இரட்டைக் குழந்தை... ஒரே ஒரு ரத்தக் குழாய்!
ஆபத்தை நீக்கும் புதிய சிகிச்சை
கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் வளரும் போது நிறைய சிக்கல்கள் தோன்றுவது வழக்கம் தான். அதில் முக்கியமான ஒன்று, இரண்டு குழந் தைகளுக்கும் ஒரே நஞ்சு இருப்பது. அந்த நஞ்சு வழியாகச் செல்லும்
ரத்தக் குழாய்கள் இரண்டு குழந்தைகளுக்கும் பிரச்னையை உண்டாக்கும். இந்தச் சிக்கலைத் தீர்க்க வந்துவிட்டது, பெட் டோஸ்கோபி சிகிச்சை.
இதுகுறித்து சென்னை மெடிஸ்கேன் நிறுவனத் தின் இயக்குனர் டாக்டர் சுரேஷ் பேசினார். ''நஞ்சு, தொப்புள் கொடி, கரு ஆகிய மூன்றும் சேர்ந்த அமைப்பைத்தான் கர்ப்பம் என்கிறோம். நஞ்சில்
இருந்துதான் தொப்புள் கொடி வழியாக, குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜனும் சத்துக்களும் கிடைக்கின்றன. ஒரு கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும் போது, இரண்டு குழந்தைகளுக்கும் தனித்தனியாக நஞ்சு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரச்னை இல்லை. சில சமயங்களில் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு நஞ்சு மட்டுமே இருக்கும். இதனால் இரண்டு குழந்தைகளும் ஒரே நஞ்சில் இருந்தே ஊட்டச் சத்தைப் பெறவேண்டிய சூழல் உண்டாகும். இதை, 'மோனோ கொரானிக் ட்வின்ஸ்’ என்று சொல்வோம். சில சமயங்களில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து அதிக மாகவும், மற்றொரு குழந்தைக்கு குறைவாகவும் கிடைக்கும் நிலை இருக்கும்.
இதில் ஒரு குழந்தைக்கும், மற்றொரு குழந்தைக்கும் ரத்தக் குழாய் மூலம் தொடர்பு இருக்கும். அதாவது, முதல் குழந்தையிடம் இருந்து ரத்தக் குழாய் வழியாக இரண்டாவது குழந்தைக்கு ரத்தம் சென்று, இரண்டாவது குழந்தையின் ரத்தக் குழாய் வழியாக மறுபடியும் முதல் குழந்தைக்கே ரத்தம் செல்லும். எல்லா மோனோகொரானிக் ட்வின்ஸிலும் இந்தச் செயல் நடைபெறும். ஆனால் சில சமயங்களில், முதல் குழந்தையிடம் இருந்து இரண்டாவது குழந்தைக்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய் மட்டுமே இருக்கும். இரண்டாவது குழந்தையிடம் இருந்து முதல் குழந்தைக்கு வரக்கூடிய ரத்தக் குழாய் இருக்காது.
எனவே, முதல் குழந்தையில் இருந்து இரண் டாவது குழந்தைக்கு ரத்தம் சென்றுகொண்டே இருக்கும். அதிக ரத்தம் காரணமாக இரண்டாவது குழந்தையின் இதயம் வீங்கிவிடும். அந்தக் குழந்தை அதிகமாக சிறுநீர் கழியும். அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீரின் அளவு அதிகரிக்கும். அதே நேரம் முதல் குழந்தை ரத்தம் தந்துகொண்டே இருப்பதால், அதன் ரத்த அளவு குறையும். அதனால் சிறுநீர் போகா மல் அந்தக் குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்து விடும்.
ஒரு குழந்தையின் பனிக்குட நீர் மட்டும் அதிகமாக இருப்பதால், தாயின் வயிறானது ஐந்து மாதங் களிலேயே எட்டு மாதத்தில் இருப்பது போல் பெரிதாக இருக்கும். இதனால் குறைப் பிரசவம் நிகழ்ந்து, போதிய வளர்ச்சி இல்லாமல் இரண்டு குழந்தைகளுமே இறந்துவிடும் அபாயம் உண்டு. இந்தக் குறைபாட்டை அல்ட்ரா சவுண்ட் சோதனையின் மூலம் அறியலாம். இப்போது இந்தப் பிரச்னையை தீர்க்கும் வகையில், கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஃபெட்டோஸ்கோபி கருவியை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இந்தக் கருவியானது 15 முதல் 20 செ.மீ. நீளமும், 2 மி.மீ. அகலமும்கொண்டது. இதன் ஒரு முனையில் கேமராவும், லேசர் சிகிச்சை கருவியும் இருக்கும். முதலில் லோக்கல் அனஸ்தீஷியா கொடுத்து தாயின் வயிற்றுப் பகுதியை மரத்துப்போகச் செய்வோம். பின்னர், வயிற்றுப் பகுதியில் ஒரு துளையை ஏற்படுத்தி, அதன் வழியாக ஃபெட்டோஸ்கோபி கருவியைச் செலுத்துவோம். அதில் உள்ள கேமரா மூலம் கர்ப்பத்தில் உள்ள உறுப்புகளை கம்ப்யூட்டர் திரையில் பார்த்து, இரண்டு குழந்தைகளுக்கும் ரத்தப் பரிமாற்றம் நடக்கும் ரத்தக் குழாய் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்போம். பின்னர், லேசர் கருவி மூலம் அந்த இடங்களில் கதிர்வீச்சை செலுத்தி, ரத்தக் குழாயின் இணைப்பைத் துண்டித்துவிடுவோம். இப்போது இரண்டு குழந்தைகளுக்கும் இடையே எவ்வித ரத்தக் குழாய் இணைப்பும் இல்லாததால், ரத்தப் பரிமாற்றம் இருக்காது. ஆனால், நஞ்சில் இருந்து தொப்புள்கொடி வழியாக மேற்கொள்ளப்படும் பரிமாற்றம் மட்டும் நடைபெறும். எனவே, இரண்டு குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச் சத்து கிடைத்துக்கொண்டே இருக்கும். அதனால் இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
கரு உருவான இத்தனையாவது மாதத்தில்தான், இந்தப் பிரச்னை ஏற்படும் என்று உறுதியாகக் கூற முடியாது. மூன்று மாதம் தொடங்கி ஆறு மாதம் வரை எப்போது வேண்டுமானாலும் உண்டா கலாம். பாதிக்கப்பட்டவர்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டால், 60 சதவிகிதம் வரை இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றும் வாய்ப்பு உண்டு.
