********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
1 2 3 4 5 6 7 8
Showing posts with label தொடர்கள். Show all posts
Showing posts with label தொடர்கள். Show all posts

தொடர்கள் (30 நவம்பர் 2011)


முட்டையில் இருந்து முட்டைக்கு!

மரபணு சாதனை
பெண்ணின் கரு முட்டை தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று
மேலும்...

தொடர்கள் (19 நவம்பர் 2011)


இரட்டைக் குழந்தை... ஒரே ஒரு ரத்தக் குழாய்!

ஆபத்தை நீக்கும் புதிய சிகிச்சை
ர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் வளரும் போது நிறைய சிக்கல்கள் தோன்றுவது வழக்கம் தான். அதில் முக்கியமான ஒன்று, இரண்டு குழந் தைகளுக்கும் ஒரே நஞ்சு இருப்பது. அந்த நஞ்சு வழியாகச் செல்லும்
மேலும்...

தொடர்கள் (16 நவம்பர் 2011)


மாரடைப்பே தள்ளிப் போ...

கை கொடுக்கும் வாஸ்குலர் ஹெல்த் டிரீட்மென்ட்
'இந்தியாவில் மாரடைப்பு காரணமாக 29 சதவிகித மக்கள் இறந்து போகிறார்கள்’ என்று அதிர்ச்சி அலையைக் கிளப்புகிறது, மருத்துவப் புள்ளிவிவரம். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட
மேலும்...

தொடர்கள் (08 அக்டோபர் 2011)


இதயத்தை நிறுத்தாமல்... எலும்பை உடைக்காமல்!

வந்தாச்சு ஹைபிரிட் சிகிச்சை
தயத்தில் ஒரே சமயத்தில் இரண்டு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் ஹைபிரிட் முறையை, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும்...

தொடர்கள் (05 அக்டோபர் 2011)



