஆனால், சிறிய துளைகள் மட்டுமே இடப்படுவதால் உலோகத் தகட்டை கொண்டுபோவதில் சிக்கல் இருந்தது. இப்போது சுருட்டும் தன்மையிலான உலோகத் தகடு வந்துள்ளது. உள்ளே சென்றதும் அது விரிந்து அந்த இடத்தை மூடிக்கொள்ளும். இந்த சிகிச்சையை நாலைந்து வருடங்களாகவே செய்துவருகின்றனர். ஆனால், நோயாளியின் உடல் எடை 15 கிலோவுக்குக் கீழ் இருந்தால், இந்த அறுவை சிகிச்சை செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் ஹைபிரிட் தொழில் நுட்பம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி மினிமலி இன்வேஸிவ் முறையுடன், மார்பு பகுதியில் சிறிய துளையிட்டு அதன்வழியே ஷேப் மெமரி அலாயை உள்ளே செலுத்தி ஓட்டையைஅடைத்துவிடுவோம். இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே, சிறப்பு ஸ்டெப்லைசர் கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த இதய ஓட்டை அடைக்கும் செயல்பாடு, 20 நிமிடத்தில் முடிந்துவிடும். ரத்த இழப்பு மிகவும் குறைவு. இரண்டே நாட்களில் வீட்டுக்குப் போய்விடலாம். 2.5 கிலோ எடை கொண்ட குழந்தைகளுக்குக்கூட அறுவைசிகிச்சை செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இதய அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதய ஓட்டை அடைப்பு மட்டும் அல்ல, ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் மூலம் பைபாஸ் சர்ஜரி, இதய வால்வு பழுது பார்த்தல் மற்றும் வால்வு மாற்றம், சில பிறவி இதயக் குறைபாடுகளை சரிசெய்தல் போன்ற பல சிக்கல்களைக் களையமுடியும்.
அதற்காக இனி ஓப்பன் சர்ஜரி முறையே தேவை இல்லை என்று நினைக்கவேண்டாம். நோயாளியின் உடல் நிலை, தாங்கும் திறன் போன்றவற்றைப் பொறுத்துத்தான் அவருக்கு என்ன வகையிலான சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர் முடிவு செய்வார். இப்போதுதான் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் ஓப்பன் சர்ஜரிக்கு பதில் சிறுதுளை அறுவைசிகிச்சை முறையை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை வரலாம்'' என்றார்.
மருத்துவப் புரட்சி வந்தாச்சு என்றுதான் சொல்லவேண்டும்.
- பா.பிரவீன்குமார்
இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் 50 பேருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பார்த்த பின்னரே, அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்கள்.
இதுகுறித்து, மருத்துவமனையின் இதய அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனிடம் பேசினோம்.
''இதய அறுவை சிகிச்சை செய்வது என்றால், மார்பக எலும்பை வெட்டித்தான் செய்யமுடியும். அப்படி உள்ளே சென்றால்தான் இதயத்தின் எல்லா அறைகளையும் நேரடியாகப் பார்த்து அறுவைசிகிச்சை செய்யலாம். ஆனால், அதிக நாட்கள் மருத்துவ மனையில் தங்க வேண்டி இருக்கும்.
வயிற்றுப் பகுதியில் அதாவது பித்தப்பை, சிறுநீரகம் அகற்றம் போன்ற எந்தப் பிரச்னை என்றாலும் வயிற்றைக் கிழித்து ஓப்பன் சர்ஜரிதான் செய்துவந்தனர். பிறகு லேப்ராஸ்கோப்பி வந்ததும், சிறு துளை மட்டுமே போட்டு அகற்றி விடுகிறார்கள். 99.9 சதவீதம் இதயத்தில் சரிபார்ப்பு மட்டுமே செய்யமுடியும் என்பதால் நிறையத் தையல்கள் போடவேண்டும். தையல் போடப் பயன்படும் இழையின் அளவு, தலைமுடியின் பருமனில் பாதிதான் இருக்கும். மனித உடல் முப்பரிமாணம் ஆகும். அதை இரு பரிமாண ஸ்கோப் (கேமரா) மூலம் படம் எடுத்து, மானிட்டரில் பார்த்து அறுவை சிகிச்சை மற்றும் தையல் போடுவது சிக்கலானது.
