********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

முஸ்லிம் சகோதர,சகோதரிகளே.. காதலர் தினம் தேவை தானா?

Monday, February 13, 2012

பிப்ரவரி 14 அன்று காதலர்தினம் உலகம் முழுவதும் அனுஸ்டிக்கப்படுகிறது. காதல் என்றால்
ஒரு பெண்ணும்-ஆணும் விரும்புவது என்ற ஒன்றுதான் அர்த்தம் என்ற ரீதியில் அர்த்தம் செய்யப்படுகிறது. ' இந்த காதலர்தினம் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொண்டு, இந்த தினம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை பார்ப்போம்.
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மத "வேலண் டைன்' என்னும் பெயர் கொண்ட ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் ரோம் அரசாங்கத்தின் தடை உத்தரவை மீறி ஏராளமான காதலர்களுக்கு ரகசியமான முறையில் திருமணம் செய்து வைத்து காதலை அங்கீகரித்த காரணத்தினால் அவர் பெயரால் "காதலர் தினம்' என கொண்டாடப்படுகிறது. இதுதான் காதலர்தின வரலாறு.
முதலாவது இது கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாம் காட்டித்தராத பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுவதை பற்றி நபி[ஸல்] கூறினார்கள்;
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்;
"உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.
நூல்;புஹாரி,எண் 3456
சுப்ஹானல்லாஹ்! இன்றைய முஸ்லிம்களில் சிலர், சமாதானம் என்ற பெயரிலும், விழாக்கள் என்ற பெயரிலும் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி அன்றே அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் அறிவித்துள்ளதை காண்கிறோம். மேலும் இவ்வாறு பிற மதகலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை பற்றி நபி[ஸல்] அவர்கள் கடுமையாக கண்டித்து,
யார் பிற சமுதாயக்காலச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ; அவர்கள் அவர்களை சேர்ந்தவர்கள்.[அஹ்மத்]
காதலர்தினம் கொண்டாடும் முஸ்லிம்கள் இந்த பொன்மொழியை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், இஸ்லாத்தில் ஈகைத்திருநாள், தியாகத்திருநாள் என்ற இரு பெருநாட்களைத்தவிர, வேறு கொண்டாடப்படக்கூடிய நாட்களை யார் உருவாக்கினாலும் அவைகளை முஸ்லிம்கள் புறக்கணிக்கவேண்டும். மாறாக அவைகளை கொண்டாடினால் அவர்கள் அந்தவிசயத்தில் அவர்களை சார்ந்தவர்களே!
திருமணத்திற்கு முன்னர் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் ஒரு போதும் தடைசெய்யவில்லை. மேலும், திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும் விடயங்கள், பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
’நான்(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, தாம்; அன்சாரிகளில் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார்.  அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள், அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக் கொள்ளும்! ஏனெனில், அன்சாரிகளின் கண்களில் சிறிது(குறை) உண்டு என்று சொன்னார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்-2783)
’நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா(ரழி), நூற்கள்: அஹ்மத்-17793, இப்னுமாஜா- 1861)
மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும். ‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள்.’ (பார்க்க: புஹாரி-5138) அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்து கொள்ள முடியாது. மாறாக பொறுப்பாளரே பெண் விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப் படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மாறாக, இன்றைய காலகட்டத்தில், காதலர் தினத்தின் பெயரால் அரங்கேற்றப் படுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகள், சமூக விழுமியங்கள் பாதிக்கப்படுவதைத்தான் இஸ்லாம் தடை செய்கின்றது.
’நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.’ (அல்குர்ஆன் 02:208)
மேலும், அருளாளன்  அல்லாஹ்  கூறுகின்றான். ‘நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ(அவர் வழி கெடுவார்). ஏனெனில், அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான்.  அல்லாஹ் வின் அருளும், அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் ஒரு போதும் உங்களில் எவரையும் அவன் பரிசுத்தமாக்கியிருக்க மாட்டான். எனினும் தான் நாடியோரை  அல்லாஹ் பரிசுத்தமாக்கு கிறான்.  அல்லாஹ்  செவியுறுபவன்;. அறிந்தவன்.’ (அல்குர்ஆன் 24:21)
மேலும், காதலர் தினத்தின் பெயரால் ஒதுக்குப்புறங்களில் அரங்கேறும் அசிங்கங்களை, ஆணும் பெண்ணும் அநாகரிக உறவு கொள்வதையும், பொது இடங்களில் முறை தவறி ஒழுக்கக் கேடாக நடப்பதையுமே இஸ்லாம் தடை செய்கின்றது. இதோ அருள்மறை குர்ஆன் கூறுகின்றது.
‘நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள்(இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.’ (அல்குர்ஆன் 33:32)
மேலும், அருள்மறை குர்ஆன் கூறுகின்றது.
‘உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அழ்ழாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அழ்ழாஹ் நாடுகிறான்.’ (அல்குர்ஆன் 33:33)
இக்காதலர் தினத்தின் பெயரால் அரங்கேற்றப் படுகின்ற அநாச்சாரங்களால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில் காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர்.
இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
’யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டே யிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமது கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டே யிருப்பார்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி), நூல்: புஹாரி-5778 )
மேலும், இக்காதலர் தினமானது முற்றுமுழுதாக மாற்றுமத கலாசாரமாகவும் உள்ளது. இதோ அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ‘யார் பிற சமுதாய கலாசாரத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்த சமுதாயத்தைச் சார்ந்தவரே.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவூத்-4033)
மேலும் காதலர் தினம் என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்கள் சொல்லிமாளாது. காதல் என்ற பெயரில் காமம் மட்டும் விஞ்சி நிற்கிறது. இந்த தினத்தில் பொதுமக்கள் கூடும் இடம் என்று கூட பார்க்காமல் இவர்கள் அடிக்கும் கூத்துக்கள், கலாச்சார சீரழிவின் அடையாளமாக உள்ளது. எனவே இத்தகைய கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கும் கொண்டாட்டங்களை தடுக்க அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வரவேண்டும். மேலும் முஸ்லிம்கள் நாகரீகம் என்ற பெயரில் இந்த நாசகார சகதியில் விழுந்துவிடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எனவே,  அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களின் கடுமையான இவ் எச்சரிக்கையினையும், காதலர் தினத்தில் இடம் பெறுகின்ற அநாச்சாரங்கள், மார்க்கம் தடைசெய்த ஆண், பெண் தொடர்புகள் என்பவற்றையும் கருத்திற் கொண்டு இக்கலாசார சீரழிவு தினத்தை முற்றுமுழுதாக வெறுத்து ஒதுக்க அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010