********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

காதலர் தினம் ஒர் பார்வை!

Monday, February 13, 2012

அகிலங்களின் அதிபதியும் மகத்தான படைப்பாளனுமாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! ஷைத்தானின் அடிச் சுவடுகளை
பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச் சுவடுகளை பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்) ஏனெனில் அவன்
வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான் (அல்குர்ஆன் 24:21)

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது)மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான் உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள் என்பதாகும் (உக்பா பின் ஆமிர்(ரலி) புகாரி 6120)

பிப்ரவரி 14 வாலன்டன்ஸ் டே! காதலர் தினம்! இன்ஷாஅல்லாஹ் எதிர் கொள்ளவிருக்கிறோம்! பாரம் பரியமாய் இல்லாது திடீரென்று முளைத்து சமீபகாலமாக மக்களிடையே பிரபலமாகி வரும் இந்த காதலர் தினம் வழக்கம்போல் இறைநம்பிக்கைக்கும், மறுமை சிந்தனைக்கும் மெருகூட்டாத வீணான பலி விழா கொண்டாட்டங்களை போன்று விரயமாக்கப்படும் ஓர் தினமே!

சில பண்டிகைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் நாடு, மொழி, கலாச்சாரம் பராம்பரிய அடைமொழிகள் கொடுக்கப்பட்டாலும் இந்த எல்லைக் கோடுகளுக் கெல்லாம் அப்பாற்பட்டு இளைஞர் உலகை வசீகரித்து வரும் இந்த காதலர்தினம் மிகப் பரந்த நோக்கம் கொண்டதாக விளம்பரப்படுத்தப்படுகிறது.என்றபோதும் காம உணர்வின் உந்துதலே கூடுதலால் மணம் பரப்பும் இந்த காதலர்தினம் குடும்பம் கலாச்சாரச் சீரழிவின் அடையாளமாகவே இருக்கிறது.

பக்குவமற்ற சிந்தனைகளாலும் பண்படாத நோக்கங் களாலும் வேயப்பட்ட இளைஞர்கள் சிலர் புற அழகின் மயக்கத்தில் முறைகேடாக உடல்வேட்கையைத் தணித்து கொண்டு காதல் என்ற பெயரை சூட்டிக் கொள்கின்றனர்.

வெளிப்பார்வைக்கு காதலை தூய்மையானதாக தெயிவீகமானதாக இவர்கள் சித்தரித்தாலும் நடை முறையில் கீழ்த்தரமான உணர்வுகளின் வடிகாலாகவே காதலைப் பயன்படுத்துகின்றனர்.

கதைகளும் நாவல்களும் காதலையே மையப்படுத்து கின்றன. இலக்கியத்தின் பல பகுதிகளை காதலின் தாக்கத்துக்கே ஆளாகியிருப்பதைப் பார்க்கிறோம். சினிமாக்களும் டி.வி.களும் காதலையே பிரதானப்படுத்து கின்றன. சில மனிதர்களின் தனிப்பட்ட கேடுகெட்ட ரசனைகள் எல்லாம் காதலென்ற பெயரால் ரியலிசம் என்ற பெயரால் காமிராக்கள் வழியாகக் காட்டப்பட்டு நாட்டிலுள்ள ஆணையும் பெண்ணையும் மட்டமான கற்பனைகளில் மிதக்க விடுகின்றது.

காதலுக்காக முழுமூச்சாய் நிற்பதும், அடிவாங்குவதும், உதைபடுவதும் அதற்காக சாவதுமாய் காட்டப்பட்டு அவைகள் தியாகங்களாகவும் சித்தரிக்கப்பட்டு மூளைச் சலவை செய்யப்படுகிறது.காதலுக்காக தற்கொலைகள் செய்துகொள்வதும் உன்னதமானதாக திணிக்கப்படுகிறது. இதற்கு இவர்களின் குறி இளைஞர்கள்! இளைஞகள்! இளமை!  நல்ல நோக்கங்களுக்காக பட்டை தீட்டப்பட வேண்டிய இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும் வீண்விரயங்களிலும் மூழ்கச் செய்யப்படுகிறது.

கிடைத்தற்கரிய பிறவியை - இளமைப்பருவத்தை இறைநினைவு, மறுமைப்பலன் போன்ற பிறவிப்பலனுக்காக சித்தப்படுத்தாமல் வீண் விளையாட்டுக்கான ஒரு பருவம் போன்று வீணாக்கப்படுகிறது.  

இது மாத்திரமல்லாமல் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் வயது வரம்புகள் எல்லாம் கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த காதலெனும் காமம் படுத்தும்பாட்டை நாள்தோறும் செய்திகளில் சந்தி சிரிப்பதை நாம் காணலாம்.

