ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
மற்றவர்கள் நிகழ்ச்சிக்கு மலையென குவியும் மக்களை தலையை எண்ணி தனக்குத்தானே ஆறுதல் பட்டுக்கொள்ளும் அண்ணன், தனது ஜமாத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கடுகளவு இருந்தாலும் அதை மலையளவு காட்டி மகிழ்ச்சியில் திளைப்பார். நெல்லையில் நடந்த பொதுக்குழு பற்றி அவரது தம்பிகள் தட்டி விட்ட மெயில் ஒன்றில் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் பற்றி ஏகத்துக்கும் எக்கச்சக்க பிட்டை போட்டு வர்ணித்திருப்பதை முதலில் படிப்போமா?
அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :
கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.
பொதுக்குழுவுக்கு கூடியவர்கள் பற்றி அண்ணனின் தம்பிகள் செய்த வர்ணனைதான் மேலே
நீங்கள் படித்தவை. இதிலிருந்து அண்ணனின் தம்பிகளுக்கு எந்த அளவுக்கு
சிந்திக்கும் திறன் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு பொதுக்கூட்டம், ஆர்பாட்டம் மாநாடு போன்றவற்றில் இந்த பில்டப் பண்ணினால் கூட நம்பலாம். ஆனால் மாநில பொதுக்குழு என்பது மாநில நிர்வாகத்தால் நடத்தப்படுவது. இந்த பொதுக்குழுவுக்கு மாநிலத்தின் அழைப்பிதல் உள்ளவர்கள் மட்டுமே அதுவும் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளமுடியும். அப்படியானால் எத்தனை அழைப்பிதழ்கள் மாநிலத்தால் வழங்கப்பட்டது என்ற புள்ளிவிவரத்தை வைத்தே பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களை துல்லியமாக சொல்லமுடியும். ஆனால் எதோ மாநாடு நடத்தியது போன்று, எத்தனையோ லட்சம் பேர் கலந்து கொண்டது போன்று, துல்லியமாக கணிக்க முடியாததால் அலைகடல் என்று எழுதியது போல பில்டப் காட்டுவது அண்ணனின் தம்பிகளுக்கு ஓவராக தெரியவில்லையா?
இதுல இவங்க செஞ்ச பிடப்புல இருந்து அண்ணன் ஜமாஅத்தின் இன்னொரு பலவீனம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. அதாவது மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அமரும் அளவுக்கு போதுமான மண்டபம் கூட பிடிக்கத் தெரியாத அண்ணன் ஜமாஅத் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? எத்தனை அழைப்பிதல் அனுப்பினோம் என்றோ, நாம் அழைப்பிதல் அனுப்பியவர்கள் அமரும் அளவுக்கு மண்டபம் தகுதியானதா என்று கூட சிந்திக்கத் தெரியாத அண்ணனின் தலைமையில் தள்ளாடுகிறது ஜமாஅத்.
இல்லை என்றால் ஒருவேளை இப்படி நடந்திருக்குமோ? கட்சிக் கூட்டங்களுக்கு ஆள் பிடித்தது போன்று யார் வேண்டுமானாலும் வாருங்கள் என்று அள்ளிப் போட்டு கொண்டு வந்து நிர்வாகிகள் என்ற போர்வையில் நெல்லையில் தள்ளிவிட்டார்களோ?
-பொதுக்குழு தமாஷ் தொடரும் ஓரிறை நாடினால்.
0 comments:
Post a Comment