********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பாபர் மஸ்ஜித் போராட்டமும்; அண்ணனின் பல்டிகளும்! - அப்துல் முஹைமின்

Monday, December 12, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

பாபர் மஸ்ஜித் போராட்டத்தின் மூலமும், இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமும் இயக்கம் வளர்த்த அண்ணன், இப்போதெல்லாம் பாபர் மஸ்ஜிதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அந்த இறையில்லம் இடிக்கப்பட்ட நாளில் அதைப்பற்றி ஒரு வார்த்தை பேசவோ, அல்லது அபகரிக்கப்பட்ட வார இதழில் எழுதவோ செய்வதில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அண்ணன் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் போராட்டம் நடத்தவில்லை. அதற்கான காரணத்தை அண்ணன்  கடந்த ஆண்டே சொல்லிவிட்டார். இதோ அண்ணனின் வார்த்தைகள்;

''ஒவ்வொரு ஆண்டும் டிச 6 போராட்டத்தின் போது என்ன கோரிக்கை வைத்தோம்? பாபர் மஸ்ஜித் குறித்த வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கவேண்டும்.
பள்ளியை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும்.

என்ற இரண்டு கோரிக்கை வைத்தோம். ஆனால் இந்த ஆண்டு பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வந்த பின்பு 'கிரவுண்டு' மாறிவிட்டது. அதாவது தீர்ப்பை கேட்டோம். அதை தந்துவிட்டார்கள். எனவே அந்த கோரிக்கையை இப்போது வைக்கமுடியாது. அடுத்து பள்ளிவாசலை குற்றவாளிகளை தண்டிக்க சொல்லமுடியுமா என்றால் முடியாது. ஏனெனில், அந்த இடத்தில் பள்ளிவாசல் என்று ஒன்று இருக்கவில்லை. அதை யாரும் இடிக்கவில்லை. அது அன்றும் கோயிலாகத்தான் இருந்தது; இன்றும் கோயிலாகத்தான் இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறிவிட்டார்கள். எனவே நீதிபதிகளின் தீர்ப்பின் படி இல்லாத  பள்ளிவாசலை இடித்தவர்களை  தண்டிக்கவேண்டும் என்றும் கூறமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. 

பாபர் மஸ்ஜித் போராட்டத்தை ஊத்தி மூடியதோடு, அந்த போராட்டங்கள் அர்த்தமற்றது என்று சங்பரிவாரின் குரலை எதிரொலித்த அண்ணனை நோக்கி நாம் பல வினாக்களை கடந்த
2010 டிசம்பரில் எழுப்பியிருந்தோம். அதற்கு இன்று வரை அண்ணன் பதிலளிக்காமல் ஓட்டம் பிடிக்கிறார். அது இதுதான்; 

''அண்ணனின் வியாக்கியானப்படி அந்த இடத்தில் பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டார்களாம். எனவே பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகள் பற்றி வாய் திறக்கமுடியாதாம். அத்வானி கேட்டால் அண்ணனை  உச்சி மோந்து பாராட்டி பி.ஜே.பி.க்கு செயல் தலைவராக முன்மொழிவார். எந்த நீதிபதியும் அங்கே மசூதி இருக்கவில்லை என்றோ, மசூதியை யாரும்  இடிக்கவில்லை என்றோ, அங்கு கோயில் தான் இருந்தது என்றோ கூறவில்லை என்பதை கீழே தருவோம். 