சில சமயங்களில் நஞ்சில் கட்டி உருவாகவும் வாய்ப்பு உண்டு. இது குழந்தைக்கு ரத்த ஓட்டத்தைப் பாதித்து பெரும் அபாயத்தை ஏற்படுத்தும். இப்போது இந்தக் கட்டியையும், ஃபெட் டோஸ்கோபி மூலம் துண்டித்து எடுத்து விட முடியும்'' என்றார்.
இரட்டைக் குழந்தைகள் இனி நலமாய் வெளிவருவார்கள்!
- சி. காவேரி மாணிக்கம்

*********************************************************************************
பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே - 56: 25.3.87
நேரடி ரிப்போர்ட் - 1
மலைக்கோட்டைஎக்ஸ்பிரஸ்... 'எங்களுக்காகவே ஓடுகின்ற ஸ்பெஷல் ரயிலாக்கும் இது!’ என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு திருச்சி மக்களின் மனதில் ஒரு தனி இடம் பெற்ற ரயில்!
கண்ணால் காணும் வரையில் நம்பவே முடியவில்லை. கண்ட பிறகோ, 'எதிர்காலத்தில் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு உருப்படியாகப் போய்ச்சேருவோமா?’ என்று பீதியே எழுந்தது.
அரியலூர் ஸ்டேஷனில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் மருதையாறு பாலம். 1956-ல் தூத்துக்குடி எக்ஸ்பிரஸை நீச்சலடிக்கவைத்த பாலம். அப்போது 150-க்கும் மேற்பட்ட உயிர்களை விழுங்கிய பாலம். மத்திய மந்திரி லால்பகதூர் சாஸ்திரியையே ராஜினாமா செய்யவைத்த பாலம்!
15.3.87 அன்று காலை 4.45 மணிக்கு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸில் டிரைவர் வெள்ளையன், 'தன் இரவு ட்யூட்டி முடியப்போகிறது (?!), காலையில் போய் நிம்மதியாகத் தூங்கலாம்’ என்ற எண்ணத்துடன் பாலத்தின் வட புறம் நுழைந்தபோதுதான், தென்புற மூலையில் திடீரென வெடிச் சத்தம். அவர் திடீர் பிரேக் போட்ட இரண்டு நிமிடங்களில் எல்லாமே முடிந்துவிட்டன.
குண்டு வெடித்த பிறகு, தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பினால்தான் விபத்து ஏற்பட்டது என்பது ரயில்வே அதிகாரிகளின் கருத்து. எட்டுப் பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று நுழைந்து, அந்தரத்தில் தொங்கி - அந்தப் பயங்கரத்தை - விவரிக்க வார்த்தைகளால் முடியாது. பாலத்தின் தென் முனையில் இருந்த ஒரு தூணில் வெடிகுண்டு வைக்கப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட ஒயர், அங்கு இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பனை மரத்துக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த பெட்டி போன்ற மின் அமைப்புக் கருவியுடன் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த ஒயரின் மீதே பலரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். விபத்துக்குள்ளான ரயிலைப் பார்த்தபோது, ஏதோ ஆங்கிலப் படம் பார்ப்பதுபோல் தோன்றியது. ஆனால், அதன் பிறகு நடைபெற்ற நிவாரணப் பணிகளைப் பார்த்த பிறகுதான், 'இது தமிழ்நாடு’ என்பது புரிந்து மனம் கலங்கியது.
உண்மையிலேயே விபத்து எப்படி நடந்தது என்பதை இன்ஜினில் பயணம் செய்த ஐந்து நபர்களால்தான் சொல்ல முடியும். அதில் நால்வர் இறந்துவிட்டனர். உயிருடன் இருந்த மெக்கானிக் குணசேகரனை மதியம் நான்கு மணி வரை பெட்டிக்கு வெளியே கொண்டுவர இயலவில்லை. அவர் இருந்த நிலையிலேயே அவருக்கு ட்ரிப் செலுத்தப்பட்டது. இறுதி வரையிலும் அவரை முழுமையாக வெளியே எடுக்க முடியவில்லை. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த வலது கையை வெட்டிய பிறகே அவரை வெளியே எடுக்க முடிந்தது.
