********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பேச்சுக்கு செயல்வடிவம் தருவாரா அல்தாஃபி...? - முகவை எஸ்.அப்பாஸ்

Tuesday, June 21, 2011

சமீபத்தில் குடந்தையில் 40 பாதிரியார்களுடன்  நடந்த கலந்துரையாடலில் பேசிய ததஜ மாநிலத்தலைவர் சகோதரர் அல்தாஃபி,

''இறைத்தூதர் நபிகள்  நாயகம்[ஸல்] அவர்கள் தனது இறுதிப் பேருரையில்,
அடுத்தவருடைய  மானம், மரியாதை, பொருள்,உடமைகள்  மற்றவருக்கு ஹராம். என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடமைகள் அனைத்தும் புனிதமானவை. அந்த புனிதம் பேணப்படவேண்டும் என்றும் இறைத்தூதர்[ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள் என்று பேசியுள்ளார்.[உணர்வு டிச 24 -30 ]

உண்மையில் சகோதரர்  அல்தாஃபி இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி தனக்கு  உண்டா என்று  சிந்திக்கவேண்டும். 

  • தனக்கு எதிராக ஒருவன் கிளம்பாதவரை அவன் பற்றி வாய் திறக்காத பீஜே, தனது   அநீதியை எதிர்க்க ஆரம்பித்தவுடன் அவனது மானத்தை ஏலம் போடும் பீஜேயின் செயலை அல்தாஃபி கண்டும் காணாமல்  இருக்கும் வரை இந்த பொன்மொழியை பற்றி பேச தகுதியுண்டா?

  • தன்னை எதிர்ப்பவர்களின்  மரியாதையை   சமுதாயத்தில் சீர்குலைப்பதையே அழைப்புப் பணியாக செய்யும் பீஜேயை கண்டிக்காதவரை இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி அல்தாஃபிக்கு உண்டா?

  • அடுத்தவனுடைய உடமையை தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கள்ளத்தனமாக பதிவு செய்து, அதை தக்கவைப்பதற்காக சமுதாயத்தின் பணத்தை கோர்ட்டில் வாரி இறைக்கும் பீஜேயின் செயலை கண்டிக்காதவரை இந்த பொன்மொழியை பயன்படுத்தும் தகுதி அல்தாஃபிக்கு உண்டா?

இப்படி இறைத்தூதர்[ஸல்] அவர்களின் கட்டளையை துச்சமென கருதி, அடுத்தவனுடைய மானம், மரியாதை, உடமை, ஆகியவற்றில் தொடர்ந்து விளையாடும் பீஜெயிக்கு  தலைவர்  என்ற முறையில் அல்தாஃபி,அவர் மீது நடவடிக்கை எடுத்து காட்டிவிட்டு  பின்னர் இந்த பொன்மொழியை பேசட்டும். அல்லது பீஜேயின் இந்த அயோக்கியத்தனத்திற்கு நானும், எனது தலைமையில்[!?] இயங்கும் ததஜவும்  முழு உடந்தை என்றாவது பகிரங்கமாக அல்தாஃபி அறிவிக்கட்டும்.

இல்லையேல், தனது தலைமைப் பொறுப்பு பற்றி அல்லாஹ்வின் விசாரணைக்கு  அவர் அஞ்சிக்கொள்ளட்டும். மேலும் பேச்சுக்கும்- செயலுக்கும் சம்மந்தமில்லாதவர்கள் ததஜவினர் என்ற விமர்சனத்திற்கும் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ளட்டும்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010