********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தேர்தல் நிலவரம் தெரியாமல் தேர்தல் விமர்சனம் செய்யக் கிளம்பிய உணர்வு!

Sunday, November 13, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

உள்ளாட்சித் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு கணிசமான வெற்றியையும் பெற்றுள்ளது.
இதைக் கண்டு பொறுக்கமுடியாத அண்ணன் ஜமாஅத், தனது அபகரிக்கப்பட்ட வார இதழில், 'முஸ்லிம் கட்சிகளை புறக்கணித்த முஸ்லிம்கள்' என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில்,

''தனித்து நிற்போம் என்று களமிறங்கிய மமக தமிழகமெங்கும் அடித்தளம் உள்ளதாக பொய்ப்பிரச்சாரம் செய்தது. தமிழகத்தின் அனைத்து முஸ்லிம் பகுதிகளிலும் நின்றார்களா? இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மேயர் வேட்பாளருக்கு நிறுத்தாவிட்டாலும் கவுன்சிலருக்காவது நிறுத்தி இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் யாரையும் நிறுத்தவில்லை'என்று எழுதியுள்ளது.

ஒரு கட்சியை விமர்சனம் செய்வதற்கு முன்னால் அந்த கட்சியைப் பற்றி, அதன் வேட்பாளர்கள் பற்றி, அதன் வெற்றி-தோல்வி பற்றி அறிந்து கொண்டு விமர்சிப்பதுதான் பத்திரிக்கைக்கு அழகு. ஆனால் அதெல்லாம் எங்களுக்கு கிடையாது. ஏனெனில் நாங்கள் நடத்தும் பத்திரிக்கையே அபகரிக்கப்பட்டது எனும்போது, அதில் உள்ள செய்தி மட்டும் உண்மையாகவா இருக்கும் என்று சொல்லும் வகையில் தான் உணர்வின் மேற்கண்ட விமர்சனம் உள்ளது. உணர்வின் கண்களுக்கு தென்படாத சென்னை மாநகராட்சி மமக வேட்பாளர்களை இப்போது பட்டியலிடுகின்றோம்.

இது சென்னை மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் பட்டியல். இதுபோக ஏனைய மாநகராட்சிகளிலும் மமக கவுன்சிலர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆனால் இதையெல்லாம் மூடி மறைத்து, கண்ணைமூடிக்கொண்டு கட்டுரை எழுதக் கிளம்பிவிட்டது உணர்வு. என்ன செய்வது? உணர்வின் செய்திகளை அண்ணனைப்  பின்பற்றுபவர்கள் உண்மையோடு உரசிப்பார்க்கப் போவதில்லை என்ற துணிவுதான். தொடரட்டும் உணர்வில் உளறல்கள்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010