********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தொடர்கள் (30 நவம்பர் 2011)

Wednesday, November 30, 2011

முட்டையில் இருந்து முட்டைக்கு!

மரபணு சாதனை
பெண்ணின் கரு முட்டை தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று
குழந்தைப்பேறு அடையவைப்பதுதான் ஒரே தீர்வாக இதுவரை
இருந்தது. இதில் குழந்தையின் மரபணுவில் தாயின் மரபணுவுக்குப் பதில் 'அந்த வேறு’ ஒருவரின் மரபணுதான் இருக்கும். தன் வயிற்றில் வளர்த்துப் பெற்றாலும், அது வேறு ஒருவரின் குழந்தை என்ற மனநிலை பெண்களிடம் இருந்தது. அந்தக் குறைபாட்டை நீக்குவதற்காக, சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர் என்ற புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது.
இது குறித்து சென்னை மிராக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் டாக்டர்
பி.எஸ்.ஆர்.மூர்த்தியிடம் பேசினாம். ''ஒரு பெண்ணின் சினைப் பையில் 15 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 50 வயது வரை கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. பெண் குழந்தை பிறக்கும்போதே, அதன் சினைப்பையில் 10 லட்சத்துக்கும் அதிகமான சினைத் துகள்கள் இருக்கும். அந்தக் குழந்தை, பருவம் அடைந்ததும் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு சினை துகள்கள் முட்டையாக வளரத் தேர்ந்து எடுக்கப்படும். இதில் ஒன்று மட்டும் முழுமையான வளர்ச்சி பெறும். மற்றவை வெளியேற்றப்படும். மாதந்தோறும் ஒரே ஒரு கரு முட்டை எனும்போது, ஒரு பெண்ணின் கருத்தரிப்பு காலம் முழுவதற்கும் சேர்த்தே 500 சினைத் துகள்கள் போதுமானது. ஆனால் அளவுக்கு அதிகமான சினைத் துளைகள் இருந்தும், அவை பயன்படுவது இல்லை. வயது கூடினாலும் முட்டையின் தரம் குறைந்துகொண்டே போகும். 40 வயதான பெண்ணுக்கும் 20 வயதான பெண்ணுக்கும் உற்பத்தியாகும் முட்டைகள் ஒரே தரத்தில் இருப்பது இல்லை.
சில பெண்களுக்கு இயற்கையாகவே கரு முட்டை தரமாக இருப்பது இல்லை. என்ன சிகிச்சை அளித்தாலும் அவர்களால் தரமான முட்டையை உற்பத்தி செய்ய முடியாது. தரம் குறைவான முட்டைகளை உற்பத்தி செய்யும் பெண்களுக்கு, கருத்தரிப்பது மிக மிகச் சிரமம். அப்படியேகருத்தரித்தாலும், கர்ப்பத்தின் தரமும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில்தான், தானமாகப் பெறப்படும் முட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவோம். தானமாக பெறப்பட்ட முட்டையைக் கருத்தரிக்கச் செய்து, குழந்தைப்பேறு அடையச் செய்தாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணு இருக்காது. இவர்களுக்கு ஆறுதலாக வந்திருப்பதுதான் சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர்.
