ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
ஆபாசங்களையும், அருவருகத்தக்க நரகல்நடை எழுத்தையும் கொண்டு செயல்பட்ட பொய்யன் டிஜே என்ற பினாமி வலைத் தளத்திற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்ற அறிவிப்பை சமீபத்தில் அண்ணன் வெளியிட்டது மக்களுக்கு நினைவிருக்கலாம். அந்த அறிவிப்பில்,நம்முடைய மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் நான்கு தளங்கள் மட்டுமே நடத்தப்படுவதாக கூறி, பொய்யன் டீஜெக்கும் தனக்கும் சம்மந்தமில்லாதது போல காட்டிக் கொண்டார். உடனே நாம், பொய்யன் டீஜேக்கும்-பொய்யன் பீஜெயிக்கும் உள்ள 'உறவு' குறித்து ஆதாரப்பூர்வமாக எழுதினோம். படிக்க; http://amaibbukal.blogspot.com/2011/10/blog-post_15.htmlஅதற்கு பொய்யன் பீஜே இன்றுவரை பதிலளிக்கவில்லை.
இந்நிலையில், பொய்யன் டிஜே தனது அங்கீகாரத்துடன் தான் செயல்பட்டது என்று அழகாக அண்ணன் இந்தவார உணர்வு இதழில் வாக்குமூலம் கொடுத்து பொய்யன் டிஜேக்கும் தனக்கும் உள்ள 'உறவை' ஒப்புக்கொண்டுள்ளார்.
கேள்வி;டி.என்.டி.ஜே.வை எதிர்ப்பவர்களின் பிரச்சாரங்களை முறியடிக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட பொய்யன் டிஜே வலைத்தளத்தின் தற்போதைய எழுத்துக்கள் வரம்பு மீறியதாகவும், எதிர்த்தரப்பினரை கிராஃபிக்ஸ் முறையில் மாற்றம் செய்தும் வெளியிடும் அந்த வலைத்தளம் குறித்த உங்களின் கருத்து என்ன?
-கடையநல்லூர் இப்னு சித்தீக். துபாய்-அமீரகம்.
அண்ணனின் பதில்; நம்முடைய மாநில நிர்வாகத்தின் மேற்பார்வையில் 1- onlinepj.com,
2- tntj.net, 3- jesusinvites.com, 4-thowheedvideo.com ஆகிய நான்கு தளங்கள்
மட்டுமே நடத்தப்படுகின்றன.இவற்றைத் தவிர வேறு எந்த தளத்தையும் மாநிலத்தலைமை நடத்தவில்லை. நம்முடைய ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளை விமர்சிப்பதுடன் தனிப்பட்ட நிர்வாகிகளையும் அவதூறு கூறி விமர்சித்து வந்தவர்களுக்கு நான் ஆன்லைன் பீஜே இணையதளத்தில் பதிலளித்து வந்தேன். இதனால் மார்க்க சம்மந்தமான விஷயங்களை இடம்பெறச் செய்வது முழுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது தான் இலங்கையைச் சேர்ந்த அபூயூசுப் என்பவர், இவர்களுக்கு நான் பதில் அளித்துக் கொள்கிறேன்.நீங்கள் உங்கள் தளத்தில் இது போன்ற விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
2- tntj.net, 3- jesusinvites.com, 4-thowheedvideo.com ஆகிய நான்கு தளங்கள்
மட்டுமே நடத்தப்படுகின்றன.இவற்றைத் தவிர வேறு எந்த தளத்தையும் மாநிலத்தலைமை நடத்தவில்லை. நம்முடைய ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளை விமர்சிப்பதுடன் தனிப்பட்ட நிர்வாகிகளையும் அவதூறு கூறி விமர்சித்து வந்தவர்களுக்கு நான் ஆன்லைன் பீஜே இணையதளத்தில் பதிலளித்து வந்தேன். இதனால் மார்க்க சம்மந்தமான விஷயங்களை இடம்பெறச் செய்வது முழுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது தான் இலங்கையைச் சேர்ந்த அபூயூசுப் என்பவர், இவர்களுக்கு நான் பதில் அளித்துக் கொள்கிறேன்.நீங்கள் உங்கள் தளத்தில் இது போன்ற விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.
