********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அண்ணன் காட்டிய வழியம்மா! - அப்துல் முஹைமின்

Saturday, December 17, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒருவருக்கொருவர் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதும், பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதும் காலங்காலமாக உள்ளதுதான். அதில் எவரும் வரம்பு மீறக்கூடாது என்பதுதான் எதார்த்தம். அந்த அடிப்படையில் அண்ணனும், அவரது ஜமாஅத்தும் செய்யும் அநீதிகளை விமர்சிக்கும் யாரும் அண்ணனையோ அல்லது அவரது தம்பிகளையோ ஒருமையில் விமர்சிப்பதில்லை. இழிவான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. ஆனால் அண்ணனின் தம்பிகளோ
உலகத்துல இருக்குற அத்தனை தரங்கெட்டவர்களுக்கும்
கற்றுத்தரும் அளவுக்கு ஆபாச அருவருக்கத்தக்க 
வார்த்தைகளை பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கிறார்கள். இது போன்று இழிவாக இந்த அண்ணனின் தம்பிகள் எழுதுவதை அண்ணன் கண்டிக்க மாட்டாரா? என்று சிலர் கேட்பதுண்டு. ஐயோ பாவம்! இந்த வழியே அண்ணன் காட்டியது தானே! சாம்பிளுக்கு ஒன்னு பார்ப்போமா?

திரைப்படங்களின் டிவிடிகள் அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகிறது. அந்தப்பணம் அனைத்தும் தீவிரவாதத்திற்கு செல்கிறது என்று சமீபத்தில் நடிகர் கமல் கூறியிருந்தார். இதுபற்றிய கேள்விக்கு அபகரிக்கப்பட்ட வார இதழில் அண்ணன் பதிலளிக்கும்போது, இவனையெல்லாம்ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஈனத்தனமான செயல்களை செய்யும் சிந்தனையற்ற இவனை அலட்சியம் செய்வதுதான் நல்லது என்று கூறியுள்ளார். 

கமல் சொன்னது சரியா தவறா என்பது தனி விஷயம். ஆனால் அதைப்பற்றி கருத்துக்கூறிய அண்ணன் எந்த அளவுக்கு நாகரிக வார்த்தைகளை கையாண்டு பதிலளித்துள்ளார் அதுவும் ஒரு பத்திரிக்கையில் என்பதை சுட்டிக்காட்டவே இங்கே இதை பதிவு செய்கிறோம். என்னதான் எதிரியாக இருந்தாலும் ஒரு பத்திரிக்கையில் எழுதுவதற்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அந்த பத்திரிக்கை தர்மத்தைக் கூட பேணாத அண்ணன், பன்னூல் ஆசிரியராம். இவர் காட்டிய வழியில் செல்லும் தம்பிகள் நரகல் நடையில் எழுதுவது ஆச்சரியமா என்ன?
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

ஒருவருக்கொருவர் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவதும், பரஸ்பரம் விமர்சித்துக் கொள்வதும் காலங்காலமாக உள்ளதுதான். அதில் எவரும் வரம்பு மீறக்கூடாது என்பதுதான்
எதார்த்தம். அந்த அடிப்படையில் அண்ணனும், அவரது ஜமாஅத்தும் செய்யும் அநீதிகளை விமர்சிக்கும் யாரும் அண்ணனையோ அல்லது அவரது தம்பிகளையோ ஒருமையில் விமர்சிப்பதில்லை. இழிவான அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. ஆனால் அண்ணனின் தம்பிகளோ
உலகத்துல இருக்குற அத்தனை தரங்கெட்டவர்களுக்கும்
கற்றுத்தரும் அளவுக்கு ஆபாச அருவருக்கத்தக்க 
வார்த்தைகளை பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களை விமர்சிக்கிறார்கள். இது போன்று இழிவாக இந்த அண்ணனின் தம்பிகள் எழுதுவதை அண்ணன் கண்டிக்க மாட்டாரா? என்று சிலர் கேட்பதுண்டு. ஐயோ பாவம்! இந்த வழியே அண்ணன் காட்டியது தானே! சாம்பிளுக்கு ஒன்னு பார்ப்போமா?

திரைப்படங்களின் டிவிடிகள் அனைத்தும் பாகிஸ்தானில் தயாரிக்கப்படுகிறது. அந்தப்பணம் அனைத்தும் தீவிரவாதத்திற்கு செல்கிறது என்று சமீபத்தில் நடிகர் கமல் கூறியிருந்தார். இதுபற்றிய கேள்விக்கு அபகரிக்கப்பட்ட வார இதழில் அண்ணன் பதிலளிக்கும்போது, இவனையெல்லாம்ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாதீர்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஈனத்தனமான செயல்களை செய்யும் சிந்தனையற்ற இவனை அலட்சியம் செய்வதுதான் நல்லது என்று கூறியுள்ளார். 

கமல் சொன்னது சரியா தவறா என்பது தனி விஷயம். ஆனால் அதைப்பற்றி கருத்துக்கூறிய அண்ணன் எந்த அளவுக்கு நாகரிக வார்த்தைகளை கையாண்டு பதிலளித்துள்ளார் அதுவும் ஒரு பத்திரிக்கையில் என்பதை சுட்டிக்காட்டவே இங்கே இதை பதிவு செய்கிறோம். என்னதான் எதிரியாக இருந்தாலும் ஒரு பத்திரிக்கையில் எழுதுவதற்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அந்த பத்திரிக்கை தர்மத்தைக் கூட பேணாத அண்ணன், பன்னூல் ஆசிரியராம். இவர் காட்டிய வழியில் செல்லும் தம்பிகள் நரகல் நடையில் எழுதுவது ஆச்சரியமா என்ன?

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010