இந்த காதலர் தினத்துக்கான வரலாற்று பின்னனி:   கி.பி. 269ல் ரோமை ஆண்டு வந்த இரண்டாம் கிளாடியஸ் எனும் மன்னன், இரானுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும்போது, தங்களின் குடும்பவாழ்வை விட்டுவிட்டு இளைஞர்கள் இரானுவத்தில் சேர தயக்கம் காண்பித்தனர். வாலன்டைன் எனும் பாதிரியார்; மன்னனுக்கு எதிராக இளைஞர்களுக்கு ஆதரவாகவும்  செயல்பட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டு மரணதண்டனைக்கு ஆளானார். அவர் கொல்லப்பட்ட தினம் தான் பிப்ரவரி 14ம் தேதி! அந்த போhப் வாலன்டைன் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் தன் காதலிக்கு அனுப்பிய கடிதம் தான் வாழ்த்துச் செய்தியாக இன்று பரிணாமம் அடைந்துள்ளது.

கி.பி. 1415ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் (Duke of Orleans) சிறைச்சாலையிலிருந்து தன் மனைவிக்கு முதன் முதலாக வாலன்டைன் கார்ட் அனுப்பினார். அது பிற்காலத்தில் அமெரிக்காவிலும் பரவியது. இன்று உலகின் அனைத்துப்பகுதிகளிலும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் நாளாக வியாபித்து நிற்கிறது.

அதே தினத்தில் ரோம் நகரில் ஒரு திருவிழா நடைபெறுகிறது. அது ஜூனோ எனும் பெண்கடவுளின் பெயரால் நடத்தப்படும திருவிழாவாகும். இந்த திருவிழாவின் போது இளம் பெண்களின் பெயர்களை ஒரு ஜாடியில் எழுதி போடுவார்கள். அதிலிருந்து இளைஞர்கள் எடுக்கும் பெயர்களுக்குரிய பெண்கள் அவர்களின் காதலியாவார்கள். அதற்கு அடுத்த நாளான பிப்ரவரி 15ம் தேதி அன்று லூப்பர்கேலியா என்ற கடவுளுக்கு விருந்து படைக்கப்படும். 

காதல் அம்பு: இன்றைய இளைஞர்களிடத்தில் பிரபல்யமான ஒரு குறியீடு தான் இந்த காதல் அம்பு, அதாவது இதய குறியீட்டில் அம்பு தைப்பது போல் இருக்கும். ரோம் நகரில் வீனஸ் எனும் பெண் கடவுளுக்கு பிறந்த குபிட்(ஊரினை) எனும் இரண்டு இறக்கைகளைக் கொண்ட, கையில் எப்போதும் அம்பை வைத்துள்ள ஆண்குழந்தை தான் அது. குபிட் என்ற கிரேக்க வார்த்தைக்கு காமம், மன்மதன் என்று பொருள்படும். அந்த குழந்தை கடவுள் தன் கையில் வைத்திருக்கும் அம்பை எதாவது ஒரு இளம் பெண்ணின் மீது எய்து விட்டால் அந்த பெண் ஒரு ஆணிண் மீது காதல் கொண்டு விடுவாள் என்பது ரோமின் ஐதீகம். அதனடிப்படையில் உருவானது தான் இந்த காதல் அம்பு. 

கற்புநெறி ஒழுக்கத்தின் அளவுகோலாக கருதப்படுகிறது. மனிதகுலம் அந்த அளவுகோலின் மீது அலட்சியமாக இருக்கிறது. மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாட்டை மறந்தமாதிரி பொதுஇடங்களிலும், திரையரங்குகள், வழிபாட்டுதலங்கள், கல்விச்சாலைகள், பீச்கள், பார்க்குகள் போன்ற அனைத்து இடங்களிலும் காதல் என்ற பெயரால் வரம்பு மீறிய சேட்டைகளில் ஈடுபடுவதை பார்த்து வருகிறோம். இதை அரசாங்கமும் கண்டுக் கொள்வதில்லை. இந்த வெட்கக்கேடுகளை காதல் என்ற பெயரில் சமூகம் அங்கீகரித்து வருவதையும் கண்டு வருகிறோம். 

கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 

வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும் இரகசியமானதையும் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன்: 6:151

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர், தன் சகோதரர் வெட்கப்படுவதை கண்டு, (அவரை வெட்கப்பட வேண்டாம் என) கண்டித்ததை கண்ட நபி(ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். ஏனெனில் வெட்கம் ஈமானின் ஓரம்சமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) புகாரி 24) 

இல்லறத்தின் அம்சமாக இருக்கும் ஆண் பெண் உறவை கடைசரக்காக்கியுள்ள இந்த காதல் நாகரீக சமுதாயத்தின் அடையாளமே அல்ல. இது ஒருகேடுகெட்ட மாயை. 

இந்த மாயையில் அனைத்து தரப்பு மக்களும் வீழ வேண்டும் என்பது அறிவுஜீவிகள் என்று சொல்லப்படக் கூடியவர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது. அவர்கள் தான் மீடியாக்களின் அனைத்து வகைகளிலும் வியாபித்து இருக்கின்றனர்.  ஈமான் கொண்ட மக்களும் இந்த மாயையின்  தாக்கங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா தன் திருமறையில் விழிப்புணர்வை தரும் விதமாக எச்சரிக்கை செய்கின்றான்.

வெட்கக்கேடான செயல் நம்பிக்கை; கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 24:19)

பிள்ளைகள் வளர வளர அவர்களுக்குண்டான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் வாழ்க்கைப் பற்றிய உலகைப் பற்றிய விபரங்களை விழிப்புணர்வு ஏற்படும் விதமாக சொல்லி தர வேண்டும்.  