அதன்படி அவரும் ஆரம்பத்தில் நல்லமுறையில் பதில் கொடுத்து வந்தார். எந்த அளவுக்கென்றால் நம்முடைய ஆன்லைன் பீஜே இணையதளத்தில் கூட அவர் எழுதும் செய்திகளுக்கு லிங்க் கொடுக்கும் அளவுக்கு அந்த பணி இருந்தது. போகப் போக அதன் விமர்சனத்தில் கடுமையும் தரக்குறைவான சொற்களும் இடம்பெற்றதால் அதற்கு லிங்க் கொடுப்பதில்லை என்று முடிவு செய்து அவ்வாறே நடந்து வருகிறோம்.
அதன் பின்னர் இப்போது வேறு சிலரின் கைகளுக்கும் பொய்யன் டிஜே மாறியுள்ளதாக தெரிகிறது. நம்முடைய கொள்கையில் உள்ளவர்கள் அண்ணன் ஜமாஅத் என்பது போன்ற சொற்களை பயன்படுத்த மாட்டார்கள் என்பதைக் கவனித்தாலே தளத்துக்கும் நமக்கும் சம்மந்தமில்லை என்று அறிந்து கொள்ளலாம். மேலே நாம் சுட்டிக்காட்டிய நான்கு இணையதளங்கள் மட்டுமே நம்முடைய பொறுப்பிலும் கண்காணிப்பிலும் நடக்கிறது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்ணனின் மேற்கண்ட பதில், அண்ணனுக்கும் பொய்யன் டீஜேயிக்கும் இருந்த 'உறவை' அப்பட்டமாக காட்டுகிறது. நான்கு இணையதளங்கள் நீங்கலாக மற்றவை மாநில நிர்வாகிகளால் நடத்தப்படவில்லை என்று அண்ணன் சொன்னதும் பொய் என்று தெளிவாக காட்டுகிறது. தன்னை நோக்கியும், தனது ஜமாத்தை நோக்கியும் வீசப்படும் விமர்சனங்களுக்கு ஆன்லைன்பீஜெயில் பதிலளித்த அண்ணன், தான் மேற்கொண்ட பணியை செய்வதாக பொறுப்பேற்க வந்த அபூயூசுப் என்பவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து ஆசி வழங்கி ஆலோசனையும் கொடுத்து வந்துள்ளார்.
நாளடைவில் அபூயூசுப் எழுத்துக்கள் தரக்குறைவானதாக செல்வதை கண்ட அண்ணன் பொங்கி எழுந்து என்ன செய்திருக்கக் வேண்டும்? அப்போதே இந்த பொய்யன் தளத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லியிருக்கனுமா இல்லையா? ஆனால் அண்ணன் செய்தது என்ன? லிங்க்கை கட் பண்ணி விட்டாராம். ஒரு பாலகனுக்கு கையை பிடித்து நடை பழக்கும் தந்தை, அந்த பாலகன் வளர்ந்து தானாக நடந்து ஓடும் பிராயத்தில் அடுத்த வீட்டில் கல்லெறிந்து கண்ணாடியை உடைக்க, அந்த வீட்டுக்காரன்,தந்தையிடம் வந்து ஏங்க! உங்க மகன் எங்க வீட்டு கண்ணாடியை உடைத்து விட்டான் என சொல்ல, ஏங்க! நான் எப்பவே அவன் கையப் பிடிச்சு நடை பழகி குடுக்கிறத நிறுத்தி விட்டேன். எனவே அவன் என் பிள்ளை இல்லை என்று தந்தை சொல்வது போல் உள்ளது அண்ணனின் 'லிங்க் கட்' விவகாரம்.
பொய்யன் டிஜே மக்களிடம் நன்றாக அறிமுகமாகும் வரை, இதுவும் அண்ணனின் தளம்தான் என்று மக்கள் நம்பும் வரை லிங்க் கொடுத்த அண்ணன், பின்னாளில் கட் பண்ணுவதால் பொய்யன் டீஜெவுக்கு மக்கள் வரத்து குறைத்து விடுமா என்ன? இவர் பொய்யன் டீஜெயோடு தொடர்பை துண்டிக்க விரும்பியது உண்மையானால் அதை அன்று அறிவிக்காமல் இத்தனை காலம் கழித்து சொல்வதன் சூட்சுமம் என்ன?
வேறொன்றுமில்லை. 'பாம்பும் சாகக் கூடாது; கம்பும் ஒடியக் கூடாது'' என்ற அண்ணனின் குறுக்குப் புத்தியன்றி வேறில்லை.
0 comments:
Post a Comment