ரத யாத்திரை நடத்தப் போகிறோம்! பாபர் மசூதியை மீட்கப் போகிறோம் எனச் சொல்லி உலகத்தில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களிடம் லட்சக்கணக்கில் வசூல் செய்து ஊர் முழுவதும் சுவர் விளம்பங்கள் பேனர்கள் நோட்டீஸ்கள் என பிலிம் காட்டி விட்டு
இன்றைக்கு மேலப்பாளையத்தில் இருந்து ரதி மீனா யாத்திரை...ச்சீ..ச்சீ ரதயாத்திரை துவங்குவதாகச் சொல்லி ஒரு லாரியையும் பிடித்து அதில் பள்ளிவாசல் செட்டையும் போட்டு தங்கள் ஏமாற்று வேலையை அரங்கேற்றினார்கள் பொய்யன் சமாத்து பிராடுகள்.மேலப்பாளையத்தில் 20 பேரும் தமிழகம் முழுவதும் இருந்து 130பேரும் (எண்ணிக்கை அதிகமாகி இருந்தால் மன்னிக்கவும்) மேலப்பாளையத்தில் குழும காலையிலேயே ரத யாத்திரை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டது. பொய்யன் சமாத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களும், மேலப்பாளையத்தில் உள்ள இருபது பேரும் சேர்த்து மொத்தம் 155 பேர் இந்த ரதி மீனா யாத்திரை...ச்சீ..ச்சீ ரதயாத்திரையைத் துவங்க வந்தனர். துவக்கத்தில் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது.ஆனால் இந்த ரதயாத்திரைக்கு காவல்துறை தடைவிதித்து இருந்தது. இந்த பிராடுகள் தடையை மீறி யாத்திரை நடத்துவதைக் கேள்விப்பட்டுகாவல்துறை பறந்து வந்து இவர்களை வேனில் ஏற்ற முற்பட்டது. காவல்துறை வேன் வந்ததும் அங்கே இருந்த பொய்யன் சமாத் தொண்டர்கள் திடீரென 80 பேராய் மாறிப்போனார்கள்.
அதெப்படி 155 பேராய் வந்தவர்கள் 85 பேராய் மாறிப்போனார்கள் என்று கேட்கக்கூடாது. காவல்துறை கைது செய்து கொண்டிருக்கும் போது சிலர் நான் சும்மா வேடிக்கை தான் பாக்க வந்தேன், நாம் சும்மா டீ சாப்பிட வந்தேன்,இவர்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என நழுவி விட, மீதமிருந்த உண்மைத் தொண்டர்கள் .துண்டைக்கானோம் துணியைக் கானோம் என ஓட்டமெடுத்தனர். இதை களத்தொகுப்பு போய் வந்த நம் நிருபர் இதைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார். அதை இப்போது நினைத்தாலும் நமக்கு சிரிப்பு சிரிப்பாய் வருகிறது.
தடையை மீறி நடத்துவோம் என கொக்கரித்துக் கொண்டு இருந்த ரதிமீனா நாயகனை குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய் வேனில் ஏற்றியது காவல்துறை. அங்கு மசூதி செட்டப்புடன் நின்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
அதன்பிறகு இவர்களை ரிமாண்டு செய்துவிடலாம் என காவல்துறையில் பேசப்பட்டதாம். ஆனால் ஏற்கனவே ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட்ட போது எப்படி அரசியல் தலைவர்களிடம் கெஞ்சிக்கூத்தாடினார்களோ, அதே போல இம்முறையும் அரசியல்வாத்களிடம் கெஞ்சிக் கூத்தாடி எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று சொல்லித்தான் இம்முறையும் வெளியே வந்தார்களாம். இனி உங்க லட்டர்பேடு சார்பில் எங்கையாவது ஆர்பாட்டம் போராட்டமுன்ன்னு நடத்தினீங்க, அப்பறம் மொத்தப் பயலும் உள்ளதான் இருக்கனும் என மிரட்டி இவர்களை அடித்துப் பத்திவிட்டார்கள் காவல்துறையினர்.