முறைகேடான வழிகளில் இன்பம் அடைவதை ஆண்மைத் தனம் என்று ஆண்பிள்ளைகள் உசுப்பேற்றி விடப்படுவதை அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். உண்மையான ஆண்மைக்கும் வீரத்துக்கும் மார்க்கம் காட்டும் செய்திகளை சொல்லித் தர வேண்டும். 

புகழ்ந்து பேசினால் மயங்கிப் போய் விடும் பெண்களுக்கான பலவீனத்தை பெண்பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். அன்னிய ஆண்கள் செய்யும் இந்த நயவஞ்சகத்தைப் பற்றி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இறையருட் கொடையாய் இருக்கும் பெண்மையை இழந்து தவிக்கும் அவல நிலையை பற்றி பெண்களுக்கு எச்சரிக்க வேண்டும்.

இந்த காதலால் கொலைகளும் தற்கொலைகளும் சர்வசாதாரணமாக மனிதர்களை நாசப்படுத்தி இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் கடந்த 2009ல் 217 உயிர்களை இந்த காதல் மாயை காவு கொண்டுள்ளது. இந்த காதல் மாயைக்காக, கள்ள காதலனுடன் சேர்ந்துக் கொண்டு. கணவனையும் தான் பெற்ற பிள்ளைகளையும் கொலை செய்வதும், காதலிக்காவிட்டால் காதலியின் மீது ஆசிட் வீசுவதும் காதலுக்காக பிள்ளைகள் ஓடிப்போவதால், பெற்றோர்களும், மனைவிகள் ஓடிப்போவதால் கணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதும் கணவன்மார்கள் ஓடிப்போவதால் மனைவிகள் தற்கொலை செய்துக் கொள்வது நம் நாட்டின் கலாச்சாரத்தை இழிவுப்  படுத்துவதாகவும் வேதனையளிப்பதாகவும் இருக்கிறது. 

வாழ்க்கை என்பது இந்த உலகோடு முடிந்து விடுவது அல்ல. அற்பமான சிற்றின்பத்திற்க்காக அருமையான வாழ்க்கையை பாழ்படுத்திக் கொள்ளும் மனித சமுதாயத்தை சிந்திக்க வேண்டுகிறோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மலையின் மீதிருந்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செ;யதுக் கொள்கிறாரோ அவர் நரகத்திலும் விஷத்தை கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்துக் கொள்கிறாரோ அவ்வாயுதம் தம் கையில் இருக்கும் நிலையில் நரகில் தம் வயிற்றை தாமே குத்திக் கொண்டிருப்பார் (அபூஹூரைரா(ரலி) புகாரி, முஸ்லீம்)

நீண்ட நெடிய மறுமை வாழ்க்கைக்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள அருளப்பட்ட இவ்வுலக வாழ்;க்கையை அற்பமான காரியங்களுக்காக அழித்துக் கொள்வது எவ்வகையில் நியாயம்?. காதலையும் காமத்தையும் மார்க்கம் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கென்று வரைமுறைகளையும் எல்லைக்கோடுகளையும் வகுத்து வைத்துள்ளது. திருமணம் என்ற பந்தத்தின் மூலம் அனுமதி 

அளித்துள்ளது. ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவருக்கு உண்டான இன்ப துன்பங்களில் உள்ளார்ந்த முறையில் பங்குக் கொள்வதில் தான் உண்மையான காதல் இருக்கிறது.அதைத் திருமணத்தின் மூலமும் திருமணத்திற்கு பிறகும் தேடிக் கொள்வதில் இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது. 

நான் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போவதை கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் அப்பெண்ணைப் பார்த்தீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படி என்றால் அப்பெண்ணை பார்;த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கிடையில் நட்பையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷூபா (ரலி) திர்மிதி நஸயி)

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: 

குளிப்பு கடமையான நிலையில் பரக் எனும் பாத்திரத்தில் நானும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் சேர்ந்து குளிப்போம். (புகாரி 250, முஸ்லீம், நஸயி, அஹ்மது, அபுதாவுது)

நான் மாதவிடாய்காரியாக இருக்கும் நிலையில், நான் வாய் வைத்து அருந்திய பாத்திரத்தில் நபி(ஸல்) அவர்கள் நான் வாய் வைத்து அருந்திய இடத்தில் தன்னுடைய வாய் வைத்து அருந்துவார்கள். (புகாரி)

ஆகவே இந்த காதல் எனும் மாயையில் வீழ்ந்து விடாமல் மார்க்கம் சொல்லியவாறு அனைத்து ஆண்களும் பெண்களும் தங்களின் வாழ்வை அமைத்துக் கொண்டு கலாச்சார சீரழிவிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டுகிறோம். காதலும் காமமும் மனித வாழ்க்கையின் ஒரு அம்சமே தவிர அதுவே பிரதானம் அல்ல என்பதை புரிந்து கொண்டு கண்ணியமான வாழ்வை அமைத்துக் கொள்ள வல்ல இறைவன் நம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010