புற்று நோயாளிகளுக்கு நல்ல செய்தி

வலியை விரட்டும் நவீன அறுவை சிகிச்சை!
புற்று நோய் தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர், தாங்க முடியாத வலியினால் அவஸ்தைப்பட்டு மரணத்தைத் தழுவுகிறார்கள். வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் கொடுத்தால், தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி (Intrathecal drug delivery)சிஸ்டம் என்ற கருவிகொண்டு வலி நிவாரண சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அப்போலோ மருத்துவமனையின் ஃபங்ஷனல் நியூரோசர்ஜன் டாக்டர்
ஆர்.ராமநாராயண் நம்மிடம் பேசினார்.
''வலி மேலாண்மை என்பதை உலக சுகாதார நிறுவனம் நான்கு படிகளாகப் பிரிக்கிறது. முதலாவது வலியைக் கண்டறிந்து அதற்கு (குரோசின் போன்ற) வலி நிவாரண மாத்திரைகளை அளிப்பது. சில உடற்பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட்கள் அளிப்பதும் முதல் வகையே. இரண்டாவது, மனோதத்துவ ரீதியான சிகிச்சை மற்றும் ப்ரூஃபின் போன்ற கொஞ்சம் டோஸ் அதிகமான மாத்திரைகளை அளிப்பது.
இதற்கும் சரியாகவில்லை என்றால் மார்ஃபின் அல்லது பென்டனைல் போன்ற அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகள் கொடுப்பது மூன்றாவது வகை. இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு நல்ல வலி நிவாரணத்தை அளிக்கும். ஆனால், சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மரணம்கூட ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்று முறைகள்தான் கையாளப்பட்டு வருகின்றன.
இப்போது முதன் முறையாக வலி மேலாண்மை எனப்படும் நான்காவது வழியைக் கையாள்கிறோம். நமது உடலில் ஓர் உள்ளார்ந்த வலி கட்டுப்பாட்டு அமைப்பானது, மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றி அமைந்துள்ளது. எந்த ஒரு வலியும் இதன் மூலமாகப் பயணம் செய்து மூளையை அடையும்போதுதான், வலியை உணர்வோம். வலியை சமாளிக்க மார்ஃபின் என்ற மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரை உடனடியாக வேலை செய்யாது. வயிற்றில் கரைந்து, ரத்தத்தில் கலந்து, நரம்பு மண்டலத்தை அடையச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு மைக்ரோ கிராம் அளவு மார்பின் முதுகுத்தண்டு வடத்தை அடைந்தால் போதும், நோயாளி வலி நிவாரணத்தை உணர்வார். ஆனால், 200 மைக்ரோ கிராம் மருந்து எடுத்தால்தான், அதில் 1 மைக்ரோகிராம் முதுகுத் தண்டுவடத்தில் உள்ள திரவத்தைச் சென்றடையும். ஆனால், ஒருவரால் அதிகபட்சமாக 40 மைக்ரோ கிராம் மார்ஃபின்தான் எடுத்துக்கொள்ள முடியும். இதற்கே பக்க விளைவுகள் கடுமையாக இருக்கும்.
இப்போது மருந்தை நேரடியாக முதுகுத் தண்டுவடத் திரவத்தில் சேர்ப்பதால், அதிகப்படியான மார்ஃபின் எடுப்பது தேவை இல்லாமல் போய்விடுகிறது. இந்தச் செயல் அத்தனை எளிதானது அல்ல. முதுகுத் தண்டுவடத்துக்குள் எதுவும் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது. அதனால்தான், சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது, இடுப்புப் பகுதி மரத்துப்போவதற்காக கர்ப்பிணிகளுக்கு முதுகை வளைத்து ஊசி குத்துவார்கள். முதுகுத் தண்டு வடத்தை அடைந்து மருந்தை செலுத்தினாலும், அதன் பலன் குறுகிய காலத்துக்குத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் முதுகை வளைத்து மருந்து செலுத்த முடியாது. இந்த பிரச்னைக்குத் தீர்வாக வந்திருப்பதுதான் இன்ட்ராதிகல் டிரக் டெலிவரி சிஸ்டம்.
இந்த புதிய தொழில்நுட்பத்தின்படி, இதயத்துக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்துவது போன்று நோயாளியின் வயிற்றின் தோலுக்கு அடியில் ஒரு சிறிய கருவியைப் பொருத்துவோம். இதில் திரவ நிலையில் மார்ஃபின் இருக்கும். இந்த கருவியின் முனை முதுகுத் தண்டுவடத்தில் இணைத்து அறுவைசிகிச்சை செய்யப்படும். இந்த கருவி தோலுக்கு அடியில் இருக்கும் என்பதால் வெளியே எதுவும் தெரியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கும். இதனால், நோயாளிக்கு வலி உணர்வே இருக்காது. இந்தக் கருவியில் 40 மி.லி. மருந்து நிரப்பப்படும். இதுவே சுமார் மூன்று மாதங்களுக்குப் போதுமானதாக இருக்கும். மருந்து காலியானதும் அந்தக் கருவியை வெளியே எடுக்காமலே, மீண்டும் நிரப்பிக்கொள்ள முடியும். மேலும் தேவைக்கேற்ப டோஸ் அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
எல்லா விதப் புற்று நோயாளிகளுக்கும் இதைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வலியை உணரவில்லை என்றால், அவர்கள் இன்னும் அதிக காலம் வாழ்வார்கள் என்று பரிந்துரைக் கப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே இப்போது இதனைப் பொருத்துகிறோம். வெளிநாடுகளில் புற்றுநோயாளிகளைக் காட்டிலும் முதுகு வலிப் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கின்றனர். இந்தியாவில் இப்போதுதான் இந்தக் கருவி இறக்குமதி ஆகியுள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், எல்லா நோயாளிகளும் இந்த சிகிச்சையைப் பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு அரசு வரிவிலக்கு அளித்தால், கொடுமையான வலியால் அவதிப்படும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெறுவார்கள்...'' என்று கேட்டுக் கொண்டார்.
அரசு மனம் வைக்கட்டும்!
பா.பிரவீன்குமார்
************************************************************************

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 45: 19.11.86
வம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை - சென்னை நகரில் விடுதலைப் புலிகள், முக்கியமாக... பிரபாகரன்
மேலும்...

தொடர்கள் (01 அக்டோபர் 2011)


அணு ஆட்டம்!