சமீபத்தில் பல கருத்தரிப்பு முறைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த பெண் ஒருவர் எங்கள் மையத்துக்கு வந்தார். அவரது சினைப் பையில் இருந்து ஐந்து முட்டைகளை எடுத்தோம். அதில் ஒன்றைப் பலி கொடுத்து, அதில் இருந்த சைட்டோபிளாசத்தை நான்கு முட்டைகளுக்கு மாற்றினோம். இந்த நான்கு முட்டைகளையும் ஐ.சி.எஸ்.ஐ. வாயிலாக கருத்தரிக்கவைத்தோம். இதில் மூன்று முட்டைகள் கருக்களாக மாறின. பின்னர் நடந்த பரிசோதனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் வளர்வது உறுதி செய்யப்பட்டது. 35-வது நாள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரண்டு கருக்கள் வளர்வதைக் கண்டறிந்தோம். மிகவும் கவனத்துடன் அவரது கர்ப்பத்தை வளர்த்துவந்தோம். அவரது முந்தைய சிகிச்சை முறை வரலாறு தெரியும் என்பதால், முன்கூட்டியே பிரசவம் நடப்பதைத் தவிர்க்க, 18-வது வாரத்தில் அவருக்கு ஒரு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் எந்தவித சிக்கலும் இன்றி கரு வளர்ந்தது. கடைசியில் கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அந்தப் பெண் ஓரளவுக்குத் தரமான முட்டையை உற்பத்தி செய்ததால், அதில் ஒன்றைப் பலியிட்டு மற்ற கருக்கள் உருவாக்கப்பட்டன. இதுவே அந்தப் பெண்ணின் அனைத்து முட்டைகளும் தரம் குறைந்ததாக இருந்தால், அவரது சகோதரியிடம் இருந்து நல்ல தரமான முட்டையை எடுத்து குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். இதன்படி, தானமாகப் பெறப்பட்ட முட்டையில் இருந்து 5 முதல் 8 சதவீதம் வரையிலான சைட்டோபிளாசத்தைப் பிரித்து எடுத்து, குழந்தைப்பேறு பெற வேண்டிய பெண்ணின் தரம் குறைந்த முட்டையில் துல்லியமான அளவு சேர்த்து முட்டையின் தரத்தை உயர்த்துவோம். இப்படிப் பிறக்கும் குழந்தை பெற்றோரின் மரபணுவையே கொண்டிருக்கும்.
சம்பந்தப்பட்ட பெண் உற்பத்தி செய்யும் முட்டையின் தரம் அனைத்தும் குறைவாக இருந்தும், அவரது உடன்பிறந்த சகோதரிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முட்டையும் தரமானதாக இல்லை என்றால், வேறு ஒருவரிடம் இருந்து முட்டையைத் தானமாக பெற்றும் இந்த முறையில் குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். அப்படி சைட்டோபிளாஸ்மிக் இடமாற்றத்துக்கு வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட முட்டையை இந்தத் தொழில்நுட்பத்தின்படி பயன்படுத்தினாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணுக்கள் இருக்கும். மரபணு முட்டையின் மையப் பகுதியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். இந்தத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போதுதான் இந்தியா வில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. இனி இந்தியா விலும் இந்த சிகிச்சை பிரபலமாகும்'' என்றார்.
மரபணு மகத்துவம் தொடரட் டும்!
பா.பிரவீன்குமார்
************************************************************************
பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 59: 28.5.86
மிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்​பாணம் மீது ஜெயவர்த்​தனாவின் விமானங்கள் வெறித்த​னமாகக் குண்டுகளை வீச... சிங்களர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.
இருப்பினும், தொடர்ந்து விடுதலைப் புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள ராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது.
விடுதலைப் புலிகளால் சகல வசதி​களோடு இருக்கும் சிங்கள ராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா..? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்..? இதுபோன்ற கவலைகள் வேறு மனதை நெருடின. உண்மையில் அங்கு தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? இதுபற்றி யார் நேரடியாக நமக்குத் தகவல் சொல்வார்கள்?
திடீரென்று, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சென்னைக்கு வந்திருக்கும் தகவல் கிடைத்தது. (அவர் சென்னையில் இருக்கிறாரா, இலங்கையில் இருக்கிறாரா என்பதெல்லாம் ரகசியம் என்பதால், நினைத்ததும் சந்தித்துவிட முடியாத நிலை!) தொடர்புகொண்டோம். மறுநாள் காலை சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. கூடவே, 'நாங்கள் வந்து அழைத்துப் போவோம்’ என்று சொல்லி அனுப்பினார்கள்.