இப்போது விஞ்ஞான வளர்ச்சி காரணமாக ஹைடெபனிஷன் கேமரா, மானிட்டர் வந்துவிட்டன. இதனால் தெளிவாகப் படம் எடுக்க முடிவதால், மிகச் சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் சிறுதுளை மூலம் செய்யும் அளவுக்கு அதிரடி மாற்றங்கள் வந்துவிட்டன. மார்பு எலும்பை வெட்டாமல் 3 முதல் 4 செ.மீ. அளவுக்கு மட்டுமே துளையிட்டு, கூடுதலாக 2 மி.மீ. அளவுக்கு சிறு துளைகள் போட்டு அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமாகிவிட்டது. 2.5 மி.மீ. அளவு ரத்தக் குழாயைக்கூடத் திரையில் தேவையான அளவுக்குப் பெரிதாக்கிப் பார்க்கமுடிகிறது. சிறிய அளவு மட்டுமே வெட்டப்படுவதால், வலியும் குறைகிறது. நோயாளிகளும் விரைவில் குணம் அடைகின்றனர். இப்போது இந்த மினிமலி இன்வேஸிவ் தொழில் நுட்பத்துடன், மற் றொரு தொழில்நுட்பத்தையும் சேர்த்து ஹைபிரிட் இதய அறுவை சிகிச்சையை நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கி றோம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி மினிமலி இன்வேஸிவ் முறையுடன், மார்பு பகுதியில் சிறிய துளையிட்டு அதன்வழியே ஷேப் மெமரி அலாயை உள்ளே செலுத்தி ஓட்டையைஅடைத்துவிடுவோம். இதயம் துடித்துக்கொண்டிருக்கும்போதே, சிறப்பு ஸ்டெப்லைசர் கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த இதய ஓட்டை அடைக்கும் செயல்பாடு, 20 நிமிடத்தில் முடிந்துவிடும். ரத்த இழப்பு மிகவும் குறைவு. இரண்டே நாட்களில் வீட்டுக்குப் போய்விடலாம். 2.5 கிலோ எடை கொண்ட குழந்தைகளுக்குக்கூட அறுவைசிகிச்சை செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இதய அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதய ஓட்டை அடைப்பு மட்டும் அல்ல, ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் மூலம் பைபாஸ் சர்ஜரி, இதய வால்வு பழுது பார்த்தல் மற்றும் வால்வு மாற்றம், சில பிறவி இதயக் குறைபாடுகளை சரிசெய்தல் போன்ற பல சிக்கல்களைக் களையமுடியும்.
அதற்காக இனி ஓப்பன் சர்ஜரி முறையே தேவை இல்லை என்று நினைக்கவேண்டாம். நோயாளியின் உடல் நிலை, தாங்கும் திறன் போன்றவற்றைப் பொறுத்துத்தான் அவருக்கு என்ன வகையிலான சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர் முடிவு செய்வார். இப்போதுதான் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளில் ஓப்பன் சர்ஜரிக்கு பதில் சிறுதுளை அறுவைசிகிச்சை முறையை மட்டுமே பயன்படுத்தும் அளவுக்கு நிலைமை வரலாம்'' என்றார்.
மருத்துவப் புரட்சி வந்தாச்சு என்றுதான் சொல்லவேண்டும்.
- பா.பிரவீன்குமார்
************************************************************************
பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே - 46: 23.07.86
மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாடு பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடக்கக்காரண மானவர்களுக்கு நன்றி சொல்வதென்றால், அதை முதலில் எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதிக்குத்தான் சொல்ல வேண்டும்!
பஞ்சாயத்துத் தேர்தலில் கிடைத்த வெற்றியோடு 'டெசோ’வின் பெயரால் ராஜதந்திரமாக லட்சக்கணக்கான தன் தொண்டர் படையைத் திரட்டிக் காட்டினார் கலைஞர். பஞ்சாயத்துத் தேர்தலில் கிடைத்த (ஜீரணிக்க முடியாத) அனுபவத்தால் - அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் எல்லோரும் முதல்வரிடம் 'டோஸ்’ வாங்கிக் கொண்டு இருந்தநேரத்தில், மதுரையில், அதே இடத்தில் அதைவிடப் பெரியதாக ஒரு மாநாடு நடத்தியே காட்ட வேண்டும் என்ற 'மன்றாடுதலை’ சமயம் பார்த்து முன்வைத்தனர் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத்தினர். அமைச்சர்களுக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும் தன் மன்றத்தின் பலத்தை நினைவுபடுத்தி எச்சரிக்க, மாநாட்டை நடத்தும் பொறுப்பு முசிறிப்புத்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. வெகுகாலமாகவே அமைச்சர்களை, கட்சித் தலைவர்களை 'வந்தேறிகள்’, 'பதவிக்காக பாதம் நக்குபவர்கள்’ என்றெல்லாம்கூட கட்டுப்படாமல் கமென்ட் அடித்து வரும் முசிறிப்புத்தன், மகுடமே கிடைத்ததுபோல் தீவிரமானார். காரியத்தில் இறங்கினார். இந்த மாநாடு முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லி முடுக்கினார்கள்.
ஆட்சிக் கப்பல் மிகச் சமீபத்தில் எதிர்பாராத அதிர்ச்சிக்கு உள்ளானதால் மாநாட்டின் மூலம் ஒருவேளை மாலுமிகளே மாறலாமோ?
தேவை இல்லாத சுமைகள் தூக்கி எறியப்படுமோ?
