********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஃபித்ரா தொகையில் இயக்க விளம்பரமா..? - அப்துல் முஹைமின்

Friday, October 7, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பித்ரா சம்மந்தமாக வசூலிக்கப்படும் பணத்தில் பொருள்களை வைத்துக் கொடுப்பதற்கான பைகளுக்கோ, அல்லது தங்களது கிளைகளின் சார்பாக அச்சடிக்கப்படும் நோட்டிஸ்களுக்கோ, இதர விளம்பரங்களுக்கோ பயன்படுத்திட வேண்டாம்.மேற்கண்ட அறிவிப்பு கடந்த ஆண்டு அண்ணன் ஜமாஅத் உணர்வு 14 ;52  இதழில் வெளியிட்டதாகும். கடந்த ஆண்டு அண்ணன் ஜமாத்தினர் இந்த கட்டளையை அமுல்படுத்தினார்களா இல்லையோ தெரியாது. ஆனால் இந்த ஆண்டு அண்ணன் ஜமாஅத் பித்ரா விநியோகித்த பல கிளைகளில், இயக்கப்பெயர் அச்சடிக்கப்பட்ட பைகளில் பொருட்களை வழங்கியுள்ளது. சாம்பிளுக்கு ஒரு படம்;

இந்த பைகளுக்கான  பணம் பித்ரா தொகையிலிருந்து பெறப்பட்டதா? அல்லது கிளைகளின் சொந்த செலவில் தயாரிக்கப்பட்டதா என்பதை, எந்த கிளைகளெல்லாம் இயக்கபெயரை போட்டு பைகள் தயாரித்ததோ, அந்த கிளைகள் அனைத்தும் தமது பித்ரா வரவு செலவை காண்பித்து, அதில் இயக்கப்பெயரில் பைகள் அச்சிட பித்ரா தொகை பயன்படுத்தப்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே பித்ரா விசயத்தில் நாம் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அண்ணன் ஜமாஅத், இதிலாவது தனது தூய்மையை நிரூபிக்குமா?

********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

பித்ரா சம்மந்தமாக வசூலிக்கப்படும் பணத்தில் பொருள்களை வைத்துக் கொடுப்பதற்கான பைகளுக்கோ, அல்லது தங்களது கிளைகளின் சார்பாக அச்சடிக்கப்படும் நோட்டிஸ்களுக்கோ, இதர விளம்பரங்களுக்கோ பயன்படுத்திட வேண்டாம்.
மேற்கண்ட அறிவிப்பு கடந்த ஆண்டு அண்ணன் ஜமாஅத் உணர்வு 14 ;52  இதழில் வெளியிட்டதாகும். கடந்த ஆண்டு அண்ணன் ஜமாத்தினர் இந்த கட்டளையை அமுல்படுத்தினார்களா இல்லையோ தெரியாது. ஆனால் இந்த ஆண்டு அண்ணன் ஜமாஅத் பித்ரா விநியோகித்த பல கிளைகளில், இயக்கப்பெயர் அச்சடிக்கப்பட்ட பைகளில் பொருட்களை வழங்கியுள்ளது. சாம்பிளுக்கு ஒரு படம்;

இந்த பைகளுக்கான  பணம் பித்ரா தொகையிலிருந்து பெறப்பட்டதா? அல்லது கிளைகளின் சொந்த செலவில் தயாரிக்கப்பட்டதா என்பதை, எந்த கிளைகளெல்லாம் இயக்கபெயரை போட்டு பைகள் தயாரித்ததோ, அந்த கிளைகள் அனைத்தும் தமது பித்ரா வரவு செலவை காண்பித்து, அதில் இயக்கப்பெயரில் பைகள் அச்சிட பித்ரா தொகை பயன்படுத்தப்படவில்லை என்று நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே பித்ரா விசயத்தில் நாம் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அண்ணன் ஜமாஅத், இதிலாவது தனது தூய்மையை நிரூபிக்குமா?

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010