பயிறுகளை விதைக்கும் ஒரு விவசாயி தன் பயிறுகளுக்கு உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டும் போதாது. அதன்மீது பூச்சி மருந்தும் தெளித்தால் தான் அந்தப் பயிர் நன்கு வளர முடியும். அதுபோல குழந்தையின் மீது பாசம் காட்டும் பெற்றோர்கள் அதற்கு ஏதாவது வியாதி வரும் போது ஊசி போட வேண்டும். குழந்தைக்கு வலிக்கும் என்று கருதி
ஊசி போடாமல் விட்டுவிட்டால் வியாதிகள் தாக்கி அந்தக் குழந்தை இறந்து போகக்கூட வாய்ப்பு இருக்கிறது.அது போலத்தான் இந்த ஏகத்துவக் கொள்கையும். நீங்களும் உங்களோடு இன்றைக்கு தோள் கொடுக்கும் மற்ற தாயீக்களும் அன்று முதல் இன்று வரை இந்த பிரச்சாரத்தை இறைவனின் மாபெரும் கிருபையால் எப்படியெல்லாம் கொண்டு செல்கின்றீர்கள் என்று நான் அறிவேன்.
அப்படியாக நீண்டு கஷ்டப்பட்டு அமைத்த சாலையில் இன்றைக்கு சொகுசுப் பயணம் செய்யும் அயோக்கியர்கள் உங்களைக் குறைபடுத்தி எழுதுவதைக் கண்டு அவர்களுக்கு நீங்கள் உங்கள் ஆன்லைன்பீஜே வழியாக பதில் கொடுத்துக் கொண்டிருந்தீர்கள். ஆனால் அவ்வாறு நீங்கள் அவர்களுக்கு பதில் கொடுப்பதால் உங்களின் மற்றைய பணிகளை அடியோடு ஒதுக்கிவிட்டு அதிலேயே முழுக்கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். உங்கள் மீது அவதூறுகளை அள்ளித்தெளித்து அதன்மூலம் உங்களைக் கோபப்படுத்தி பீஜே கெட்டவர் என மக்கள் மத்தியில் அடையாளப்படுத்த முயன்றார்கள் அந்தக் கயவர்கள். ஆனால் அவர்களின் திட்டம் பலிக்க்கூடாது என்பதற்காகவும், குர்ஆன் ஹதீஸ்களின் சந்தனம் மணக்கும் ஆன்லைன்பீஜே தளத்தில் இந்த பன்றிகளின் சாக்கடை நாற்றமும் புகுந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் நான் இந்த பொய்யன்டிஜேவை உருவாக்கினேன்.
உங்களுக்கு ஒரு பெரிய சுமை குறைந்தது என்கிற காரணத்தால் தான் நீங்கள் இந்த சமீபத்திய காலம் வரைக்கும் என் எழுத்துக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தீர்கள். சில நேரங்களில் நான் கேட்டதற்கு இணங்க ஈமெயில் வழியாகஎனக்கு சில பாயிண்டுகளைத் தந்தீர்கள். உங்களைப் பற்றி எழுதும் அவதூறு விசயங்களுக்கும் உங்கள் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கும் உங்கள் கருத்தைக் கேட்டுத் தான் பதிலளிக்க வேண்டும். கற்பனையில் எழுதினால் அது பொய்யாகப் போய்விடும்.
அவர்களின் எழுத்துக்களில் நீங்கள் கோபப்படும் போது, பீஜே என்பவர் கடுமையான கோபக்காரர், எழுத்தில் நாகரீகம் காட்டாதவர் என்று மக்களிடம் காட்டுவதற்காக அவர்கள் உங்கள் மீது ஏவ இருந்த அஸ்திரத்தை உங்கள் மீது விழாமல் அதை நான் தடுத்தேன். ஆனால் உங்களை எந்த நிலையில் மக்களிடம் காட்ட நினைத்தார்களோ அந்த நிலையில் இப்போது என்னைக் காட்டி விட்டார்கள். எழுத்தில் நாகரீகம் இல்லை, ஆபாசம் என்றெல்லாம் இந்த தளத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் காரணமா அல்லது அந்த அயோக்கியர்கள் காரணமா என்பதை நம் மக்களில் சிலரும் சிந்திக்க மறுக்கின்றனார்கள்.
இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்னால் செங்கிஸ்கான் சம்பந்தமாக நான் வெளியிட்ட ஒரு கடிதத்தில் உண்மைத் தன்மை இல்லை என அதை நீங்கள் நீக்கச் சொன்னீர்கள். ஆனால் அது என் பார்வையில் அது சரியானதாகத் தோன்றியதால் அதை நான் நீக்க முடியாது என்று மறுத்தேன். நம் ஜமாத்தின் கிளையில் நிர்வாகியாக இருக்கும் செங்கிஸ்கானின் அண்ணனும் சேப்பாக்கம் கிளை நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டதால் அதை நீக்கச்சொன்னீர்கள். இந்தக் குற்றச்சாட்டை வைத்த செங்கியின் அண்ணனிடம் இது சம்பந்தமாகப் பேசி செங்கியை நிறுத்தச் சொல்லியிருந்தால் இன்றைக்கு என் எழுத்துக்கள் விமர்சிக்கப்பட்டிருக்காது. அதை நீங்கள் அன்றைக்கு செய்யாமல் காலம் தாழ்த்தியதால் தான் அவர்கள் என்னைச் சீண்டி சீண்டி இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
முகவை அப்பாஸ் என்பவன் நம் ஜமாத்திற்கு வரும் பெண்களை வளைத்து அவர்களின் போன் நம்பர்களை டிரேஸ் செய்து அவர்களோடு சல்லாபித்தான் என்பதை அவனே வாக்குமூலமாக ஒப்புக் கொண்டிருக்கின்றான். ஆனால் இன்றைக்கு அந்த அயோக்கியன் உங்களைப் பற்றி சம்பந்தமில்லாமல் பைத்தியக்காரத் தனமாக உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றான்.
நீங்கள் இந்த தவ்ஹீத் கொள்கையில் பிறக்கவில்லை. நீங்கள் மவ்லீது ஓதியிருக்கிறீர்கள், கத்தம் ஓதியிருக்கிறீர்கள், பாத்திகா ஓதியிருக்கிறீர்கள். சாவு வீட்டில் காசுக்காக குர்ஆன் ஓதியிருக்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு அதெல்லாம் தவறு என்று சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்கிறீர்கள். ஆனால் இந்த அயோக்கியன் முகவை அப்பாஸ் “பீஜே அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் எழுதி மக்களை திசை திருப்பும் காரியத்தைச் செய்து வருகின்றான். இதை புதிதாகப் பார்க்கும் மக்கள் ஏன் இப்படி பீஜே மாற்றி மாற்றி பேசுகிறார் என்று கூட நினைப்பார்கள்.
இது சம்பந்தமாக நான் பதில் கொடுக்கும் போது அந்த முகவை அப்பாஸ் பாக்கரின் காதலியிடம் இரவெல்லாம் பேசிய வசனங்களை தன் நண்பர்களிடம் சொல்லியதையும் உங்களுக்கே கடிதம் எழுதியதையும் வைத்துத் தான் எழுதினோம். இது தவறு என்றால் முகவை அப்பாஸ் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும்.
அடுத்து சுனாமி கணக்கு.. சுனாமி கணக்கை எழுதியது பாக்கர் தான். ஆனால் இன்றைக்கு அப்துல் முஹைமீன் என்ற அயோக்கியனை ஏவி இந்த ஜமாஅத்தில் ஊழல் நடந்ததைப் போல ஒரு தோரணையை உண்டாக்கப் பார்க்கிறான். அது சம்பந்தமாக நான் பதில் கொடுத்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?