மிகவும் சேதமடைந்து காணப்பட்டது ஏ.ஸி. கோச்தான். அதுபோல் ஒரு பெட்டி இருந்தது என்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது. இதில் பயணம் செய்தவர்களில் அதிர்ஷ்டவசமாகப் பிழைத்தவர், திருச்சி ஆனைமலை ஆட்டோமொபைலின் உரிமையாளர் அழகப்பன்.
திருச்சி சங்கம் ஹோட்டல் மற்றும் சிதம்பரம் விலாஸ் பஸ் டிரான்ஸ்போர்ட்ஸ் உரிமையாளருமான சின்னபாப்புவும், அவரது மனைவி பிரபாவதியும் இந்த கோச்சில்தான் பயணம் செய்தனர்.
இறந்த பிறகும் சின்னப்பாப்புவின் முகம் ஒருவித மலர்ச்சியுடனே காணப்பட்டது. ஆனால் பிரபாவதி, அவர் உதவிக்காகப் பிடித்திருந்த அபாயச் சங்கிலியின் கட்டையை இன்னமும் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு இருந்தார்.
அதே பெட்டியில் பயணம் செய்த அழகப்பனை, அவரது வீட்டில் சந்தித்தபோது, ''சனிக்கிழமை ராத்திரி எக்மோர் ஸ்டேஷன்ல சார்ட் பாத்துட்டிருந்தப்பதான் சின்னப்பாப்புவும், அவரது மனைவியும் வந்தாங்க. அப்ப அவர் சொன்னார்... 'கூபே புக் பண்ணியிருந்தேன். கிடைக்கலே...’ன்னார். உடனே நான் சார்ட்டைப் பாத்துட்டு, 'ஏ.ஸி-யில் இரண்டு பெர்த் காலியா இருக்கு... வாங்களேன். பேசிக்கிட்டே போலாம்...’னேன். அவர், 'லக்கேஜ் எல்லாம் அடுக்கிவெச்சாச்சு. வண்டியும் புறப்படப்போகுது... திருச்சியில் பாக்கலாம். வண்டியில ஏறுங்க...’னு மறுத்துட்டார். அது Partial A.C. கம்பார்ட்மென்ட். அதில் ஏ.ஸி-யில் நானும். ஏ.ஸி. இல்லாததுல சின்னபாப்புவும் ட்ராவல் பண்ணோம். மூணரை மணி போல விழிச்சபோது ரொம்பக் குளிரா இருந்தது... குளிருக்கு அடக்கமா கம்பளியைப் போர்த்திட்டுப் படுத்துட்டேன். திடீர்னு டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. வண்டி பாலத்துல போறப்ப ஏற்படற சத்தம்னு நினைச்சேன். அடுத்த செகண்டே இது ஒரு பெரிய விபத்துனு தெரிஞ்சுபோச்சு. அதுக்கப்புறம் கண் விழிச்சு பார்த்தப்ப மேல வானம்தான் தெரிஞ்சுது. மெதுவாக் கையைக் காலை அசைச்சுப் பார்த்தேன். கால் மட்டும் லேசா வலிச்சது. அதுக்கப்புறம் உதவினு சத்தம் போட்டேன். யாரோ ரெண்டு மூணு பேர் என்னைக் கீழ இறக்கினாங்க. அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது, இன்னொரு பெட்டியின் மேலே நான் கிடந்திருக்கேன்னு..!'' என்றார். முழுமையாக நொறுங்கிப் போன ஏ.ஸி. கோச்சிலில் இருந்து தூக்கி எறியப்பட்டு, பாலத்தின் வலது புறம் கவிழ்ந்துகிடந்த இன்னொரு பெட்டியின் மேல் இவ்வளவு பத்திரமாக, தான் எப்படி விழுந்தோம்'' என்று அவரே ஆச்சரியப்பட்டார்.
இன்ஜினில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட மெக்கானிக் குணசேகரன் மறுநாளே சற்று தேறிவிட்டார். தன் அவஸ்தைகளையும் மீறி, கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் பொறுமையாகப் பதில் அளித்தார். ''ஆக்ஸிடென்ட் ஆனப்ப நான் முழிச்சிட்டுதான் இருந்தேன். அரியலூர் ஸ்டேஷன்ல வெடிகுண்டு புரளிபத்தி வதந்தி இருந்ததுங்கிறது எல்லாம் பொய். எந்தவிதமான ஆர்டர்ஸும் எங்களுக்கு அரியலூர் ஸ்டேஷனில் கொடுக்கப்படலை. பாலத்தில் நுழைஞ்சப்ப 35 கிலோ மீட்டர் வேகத்தில் போய்க்கிட்டு இருந்தோம். அப்ப டமார்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. டிரைவர் உடனே 'ஐயையோ’ன்னாரு. எந்திருச்சு என்ன நடந்ததுனு பாக்கிறதுக்குள்ளே, வண்டி அப்படியே புரண்டிருச்சு. நான் கண்ணை முழிச்சுப் பார்த்தப்ப, யாரோ ரெண்டு பேர் மேலே படுத்த மாதிரி தோணுச்சு. அப்புறந்தான் அவங்க செத்துப்போயிட்டாங்கனு தெரிஞ்சது. பிறகு சத்தம் போட ஆரம்பிச்சேன். 'எல்லோரும் செத்துப் போயிட்டாங்க. நான் மட்டும் உயிரோடு இருக்கேன். என் கையை வெட்டியாவது என்னைக் காப்பாத்துங்க’னு அழுதேன். பிறகு நினைப்பு வந்து வந்து போச்சு...'' என்றார்.
