********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பித்ரா விநியோக குளறுபடி; பதிலில்லாமல் பைலை மூடிய அண்ணன் ஜமாஅத்! - அப்துல் முஹைமின்

Friday, October 7, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

2011 ஆண்டுக்கான அண்ணன் ஜமாத்தின் பித்ரா விநியோக விபரங்களை தாங்கி வந்த உணர்வின் முதல் பட்டியல், 65 கிளைகள் கணக்கில் பிழையுடன் காட்சி தந்தது. அடுத்தவாரம் திருத்தம் செய்து வெளியிட்ட இரண்டாவது பட்டியல்,
 சூளைமேடு
திண்டிவனம்;
சூரமங்கலம்;
புத்தன்துறை;
மெயின்பஜார்&காந்தல்;
திருவல்லிக்கேணி 
ஆகிய கிளைகளின் கணக்குகளில் குளறுபடியுடன் காட்சி தந்தது.

மேற்கண்ட குளறுபடியை திருத்தம் செய்து வெளியிட வேண்டிய அல்லது எங்களின் கூட்டுத்தொகை சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய அண்ணன் ஜமாஅத், திருத்தம் எல்லாம் செய்து கணக்கை 'சரி' செய்து விட்டோம் என்று சொல்லியுள்ளது.

உணர்வில், வளைகுடா வாசகர் அப்துஸ்ஸலாம் என்பவர்,''உணர்வு இதழில் வெளிவந்த ஃபித்ரா தொடர்பான கணக்குகளில் அதிகமான குறைகள் இருந்தன. இதனை சரி செய்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்''! என்று கடிதம் எழுத, அதற்கு பதில் எழுதியுள்ள ஆசிரியரான அண்ணன்,
''நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகள் சென்ற இதழில் சரி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன'' என்று கூறியுள்ளார்.

அதாவது திருத்தம் செய்து ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு விட்டோம். எனவே மீண்டும் திருத்தம் செய்யும் அளவுக்கு எங்களின் பித்ரா கணக்கில் குறைபாடு எதுவும் இல்லை என்பது அண்ணனின் பதிலாகும். ஆனால் திருத்தப்பட்ட பட்டியலில் உள்ள மேற்கண்ட ஆறு கிளைகளின் குளறுபடியை இவர் எப்போது திருத்தம் செய்தார்? அல்லது இந்த தப்புக் கணக்கை  சரி தான் என்கிறாரா? பதில் சொல்ல வேண்டும்.

மேலும், ஏற்கனவே ஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டோம். இரண்டாண்டு  முடிந்தும் பதில் இல்லை.

ஃபித்ரா தொகையில் மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அந்த 82 ,067  ரூபாயை மட்டும் மீதி இருப்பாக காட்டிய அண்ணன் ஜமாஅத்,  ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 மறைத்து விட்டது. அது எங்கே? என்று கேட்டோம். பதில் இல்லை.

ஆனாலும் அண்ணன் ஜமாஅத், பித்ரா விநியோகத்தில் எந்த குளறுபடியும் செய்யவில்லை என்று அண்ணன் உணர்வில் 'அக்மார்க்'முத்திரை குத்தியுள்ளார். நம்பினால் நம்புங்கள்.

தொடர்புடைய  இடுகைகள்;

ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே..?

பித்ரா விநியோகம்; தொடர்ந்து மார்க்க கடமையில் விளையாடும் அண்ணன் ஜமாஅத்!

பித்ரா விநியோகம்; பலவீனம் கண்ணிலா? கணக்கிலா?

மறுபடியும் மொதல்ல இருந்தா....????????

அது போன வருஷம்; இது இந்த வருஷம்....???

********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

2011 ஆண்டுக்கான அண்ணன் ஜமாத்தின் பித்ரா விநியோக விபரங்களை தாங்கி வந்த உணர்வின் முதல் பட்டியல், 65 
கிளைகள் கணக்கில் பிழையுடன் காட்சி தந்தது. அடுத்தவாரம் திருத்தம் செய்து வெளியிட்ட இரண்டாவது பட்டியல்,
 சூளைமேடு
திண்டிவனம்;
சூரமங்கலம்;
புத்தன்துறை;
மெயின்பஜார்&காந்தல்;
திருவல்லிக்கேணி 
ஆகிய கிளைகளின் கணக்குகளில் குளறுபடியுடன் காட்சி தந்தது.

மேற்கண்ட குளறுபடியை திருத்தம் செய்து வெளியிட வேண்டிய அல்லது எங்களின் கூட்டுத்தொகை சரிதான் என்று நிரூபிக்க வேண்டிய அண்ணன் ஜமாஅத், திருத்தம் எல்லாம் செய்து கணக்கை 'சரி' செய்து விட்டோம் என்று சொல்லியுள்ளது.

உணர்வில், வளைகுடா வாசகர் அப்துஸ்ஸலாம் என்பவர்,''உணர்வு இதழில் வெளிவந்த ஃபித்ரா தொடர்பான கணக்குகளில் அதிகமான குறைகள் இருந்தன. இதனை சரி செய்து வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்''! என்று கடிதம் எழுத, அதற்கு பதில் எழுதியுள்ள ஆசிரியரான அண்ணன்,
''நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகள் சென்ற இதழில் சரி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன'' என்று கூறியுள்ளார்.

அதாவது திருத்தம் செய்து ஏற்கனவே நாங்கள் வெளியிட்டு விட்டோம். எனவே மீண்டும் திருத்தம் செய்யும் அளவுக்கு எங்களின் பித்ரா கணக்கில் குறைபாடு எதுவும் இல்லை என்பது அண்ணனின் பதிலாகும். ஆனால் திருத்தப்பட்ட பட்டியலில் உள்ள மேற்கண்ட ஆறு கிளைகளின் குளறுபடியை இவர் எப்போது திருத்தம் செய்தார்? அல்லது இந்த தப்புக் கணக்கை  சரி தான் என்கிறாரா? பதில் சொல்ல வேண்டும்.

மேலும், ஏற்கனவே ஃபித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டோம். இரண்டாண்டு  முடிந்தும் பதில் இல்லை.

ஃபித்ரா தொகையில் மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அந்த 82 ,067  ரூபாயை மட்டும் மீதி இருப்பாக காட்டிய அண்ணன் ஜமாஅத்,  ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 மறைத்து விட்டது. அது எங்கே? என்று கேட்டோம். பதில் இல்லை.

ஆனாலும் அண்ணன் ஜமாஅத், பித்ரா விநியோகத்தில் எந்த குளறுபடியும் செய்யவில்லை என்று அண்ணன் உணர்வில் 'அக்மார்க்'முத்திரை குத்தியுள்ளார். நம்பினால் நம்புங்கள்.

தொடர்புடைய  இடுகைகள்;

ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே..?

பித்ரா விநியோகம்; தொடர்ந்து மார்க்க கடமையில் விளையாடும் அண்ணன் ஜமாஅத்!

பித்ரா விநியோகம்; பலவீனம் கண்ணிலா? கணக்கிலா?

மறுபடியும் மொதல்ல இருந்தா....????????

அது போன வருஷம்; இது இந்த வருஷம்....???

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010