புதிய நங்கூரங்கள் பொருத்தப்படுமோ? என்று யாராலும் யூகிக்க முடியாமல் பலர் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டனர். காரணம் - முதல்வர் மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா, ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, கன்னாபின்னாவென்று அறிக்கைவிட்ட முசிறிப்புத்தன், கடைசியில் நிலைமையை அனுசரித்துத் 'தீவிர ஜெயலலிதா’ ஆதரவாளராகிப் போனார். மன்ற மாநாட்டு ஏற்பாடுகளைக் கவனிக்கும் தலைமைக் குழு முழுவதும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களாகத் தேடிப்பிடித்து நிரப்பப்பட்டது. தலைமைக் குழுவாக முதலில் அறிவிக்கப்பட்டதில் ஜெயலலிதாவின் ஆதரவாளர் மதுரை நவநீதகிருஷ்ணன் பெயர் மட்டும் இல்லாமல் இருந்தது. மின்னல் வேகத்தில் சில 'லைட்னிங்கால்கள்’ மூலமாக பின்னர் இணைக்கப்பட்டது. மதுரை நகரச் செயலர் (பழக்கடை) எஸ்.பாண்டியன் (ஜெயலலிதா கூட்டிய கட்சிச் செயலாளர்கள் மாநாட்டுக்குப் போகாதவர்) ஆர்.எம்.வீ. ஆதரவாளர் என்பதால், மாநாட்டு ஏற்பாடுகளுக்கு வலியச் சென்றும் யாரும் கண்டுகொள்ளாததால், நொந்துபோய் யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகிவிட்டார். அமைச்சர்கள் சௌந்தரராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சேடபட்டி முத்தையா இந்த நால்வர்தான் கல்யாண வீட்டுக்காரர்கள் மாதிரி மாநாட்டு வேலையில் தடபுடலாகத் திரிந்தனர்!
மாநாட்டுக்கு முதல் நாள் முசிறிப்புத்தன் தங்கியிருந்த வைகாசி இல்லத்தில் நம்மைச் சந்தித்த பிரமுகர், ''சார்! நான் இப்பவே சொல்றேன், எழுதிக்கங்க. அம்மாவை (ஜெயலலிதா) தலைவர் தன்னோட வாரிசுன்னு அறிவிக்கப் போறார். பல மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பப் போறார். ஆர்.எம்.வீ. சத்தமே இல்லாம அடங்கி இருக்கிறதைப் பார்த்தா தெரியலையா சார்? ரசிகர் மன்றம்னா... என்னான்னு இனிமேல்தான் பல மந்திரிகளுக்குப் புரியப் போகுது பாருங்களேன்!'' என்று சொன்ன கையோடு, ''சாமி, நம்ப பேரையும் போட்டு, 'கட்டம் கட்ட’ வெச்சுடாதீங்க!'' என்று நழுவினார்!
மாநாடு துவங்குவதற்கு முதல் நாள்,விமானத்தில் இருந்து முதல்வரும் அவரது துணைவியாரும் இறங்கியதும், சிரித்த முகத்தோடு ஜெயலலிதாவும் இறங்கினார். இரண்டு கார்கள் மட்டும் விமான ஓடு தளம் வரை அனுமதிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன. மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரிகள் எல்லோரும் முதல்வரை வரவேற்றுக்கொண்டு இருந்தபோது, விடுவிடுவென ஜெயலலிதா நேரடியாகக் கூட்டத்தை நோக்கி வந்தார். துரதிர்ஷ்டவசமாய் முதலில் நின்றது காளிமுத்து! ஜெயலலிதா அருகில் வரவும், முகத்தை அங்கும் இங்கும் திருப்பிக்கொண்டு எந்த பாவமும் காட்டாமல், முதல்வர் வரும் திசையில் நகர்ந்தார் காளிமுத்து. ஜெயலலிதாவை நவநீதகிருஷ்ணனும், முசிறிப்புத்தனும் வரவேற்றனர். காரில் ஏறும் முன் சுற்றும் முற்றும் பார்த்த முதல்வர், அமைச்சர் காளிமுத்துவைக் கண்டதும் முறுவலித்துக் தோளில் ஒரு தட்டுத்தட்டி தன்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டார். அப்போதே சில வி.ஐ.பி-க்களின் முகத்தில் பரவசமும், பலர் முகத்தில் கலவரமும் படர்ந்தன!
முதல்வர் - பாண்டியன் ஹோட்டலிலும், ஜெயலலிதா - ஹோட்டல் அசோக்கிலும் தங்கினர். அறைக்கு வந்து சேர்ந்ததுமே ஜெயலலிதா தங்கியிருந்த அறை எண் 222-ல், மாநாட்டில் தலைமைப் பொறுப்பேற்று இருந்த தனது அதிதீவிர ஆதரவாளர்களான தலைமைக் குழுவுடன் (முசிறிப்புத்தன் உட்பட) சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடந்தது. வெளியே பத்திரிகையாளர் கும்பல் வெகுநேரம் காத்திருந்தது. ''இப்ப அம்மா முக்கியமான டிஸ்கஷன்ல இருக்காங்க. பத்திரிகைக்காரங்க யாரையும் பார்க்கிறதா இல்லை. நீங்க புறப்படலாம்!'' என்று உதவியாளர் துரை எல்லோரையும் திருப்பி அனுப்பிக்கொண்டு இருந்தார்.
