********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தொடர்கள் (10 செப்டம்பர் 2011)

Friday, September 9, 2011

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 41: 4.12.85
வம்பர் 14-ம் தேதி பிறந்த குழந்தைகளை அவர்கள் பிறந்த நாளிலேயே தரிசித்து, இந்த ஆண்டின் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிவிடுவது என்று கிளம்பி, சில மகப்பேறு மருத்துவமனைகளுக்கு 'ஸ்பெஷல் விசிட்’ அடித்தோம்!

 அடேயப்பா! கை, கால் முளைத்த ரோஜாப்பூக்கள் மாதிரி, அந்த 'மனிதக் கொழுந்துகள்’ கண் திறவாத நிலையில் தளும்புவதும், துள்ளுவதும், ''க்குவா.. க்கூவ்ஆ'' என்று தேவ பாஷையில் பேசுவதுமாக, தொப்புள் கொடியின் ஈரம்கூடக் காயாமல், பூத்துச் சிலிர்த்துக்கிடந்தன!
இந்த ஆண்டின் குதூகலமான நாட்களில் இதுவும் ஒன்று என்று நெஞ்சு பூரித்து, ஒரு மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபோது, சில தினங்களுக்கு முன் பிறந்த ஒரு கைக்குழந்தையுடன் வாசலில் கிராமத்துத் தம்பதி வருத்தமாக உட்கார்ந்து இருந்தனர்.
அருகே போய், ''ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?'' என்று கேட்டதும், புருஷன்காரர், பெண்சாதியை ஒரு முறை முறைத்துவிட்டு கடுப்பாகத் திரும்பிக்கொண்டார். அந்தத் தாயும் 'உம்’மென்று இருந்தாள். பிறகு.
''பெறந்திச்சு சனியன், பொட்டையா வந்து...'' என்று சொல்லிவிட்டு ஒரு குமட்டலான எரிச்சலோடு குழந்தையைப் பார்த்தாள். நமக்குத் தூக்கிவாரிப் போட்டது!
''மனுசக் கொழந்தைதானே பெறந்திச்சு? அட, வேற ஒண்ணும் பெறக்கலையே? பெண் குழந்தை பெறந்திடுச்சுன்னு ஒரு பெண்ணே இப்படி வருத்தப்படுதே...'' என்று சற்றுத் தள்ளி நின்ற கிராமத்துக் கிழவி ஒருவரிடம் போய் முறையிட்டதும், ''டவுனுகள்ல தேவலை... எங்க பக்கம் எல்லாம் அடுத்தடுத்துப் பொட்டையா பெறந்திச்சுன்னா, மனசைக் கல்லாக்கிக்கிட்டு... ம்...'' என்று எதையோ சொல்ல வந்தவர், பாதியில் சுதாரித்துக்கொண்டு....
''யாருப்பா நீ? யாரைப் பார்க்க வந்தே? ஒவ்வொரு புள்ளையா பாத்துட்டு திரிஞ்சே! நம்ம பய மாதிரி இருக்கே, எந்த ஊருப்பா... என்ன ஆளுக?'' என்று பேச்சை மாற்றினார். நாமும் தொடர்ந்து, ''பாத்தியா! பேச்சை மாத்துறியே... சும்மா சொல்லுங்க அமத்தா...'' என்று 'அவுக’ பாணியிலேயே கேட்டதும், தயங்கித் தயங்கிச் சொல்ல ஆரம்பித்தார்...
கேட்கத் கேட்க நெஞ்சில் தீப்பிடித்ததுபோல் இருந்தது. தலை சுற்றியது!
''இத்தினிகூட ஈவு எரக்கம் இல்லாம பச்சமண்ணுகளைக் கொன்னுட்டு, 'புள்ளை செத்துப் போச்சு’னு சொல்லிப்பிடுவாளுக... பச்சப்​புள்ளைக பெறந்து ரெண்டு மூணு நாளைக்குள்ள கொன்னுபுட பல வழி இருக்கு... இது இன்னிக்கா நேத்தா, எங்க பக்கம் ரொம்பக் காலமா இருக்குப்பா. எளவட்டப் புள்ளையா இருக்கே... இதெல்லாம் தெரியாதா உனக்கு?'' என்றார் ஆச்சர்யத்துடன். இது எவ்வளவு தூரம் உண்மை என்று அறிய, அவரிடமே சில ஊர்களின் பெயர்களைக் கேட்டுக்கொண்டு 'இது தவறான தகவலாக இருக்கக் கூடாதா’ என்று நினைத்துக்கொண்டு உடனே கிளம்பினோம்.