இந்த ரதிமீனா யாத்திரை பனால் ஆனதால் இவர்களுக்கு கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் அளவுக்கு காசு மிஞ்சும் என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். காரணம் சென்னையைச் சேர்ந்த ஒரு கொரியர் தொழிலதிபர் மட்டும் பல லட்சங்களையும், ஒரு சில நகைக்கடை அதிபர்கள் சில லட்சங்களையும், இரண்டெழுத்து டிவிக்காரர், சாதிச்சங்க கட்சிக்க்காரம் சில லட்சங்களையும் வாரி வழங்கியிருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி தலைமையை நோக்கி தேடிவந்த சீனிவாசன் என்ற மாற்றுமத சகோதரர் 5000 ஆயிரம் கொடுத்ததை அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல எத்தனை அப்பாவிகளிடம் ஆட்டையைப் போட்டார்கள் என்கிற கணக்கையும் மக்கள் மன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். ரதிமீனா யாத்திரையின் பேனர்களைக் காட்டி வளைகுடா நாடுகளில் வசூல் செய்த லட்சக்கணக்கான பணம் எங்கே என்பதையும் கணக்கு காட்ட வேண்டும்.
இப்போது நாம் கேட்கும் கேள்விகள்:
தடையை மீறி ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் கைது செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் இது தடை மீறிய ஊர்வலம். எனவே இது தமிழகம் முழுவதும் ஏற்கனவே திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருந்து துவங்க வேண்டும். காரணம் நீங்கள் இதை தொடர் யாத்திரை என்று சொல்லித்தான் லட்சக்கணக்கான ரூபாய்களை மக்களிடமிருந்து வசூல் செய்து இருக்கிறார்கள். அதை வைத்துத்தான் தமிழகம் முழுவதும்இன்றைக்கு மேலப்பாளையத்தில் இந்த யாத்திரை தடை செய்தாலும்,நாளைக்கு செரண்டையில் இருந்து யாத்திரையைத் துவக்க வேண்டும் தடையை மீற வேண்டும், மூன்றாவது நாள் திசையன் விளையில் இருந்து யாத்திரையைத் துவக்க வேண்டும் தடையை மீற வேண்டும், 22 ஆம் தேதி பெரியபட்டினத்தில் இருந்து இருந்து யாத்திரையைத் துவக்க வேண்டும் தடையை மீற வேண்டும், 23 ஆம் தேதி ஓரியூர் அப்பறம் பரமக்குடி, தேனி,தேவனாதம்பட்டி,உடுமலை, பல்லடம்,ராசிபுரம்,திருவெரும்பூர்,நாச்சியார்கோவில், முத்துப்பேட்டை,புதுச்சத்திரம்,ஆம்பூர் என தினசரி ஒரு ஊரில் இருந்து யாத்திரையைத் துவக்க வேண்டும் தடையை மீற வேண்டும்.கைதாக வேண்டும்
கடைசியாக சென்னையில் வந்து தடையை மீறி கைதாக வேண்டும். இதைச் செய்யத்துப்பில்லாமல் இன்றோடு ரதிமீனா யாத்திரை முடிந்து விட்டது எனச் சொல்லிவிட்டு மக்களின் காசுகளை ஆட்டையைப் போடும் வேலைகளில் ஈடுபட்டால் ரதிமீனா யாத்திரைக் காரர்களிடம் தங்கள் காசுகளைக் கொட்டிக்கொடுத்த ஒவ்வொருவரும் கணக்கு கேட்க வேண்டும். தடையை மீறீனால் போலீஸ் அரெஸ்ட் பண்ணும், அத்தோடு இந்த ரதிமீனா யாத்திரையை மூட்டைக் கட்டிவிட்டு மிச்ச காசுகளை அப்படியே சுருட்டிக் கொள்ளலாம் என்ற இந்த ஐடியாவை 10 ஆயிரம் ரூபாய் திருடன் ஈமெயில் திருடன் செங்கிஸ்கான் தான் கொடுத்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை.
0 comments:
Post a Comment