********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி - டி என் டி ஜெ

Wednesday, June 22, 2011

கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது.
ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி
நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர்.
நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவித்தது.
இதன் பின்னர் விழித்துக் கொண்ட காவல்துறை உயர்அதிகாரிகள் மமக வின் ஹைதர் அலி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து அரைமணி நேரத்தில் உணர்வு அலுவலக சாவியை கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்; இல்லாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தனர்.
ஆளும் கூட்டணி என்பது வெத்துவேட்டு என்பதை காவல்துறையினர் தெளிவாகவே புரியவைத்து அதிரடியாக சாவியைக் கைப்பற்றி எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்திவிட்டனர்.
இதன் மூலம் தமுமுகவின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது. ஆனாலும் சாவியை தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் ஒப்படைப்பதாக இருந்தால் ஆர்.டி.ஓ மூலமாகத்தான் ஒப்படைக்க முடியும் என்று தெரிவித்த காவல்துறை அவ்வாறே ஆர்.டி.ஓ விடம் சாவியை ஒப்படைத்து விட்டது.
ஆர்.டி.ஓ விசாரித்து தவ்ஹீத் ஜமாஅத்திடம் சாவியை ஒப்படைக்க இருந்த நேரத்தில் பதறிப்போன மமகவினர் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக நீதிமன்றத்தில் இடைக்காலத்தடையை வாங்கிவிட்டனர்.
அதிகாரிகளை கைக்குள் போட்டு ஆளும்கூட்டணி என்று எதையும் சாதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு எதிராக இடைக்காலத்தடை பெற்றுள்ளனர். இந்த இடைக்காலத்தடையை சட்டப்படி விரைவில் முறியடிக்க தக்க முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
ஆர்ப்பாட்டம்
தமுமுகவினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும், அவர்களின் அராஜக ரவுடியிசத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும், மமகவின் கட்டப்பஞ்சாயத்துக்கும், முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை இரும்புக்கரம் கொண்டு அரசாங்கம் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், சென்னை மெமோரியல் ஹால் – அருகில் மாபெரும் கண்டனப்போர் வரக்கூடிய ஜூன் 28ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.
அராஜகத்திற்கும், ரவுடித்தனத்துக்கும் மரண அடி கொடுக்க நியாயவான்கள் அணிதிரண்டு வருமாறு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கின்றது.
குறிப்பு :உணர்வு அலுவலக ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு ஆதாரமாக காவல்துறை வழங்கிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010