போராட்டங்கள் முடிவது இல்லை!
'வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!’
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
சிந்திக்கும் திறன் பெற்ற தமிழர் எல்லாம், சீர் தூக்கித் தெளிகின்ற செயல் வீரர் எல்லாம்,
மேலும்...

தொடர்கள் (28 செப்டம்பர் 2011)


ஆறு மாதக் குழந்தைக்கு அதிரடி சிகிச்சை!

உயிர் பிழைத்த ஸ்மரா
தய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அதுவே ஒரு கைக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்... அதிலும் அந்த குட்டி இதயத்துக்குள் நான்கைந்து பிரச்னைகள்
மேலும்...

தொடர்கள் (24 செப்டம்பர் 2011)


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 44: 12.11.86
வம்பர் 1-ம் தேதி... தீபாவ​ளியன்று மதியம் நண்பர் ஒருவரைக் காண சூளைமேடு போயிருந்தோம். நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் சமயம்...
மேலும்...

தொடர்கள் (21 செப்டம்பர் 2011)


மூட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி!
வருகிறது கார்டிலேஜ் தானம்
யதானவர்களை மட்டுமே வருத்தி வந்த மூட்டுத் தேய்மானப் பிரச்னை இப்போது இள வயதினரையும் தாக்கத் தொடங்கிவிட்டது. கை, கால், விரல்கள்
மேலும்...

தொடர்கள் (14 செப்டம்பர் 2011)


வலி இல்லாத பல் சிகிச்சை!

சேலர் கருவி அறிமுகம்
ல் வலிக்கு சிகிச்சை எடுத்து வந்தவர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். பேச முடியாமல்... சாப்பிட முடியாமல்... முகம் வீங்கிப்போய் வேதனையுடன் தடுமாறுவார்கள். இந்த வலி, வேதனைக்கு முடிவு வந்துவிட்டது. ஆம், பல் மற்றும் ஈறு
மேலும்...

தொடர்கள் (10 செப்டம்பர் 2011)


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 41: 4.12.85
வம்பர் 14-ம் தேதி பிறந்த குழந்தைகளை அவர்கள் பிறந்த நாளிலேயே தரிசித்து, இந்த ஆண்டின் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிவிடுவது என்று கிளம்பி, சில மகப்பேறு மருத்துவமனைகளுக்கு 'ஸ்பெஷல் விசிட்’ அடித்தோம்!
மேலும்...

தொடர்கள் (04 செப்டம்பர் 2011)


வயிற்றுக்குள்ளே உளவாளி!

புதுப்புது கருவிகள் அறிமுகம்
'ஒரு சாண் வயித்துக்காகத்தான் இந்தப் பாடு!’ என்பார்கள். அதனால்தானோ என்னவோ... மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள்தான்.
மேலும்...

தொடர்கள் (04 செப்டம்பர் 2011)

 பழசு இன்றும் புதுசு


நேற்றும் நமதே - 29: 26.2.92
தாமதமாகத் துவங்கப்​பட்ட பரா மரிப்பு வேலைகள், அரசுத் துறைகளின் மெத்த​
மேலும்...

தொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 38: 27.11.91

சிவகாசி அருகே உள்ள பள்ளப்​பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். விருதுநகர் அருகே உள்ள வாய்ப்பூட்டான்​பட்டிக்காரர் வேலுச்சாமி. இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு வயதில் மகன் இருக்கும் நிலையில், ஒரு நாள் பாண்டியம்மாள் காணாமல் போனார்.

மேலும்...

தொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 37: 1.8.2001
து ஒரு பெண்ணின் வலி நிறைந்த 38 வருட வாழ்க்கை!

10 வயதில் திருமணம்... 11 வயதில் கணவனின் சித்ரவதை... 13 வயதில் கொள்​ளைக்​காரி... 17 வயதுக்குள் மூன்று பேருக்கு மனைவியாக வாழ்க்கை... 18 வயதில் துப்பாக்கியால் சுட்டு, 20 பேரைப் பழிக்குப் பழி... 20-வது வயதில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு சரண்டர்.
மேலும்...

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010