அடுத்து பித்ரா கணக்கு.. பித்ரா பணத்தை லட்ச லட்சமாக வசூல் செய்த பொய்யர்கள் கூட்டம் அந்தக் கணக்கை மக்கள் மத்தியில் காட்டாமல் தவ்ஹீத் ஜமாத் கணக்கில் அது நொட்டை இது நொல்லை என சொல்லி மக்களை திசை திருப்பும் வேலையைச் செய்து வருகிறார்கள். இது சம்பந்தமாக நான் பதில் கொடுத்தேன். அது தவறா?
இதுமட்டுமில்லாமல் நாளொரு மேனியும் பொளுதொரு வண்ணமும் ஏதாவது பித்னாவை அள்ளித் தெளித்து வரும் இவர்களுக்கு நான் எவ்வளவோ விசயங்களை ஆதாரப்பூர்வமாக வைக்கிறேன். ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் வேறு விசயங்களை வைத்து பித்னா செய்து வருகின்றார்கள். அப்படியானால் எனக்கு கோபம் வருவதில் என்ன தவறு? அதுதான் அவர்களின் நோக்கமும்.
இந்த தளத்தில் சில வார்த்தைகள் தடிக்கத் துவங்கியவுடன் உங்களுக்கு மெயில் அனுப்பியவர்கள், புகார் செய்தவர்கள் ஒருபுறம் இருக்க.., அதற்காக துடியாய் துடித்து அறிக்கை விடுகிறீர்கள் நீங்கள்.
நம் சகோதரர்கள் ஒருமித்து இதை மூடச்சொன்னால் நான் மூடி விட தயாராக இருக்கிறேன்..
ஆனால் அவர்கள் எழுதும் செய்தியைப் பார்த்து பீஜே அப்படி செய்தது உண்மையா? பீஜே ஏன் இப்படி மாற்றி மாற்றி அன்றைக்கு ஒன்று இன்றைக்கு ஒன்று சொல்கிறாரே? இதற்கென்ன விளக்கம்? என ஏகப்பட்ட சகோதரர்கள் எனக்கு மெயில் அனுப்பியும், உங்களுக்கும் பல பேர் போன் மூலமாகவும் விளக்கம் கேட்கிறார்களே! அதுபோன்ற சகோதரர்களுக்கு இனிமேல் நீங்கள் விளக்கம் அளித்துக் கொள்கிறீர்களா?
அதுதானே அவர்களுடைய நோக்கமும். உங்களின் தாவா பணிகளைக் கெடுத்து அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே உங்களின் காலத்தை வீணாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் முழு எண்ணமும். அதனால் தான் இன்றைக்கு பொய்யன் டீஜே தளத்தை ஒரு தவறான தளமாக திட்டமிட்டே சித்தரித்து விட்டார்கள்.
இப்போதும் கூட பாருங்கள் முத்துப்பேட்டை ரஹ்மத் டிரஸ்டினர் நபிகள் நாயகத்துக்கு கார்ட்டூன் வெளியிட்டுக்கும் இழிசெயலைக் கண்டிக்கத் துப்பு இல்லாமல், ததஜ நடத்திய ஆர்ப்பாட்டை கொச்சைப் படுத்தும் விதமாக ஒரு செய்தி வெளியிட்டிருப்பதைப் பாருங்கள்.
நான் செய்தது குற்றம் என்று ரஹ்மத் டிரஸ்டின் உரிமையாளர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தாராம். ஆனால் தன் சுயநலத்திற்காக ததஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என அயோக்கியத்தனமாக ஒரு செய்தியை வெளிடிட்டுள்ளதை மக்களே நீங்கள் பாருங்கள்.
நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிட்ட முஸ்தபா, அவர் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்ட பிறகும் ததஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்களா? கிட்டத்தட்ட அந்த சம்பவம் நடந்து 2 மாதம் ஆனபிறகும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற என்னக் காரணம் தெரியுமா? அந்த முஸ்தபா நம் சகோதரர்களிடமும் மன்னிப்புக் கடிதத்தைக் கொடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ததஜவினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?