முதல் நாள் மாநாட்டு நிகழ்ச்சியாக தெப்பக்குளத்துக்கு அருகில் ஜெயலலிதா, ''புறப்படுவீர் புயலென... ஒழியட்டும் புல்லர்கள் கூட்டம்!'' என்று ஆசீர்வதித்து ஆணையிட, ஆர்ப்பரித்துத் துவங்கியது பேரணி! தமுக்கம் மைதானத்துக்கு எதிரே உயரமான மேடையில் இடப்புறம் அமைச்சர் முத்துசாமி, வலப்புறம் பண்ருட்டி ராமச்சந்திரன் செக்யூரிட்டிகள்போல் இருக்க, ஊர்வலத்தைப் பார்வையிட்டார் எம்.ஜி.ஆர்.! பார்வைக்கு நேராய் அமைச்சர் காளிமுத்துவின் துணைவியார் மனோகரி காளிமுத்து அலங்கார விளக்குகளால் அமைத்திருந்த வரவேற்பு வளைவு, பெரிய எழுத்தில் பெயர் போட்டிருந்ததால் எல்லோர் கவனத்தையும் வழிமறித்தது. ('டெசோ’ மாநாட்டுக்கு வந்த கலைஞரை வரவேற்று நிர்மலா காளிமுத்து அமைத்திருந்த வரவேற்பு வளைவைவிடவும் நிறைய செலவு செய்திருந்தார் மனோகரி காளிமுத்து!)
முதல் நாள் மாநாடு காலை நிகழ்ச்சியாக பட்டிமன்றத்துடன் துவங்கி, மாலையில் மந்திரிகளின் வருகையால் களைகட்டியது. வந்த அமைச்சர்களில் பெரும்பாலோர் மேடைப்பக்கம் போகாமல் தன்னடக்கத்தோடு பார்வையாளர்கள் பக்கமே இணைந்துகொண்டனர். மறுநாள் காலை நடந்த கவியரங்கத்தை முன்வரிசையில் உட்கார்ந்து எம்.ஜி.ஆர். தன் துணைவியாருடன் முழுக்க இருந்து கேட்டார். முதல்வர் அருகில் பண்ருட்டியாருக்கும், நாவலருக்கும் மட்டும்தான் நாற்காலி. மற்ற எல்லோருக்கும் தரைதான். மதிய இடைவேளைக்குப் பின் மாநாட்டின் க்ளைமாக்ஸ் தெரியப் போகிறது என்ற பரபரப்பு தலைவர் தொண்டர் எல்லோ ருக்கும் ஒரு த்ரில்லாகவேஇருந்தது.
மாலை இறுதி நிகழ்ச்சி மிகுந்த பரபரப்புக்கு இடையில் துவங்கத் தயாராகிக்கொண்டு இருக்கும்போது, முதலமைச்சரிடம் இருந்து வயர்லெஸ் தகவல் ஒன்று அமைச்சர் சௌந்தரராஜனுக்குக் கிடைக்கிறது. மாநாட்டு மேடையில் தன்னுடன் யார் யார் அமர வேண்டும் என்று 13 பேர் பெயர்களும் அவர்கள் எந்தெந்த வரிசைப்படி அமர வேண்டும் என்று முன்கூட்டி பெயர் எழுதி நாற்காலிகளில் ஒட்டப்பட வேண்டும் என்றும் உத்தரவு வருகிறது. அதன்படி மேடையின் வலது பக்கக் கடைசியில் ஜெயலலிதா, இடது பக்கக் கடைசியில் ஆர்.எம்.வீ-யும் காளிமுத்துவும் அருகருகே... சௌந்தரராஜன் அவசர அவசரமாகக் கைப்பட எழுதி ஒட்டிக்கொண்டு இருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே வந்துவிட்ட ஜெயலலிதா, மேடைக்குப் போகாமல் சற்று காத்திருந்தார்.
ஒரு பிரமுகரிடம் விசாரித்தபோது, முதல்வரின் துணைவியார் வி.என்.ஜானகி மேடைக்குப் பின்னால் வீடியோவில் நிகழ்ச்சிகளை கவனிப்பதாகத் தெரிவித்தார்.
சரியாக இரவு ஒன்பது மணிக்கு க்ளைமாக்ஸ் துவங்கியது. அமைச்சர்கள் முத்துசாமி, காளிமுத்து, ஆர்.எம்.வீ., பின் ஜெயலலிதா, நாவலர், ராகவானந்தம் ஆகியோரை மட்டும் பேச அனுமதித்தார்முதல்வர். யாரும் சிக்கலில் மாட்டாமல் ஜாக்கிரதையாகவே பேசினர். ஆர்.எம்.வீ. மட்டும் முதல் நாள் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்த 'ஜெயலலிதா வாரிசாக மாநாட்டில் அறிவிக்கப்படலாம்’ என்ற செய்தியை மனத்தில்கொண்டு பத்திரிகையாளர்களைப் பிடிபிடி என்று கணை தொடுத்தார்.