அதற்கு முன்பாக அண்ணனின்  வாதப்படியே நீதிபதிகள்  கூறினார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியாயின், 
  • பாபர்  மஸ்ஜித் அந்த இடத்தில் இருக்கவில்லை என்று அண்ணனும் ஒத்துக் கொள்கிறாரா? அதனால்தான் இடித்த குற்றவாளிகள் மீதான நடவடிக்கை கோரிக்கையை புறம் தள்ளினாரா?
  • பாபர் மஸ்ஜித் அங்கு இருக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும் அண்ணன் அந்த இடத்திற்கு மட்டும் உரிமை கொண்டாடுவது எந்த அடிப்படையில்?
  • பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கருத்தை வழிமொழியும்  அண்ணன், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு தனியாக நடந்து வருவது குறித்து என்ன சொல்கிறார்?
  • பாபர் மஸ்ஜிதை யாரும் இடிக்கவில்லை என்ற நீதிபதியின் கூற்றின் படி, அத்வானி கும்பல் மீதான வழக்கு தள்ளுபடியாகாமல் இன்னும் கோர்ட்டில் நிற்பது எப்படி?
  • அலகாபாத் தீர்ப்பு மசூதி இடிப்பை நியாயப்படுத்தி விடாது என்று அண்ணன் ஓடிப்போய் பார்த்த சோனியாவும், அவரது அமைச்சர் சிதம்பரமும் சொன்னது குறித்து அண்ணனின் நிலை என்ன?
  • மசூதி இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று நீதிபதியின் கூற்றை வழிமொழியும் அண்ணன், இத்தனை ஆண்டு காலம் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு போராடியது தவறு என்று ஒத்துக்கொள்வாரா?
  • லிப்ரஹான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிகளை கைது செய் என்று இனிமேல் அண்ணன் முழங்க மாட்டாரா?
  • லிபரான் அறிக்கையை குப்பைக் கூடைக்கு அனுப்பி, குற்றவாளிகள் விடுதலைக்கும்  அண்ணன் குரல் கொடுப்பாரா?
  • இல்லை மசூதி இருந்தது; அதை அத்வானி கும்பல் இடித்தது என்பது அண்ணனின் நிலைப்பாடு என்றால், அத்வானி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை  முன் வைத்து போராட்டம் நடத்தாதது ஏன்? மேலும், பாபர்  மஸ்ஜித் தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோர முடியாத நிலை உள்ளது என்று பல்டியடித்து பின்வாங்கியது ஏன்?
  • அண்ணனின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, அண்ணன் வீட்டை ஒருவன் இடிக்க, அண்ணன் நீதிமன்றம் போக, நீதிபதி அந்த இடத்தில் எந்த வீடும் இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று தீர்ப்பளித்தால் அண்ணன் அதற்கு பின் தனது வீட்டை இடித்த குற்றவாளியை கண்டுகொள்ள மாட்டாரா?
மேற்கண்டவைக்கு அவர் வியாக்கியானம் இன்றி நேரடியாக பதிலளிக்கவேண்டும். 

அடுத்து அண்ணன் புளுகியபடி, எந்த நீதிபதியாவது அந்த இடத்தில் பள்ளிவாசல் இருக்கவில்லை என்று தமது தீர்ப்பில் கூறியுள்ளார்களா என்றால் இல்லவே இல்லை. கோயிலை இடித்துவிட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதில்தான் நீதிபதிகள் முரண்பட்டார்களே   தவிர, பள்ளிவாசல் இருந்ததா என்பதில் முரண்படவில்லை. மூன்று நீதிபதிகளின் பள்ளிவாசல் குறித்த தீர்ப்பின் சாரம் கீழே;

நீதிபதி சுதிர் அகர்வால்;
அந்த கட்டிடம் [பாபர் மஸ்ஜித்], ஏற்கனவே அங்கிருந்த முஸ்லிம் அல்லாத மத வழிபாட்டுத் தலத்தை (உதாரணம்: இந்து கோவில்) இடித்து விட்டு கட்டப்பட்டது.

நீதிபதி டி.வி.சர்மா;
ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவிலை இடித்து விட்டுத்தான், அந்த இடத்தில் மசூதியை பாபர் கட்டினார்

நீதிபதி எஸ்.யு.கான்;
மசூதியை கட்டுவதற்காக எந்தவொரு கோவிலும் இடிக்கப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே, கோவில்கள் அழிந்து விட்டிருந்தன. 

மூன்று நீதிபதிகளுமே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருந்தது என்பதை உறுதிப்படுத்திய நிலையில், அந்த இடத்தில் பள்ளிவாசல் என்று ஒன்று இருக்கவில்லை. அதை யாரும் இடிக்கவில்லை. அது அன்றும் கோயிலாகத்தான் இருந்தது; இன்றும் கோயிலாகத்தான் இருக்கிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறிவிட்டார்கள்.என்று அண்ணன் புளுகியது இந்துத்துவாக்கள் கூட சொல்லாத பொய்யல்லவா? ஏனெனில், மசூதியை நாங்கள் தான்  இடித்தோம் என்று பெருமையாக கூறி, அங்கு மசூதி இருந்தது என்று இந்துத்துவாக்கள் சாட்சி கூறிக்கொண்டிருக்கையில், அண்ணனின் ஆகாசப் புளுகு அவர் தவ்ஹீத் போர்வை போர்த்திய சங்பரிவார் என்பதை
வெளிப்படுத்தவில்லையா? 