குற்றத்திற்காக மன்னிப்புக் கேட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நீங்கள் வினியோகித்த அந்த கார்ட்டூன் இடம்பெற்ற புத்தகத்தை வாபஸ் வாங்குங்கள் எனச் சொல்லி அவர்களுக்கு 2 மாதம் கால அவகாசம் கொடுத்தும் கூட அந்தப்புத்தகத்தை திரும்பப் பெறாமல் இருக்கும் முஸ்தபாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தாமல் அவர்களுடன் இணைந்து விருந்து சாப்பிடச் சொல்கிறதா இந்த அயோக்கிய நாய்களின் கூட்டம்.
நபிகள் நாயகத்தை கார்ட்டூனாக சித்தரித்து விட்டு அதற்கு கடமைக்கு மட்டும் மன்னிப்பு கேட்டு விட்டு அந்தப் புத்தகத்தை வாபஸ் வாங்காமல் இருக்கும் ரஹம்த் பள்ளி நிர்வாகியைக் கண்டித்து ததஜவினர் அந்தப் பகுதி மக்களோடு இணைந்து தன் மார்க்கத்தைக் காப்பதற்காக நடத்திய ஆர்ப்பாட்டத்தை தவறாகச் சித்தரிக்கும் இந்த பொறம்போக்கு பொருக்கிகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா இல்லையா?
ததஜ நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மாவட்ட கலெக்டர் அளவில் பிரசர் கொடுக்கப்பட்டு கல்வி அதிகாரிகளின் முன்னிலையிலேயே அந்தப் புத்தகங்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டதே! இதற்கு மேல் என்ன வேண்டும்?
இதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை, அண்ணனை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு சாதகமாக பேசும் இவர்களை நான் புரோக்கர் என்று வர்ணிப்பதில் என்ன தவறு? பக்கம் பக்கமாக கேள்வி கேட்கும் சகோதரர்கள் இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்? இதெற்கெல்லாம் நீங்கள் உக்கார்ந்து பதில் எழுதிக் கொண்டிருக்க தயாரா?
அவர்களின் கேள்விகளுக்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் பதில் அளித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். அப்பறம் எங்கே நீங்கள் மக்களின் மார்க்க சந்தேகங்களுக்கு விடையளிப்பது? தவ்ஹீதை எப்படி பிரச்சாரம் செய்வது? எப்படி நவீன பிரச்சனைகளை ஆய்வு செய்வது? இதை இந்த தளத்தின் மீது புகார் சுமத்திய மக்கள் சிந்திக்கட்டும்.
அதேநேரம் நானும் சில தவறுகளைச் செய்து விட்டேன். அதாவது உங்களுடைய கட்டுப்பாடு அறவே இல்லாததாலும்,என்னுடைய கோபத்தினாலும் இந்தத் தளத்தில் சில வெறுக்கத் தக்க விசயங்கள் இருந்தது உண்மை தான். இனிமேல் எழுத்துக்களில் சிறந்த கண்ணியம் இருக்க முயற்சி செய்கிறேன்.நான் தொடர்ந்து செயல்படுவதற்காக உங்கள் மற்றும் உங்கள் ஜமாத்தின் ஆதரவு எனக்கு மீண்டும் தேவை.
பொய்யன்டிஜே தளத்தை நீங்கள் தான் நடத்துகிறீர்கள் என்று பொய்யர்கள் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இதெல்லாம் சாத்தியாமா என்பதை நடுநிலையாளர்கள் சிந்தித்துக் கொள்வார்கள். ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும் கூட அது ஒன்றும் தவறு இல்லை என்று தான் நான் சொல்லுவேன். காரணம் அந்த அயோக்கியர்கள் வரம்பு மீறி உங்களை மட்டுமே குறிவைத்து நடத்தும் தாக்குதல்களுக்கு நீங்கள் தான் பதில் கொடுக்க தகுதியான நபர் என்பது தான் என்னுடைய கருத்து.
இருந்தாலும் இதை நீங்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பு மக்களும் முடிவுசெய்யட்டும்..
- அபூயூசுஃப்
0 comments:
Post a Comment