இன்ஜினுக்கு அடுத்தப் பெட்டியில் பயணம் செய்த ஜெயச்சந்திரனால் கோர்வையாய் எதுவுமே சொல்ல முடியவில்லை. திடீர் திடீரென்று 'ஐயோ’ என்று அலறிவிட்டுக் கண்ணை மூடிக்கொள்கிறார்.
வழக்கம்போல் மந்திரிகள். கலெக்டர் எல்லோரும் வந்து பார்த்துவிட்டு போய்விட்டார்கள். இன்னும் சில நாட்களுக்கு அரசாங்கமும் போலீஸும் சேர்ந்து குற்றவாளிகளுக்குத் தீவிரமாக வலை வீசும். ஆனால், மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் பீதியை சுலபத்தில் களைய முடியுமா என்ன..?''
நேரடி ரிப்போர்ட் - 2
திருச்சி வட்டாரத்துக்கும் விபத்துக் களுக்கும் அப்படி என்ன உறவோ? கடந்த ஆண்டு ஜனவரியில், பிரதமர் ராஜீவ் காந்தி திருவையாறு விஜயம் செய்தார். அவர் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு திருவையாறு அருகே பாலம் வெடிகுண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது. அதற்குப் பின் சமீபத்தில் ஜெயங்கொண்டம் வங்கிக் கொலைகள்... இப்போது அரியலூர் கோரச் சம்பவம். பிரதமர் திருவையாறு வருவதற்கு முன்பாகவே வெடி வழக்கை முடிக்க நினைத்தது போலீஸ். பொறுப்பு புதுக்கோட்டை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது 'தமிழரசன், ஜெகந்நாதன்’ என்று இரண்டு தீவிரவாதிகளின் பெயர்கள் அடிபட்டன. கடந்த 15 வருடங்களாக போலீஸுக்குச் சவால்விட்டுத் திரிபவர்கள் இவர்கள்.
தற்போது சம்பவம் நடந்துள்ள இடத்துக்கு அருகில் 'தமிழ்நாடு விடுதலைப் படை’ போஸ்டர்கள் காணப்படுகின்றன. இந்தப் படையில் முக்கிய அங்கம் தமிழரசன், ஜெகந்நாதன்... இதை வைத்துப்பார்க்கும்போது. மூன்று சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உண்டு என்று நினைக்க வைக்கிறது.
இந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 17 பெட்டிகளைக்கொண்டது. அவற்றில் எட்டுப் பெட்டிகள் விழுந்தன. பாலத்தின் மேல் நின்ற ஒன்பது பெட்டிகள், மறுபடியும் அரியலூருக்கே கொண்டுபோகப்பட்டன. இந்தப் பெட்டிகளில் இருந்த பயணிகள் ஆயிரத்துக்கும் மேல். உடைந்த பெட்டியில் கிடந்த பிணங்கள் 27. சிகிச்சைக்குப் போனவர்கள் 139 பேர். ஒன்பது பெட்டிகளில் ஆயிரத்துக்கும் மேல் என்றால், விபத்துக்குள்ளான எட்டுப் பெட்டிகளில் 166 பேர்தானா? என்ற சந்தேகம் உள்ளது. இன்னும் உடல்களைப் பெற முடியாமல் உறவினர்கள் மருத்துவமனைக்கும் சம்பவ இடத்துக்கும் அழுதபடி அலைகிறார்கள். ஆற்றில்கிடக்கும் பெட்டிகளுக்குக் கீழே பல உடல்கள் இருக்குமோ என்பது உறவினர்களின் சந்தேகம். 'பெட்டிகளுக்குக் கீழே உடல்களே இல்லை’ என்று பிடிவாதமாகச் சொன்னார்கள் ரயில்வே அதிகாரிகள்.
ஆற்றில்கிடக்கும் பெட்டிகளை அகற்றும் பணி 16-ம் தேதியில் இருந்தே துவங்கியது. பெட்டிகளைத் தூக்குவதற்கும், பக்கவாட்டில் தள்ளுவதற்குமாக இரண்டு கிரேன்கள் பயன்படுத்தப்பட்டன. சிலபெட்டிகளில் இருந்த பயணிகளை, வெல்டிங் செய்து மீட்டார்கள். கிரேன் ஒரு பெட்டியைத் தூக்கியபோது, அந்தப் பெட்டி நழுவி, கீழேகிடந்த மூன்று பெட்டிகளின் மேல் விழுந்தது. இப்போது சிதைந்து, உருக்குலைந்த நிலையில் நான்கு பெட்டிகள். இவற்றை என்ன செய்வது என்று குழம்பி, இறுதியாக வெல்டிங் செய்யும் வேலையில் இறங்கினார்கள். வெல்டிங் செய்தபோது, பெட்டிகள் அனைத்திலும் தீ பிடித்தன. அருகிலுள்ள அரியலூர், பெரம்பலூரில் இருந்து அரை மணி நேரம் கழித்து தீயணைப்பு வண்டிகள் வந்தன. இந்தப் பெட்டிகளின் அடியில் உடல்கள் இருந்தனவா, அப்படியானால் அவை என்னாவாகி இருக்கும்?