உசிலம்பட்டியில் இறங்கி மெள்ள விசாரித்ததும் சர்வ சாதாரணமாக, ''ஆமா... இங்க 10 மைல் சுற்றளவில் இருக்கும் பட்டி தொட்டிகள்ல இது சர்வ சாதாரணமுங்க... வீடு தவறாம இது நடக்குது.  ஒரு பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அடச்சான்பட்டி, நல்லச்சான்பட்டி, கல்லூத்து இங்கதான் ரொம்ப இருந்திச்சு... இப்ப எல்லா ஊர்லையும் ரெண்டாவது பொம்புளைப் பிள்ளை பெறந்திச்சுன்னா கொன்னுபிட்டுத்தான் மறுவேலை பாப்பாங்க...'' என்றார் தேவராஜன் என்ற இளைஞர்.
உசிலம்பட்டியில் இருந்து வடக்கே போகிற ரோட்டில் உள்ள கிராமங்களுக்கு ஒரு வாடகை சைக்கிளில் கிளம்பினோம். அந்தப் பகுதியில் யாரைக் கேட்டாலும், ''இது சர்வ சாதாரணமுங்க...'' என்று சொல்லிவிட்டு, ''எதுக்கு சாமி வம்பு... ஊருக்குள்ள பொல்லாப்பு வந்து சேரும்... போட்டோ புடிக்காத... நான் சொன்​னேன்னு போட்டுப்​புடுவே... போலீஸும் வந்திரும் சாமி!'' என்று நழுவினார்கள். நாம் தொடர்ந்து வற்புறுத்தவே தயங்கியபடி 'விஷயத்தை’ச் சொன்னார்கள்...
(மனதைக் கல்லாக மாற்றிக்கொள்ள முடியாத​வர்கள் அடுத்த பாராவைத் தவிர்க்கவும். ஸாரி, என்ன செய்ய? உண்மை நிலையைச் சொல்லியாக வேண்டியது நமது கடமை...!
- ஆ-ர். )
பெரிய செம்மேட்டுப்பட்டி அன்னத்தாயி சொல்கிறார்: ''புள்ள பெறந்ததும் ரெண்டு நெல்லை எடுத்துக் குழந்தையோட வாய்க்குள்ளாற போட்டுப்பிட்டா அது தொண்டையிலே போயி சிக்கிக்கும்... கிர்புர்ருன்னு... கொஞ்ச நேரத்திலே நெஞ்சுத் தண்ணி ஒனந்து போயிடும்... பாக்கப் பாவமா இருக்கும்கறதாலே வூட்டுக்குள்ள போட்டுபிட்டுக் கதவைச் சாத்திட்டு வெளியில போயிட்டு வந்து பாத்தா செத்துக் கெடக்கும். ஒரு சில வீட்டுல நெல்ல வாயில போட்டுப்பிட்டு நல்லெண்ணெய்... இல்லாட்டி, கோழிக்கொழம்பை வாயில ஊத்திடுவாங்க. சத்தம் போடாம சீக்கிரமாவே செத்துப் போகும். இப்ப எல்லா ஊர்லயும் எருக்கம் பாலு, இல்லாட்டி கள்ளிப் பாலுல நல்லெண்ணெயைக் கலந்து, அத சங்குல போட்டு, வாயைத் தொறந்து பொகட்டி விட்டுருவாளுக... கொஞ்ச நேரத்துக்குள்ள புள்ளை சத்தம் போடாம உசுரு அடங்கிடும். எருக்கம் பாலைப் பொகட்டுனா வாய் வழியா கொஞ்சம் ரத்தம் வந்து கெடக்கும். கொடலு பூராம் வெந்து போகுமில்ல? புள்ள பெறந்து கண்ணு தொறக்குமுன்ன கொன்னுபுடணும்... இல்லாட்டி பாவமா இருக்கும்.