மேலும் நீதிபதிகள் மட்டுமன்றி, தொல்லியல் துறையும் அங்கு பாபர் மஸ்ஜித் இருந்தது என்று சான்று பகர்கிறது அது கீழே;
  
 கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம்என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கு பிறகும் நீதிபதிகள் பெயரால் அண்ணன் புளுகியதை நம்பி, பட்டப் பகலில் பல்லாயிரம் பேர் சாட்சியாக 450 ஆண்டுகால வரலாற்று சின்னமான பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை கைது செய்யும் கோரிக்கையை புறம் தள்ளப் போகிறீர்களா முஸ்லிம்களே! அண்ணனின் வழியில் பாபர் மஸ்ஜித் இருக்கவில்லை என்று சொல்லப் போகிறீர்களா முஸ்லிம்களே!!
இதுமட்டுமல்ல சகோதரர்களே! அபகரிக்கப்பட்ட வார இதழில், பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றது என்று அண்ணன் 'உணர்வலைகளாக' இப்படி வெளிப்படுத்துகிறார்.

''தனது பொறுப்பில் சில ஏக்கர் நிலங்கள் வந்துவிடும்  என்பதால் அவர் [முஹம்மது ஹசீம் அன்சாரி] திருப்தி அடைந்துள்ளார். அல்லாஹ்வை வணங்கிய இடத்தில் சிலைகள் வணங்கப்படுவது அவருக்கு பெரிதாக தெரியவில்லை. யாருக்கு மேல்முறையீடு செய்ய உரிமையுள்ளதோ அவர் மேல்முறையீடு செய்ய தயாராக இல்லாத நிலையில் நாம் இங்கே கூப்பாடு போடுவது, மக்களை ஏமாற்றும் நாடகமாகத்தான் இருக்கமுடியும்.''என்று எழுதியுள்ளார்

அதாவது பாபர் மசூதிக்காக  போராடுவதில் அர்த்தமில்லை என்று சொல்லி, முஸ்லிம்களின் பாபர் மஸ்ஜித் மீட்பு போராட்டம் பயனற்றது என்ற மனநிலையை முஸ்லிம்களிடம் உண்டாக்க அண்ணன் முனைகிறார் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். 

மேலும் அண்ணன் கூறுகிறார்; 
''பின் வாங்கி விலை போகும் நிலையில் உள்ளதால், உள்ளூர் முஸ்லிம்களும் விட்டால் போதும் என்ற மனநிலையில் உள்ளதாலும், பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது. இதுதான் யதார்த்த நிலை. இதை மூடிமறைத்து வேஷம் போடுவதிலும் -கோஷம் போடுவதிலும்  இனி அர்த்தமில்லை என்று ஆக்கப்பட்டுவிட்டது. என்கிறார் அண்ணன். 

பாபர் மஸ்ஜித் போராட்டம் பயனற்றதாக ஆக்கப்பட்டுவிட்டது என்று சொன்னதன் மூலம் பாபர் மஸ்ஜித் விஷயத்தில் முஸ்லிம்கள் பலவீனமாகி விட்டார்கள் என்ற கருத்தை இந்துத்துவாக்களுக்கும் சொல்கிறார்.

இன்னும் இந்த சமுதாய துரோகியை மக்கள் புரிந்து கொள்ளவில்லையானால் இழப்பு அவருக்கல்ல. முஸ்லிம்களுக்கே!
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

பாபர் மஸ்ஜித் போராட்டத்தின் மூலமும், இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலமும் இயக்கம் வளர்த்த அண்ணன், இப்போதெல்லாம் பாபர் மஸ்ஜிதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அந்த இறையில்லம் இடிக்கப்பட்ட நாளில்
அதைப்பற்றி ஒரு வார்த்தை பேசவோ, அல்லது அபகரிக்கப்பட்ட வார இதழில் எழுதவோ செய்வதில்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அண்ணன் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் போராட்டம் நடத்தவில்லை. அதற்கான காரணத்தை அண்ணன்  கடந்த ஆண்டே சொல்லிவிட்டார். இதோ அண்ணனின் வார்த்தைகள்;

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010