மருதையாற்றுப் பாலம். இரண்டு கிராமங்களுக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இடது புறம் ரசாலபுரம்; வலது பக்கம் ராமலிங்கபுரம். இரண்டு ஊர்களுக்கும் பகை. இதனால் கிராமக் கோயில் விழாக்கள் ஐந்து வருடங்களாக நடப்பது இல்லை. இவர்களின் பகையைக் குற்றவாளிகள் பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்பு உண்டு. போலீஸ் நாய் இரண்டு கிராமங்களுக்கும் சென்று திரும்பி, கரையில் படுத்துவிட்டது. இந்தக் கிராமங்களின் மீதும் போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது.
சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அரியலூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு போன். ''என் அறைக் கதவு வெளியே சாத்தப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. வாசலில் முகம் தெரியாத நபர்களின் நடமாட்டம்... காப்பாற்றுங்கள்'' என்று அலறியது போனில் ஒரு குரல். அலறியவர் அருகில் உள்ள பம்ப்பிங் ஸ்டேஷன் பொறுப்பாளர். அவரை மீட்கப் போனபோது, அறைக்கு வெளியே யாரும் இல்லை. பொறுப்பாளர் வெளியே வந்ததும் பாலத்தில் வெடிச் சத்தம்... மயங்கி விழுந்தார் பொறுப்பாளர். வெகு நேரத்துக்குப் பின் அவரையும் காணவில்லை.
- ஆர்.பாலகிருஷ்ணன், யு.நிர்மலாராணி
படங்கள் : 'பொன்னையா’ சம்பத், பிரசன்னா

கயிறே, என் கதை கேள்!
உண்மையான ஒப்புதல் வாக்குமூலம்!
உங்களோடு பேசுவது இதுவே இறுதியாக இருக்கலாம். பன்னெடுங்காலம் பழகிய நண்பனை சிறு கைகுலுக்கலோடு பிரிவதைப்போல், என் இறுதிப் பகுதியை எழுதுகிறேன். மரணத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல மனதார நினைத்தவர்களைப் பிரிவது. என் மன பாரம் பகிரும் சுமைதாங்கிகளாகவே ஜூ.வி. வாசகர்களைப் பார்க்கிறேன். இப்போது 'கயிறா... உயிரா?’ என்கிற பட்டிமன்றத்தில் கடைசி உரை நிகழ்த்துபவனாக உங்களிடத்தில் நிற்கிறேன்.
எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தூக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்பதை எமக்கு எதிரான வழக்கின் தீர்ப்பிலேயே, பக்கம் 157, 158-ல் நீதிபதி தாமஸ் அவர்களும், நீதிபதி குவாத்ரி அவர்களும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
1. எதிரியின் வயது இளம் வயதாக இருந்தால், தூக்குத் தண்டனை தவிர்க்கப்பட வேண்டும்.
2. சமுதாயத்துக்கு தொடர் பயத்தை ஏற்படுத்தக்கூடிய மாதிரி எந்த வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார் என்பதற்கான சாத்தியக்கூறு இருந்தால், தூக்குத் தண்டனையைத் தவிர்க்கலாம்.
3. இன்னொரு நபருடைய ஆதிக்கத்துக்கோ, வலுக்கட்டாயத்துக்கோ ஆட்பட்டு அந்தக் குற்றச் செயலைச் செய்து இருந்தால், தூக்குத் தண்டனை தவிர்க்கப்பட வேண்டும்.
மேற்படி மூன்று சாதக காரணங்களும் இந்த வழக்கில் எனக்கும் நளினிக்கும் அப்படியே பொருந்துகின்றன. அந்தக் குற்றம் நடந்தபோது எனக்கு 20 வயது, நளினிக்கு 25 வயது. நீதிபதி வாத்வா அவர்கள் வழங்கிய தீர்ப்பில் 433, 434-ம் பக்கங்களில் 18, 23, 26 வயதுடைய மூவரை இளம் வயதினர் எனக் கருதி (அவர்கள் கையில் துப்பாக்கிவைத்து பலரை சுட்டுக்கொண்டு இருந்தபோதுகூட) விடுதலை செய்யப்பட்ட ஒரு பழைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.
இரண்டாவது கருத்தைப் பொறுத்தவரையில், எம்மால் எதிர்காலத்தில் இந்தச் சமுதாயத்துக்கு வன்முறை அச்சுறுத்தல் நிச்சயமாக ஏற்படாது. ராஜீவ் காந்தி தனிப்பட்ட விரோத உணர்ச்சி காரணமாகவே கொல்லப்பட்டார். அதில் நாம் ஈடுபடுத்தப்பட்டோம் என்பதுதான் நீதிமன்றம் எடுத்த முடிவு. ஒருவேளை, நாம் குற்றவாளிகள் என்பது சரி என எடுத்துக்கொண்டாலும் நாம் திரும்ப அப்படி ஒரு தவறைச் செய்ய நிச்சயம் வாய்ப்பு இல்லை. மூன்றாவது காரணத்தைப் பொறுத்த அளவில், நானும் நளினியும் சிவராசனின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் பயந்தோம். சிவராசன் எனக்கு மிகவும் மூத்த எல்.டி.டி.ஈ உறுப்பினர்; எனக்கு ஒரு Commander ஆகவும், Bossஆகவும் இருந்தார். சிவராசன் எனக்குக் கட்டளைகளை வழங்கினார். இவற்றை எல்லாம் நான் அல்ல, அரசுத் தரப்புச் சான்றுகளே சொல்கின்றன. மூன்று தருணங்களில் சிவராசனின் நடத்தையைப் பார்த்து நளினி பீதி அடைந்தார். நாம் சிவராசனை மறுத்துப் பேச முடியாத நிலையிலும், மனதில் எழும் சந்தேகத்தை வெளிப்படுத்தி உறுதிப்படுத்தவும் முடியாத நிலையில் இருந்தோம். இவ்வளவு இருந்தும் சிவராசனின் அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு, அவருடைய கட்டாயத்துக்குப் பயந்து அவர் சொன்னதை ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காது செய்தோம் என்று அரசு தரப்புச் சான்றுகள் சொல்கின்றன.
