ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
ஜாக் பள்ளிவாசல்களையும், உள்ளூர் டிரஸ்ட் மூலம் கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் அபகரித்து அலுத்துப்போனதால் சுன்னத்ஜமாஅத் பள்ளிவாசல்களை பதம் பார்க்க அண்ணன் நாடிவிட்டார் போலும். பெரும்பாலான சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்கள் வக்பு வாரியத்தின் கீழ் இருப்பதால் அவைகளின் மீது கைவைக்க முடியாமல் அண்ணன் தடுமாறுகிறார். அதுமட்டுமல்லாமல் மேலப்பாளையத்தில் ஜாக்கிடமிருந்து அபகரித்த மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கே வக்பு வாரியம் நோட்டீஸ் அனுப்பியதால், ஊர் ஊருக்கு இப்போது தனது தம்பிகளால் எழுப்பப்படும் பள்ளிவாசல்களை ஒருவேளை வக்பு வாரியம் கையகப்படுத்தவும் கூடும் என்பதால் வக்புவாரியத்தை கலைக்கவேண்டும் என்று சமீபகாலமாக அதிகமாக கூவி வருகிறார். நெல்லை பொதுக்குழுவிலும் வக்பு வாரியத்தை கலைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்திருக்கிறார். மார்க்க விசயத்தில் எப்படி நேற்று ஒன்று இன்று ஒன்று சொல்கிறாரோ அதேபோல வக்புவாரியம் விசயத்தில் பொதுக்குழுவில் ஒன்றும் அபகரிக்கப்பட்ட வார இதழில் ஒரு கருத்தும் சொல்கிறார்.
வக்புவாரியத் தலைவர் நியமனம் மற்றும் வக்பு சொத்துக்களை மீட்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு ததஜ ஏன் கடிதம் எழுதக்கூடாது என்று உணர்வு வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடிதம் எழுவதை விட அரசின் கவனத்தை வேறுவகையில் ஈர்ப்பதுதான் பயனளிக்கும் என்று கூறியுள்ளார். அதாவது வக்பு வாரியத் தலைவரை நியமிக்கக் கோரியும், வக்பு சொத்துக்களை பாதுகாக்கக் கோரியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேறு எதோ செய்யப்போகிறாராம்.
அண்ணனுக்கு எதாவது ஆகிவிட்டதா? வக்பு வாரியத்தை ஒருபுறம் கலைக்கனும் என்கிறார். மறுபுறம் தலைவர் நியமனத்திற்கு எதோ செய்யப்போகிறேன் என்கிறார். வக்பு வாரியத்தை கலைப்பது அண்ணனின் கொள்கை என்றால், அதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும்வகையில் எதாவது செய்தால் அவர் சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமிருக்கும். ஆனால் இவர் கலைக்கச் சொல்ற வாரியத்திற்கு அரசு தலைவரை நியமித்தால் இவருக்கென்ன? நியமிக்கலன்னா இவருக்கென்ன? அண்ணனின் முன்னுக்குப்பின் முரண் எப்படியிருக்குன்னா கருவைக் கலைக்கச் சொல்லும் புருஷன், பிறக்கும் பிள்ளைக்கு பேர் வைக்கப் போறேன் என்றானாம். அந்த கதை போல உள்ளது.
அண்ணே! முடியலண்ணே!போதும்னே! நீங்களும் உங்க பிள்ளைகளும் தான் ஒழுங்கா படிக்கல. போயி பேரப்பிள்ளைகளையாவது படிக்க வைங்கன்னே.
0 comments:
Post a Comment