அரசின் வரவு, செலவு, வளர்ச்சித் திட்டங்கள், சிரமங்கள்பற்றி நாவலர் பேச வேண்டியதை எல்லாம் ஜெயலலிதா பேசிக்கொண்டு இருந்தார். முதல்வர்கூட நாவலரிடம் சைகை செய்து ஒரு சிரிப்பு சிரித்துக்கொண்டார். கூட்டம் எம்.ஜி.ஆரைப் பேசச் சொல்லி பொறுமை இழந்து சலசலத்தது. கடைசியாக எம்.ஜி.ஆர். பேச எழுந்தார். கடுகை எறிந்தால்கூட கல்லெறிந்ததுபோல் சத்தம் கேட்கும் நிசப்தம்! அமைச்சர்கள் அனைவரும் காதைக் கூர்மையாகத் தீட்டிக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி... மிகக் கூர்ந்து கேட்டால் தெளிவாகப் புரிந்துகொள்கிற மாதிரி பேசத் துவங்கினார் எம்.ஜி.ஆர்.
''மன்றம் வேறு.. கட்சி வேறு அல்ல...! கழகம் உடல். மன்றம் உயிர். இரண்டும் வேறு வேறு அல்ல!'' என்று தொடங்கிய எம்.ஜி.ஆர். ''முசிறிப்புத்தன் எவ்வளவோ சேவை செய்திருக்கிறார். அவருக்கு என் நன்றி. அவருக்கு இனி ஓய்வு தரலாம் என நினைக்கிறேன்!'' என்று அறிவித்தார். பலர் முகம் ஏனோ உடனே வதங்கிப் போனது. அடுத்த ஓய்வு யாருக்கு என்று பலர் அவஸ்தையில் இருந்தபோது, விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு ஒரு முக்கியமான வேண்டுகோள்...
''நீங்கள் எல்லோரும் ஒரு கத்தியை வைத்திருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன், நீங்கள் எல்லோரும் கத்தியை வைத்திருக்க வேண்டும். போலீஸாரால் உங்களைக் காக்க முடியாதபோது தற்காப்புக்கு உதவும்... இதை தயவுசெய்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!'' என்று சொல்லிவிட்டு, அனைவரையும் கைதட்டி ஆதரிக்கும்படி சைகை காட்டினார் முதல்வர். சில அமைச்சர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கரகோஷம் விண்ணைப் பிளந்தது! தொடர்ந்து, ''1972-ல் தொடங்கிய தர்மயுத்தம் இன்னும் முடியவில்லை. தமிழகப் பொதுவாழ்வின் ஒரு பகுதி இன்னும் தீய சக்தியிடம் சிக்கியுள்ளது. அதை முழுவதும் முறியடிக்கும் வரை நான் தொடங்கிய தர்மயுத்தம் முடியாது!'' என்று ஆவேசத்துடன் அழுத்தமாகச் சொன்னார். சுமார் 30 நிமிடப் பேச்சுக்குப்பின் முதல்வருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமைக் கழகத்தின் சார்பில் ஆறு அடி உயரம் உள்ள (தங்கமுலாம்) வெள்ளிச் செங்கோலை ஜெயலலிதா முதல்வருக்கு அளித்து, காலில் விழுந்து ஆசி பெற்றார். மகிழ்வுடன் முதல்வர் அதைப் பெற்றுக்கொண்டார். அந்தச் செங்கோலைத் திரும்பவும் ஜெயலலிதாவுக்கு அளிப்பாரோ என்று பத்திரிகையாளர் பகுதியில் ஒரு கமென்ட் வந்தது. அப்படி ஒன்றும் நடக்காமலே மாநாடு முடிந்தது.
கலைந்து செல்லும் வழிநெடுக, முக்கிய பேச்சாக கத்தி வாங்குவதுபற்றியே பல தீவிரமான தொண்டர்கள் பேசிக்கொண்டார்கள். ''ஜெயலலிதாவுக்கு மட்டும் பிரச்னை இல்லை. ஏற்கெனவே அ.தி.மு.க. கொண்டாடிய விழா ஒன்றில் அவருக்கு ஒரு பட்டாக்கத்தியே அன்பளிப்பாகக் கொடுத்து இருக்கிறார்கள்..!'' என்றார் ஒரு பிரமுகர் ஜாலியாக!
- சௌபா

கயிறே, என் கதை கேள்!
ஒப்புதல் வாக்குமூலம்... உலுக்கும் உண்மைகள்!
'ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்துப் போட்டதன் மூலமாக ராஜீவ் கொலை விவகாரத்தில் தனக்கு இருக்கும் பங்களிப்பை முருகன் ஒப்புக்கொண்டு இருக்கிறார்’ என மீடியாக்களிடம் அறிக்கை வாசித்தார்கள் அதிகாரிகள். எத்தனையோ சித்ரவதைகளை நடத்தி, அவர்களின் புனைவுக் கதைகளுக்குக் கையெழுத்து வாங்கினார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும். பிரம்புகளின் பின்னணியில் எங்களிடம் கையெழுத்து வாங்கப்பட்ட அன்றைய சூழலிலும்கூட நான் சமயோசிதமாக ஒரு காரியத்தைச் செய்தேன். என் கையப்பம் நான் விரும்பிப் போட்டது அல்ல என்பதை நிரூபிக்க ஐ.பி.சி. செக்ஷன் 29 மற்றும் இண்டியன் எவிடென்ஸ் ஆக்ட் செக்ஷன் 15-ன் படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய சான்றுக் குறியீடுகளைப் போட்டு வைத்தேன். அந்தக் குறியீடுகளைப்பற்றி என்னிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அங்கும் இது கேட்கப்படவில்லை.
