********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சினிமாவை ஒழிக்க முடியும்; ஆனா முடியாது- அண்ணனின் காமெடி! - அப்துல் முஹைமின்

Saturday, October 1, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கற்பழிப்புகள் நாள்தோறும் பெருகி வருவதை கண்டு கவலையுற்ற ஒருவன், ஒரு தலைவரிடம் போய் தீர்வு கேட்க, 'கற்பழிப்புகளை ஒழிக்க வேண்டுமானால், கற்பழிப்புக்கு காரணமாக இருக்கும் 'கருவியை' ஒழிக்க 
வேண்டும். ஆனாலும் அந்த 'கருவியை' ஒழிக்க முடியாது; ஏனென்றால் அந்த கருவி நேர்மையான முறையில் திருமணம் செய்து குழந்தை பெறுவதற்கும்  பயன்படுகிறது. எனவே அந்த கருவியை ஒழிக்க முடியாத நிலை உள்ளதால் கற்பழிப்புகளை ஒழிக்க முடியாது..'என்று அந்த தலைவர் பதில் சொன்னால் கேள்வி கேட்டவனுக்கு மயக்கம் வருமா? வராதா? இதுபோன்ற  போன்ற ஒரு சூப்பர் பதிலை அண்ணனும் சொல்லியுள்ளார்.

சமூக தீமைகளுக்கு முதல் காரணமாக இருக்க கூடிய சினிமாவை எதிர்த்து டி.என்.டி.ஜே. போராட்டம் நடத்தாதது ஏன் என்ற கேள்விக்கு உணர்வில் பதிலளித்த அண்ணன், ''சினிமாவை தயாரிப்பதற்கான சாதனங்களும் தொழில் நுட்பங்களும் நல்ல காரியங்களுக்கும் உதவக்கூடியதாக உள்ளன. அந்த சாதனங்களை ஒழித்தால் தான் சினிமாவை ஒழிக்க முடியும். 
அந்த தொழில் நுட்பமும் சாதனங்களும் நல்ல பணிகளுக்கும் தேவைப்படுவதால் அவற்றை ஒழிக்க முடியாது. சினிமாவையும் ஒழிக்க முடியாது..'என்று கூறியுள்ளார். 

சினிமா சாதனங்களை ஒழித்தால் தான் சினிமாவை ஒழிக்க முடியும் . இல்லையென்றால் முடியாது என்ற நகைச்சுவை பதிலை கண்டு யாரும் நம்மை கேலி செய்து விடக்கூடாது என்பதால் 
கடைசியாக, நல்ல ஆட்சி நடந்தால் ஒழிக்கலாம்; மனநிலையில் 
மாற்றத்தை  உண்டாக்கி ஒழிக்கலாம் என்று போகிற போக்கில் சொல்லி விட்டு செல்கிறார்.  

சகோதரர்களே! அண்ணனிடம் சினிமாவை ஒழிப்பதற்கு தீர்வு கேட்ட மாதிரி, கற்பழிப்பு- விபச்சாரம்- கொலை- போன்றவற்றை ஒழிக்க தீர்வு கேட்டு விடாதீர்கள். கேட்டால்....

இப்போது முதல் பாராவை படியுங்கள்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010