அதப் பெத்து வளத்து சீரு செனத்தி செய்யுறதுக்கு ஒரு நாளையில் கொன்னுபுடறது நல்லதுதானேப்பா...’ இந்தா இவ (அருகில் இருக்கும் தன் வளர்ந்த மகளைக் காண்பித்து) ரெண்டாவது பொட்டையாதான் பெறந்தா... கொன்னுப்புடணும்தான் பேசுனோம். என் புருஷன் கையெடுத்துக் கும்புட்டு 'வேணாம்’னு சொல்லிப்பிடுச்சு. விட்டுப்​புட்டோம். இப்ப இவ ரெண்டு புள்ளைக்குத் தாயா இருக்கா...'' என்று சொல்லி முடித்தார்.
அதிர்ச்சியுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு நடந்தபோது மெயினம்பட்டிக்காரரான ப்ளஸ் டூ மாணவர் இன்பராஜிடம் விசாரித்தபோது,''ஒரே வூட்டுல ரெண்டு பொம்புளப் புள்ளைக்கு மேலன்னா கொன்னேபிடுவாங்க... மறுபேச்சே இல்லை. எனக்குத் தெரிய 50 புள்ளையை எங்க ஊர்ல கொன்னுருப்பாங்க சார்...'' என்றார்.
அவர்கூட வந்த பேரும் ஊரும் சொல்ல விரும்பாத ஒருவர்,''எங்க ஊர்ல பொம்புளைப் புள்ளையப் பெத்தவன் ஊரு மந்தைக்கு வந்தா, 'இன்னுமா அதக் கொல்லாம வெச்சிருக்கே’னுதான் கேட்பாங்க. இப்ப இங்கிட்டு எல்லா ஊர்லேயும் இது சாதாரணம். இத ஒண்ணும் செய்ய முடியாதுங்க...'' என்றார் வருத்தத்துடன். அத்துடன், ''இங்க பெரும்பாலும் பொம்புளைப் புள்ளையைப் பெறந்ததும் கொன்னுப்பிட்டா அடுத்து ஆம்புளப்புள்ள பெறக்கும்னு நம்புறாங்க. அது மாதிரியே சிலருக்குப் பெறக்குது(!)'' என்றார்.
அங்கு இருந்து கிளம்பி மேக்கலார்பட்டி, 'மருத்துவச்சி’ நாகம்மாள் என்ற நாவிதக் கிழவியைப் போய்ப் பார்த்தோம்.
''இந்தப் பக்கம் நான்தான் பேறு காலம் பாப்பேன். பொம்புளப் புள்ளை பெறந்ததும், 'அத நீயே கொன்னுபிடு நாகம்மா... ஒனக்கு சேலை துணி எடுத்துத் தர்றோம்’னுகூடச் சொல்லுவாளுக. 'என் உசிரே போனாலும் நா மாட்டேன்’னு சொல்லிப்புடுவேன். அப்புறம் அவுங்களே கொன்னுபிடுவாங்க. எனக்குத் தெரிஞ்சு 700, 800 புள்ளைகளை இப்படிக் கொன்னுட்டாங்க. கேட்டா 'அதுகளை வளத்து ஆளாக்கி சீர்வரிசை செய்ய முடியாது’ம்பாளுக. அப்படிப்பட்டவளுக பெக்காம இருக்க வேண்டியதுதானே?'' என்று ஆத்திரமாகக் கொதித்துச் சொன்னார்.
பெயர், ஊர் சொல்ல விரும்பாத ஒரு பட்டதாரி இளைஞரை அணுகி விசாரித்தபோது, ''இந்தக் கொடுமை பெரும்பாலும் பரவலா இருக்குங்க. இப்படியே போனா, இன்னும் 20 வருஷம் கழிச்சு இந்தப் பக்கம் பெண்களுக்கே பெரிய பஞ்சமாகிவிடும். இதுக்கு ஒரே காரணம் - இந்தப் பக்கம் பொட்டைப் புள்ளை பெறந்தா அது ஒரு பெரிய சுமை... நெறைய சீர்வரிசை செய்யணும்... எனக்குத் தெரிய, ஒரே வீட்டுல அஞ்சு புள்ளை வரைக்கும் அடுத்தடுத்துக் கொன்னுருக்காங்க. இது வெளியில யாருக்கும் தெரியாது. கமுக்​கமா முடிஞ்சு போகும். ஆஸ்பத்திரியில பெறந்து வூட்டுக்குக் கொண்டுவந்தா, வந்ததும் மொதல் வேலையா புள்ளைய கொன்னு பொதச்சிப்பிட்டுத்தான் மறுவேலை... இது உசிலம்​பட்டியச் சுத்தி இருக்கும் ஊர்கள்ல அதிகம். இது ஒரு கம்யூனிட்டியில மட்டும் இல்லை... இன்னும் சில கம்யூனிட்டியிலயும் இருக்கு. போடி, உத்தமபாளையம் பக்கம் சில ஊர்கள்லயும் இது நெறைய இருக்கு சார்!'' என்றார்.
