********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

நாளொரு நாடகம் ! பொழுதொரு பல்டி! 'உணர்வற்றுப்' போன அலுவலக போராட்டம்! - அப்துல் முஹைமின்

Tuesday, June 21, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... 
உணர்வு அலுவலகத்தை தமுமுகவினர் கைப்பற்றி விட்டர்கள். அதை மீட்க ஜூன் 9ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் என்றார்கள் அண்ணன் ஜமாத்தினர். பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் ததஜ நிர்வாகிகளை அழைத்து, உணர்வுஅலுவலகம்உங்களுடையதுதான்; ஜூன் 9ஆம் தேதி தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவலகம் ஒப்படைக்கப்படும்' என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்என்று கூறி 14 ம் தேதிக்கு முற்றுகை ஒத்திவைப்பு என்றார்களே! உயர் அதிகாரிகள் சொன்னபடி ஜூன் 9ஆம் தேதி இவர்கள் கையில் சாவியை கொடுத்து விட்டார்களா? என்றால் இல்லவே இல்லை. சரி சாவி கிடைக்கவில்லையானால் இவர்கள் அறிவித்தபடி 14 ம் தேதி சட்டமன்ற முற்றுகை அல்லது முதல்வர் வீடு முற்றுகை உறுதியாக நடைபெறும் என்று சொல்ல வேண்டுமல்லவா? பிறகு அதிலிருந்தும் பல்டியடித்து அடுத்த சட்டமன்றம் எப்போது கூடுகிறதோ அன்றைக்கு முற்றுகை என்று அறிவித்து விட்டு ஆழ்ந்த சயனத்திற்கு சென்றுவிட்டது அண்ணன் ஜமாஅத்.

இப்போது தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தை காரணமில்லாமல் அழுவது போன்று, சில போராட்டங்களை பட்டியலிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது அண்ணன் ஜமாஅத். அந்த போராட்டத்தை பார்ப்பதற்கு முன்பாக, உணர்வு அலுவலகம்[?] மீட்பு விஷயத்தில் மீண்டும் அண்ணன் ஜமாஅத் உளறியுள்ளதை பார்ப்போம்.

முதன் முதலாக ஜூன் 9 அன்று சட்டமன்ற முற்றுகை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்களே அதில் இவர்களின் புகார் குறித்து காவல்துறையின் செயல்பாடுகள்பற்றி இவர்கள் கூறியதை பாருங்கள்;

12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது
.

உணர்வு அலுவலகம் மீட்பு தொடர்பாக இவர்களது புகாரை காவல்துறை கண்டுகொள்ளாமல் குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையை செய்ததால்தான் பொங்கி எழுந்து சட்டமன்ற முற்றுகை என்று அறிவித்தவர்கள், இன்று இவர்களது புகார் மனு மீது காவல்துறை விரைந்து செயல்பட்டு அரை மணி நேரத்தில் தமுமுகவின் மண்டையில் தட்டி உணர்வு அலுவலக சாவி வாங்கிவிட்டதாக விடும் கதை பாரீர்;

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.

காவதுறையின் செயல்பாடு விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக உளரும் இவர்கள், இப்போது சாவியை காவல்துறை வைத்துக்கொண்டு தர மறுக்கிறதாம். எனவே போராட்டம் என்று குதிக்கிறார்கள். சரி ஏற்கனவே சட்டமன்றம் என்றைக்கு திறக்கிறதோ அன்றைக்கு போராட்டம் என்றவர்கள் இப்போது அதிலும் பல்டியடித்து நான்கு கட்ட போராட்டம் நடத்தப் போகிறார்களாம்;

1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .
எதையும் சட்டரீதியாக சந்திப்போம் என்றவர்கள், தாங்கள் நடத்தும் போராட்டத்தால் எந்த பயனும் விளையாது என்பதை எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் விவகாரத்தில் அனுபவ பூர்வமாக உணர்ந்ததால், சில கண்துடைப்பு போராட்டங்களை நடத்தி விட்டு பின்னர் தாங்களே சட்டத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளார்கள். அதுதான் இவர்களின் நான்காவது கட்ட போராட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சக முஸ்லிம்களுக்குள் மோதிக்கொள்ளவேண்டும் என்று அண்ணன் ஜமாஅத் நினைக்கிறது போலும்.

