********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

உள்ளாட்சியில் மண்ணைக் கவ்விய அண்ணன் ஜமாஅத்.

Sunday, November 13, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அடுத்த வீட்டுக்காரி ஆம்பளைப்பிள்ளை பெத்துட்டான்னு எதுத்த வீட்டுக்காரி ஏக்கப் பெருமூச்சு விட்டாளாம் என்ற சொலவடை போல, ஒவ்வொரு தேர்தலிலும் மறக்காமல் மமகவை மண்ணைக்கவ்வ  வைப்பேன் என்று மார்தட்டியும், மமக சட்டமன்றம் வரை கால் வைத்ததும், கடுப்பான அண்ணன் ஜமாஅத், வழக்கத்திற்கு மாற்றமாக தனது அடிப்பொடிகளை உள்ளாட்சியில் இறக்கி விட்டு அதன் மூலம் அரசியலில் ஆழம்பார்க்கத் தீர்மானித்தது.

அதற்காக முதலில் உறுப்பினர்களை பலிகடா ஆக்கத் தீர்மானித்து, உறுப்பினர்கள் போட்டியிடலாம் என ஊக்கப்படுத்தி பொதுச்செயலாளரை வைத்து  அறிக்கை வெளியிட்டது. ஆனாலும் அண்ணனைப் பின்பற்றும் தம்பிகள் இந்த அரசியல் விசயத்தில் அண்ணன் சொல்லியும் கேட்கத் தயாரில்லை. யாரும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தலில் நிற்கவில்லை. ஒரே ஒரு ஏமாளியைத் தவிர.

தமிழக முஸ்லிம் அமைப்புகளில் நாங்கள் தான் பலமான அமைப்பு என்று அண்ணனே பலமுறை சொல்லியுள்ளதால், வெற்றிவாகை சூடிவிடலாம் என்று நம்பி இந்த தம்பி களமிறங்கினார். ஐயோ பாவம்! ஒன்னே ஒன்னு., கண்ணே கண்ணு'ன்னு அண்ணன் ஜமாஅத் சார்பாக நின்ற இந்த தம்பியும் படுதோல்வி அடைந்தார். 

நாகை மாவட்டம் கங்கனம்புதூர் ஊராட்சியில் போட்டியிட்ட அண்ணனின் தம்பி 47 வாக்குகள் பெற்று படு தோல்வியடைந்தார். யாரிடம் தெரியுமா? எந்த மமகவை மண்ணைக் கவ்வவைப்பேன் என்று அண்ணன் தூக்கத்தில் கூட புலம்புகிறாரோ அந்த மமக வேட்பாளரிடத்தில் என்பதுதான் கூடுதல் தகவல். இதையும் தாண்டி, தோற்ற அரசியல்வாதிகள் வழக்கமாக சொல்வது போன்று, மமக வேட்பாளர் பணம் கொடுத்து வெற்றி பெற்றுவிட்டார் என்று தோற்ற இந்த அண்ணன் ஜமாத்தின் தம்பி புலம்பியதுதான் சூப்பர் ஜோக்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று அண்ணன் அடிக்கடி சொல்லுவார். அந்த அடிப்படையில் அண்ணன் ஜமாஅத்தின் அரசியல் ஆசைக்கு இந்த ஒரு சோற்றை பதமாக எடுத்துக்கொண்டு ஆகவேண்டிய வேலையைப் பார்ப்பது அண்ணனுக்கு நல்லது. இல்லையென்றால் அண்ணனுக்கு துணிவிருந்தால் நேரடி அரசியலுக்கு வந்து சாதித்துக் காட்டட்டும். அதை விடுத்து அரசியல் சாக்கடை என்று சொல்லிக்கொண்டு மறைமுக அரசியலில் ஈட்பட்டால் மானம் போகும் என்பதற்கு இந்த தோல்வி ஒரு பாடமாகும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010