********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

டிசம்பர் ஆறு போராட்டத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ்-4 - அப்துல் முஹைமின்

Saturday, December 17, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

இயக்கங்கள் உருவாவதற்கு முன்பே பாபர் மஸ்ஜிதுக்காக தமிழகத்தில் முதன் முதலில் போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள் தான் என்று பெருமை பொங்க குறிப்பிடும் அண்ணன், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். 

ஒவ்வொரு டிசம்பர் ஆறு அன்றும் நாம் வைத்த முதலாவது கோரிக்கை இந்த வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டோம். தீர்ப்பை தந்து விட்டார்கள். எனவே அந்த கோரிக்கையை இனி வைக்க முடியாது. நம்முடைய இரண்டாவது கோரிக்கையான பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்பதை பொறுத்தவரையில், பாபர் மஸ்ஜித் என்ற ஒன்றே இருக்கவில்லை; அதை யாரும் இடிக்கவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லி விட்டார்கள். எனவே அந்த கோரிக்கையும் வைத்து போராடமுடியாது. 
எனவே பாபர் மஸ்ஜித் போராட்டம் அர்த்தமற்றது என்றெல்லாம்
அண்ணன் அடைமொழி பேசினார். ஆனாலும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய நீதிமன்ற முற்றுகைக்குப் பின்னால் ஆற அமர ஆறுமாசம் கழித்து சென்னையிலும் மதுரையிலும் கடந்த வருடம் முற்றுகை நடத்தினார். இந்த வருடம் டிச.6 போராட்டம் எதையும் அண்ணன் ஜமாஅத் நடத்தவில்லை என்பதை விட நடந்து முடிந்த பொதுக்குழுவில் போராட்டம் நடத்தாதது ஏன் என விளக்கமளிக்கிறேன் என்ற பெயரில் அல்லாஹ்வின் ஆலய மீட்பு போராட்டத்தை இழிவுபடுத்தியுள்ளார். 

டிசம்பர் 6 போராட்டம் கடமைக்கு இதை நடத்துவதால் மட்டும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பெற்றுவிடமுடியாது என்று அண்ணன் கூறியுள்ளார். அப்படியானால் இவ்வளவு காலமும் கடமைக்குத் தான் இவர் போராடினாரா? போராட்டம் நடத்துவது தீர்ப்பை பெற்றுத்தந்து விடாது என்றால், கடந்த காலங்களில் தீர்ப்பை விரைந்து வழங்கு என்று போராட்டம் நடத்தினாரே! அது யாரை ஏமாற்றுவதற்காக! அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது தீர்ப்பை விரைந்து வழங்கு என்று போராடியவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் போராட்டம் அவசியமில்லை என்றால் உச்சநீதிமன்றம் எத்தனை ஆண்டு காலம்
வேண்டுமானாலும் தீர்ப்பை இழுத்துக் கடத்தட்டும் என்கிறாரா? வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் உற்று நோக்குகிறேன் என்று சொல்லும் அண்ணன், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு ரேபரேலி நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், அதே பொதுக்குழுவில் விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் கோரி தீர்மானம் கொண்டுவந்தது முரணில்லையா? அது என்ன அண்ணே! கீழ் கோர்ட்டுன்னா பாயுறீங்க. மேல் கோர்ட்டுன்னா பம்முறீங்க. உச்சநீதிமன்றம் என்றால் அவ்வளவு பயமா உங்களுக்கு? 

மேலும், பொதுக்குழுவில் பேசியதோடு அண்ணன் நிற்காமல் அபகரிக்கப்பட்ட வார இதழிலும் இந்த வாரம் தலையங்கம் என்ற பெயரில் தறிகெட்டு உளறியுள்ளார். இறையில்ல போராட்டத்தை இழிவு படுத்தியுள்ளார்.

தலைவர்கள் பிறந்த நாளுக்கு சிலைக்கு மாலை அணிவிப்பது போல அநியாயத் தீர்ப்பு வெளியான அந்த வருடமும் எல்லா அமைப்புகளும் டிசம்பர் 6சடங்குகளைவழக்கம் போல் செய்தன.

இனிமேல் டிசம்பர் ஆறு கூட்டம் கூட்டினால் இது கருப்பு தினக் கண்டனம் என்றே கருத்துப் பதிவு செய்வார்கள். 

டிசம்பர் ஆறு மட்டும் தான் கூடுவார்கள் என சடங்குவைத்திருந்தவர்களின் சம்பிரதயங்களைத் தூக்கி எறிந்து விட்டு., 

வருடா வருடம் டிசம்பர் ஆறாம் தேதி குண்டுகள் வெடிக்கும் என காவல்துறையினர் செய்யும் பிரச்சாரக் கலகத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டக் களங்கள் வழிவகுப்பதை உணர்ந்து டிசம்பர் ஆறாம்தேதி சடங்கு சம்பிரதாயத்தை கைவிட்டு விட்டது டி.என்.டி.ஜே.

அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் இதைப் பயன்படுத்தி காசு பார்ப்பதற்கும், நாங்களும் சமுதாய அமைப்பாக இருக்கிறோம் எனக் காட்டிகொள்வதற்கும் மட்டுமே சில சமுதாய இயக்கங்கள் டிசம்பர் ஆறு அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

அனைத்து சமுதாய அமைப்புகளும் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களை மொத்தமாகக் கூட்டி கணக்கு பார்த்தால் கூட ஜனவரியில் மதுரையில் ததஜ நடத்திய முற்றுகையில் திரண்ட மக்கள் கூட்டத்தில் பாதியைத் தாண்டவில்லை எண்ணிக்கை.

ஏற்கனவே டிசம்பர் 6ஐ இஸ்லாமிய தீவிரவாத தினம் போல சித்தரிக்க முயலும் காவல்துறையினர் திட்டமிடலுக்கு இரையாக இனி யாரும் விரும்பவில்லை

மேலே நாம் எடுத்தாண்டிருப்பவை அண்ணனின் காவி சிந்தனையில் உதித்து களவாண்ட பத்திரிக்கையில் வந்தவை தான். தான் நடத்தினால் மட்டுமே அது போராட்டம்; மற்றவர்கள் நடத்தினால் அது சடங்கு தீவிரவாத தினம், கருப்புதினம் என்று கண்டபடி உலரும் இந்த துரோகியை சமுதாயம் புரிந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்குழு தமாஷ் தொடரும் ஓரிறை நாடினால்.
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

இயக்கங்கள் உருவாவதற்கு முன்பே பாபர் மஸ்ஜிதுக்காக தமிழகத்தில் முதன் முதலில் போராட்டம் நடத்தியவர்கள்
நாங்கள் தான் என்று பெருமை பொங்க குறிப்பிடும் அண்ணன், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். 

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010