சாதாரண ஒரு சொத்துப் பிரச்சினையை சட்ட ரீதியாக சாதிக்க திராணியின்றி, போராட்டம்- முற்றுகை- கைப்பற்றுதல் என்று கண்டபடி உளறித்திரியும் இந்த 'உலவி'யை சமுதாயம் புறக்கணிக்கும் நாளே சமுதாயத்திற்கு விடிவு நாளாகும்.

by abdul muhaimin

********************************************************************************************
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... 
உணர்வு அலுவலகத்தை தமுமுகவினர் கைப்பற்றி விட்டர்கள். அதை மீட்க ஜூன் 9ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் என்றார்கள் அண்ணன் ஜமாத்தினர். பின்னர்
காவல்துறை உயர் அதிகாரிகள் ததஜ நிர்வாகிகளை அழைத்து, உணர்வுஅலுவலகம்உங்களுடையதுதான்; ஜூன் 9ஆம் தேதி தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவலகம் ஒப்படைக்கப்படும்' என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்என்று கூறி 14 ம் தேதிக்கு முற்றுகை ஒத்திவைப்பு என்றார்களே! உயர் அதிகாரிகள் சொன்னபடி ஜூன் 9ஆம் தேதி இவர்கள் கையில் சாவியை கொடுத்து விட்டார்களா? என்றால் இல்லவே இல்லை. சரி சாவி கிடைக்கவில்லையானால் இவர்கள் அறிவித்தபடி 14 ம் தேதி சட்டமன்ற முற்றுகை அல்லது முதல்வர் வீடு முற்றுகை உறுதியாக நடைபெறும் என்று சொல்ல வேண்டுமல்லவா? பிறகு அதிலிருந்தும் பல்டியடித்து அடுத்த சட்டமன்றம் எப்போது கூடுகிறதோ அன்றைக்கு முற்றுகை என்று அறிவித்து விட்டு ஆழ்ந்த சயனத்திற்கு சென்றுவிட்டது அண்ணன் ஜமாஅத்.

இப்போது தூக்கத்தில் இருந்து விழித்த குழந்தை காரணமில்லாமல் அழுவது போன்று, சில போராட்டங்களை பட்டியலிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது அண்ணன் ஜமாஅத். அந்த போராட்டத்தை பார்ப்பதற்கு முன்பாக, உணர்வு அலுவலகம்[?] மீட்பு விஷயத்தில் மீண்டும் அண்ணன் ஜமாஅத் உளறியுள்ளதை பார்ப்போம்.

முதன் முதலாக ஜூன் 9 அன்று சட்டமன்ற முற்றுகை என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார்களே அதில் இவர்களின் புகார் குறித்து காவல்துறையின் செயல்பாடுகள்பற்றி இவர்கள் கூறியதை பாருங்கள்;

12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது
.

உணர்வு அலுவலகம் மீட்பு தொடர்பாக இவர்களது புகாரை காவல்துறை கண்டுகொள்ளாமல் குப்பைக்கூடைக்கு அனுப்பும் வேலையை செய்ததால்தான் பொங்கி எழுந்து சட்டமன்ற முற்றுகை என்று அறிவித்தவர்கள், இன்று இவர்களது புகார் மனு மீது காவல்துறை விரைந்து செயல்பட்டு அரை மணி நேரத்தில் தமுமுகவின் மண்டையில் தட்டி உணர்வு அலுவலக சாவி வாங்கிவிட்டதாக விடும் கதை பாரீர்;

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.
இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.

காவதுறையின் செயல்பாடு விஷயத்தில் முன்னுக்குப் பின் முரணாக உளரும் இவர்கள், இப்போது சாவியை காவல்துறை வைத்துக்கொண்டு தர மறுக்கிறதாம். எனவே போராட்டம் என்று குதிக்கிறார்கள். சரி ஏற்கனவே சட்டமன்றம் என்றைக்கு திறக்கிறதோ அன்றைக்கு போராட்டம் என்றவர்கள் இப்போது அதிலும் பல்டியடித்து நான்கு கட்ட போராட்டம் நடத்தப் போகிறார்களாம்;

1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .
எதையும் சட்டரீதியாக சந்திப்போம் என்றவர்கள், தாங்கள் நடத்தும் போராட்டத்தால் எந்த பயனும் விளையாது என்பதை எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் விவகாரத்தில் அனுபவ பூர்வமாக உணர்ந்ததால், சில கண்துடைப்பு போராட்டங்களை நடத்தி விட்டு பின்னர் தாங்களே சட்டத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளார்கள். அதுதான் இவர்களின் நான்காவது கட்ட போராட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சக முஸ்லிம்களுக்குள் மோதிக்கொள்ளவேண்டும் என்று அண்ணன் ஜமாஅத் நினைக்கிறது போலும்.

சாதாரண ஒரு சொத்துப் பிரச்சினையை சட்ட ரீதியாக சாதிக்க திராணியின்றி, போராட்டம்- முற்றுகை- கைப்பற்றுதல் என்று கண்டபடி உளறித்திரியும் இந்த 'உலவி'யை சமுதாயம் புறக்கணிக்கும் நாளே சமுதாயத்திற்கு விடிவு நாளாகும்.

by abdul muhaimin

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010