'விசாரணையின் போது நடந்த சித்ரவதைகளைப்பற்றி நீதிபதியிடம் முறையிட்டு இருக்கலாமே?’ என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்விதான். ஒரு எலியைப் பூனையின் காவலில் வைத்துவிட்டு, அந்த எலியிடமே 'பூனை உன்னை துன்புறுத்தியதா?’ என வீட்டு எஜமான் கேட்டால் எப்படி இருக்கும்? அதுபோல்தான் அப்போது எமக்கிருந்த நிலையும். அதிகாரிகளின் சித்ரவதைகளைப்பற்றிச் சொல்லிவிட்டு திரும்பவும் அவர்களின் பிடிக்குத்தானே நாங்கள் வரவேண்டும்? அப்படியிருக்க வாய் திறந்த பாவத்துக்காக மேலும் தாக்குவார்களே... உடல் முழுக்கக் காயங்கள் இருந்தாலும், வாய்விட்டுக் கதறக்கூட அப்போது எங்களுக்குத் தைரியம் இல்லை.
செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எங்களால் நீதிபதியின் முகத்தைக்கூட தெளிவாகப் பார்க்க முடியவில்லை. தவறியும் அவர் எங்களையோ, நாங்கள் அவரையோ பார்த்துவிடாதபடி 10-15 அதிகாரிகள் எங்களை வளையம்போல் சுற்றி நின்றனர். நீதிமன்றம் என்றுகூடப் பார்க்காமல், 'ஏதாச்சும் பேசுனீங்கன்னா......!’ என மிரட்டினார்கள். அதையும் மீறி என் மனைவி நளினி, நீதிபதியின் முகத்தைப் பார்க்கப் போராடியபடி இருந்தாள். அடி, உதைகள் இல்லாத ஒரே இடம் எங்களுக்கு அந்தக் கூண்டுதான். எங்களின் சோகத்தைச் சொல்வதற்கான கடைசி வாய்ப்பிடமும் அதுதான். நீதிபதியைப் பார்க்க என் மனைவி போராடுவதும், அதிகாரிகள் சுற்றிச் சுற்றி அவரை மறைப்பதுமாக இருந்தார்கள். ஒருகட்டத்தில், 'அரசாங்க செலவில் எங்களுக்கு வக்கீல் நியமிச்சு கொடுங்க...’ என நீதிபதியிடம் கைகூப்பியபடி வேண்டினாள் நளினி. இத்தனைப் போராட்டங்களைக் கடந்து அந்தக் குரல் வருகிறது என்பதை அந்த நீதிபதி அறிந்திருக்க வாய்ப்பில்லை. 'பார்க்கலாம்’ என்றபடியே ஏதோ எழுதினார். ஆனால், அடுத்த ஒரு வருடம் முடியும் வரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
நீதிபதி முன் எங்களை ஆஜர்படுத்த அழைத்துவரும்போது எல்லாம் அதிகாரிகளின் பூச்சாண்டித்தனம் அப்பட்டமாகவே தெரியும். 'நீதிபதியிடம் ஏதாவது சொன்னா, சண்முகத்துக்கு ஏற்பட்ட நெலமைதான் உங்களுக்கும்’ என மிரட்டுவார்கள். அடி, உதைகள் வாங்கி மிரண்டுகிடக்கும் எங்களால் இதையும் தாண்டி என்ன பேசிவிட முடியும்?!
3.8.91 அன்று ஒப்புதல் வாக்குமூலத் தாள்களில் எனது கையப்பத்தினை பெற்றுவிட்டு மறுநாள் எம்மை ஒருவர் முன் ஆஜர்படுத்தினார்கள். அதற்கு முன்னர் அவரை நான் பார்த்தது இல்லை. சைதாப்பேட்டை சிறையில் சிறிய அறையில் ஒரு பக்கம் அரசு வக்கீலும், இன்னொரு பக்கம் வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியும் அமர்ந்து இருந்தனர். புதுமுகமாகத் தெரிந்த அவர் தலை குனிந்தபடி எமது காவல் நீடிப்பு திகதியைச் சொன்னார். உண்மையில் அவர்தான் நீதிபதி என்றே எனக்குத் தெரியாது. அவர் உத்தரவிட்டது போலீஸ் காவலுக்கா அல்லது நீதிமன்றக் காவலுக்கா என்பதும் எனக்கு விளங்கவில்லை. நான் நிறுத்தப்பட்ட இடம் ஒரு நீதிமன்றம் என்பதுகூட எனக்குத் தெரியாது. அங்கே அப்படி ஒரு சூழ்நிலையும் இல்லை. எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்பதை அதிகாரிகள் தொடர்ந்து ரகசியமாகவே வைத்திருந்தார்கள். நீதிமன்றம் எனச் சொன்னால் அங்கே சகலத்தையும் கொட்ட நாங்கள் ஆயத்தமாகிவிடுவோம் என்கிற பயம் அதிகாரிகளுக்கு.