மரண தண்டனையைத் தடுக்க நீதிபதி குறிப்பிட்ட மூன்று காரணிகளும் எமக்குச் சாதகமாக இருந்தும், எமக்கான தண்டனை தளர்த்தப்படவில்லை.
நீதிபதிகள் தாமஸ், குவாத்ரி ஆகியோர் பக்கம் 156-ல், 'A3 முருகன் முதல் வகை நபர்களின் உத்தரவுகளை மட்டும் நிறைவேற்றவில்லை. அத்தோடு, மற்றவர்களையும் அந்த உத்தரவுக்கு ஏற்ப வேலை செய்யவைத்து, குற்றமுறு சதியின் இறுதி இலக்கினை அடையச் செயல்பட்டார். அதனால் அவர் குற்றமுறு சதியாளர்களின் தலைமைத்துவ மட்டத்தினுள் (leadership layer among the conspiators) வந்துவிடுகிறார்’ என்று முடிவு செய்தனர். அதன் பேரில் தூக்குத் தண்டனையும் கொடுத்தனர்.
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ஏதாவது செய்யும்படி எனக்கு எவரேனும் உத்தரவு போட்டார்கள் என்பதற்கோ, நான் யாருக்காவது உத்தரவு அல்லது பணிப்புரை வழங்கினேன் என்றோ அல்லது குறைந்தபட்சம் கேட்டுக்கொண்டேன் என்றாவது சான்று பகரக்கூடிய ஒரு வாசகத்தையாவது அரசுத் தரப்புச் சான்றுகள் சுட்டிக்காட்ட முடியுமா? நான் மறைமுகமாக அவ்வாறு உத்தரவு போட்டதாகக்கூட எவ்விதச் சான்றும் கிடையாது.
சிவராசன் என்னை நம்பவே இல்லை. என்னிடம் உண்மையைச் சொல்லக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உண்மை தெரியக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து என்னைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார். இதற்கு அரசுத் தரப்பு சான்றுகளே உள்ளன. அப்படி இருந்தும் நீதிபதிகள் எப்படி என்னை அந்தத் தலைமைப் பட்டியலில் சேர்த்தார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது. ஒருவரை சாகடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவரைத் தலைவராக்கினால் போதும் என நினைத்திருக்கிறார்கள். நான் யாருக்கும் உத்தரவு ஏதும் போடவில்லை என்பதற்கும், மற்றவர் உத்தரவுப்படி செயல்பட்டேன் என்றும் உறுதிப்படுத்தும் முடிவுகளின் வாசகங்களை நீதிபதி வாத்வா அவர்களின் தீர்ப்புப் பக்கங்கள் 106, 107, 141, 366, 368, 369 ஆகியவற்றில், யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்கலாம்.
அடுத்து எமக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதற்குக் காட்டிய காரணங்களில் ஒன்று, சம்பவ இடத்தில் ராஜீவ் காந்தி தவிர, காவல் துறையினர் உட்பட மேலும் 17 பேர் இறந்தனர் என்பது. இரண்டு எதிரிகளுக்கு
(A1,A3) தனிப்பட்ட ரீதியில் ராஜீவ் காந்தி மீது வெறுப்பு ஏதும் இல்லாவிட்டாலும், அவர் இந்தியப் பிரதமராக இருந்து எடுத்த முடிவுக்காக கொல்லப்பட்டார் என்பது காரணமாக இருக்கலாம்.
இவை இரண்டுமே நீதிபதிகள் முதலில் எடுத்த முடிவுகளுக்கு முரண்பட்டு நிற்கின்றன. தீர்ப்பின் பக்கம் 29-ல், ''ராஜீவ் காந்தியைத் தவிர வேறு ஒருவரைக்கூட கொல்ல குற்றமுறு சதியாளர்கள் விரும்பினார்கள் என்பதற்கு நிச்சயமாக எவ்வித சான்றும் கிடையாது'' எனத் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும், அரசு ஆவணம் 77-ன்படி, ''21.05.91 அன்று ஜெயகுமார் (A10) வீட்டுக்குப் போன பிறகுதான் (பின் இரவு), சுபா அங்கு குண்டு வெடித்ததைப்பற்றி நளினியிடம் சொல்கிறார். இதுவரை நளினிக்கு குண்டுபற்றி எதுவும் தெரியாது. அங்கு பலர் இறந்ததும் நளினிக்குத் தெரியாது. குண்டுச் சத்தம் கேட்பதற்கு முன்பு வரை தணுவிடம் குண்டு இருந்தது என்பதுகூட நளினிக்குத் தெரியாது. அதேபோல், 25.5.91 அன்றுதான் தணு வைத்திருந்து வெடிக்கவைத்த குண்டுபற்றி சிவராசன் முதன்முதலில் சொன்னதாக அரசு ஆவணம் 81-ல் எழுதப்பட்டு உள்ளது. அரசுத் தரப்புச் சான்றின்படியே எமக்குத் தெரிந்திராத, அதற்கு வாய்ப்பே இல்லாத இறப்புகளுக்கு எம்மை பொறுப்பாக்கித் தூக்குத் தண்டனை கொடுப்பது என்ன நீதி?
நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் பக்கம் 30-ல், ''அந்த குண்டு வெடிப்பதால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது சிவராசனுக்கும் அவரது உயர் மட்டத் தலைவர்களுக்கும் தெரிந்து இருக்கலாம்; ஆனால், அதனைக்கொண்டு அவர்கள் வேறு நபர்களை கொல்லக் கருதி இருந்தார்கள் எனக் கருத முடியாது!'' எனச் சொல்லி இருக்கிறார்கள். எமக்கான தீர்ப்பின்போது மட்டும் இந்த வரிகள் மறந்துபோனது ஏனோ?
இதே நீதிபதிகள் 28, 29-ம் பக்கத் தீர்ப்புகளில், ''ராஜீவ் காந்தி மீது இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டார். அவர் திரும்பவும் பதவிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்று கருதியதும் அதற்குக் காரணம்'' என்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியதற்கு தனிப்பட்ட ராஜீவ் காந்தி மட்டும் காரணம் அல்ல. அது அந்த அரசின் முடிவு. அந்த அரசின் பிரதம மந்திரியாக ராஜீவ் காந்தி இருந்தார் என்பதால் அவர்தான் அனுப்பினார்; அவர் மட்டும்தான் அதற்குப் பொறுப்பு என்று சொல்வது எப்படி உண்மையாகும்?
அடுத்து, தடா சட்டத்தில் ஒரு வழக்கை விசாரணை செய்கிறபோது, அந்த சட்டத்தின் கீழ் வருகிற குற்றங்களுடன் மற்ற சட்டங்களுக்குக் கீழ் வருகிற குற்றங்களும் செய்ததாகத் தெரிந்தால், அவற்றையும் சேர்த்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம். தடா சட்டத்துக்கு கீழ் வருகிற குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கிறபோது, மற்றைய சட்டங்களுக்கு கீழ் வருகிற குற்றங்களுக்கும் சேர்த்து அதே சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுக்கலாம். ஆனால், அந்தக் குற்றங்கள் தடா சட்டத்தின் கீழ் வருகிற குற்றங்களுடன் கண்டிப்பாகத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனைத் தான் 12(1) பிரிவின் ‘ If the offence (under the TADA Act) is connected with such other offence (under other laws)சொற்றொடர் வலியுறுத்துகிறது. ஆனால், இங்கு அந்த சொற்றொடர் கருத்தில்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்(Trial court) தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரே காரணத்தினால், அதே சட்டப் பிரிவு 12-ன் உதவியுடன் பிரிவு 15-ன் கீழ் தயார் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது. பிரிவு 12-ல் விசாரிப்பதுபற்றியும், தண்டனைக் கொடுப்பதுபற்றியும் மட்டும்தான் உள்ளது. அதில் 14-வது பிரிவைப்பற்றியோ, ஒப்புதல் வாக்குமூலங்களை அல்லது சான்றுகளைப் பயன்படுத்துவது பற்றியோ எவ்விதக் குறிப்பும், வாசகமும் இல்லை. 15-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சான்றுகளாக எப்படி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுபற்றி இதே 15-வது பிரிவிலும் 21-வது விதியிலும் தெளிவாக வெளிப்படையாக சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், வற்புறுத்தியும், பொய்யாகத் திரித்தும், கற்பனையாகக் கடைவிரிக்கப்பட்டும் உருவான ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்தே எங்களுக்கான தீர்ப்பு எழுதப்பட்டது எந்த விதத்தில் நியாயம்? தடா சட்டம் நீக்கப்பட்ட பிறகும், அந்தச் சட்டத்தின்படி சுமத்தப்பட்ட குற்றங்களை நீக்காமல் இருப்பது நியாயமா?
எனக்கு இந்திய சட்டங்களைப்பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், இன்றைக்கு ராஜீவ் கொலை வழக்கு குறித்த அத்தனை சட்டக் குறிப்புகளையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட சொல்கிற அளவுக்குத் தெளிவாக இருக்கிறேன். சட்டத்தை எப்படி எல்லாம் வலையாக்கி எங்களை வளைத்து இருக்கிறார்கள் என்பதை விளக்கவே இவ்வளவு விவரமாக உங்களுக்கு சொல்கிறேன்.
வழக்கு விசாரணை நடந்த விதம், அதில் அடுக்கடுக்காக ஏற்பட்ட குளறுபடிகள், இழைக்கப்பட்ட கொடுமைகள், சித்திரிப்புகள், கொலைச் சதி அறியாத எங்களின் தவிப்புகள் என இத்தனை நாட்களாய் எங்கள் இதயத்தில் சுமையாக வருத்திய அத்தனை விஷயங்களையும் உங்களிடத்தில் இறக்கிவைத்திருக்கிறேன். சுமந்த சித்திரவதைகளில் நான் பகிர்ந்தது 10 சதவீதம்தான். ஆனால், அதைப் படித்துவிட்டே, ''அப்பா, நீங்கள் இப்படி எல்லாம் சிரமப்பட்டீங்களா? ஜூ.வி. படிக்கிறப்ப எல்லாம் அழுதிடுறேன்பா...'' எனக் கடிதம் எழுதி இருக்கிறாள் என் செல்ல மகள் ஆரித்ரா. கடைசி ஆசையாய் அவளைப் பார்த்துவிட என் மனம் துடிக்கிறது. மரண மேகம் விலகுவதும் சூழ்வதுமாக விளையாடும் நிலை பொறுக்காமல், இந்தியா வந்து என்னைச் சந்திக்க லண்டனில் இருந்தபடி விசா கேட்டிருக்கிறாள் ஆரித்ரா. ஆனால், விசா கிடைக்கவில்லை. அப்பன் - மகள் பாசம் எல்லாம் அரசாங்கத்துக்குத் தெரியுமா என்ன?