அங்கு இருந்து புறப்பட்டு, போடி ஜனநாயக மாதர் சங்கத் தலைவி கஸ்தூரியை அணுகி விவரம் கேட்டதும், ''நிச்சயமா இது ஒரு கம்யூனிட்டி பிராப்ளம் இல்லை. சோஷியல் பிராப்ளம்தான். இந்தப் பக்கம் 'சில்லமரத்துப்பட்டி’ன்னு ஒரு ஊரு இருக்கு... அங்கு இது அதிகம். மத்த ஊர்கள்லயும் இருக்கு. கேட்டா யாரும் சொல்ல மாட்டாங்க. ஏங்க, பொம்புளையா பெறக்குறதே பாவம்னு ஆகிட்டு வருது! இதுக்கு வரதட்சணை, சீரு, அது இதுன்னு இப்ப பழக்கம் வழக்கம் அதிகமாக அதிகமாக, பெறந்த உடனே கொல்றதும் அதிகமாயிடுச்சு. இதுக்கு எப்படி ஒரு முடிவு கட்டுறதுன்னே தெரியலைங்க...'' என்று நா தழுதழுத்து அவர் சொன்னபோது, கண்கள் நிறைய நீர் தளும்பி இருந்தது.
தேவதானப்பட்டிக்கு அருகில் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண்மணியை விசாரித்தபோது.
''என் பேரைப் போட்டு ஊருக்குள்ளே பிரச்னை வந்திராம பாத்துக்கங்க...'' என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தார். ''அட்டனம்பட்டி, புள்ளக்காபட்டில இந்தப் பழக்கம் நெறைய இருக்குதுங்க... பொம்புளப் புள்ளை பெறந்திடுச்சின்னா உடனே அதன் ஒடம்புக்குச் சேராத 'இன்சுலின் இன்ஜெக்ஷன்’ போட்டுக் கொன்னுபிடுவாங்க. நூறு ரூபாகூட தர்றோம்னு எங்கிட்ட பல பேர் சொல்லி இருக்காங்க. நான் மாட்டேன்னுருவேன். எங்ககூட வேலை பார்க்குறதுகள் காசுக்கு ஆசைப்பட்டுப் போட்டு விட்டுடுங்க. எனக்குத் தெரிய... இந்த ஒரு வருஷத்துக்குள்ள 20 புள்ளைக இப்படிச் செத்துப் போச்சு. தெரியாம, எத்தனையோ? அழகழகான புள்ளையா இருக்கும். எனக்குகூட வாங்கி வளக்கலாமான்னு இருக்கும். ஒரு நாள் எங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் புள்ளை பெறந்திருக்குன்னு பார்க்கப் போனேன். எட்டிப் பாத்தேன்... எருக்கம் பாலை போட்டுக் கெடந்திச்சு. கொல்லைப் பக்கமா பாத்தேன். ஒரு குழி வெட்டிட்டு இருந்தாங்க. எனக்கு 'கெதக்’னு போச்சு. மறுவார்த்தை பேசாம திரும்பிட்டேன்...'' என்றார் அதிர்ச்சி குறையாமல்.
இந்தக் கொடூரம் அங்கொன்றும் இங்கொன்றும் என்றில்லாமல் தென் மாவட்டங்களில் பரவலாக, தீவிரமாகச் சத்தம் இல்லாமல் நடந்துகொண்டு இருக்கிறது! மேற்கொண்டு இதுபற்றி நாம் என்ன சொல்ல? சொல்ல உதடு நடுங்குகிறது! எழுத விரல்கள் நடுங்குகின்றன!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010