ஜுடிஷியல் கஸ்டடியில் சிறைக்கு அனுப்பப்பட்ட பின்புகூட அங்கு அதிகாரி ஒருவர் வந்து எங்களை மிரட்டினார். ஜுடிஷியல் கஸ்டடிக்கு வந்த பின்னர் போலீஸார் எங்களைச் சித்ரவதை செய்ததுபற்றியும், பல தாள்களில் எமது கையப்பத்தினை அனுமதி இன்றிப் பெற்றதுபற்றியும் முறையீட்டு மனு அனுப்பினோம். இந்த மனுக்களின் நகல் மற்றும் அதன்மீது நீதிமன்றம் போட்ட உத்தரவு நகல் ஆகியவை அனைத்தையும் நீ2.ஜீ.நீ.313 செக்ஷன் கீழ் சமர்ப்பித்த வாக்கு மூலத்தின் கீழ் சேர்த்து இணைத்துள்ளோம்.
இந்த வழக்கில் 20.5.1992 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 16.5.92 வரை இந்த வழக்கில் 20 எதிரிகள்தான் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 16 பேர்களிடம் ஒப்புதல் வாக்குமூலத் தாள்களிடம் கையப்பம் பெற்று இருந்தனர். (ஏ-7) கனகசபாபதி, (ஏ-14) பாஸ்கரன், (ஏ-22) சுபா சுந்தரம், (ஏ-26) ரங்கநாத் ஆகியோரிடம் ஒப்புதல் வாக்குமூலக் கையெழுத்து வாங்கப்படவில்லை. கனகசபாபதி, பாஸ்கரன் இருவரும் மிகவும் வயதானவர்கள். சுபா சுந்தரம் வயோதிகப் பருவத்தினை நெருங்கிக்கொண்டு இருந்தவர். நமது கால நேரத்துக்கு எதுவெல்லாம் கைகொடுக்கும் என்பதற்கு உதாரணம் சொல்கிறேன். சுபா சுந்தரத்தை அதிகாரிகள் பெரிதாக விசாரிக்கவில்லை. எங்கள் மீது பாய்ச்சப்பட்டது போன்ற கொடூர சித்ரவதைகளுக்கும் அவரை ஆளாக்கவில்லை. காரணம், அப்போது அவருடைய உடல் எடை 130 கிலோ. அதனால், அவரைப் பிறர் உதவி இல்லாமல் எழ வைக்கவோ, அமர வைக்கவோ முடியாது. அதனாலேயே அவர் கொடூர சித்ரவதைகளில் இருந்து தப்பினார்.
கனகசபாபதி ஓர் அரசு ஊழியர், சுபா சுந்தரம் ஒரு பத்திரிகையாளர் என்பதால் விசாரணை அதிகாரிகள் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போட அவர்கள் ஒத்துழைக்கவில்லை. கையெழுத்து என்று ஒன்று கிடைத்துவிட்டால், அதைவைத்தே எத்தகைய திரைக்கதையையும் அதிகாரிகள் அச்சேற்றுவார்கள் என்பதை அந்த இருவரும் அறிந்து வைத்திருந்தார்கள்.
ரங்கநாத் (ஏ-26) அவர்களை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, தனக்கு நேர்ந்த சித்ரவதைகளை அவர் ஆதாரத்துடன் சொன்னார். அவருடைய பல் உடைக்கப்பட்டதை அவர் ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினார். இதனாலேயே ஒப்புதல் வாக்குமூலத்தில் ரங்கநாத்திடம் கெடுபிடி காட்டப்படவில்லை. அவரது மனைவியையே அவருக்கு எதிராக மாற்றி வாக்குமூலம் கொடுக்க வைத்துவிட்டமையால், அவர்களுக்கு ரங்கநாத்தின் ஒப்புதல் வாக்குமூலம் தேவை இல்லாமல் போய்விட்டது.
மேற்படி 16 எதிரிகளும் 60 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு இருந்தோம். ஒவ்வொருவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப்பற்றி அதிகாரிகள் எழுதி இருந்த விவரங்களைப் பார்த்தோம். மூன்று மணி நேரம் முதல் ஒன்பது மணி நேரம் வரை ஒப்புதல் வாக்குமூலம் வாங்கச் செலவானதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒப்புதல் வாக்குமூலத்தில் உள்ள தகவல்களை நாமாக முன்வந்து சொல்லியிருந்தோம் என்பது உண்மையானால், அதே தகவல்களை போலீஸாரிடம் சொல்லவும் அதே அளவு நேரம்தான் செலவாகி இருக்க வேண்டும். அதிகபட்சம் அதனைப்போல் 10 மடங்கு நேரம் செலவானது எனக் கொண்டால்கூட மொத்தம் ஆறு நாட்கள்தானே ஆகும். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை வாங்க 60 நாட்களாக போலீஸார் எங்களைப் படுத்தி எடுத்தது ஏன்? அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதால்தானே... பொய்யான கற்பனைகளில் நாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்பது தெரிந்துதானே இத்தனை சித்ரவதைகள்? இந்த 60 நாட்களில் எங்களின் உடலும் மனமும் எத்தனைவிதமான குரூரங்களுக்கு ஆளாகி இருக்கும்? மரணத்தையும் ஒப்புக்கொள்ளும் மனநிலையை உருவாக்கத்தான் அதிகாரிகளுக்கு இந்த 60 நாள் அவகாசம்?