நீதிமன்றத்தில் அடுத்தபடியாய் எங்களின் தூக்குக்கு நாள் அறிவிக்கப்படலாம்; ஒருவேளை உண்மைக்கு வெற்றி கிடைத்து எங்களுக்கான தூக்கை ரத்து செய்யும் நாளும் வரலாம். 'விடிவா மடிவா?’ என்கிற வினாவின் நீட்சியில் எங்களின் வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப்போகிறதோ? இந்தச் சிறு இடைவெளியில் என் தரப்பு நியாயத்தைச் சொல்ல இடம் அளித்த ஜூ.வி-யை நன்றியோடு நினைக்கிறேன். ஒருவேளை, மரணம் தவிர்க்க முடியாததாக எங்களைச் சூழ்ந்தாலும், உள்ளத்து உண்மைகளை உங்களிடம் இறக்கிவைத்த திருப்தியில் என் உயிர் சற்று நிறைவோடு கயிறேறும்!

- காயங்கள், எழுத்தில் ஆறியது; எண்ணத்தில் ஆறாது!
************************************************************************
மிஸ்டர் மியாவ்: 'பாட்ஷா'வில் அஜீத்?
'பாட்ஷா’ ரீ-மேக்கில் நடிக்கிறீர்களா என்று ஏராளமான பேர் தொடர்ந்து கேட்பதால் அஜீத் அப்செட். எப்படிப் பரவியதாம் வதந்தி? 'பில்லா’வுக்கு அடுத்து எந்தப் படத்தை ரீ-மேக் செய்து அஜீத் நடிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் 'பாட்ஷா’வுக்கு அமோக வரவேற்பு. அந்த செய்தி உல்டாவாகிப் பரவிப் பலரும் விசாரிப்பதால், 'தல’க்கு தலைகொள்ளா டென்ஷன்!
குடும்பத்தார், மருத்துவர்களின் கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டாராம் சூப்பர் ஸ்டார். பழைய ஸ்டைலில் மீண்டும் சென்னைப் பட்டணத்தில் பழைய அம்பாஸிடர் காரில் பவனி வருகிறார் ரஜினி!
ஆந்திராவில் ஆரம்பித்துள்ள ஃபிலிம் இன்ஸ்டிடியூட், நாகேஸ்வரராவ் மற்றும் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமானது. யோகா டீச்சர் அனுஷ்காவுக்கும் அதில் பொறுப்பு உண்டு. கல்லூரியின் நடிப்புத் துறைத் தலைவர் யார் தெரியுமா? நம்ம பிரகாஷ்ராஜ்!
ஹிஸ்டரி படத்தை மூன்று வருஷமாகக் கிடப்பில்போட்டு இருப்பதை பெரிய ஹிஸ்டரியாகப் பேசுகிறார்கள் கோடம்பாக்கத்தில். பெருந்தொகையை செலவிட்டு பெரும் குழப்பத்தில் தவிக்கிறது, தமிங்கிலீஷ் சாட்டிலைட்.
சிவபெருமான் நாமத்தில் வெளிவந்த மாலுமியின் படம் உருப்படியாக பிசினஸ் ஆகவில்லை. அதனால் படத்தை வாங்கியவர்கள் படையெடுப்பு நடத்துவார்களோ என்று அஞ்சுகிறார். புதுப் படத்தில் நடிப்பதற்கும் தயங்குகிறார்.
குடும்பத்தார், மருத்துவர்களின் கட்டுப்பாடுகளை உடைத்துவிட்டாராம் சூப்பர் ஸ்டார். பழைய ஸ்டைலில் மீண்டும் சென்னைப் பட்டணத்தில் பழைய அம்பாஸிடர் காரில் பவனி வருகிறார் ரஜினி!
ஆந்திராவில் ஆரம்பித்துள்ள ஃபிலிம் இன்ஸ்டிடியூட், நாகேஸ்வரராவ் மற்றும் நாகார்ஜூனாவுக்குச் சொந்தமானது. யோகா டீச்சர் அனுஷ்காவுக்கும் அதில் பொறுப்பு உண்டு. கல்லூரியின் நடிப்புத் துறைத் தலைவர் யார் தெரியுமா? நம்ம பிரகாஷ்ராஜ்!
சிவபெருமான் நாமத்தில் வெளிவந்த மாலுமியின் படம் உருப்படியாக பிசினஸ் ஆகவில்லை. அதனால் படத்தை வாங்கியவர்கள் படையெடுப்பு நடத்துவார்களோ என்று அஞ்சுகிறார். புதுப் படத்தில் நடிப்பதற்கும் தயங்குகிறார்.
0 comments:
Post a Comment