16.05.92-ல் இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட ஆறு எதிரிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும், நால்வர் எந்த வகையிலும் ராஜீவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல எனச் சொல்லி விடுவிக்கப்பட்டனர். நியாயமாக நாங்கள் சொல்லிய உண்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால், இவர்களைப்போல் வெளியே வந்திருக்க வேண்டியவர்கள்தான் நாங்களும்... ஆனால், சித்திரிப்புகளுக்கும், சித்ரவதைகளுக்கும் எங்களைப் பலிகொடுக்க அதிகாரிகள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற்றுவிட்டன. ஒப்புதல் வாக்குமூலம் என்கிற பெயரில் அதிகாரிகள் எங்களின் தலை எழுத்தை தண்டனைகளாலேயே நிரப்பினர்.
மரணம், பனை மர நிழலைப்போல் எங்களைச் சுற்றி அங்கும் இங்குமாக நகர்ந்து வருகிறது. அதன் துரத்தலுக்குப் பயந்து நாங்களும் அங்கும் இங்குமாக ஓடுகிறோம். இன்னும் முழுவதுமாக மரண பயம் எங்களைவிட்டு நீங்கவில்லை. குற்றவாளிகளாக நாங்கள் கொத்தாக வளைக்கப்பட்ட நேரம் நெஞ்சத்துக்குள் அப்படியே நீள்கிறது. ராஜீவ் காந்தி இந்தியாவின் பலம் பொருந்திய தலைவர். அவர் கொலை செய்யப்பட்ட செய்தி பரவியபோது மொத்த இந்தியாவும் ஸ்தம்பித்துப் போனது. தமிழ்நாடு முழுக்க கொந்தளிப்பு... பல இடங்களில் நாசகார வேலைகள் நிகழ்ந்தன. வீதிகள் முழுக்க வெட்டுக் குத்து... தீக்குப் பயந்து பேருந்துகள் பதுங்கிக்கொண்டன. 'அவ்வளவு பெரிய தலைவரைக் கொன்னுட்டாங்களே...’ என்கிற ஆதங்கமும் பரிதவிப்பும் எல்லோருடைய மனங்களிலும் எதிரொலித்த நேரம்.
அப்போதுதான் நாங்கள் ராஜீவ் கொலையின் காரணகர்த்தாக்களாக வளைக்கப்பட்டோம். நாடே கோபாவேசமாகி இருந்த நிலையில் எங்களை நோக்கியப் பார்வை மக்களுக்கு எப்படி இருந்திருக்கும்? 'தலைவரைக் கொன்ன பாவிகள் இவங்கதானா?’ எனப் பத்திரிகைகளில் வெளியான எங்களது படங்களைப் பார்த்து மக்கள் எப்படி எல்லாம் கர்ஜித்து இருப்பார்கள்? அந்த நேரத்தில் நாங்கள் எந்தவித நியாயத்தைச் சொன்னாலும், அது மக்களால் ஏற்கப்பட்டிருக்காது. எங்களுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் முன்வரவில்லை. ராஜீவ் கொலையின் நிஜப் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ளக்கூட வழக்கறிஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. அப்படியே அவர்கள் எங்களுக்காக ஆஜராகி இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அவர்களையும் அவமானப்பேய் சூழ்ந்திருக்கும்.
மிகப் பெரிய தலைவர் கொல்லப்பட்ட பரபரப்பும் பதற்றமும் நிலவிய நிலையில், கண்ணியில் சிக்கியக் காடைக் குருவிகளாய் நாங்கள் அதிகாரிகளின் பிடியில் இருந்தோம். கதறினால்கூட தவறு என்கிற நிலையில், எங்களால் என்ன செய்திருக்க முடியும்? எங்களை விசாரித்த அதிகாரிகள் இந்நேரம் பணி ஓய்வில் வீட்டுக்குப் போயிருப்பார்கள். ஆனால் எங்களின் வாழ்க்கையில் அதிகாரம் அள்ளிப்போட்ட மண், மரண மேடாக எங்களை விழுங்கத் துடிக்கிறது. மரணம் வெல்கிறதோ, வீழ்கிறதோ... ஆனால், அதற்குள், எங்கள் நெஞ்சக் கூட்டுக்குள் இருக்கும் அத்தனை உண்மைகளையும் உரக்கச் சொல்லிவிட வேண்டும் எனத் துடிக்கிறது மனது!
- காயங்கள் ஆறாது
0 comments:
Post a Comment