மறுநாள் காலை 9 மணிக்குஇரும்பைப் போல் உடல்வாகுகொண்ட மூன்று இளைஞர்​களுடன் ஒரு வேன் நம் அலுவலகத்துக்கு வந்து நிற்க, ஏறி அமர்ந்தோம். இளம் புலிகள் சென்னை வீதிகளில், படு லாகவமாக வேனை ஓட்டுகிறார்கள்!
சென்னை இந்திரா நகரில் உள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலை​மையகம்... தேதி மே 21. காலை மணி 9.30.
வீட்டைச் சுற்றி விடுதலைப் புலி இயக்கத்தின் இளைஞர்கள்... உள்ளே மாடி ஹாலில் -
'தம்பி’ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர்கள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்!
சற்று பருமனான, ஆனால் வலுவான உடல்வாகு... ரொம்ப உயரம் இல்லை. வகிடு இல்லாமல் மொத்தமாகத் தூக்கி வாரப்பட்ட சீரான தலைமுடி... தீர்க்கமான விழிகள்... நேருக்கு நேர் நம் கண்களைப் பார்த்துப் பேசுகிறார். அடர்த்தியான கச்சிதமான மீசை பிரபாகரனுக்குத் தனி கம்பீரத்தைத் தருகிறது.
நாம் அங்கே சந்தித்தபோது, ஈழத்தில் இருந்து வந்துகொண்டு இருந்த செய்திகளை அவருடைய தோழர்கள் 'டைப்’ அடித்து அவரிடம் காட்டிக்கொண்டு இருந்தனர். பிரபாகரன் அவற்றைக் கூர்ந்து படித்துவிட்டுச் சில செய்திகளை 'ஓகே’ செய்தார். அவை வெளியுலகம் அறிய பத்திரிகைகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டன.
வல்வெட்டித்துறையில் இலங்கைராணுவம் விமானம் மூலம் குண்டு வீசிய செய்தி அப்போது வந்தது. வீராவேசமாக எதிர்த் தாக்குதல் நடத்தியதில் எட்டு விடுதலைப் புலிகள் பலியானார்கள். இந்தச் செய்தியை பிரபாகரன் நம்மிடம் படித்து காட்டிவிட்டுச் சற்று மௌன​மானார்.
தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றிக் கவலை​யோடு கேட்டோம்.
''இலங்கை ராணுவம் நடத்தும் இந்த விமானத் தாக்குதலில் மக்கள் அதிகம் இறந்து விடவில்லை. காரணம், இம்மாதிரி விமானத் தாக்குதல்களை இலங்கை அரசு நடத்தப்போவதை சில வாரங்களுக்கு முன்பே தமிழ்ப் பகுதிகளில் எச்சரித்து விட்டோம். ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டு உள்ளன. ஆண் துணை இல்லாத வீடுகளில் எங்கள் இயக்க வீரர்கள் பதுங்கு குழிகளை வெட்டி உதவினார்கள். விமான ஓசை கேட்டவுடனேயே குழிகளில் பதுங்க, இப்போது குழந்தைகள்கூடப் பயிற்சி பெற்றுவிட்டார்கள்'' என்றார் பிரபாகரன்.
இலங்கை ராணுவ விமானம் மூலம் வீசப்படும் குண்டுகள் பெரும்பாலும் 'வேஸ்ட்’ என்று வர்ணித்தார் பிரபாகரன். 'வேண்டுமானால் மக்களி​டையே பீதியைக் கிளப்ப அது உதவலாம்... மற்றபடி எங்கள் இலக்குகளை அவர்களால் தாக்க முடியாது! அவர்களிடம் 'நேபாம்’ (விஷ கெமிக்கல்) குண்டுகள் வீசுவதற்குத் தயாராக இருக்கின்றன. இன்னமும் அந்த குண்டுகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. இரக்கம் இல்லாமல் 'நேபாம்’ குண்டுகள் வீசினால், அப்பாவிப் பொதுமக்கள் துன்பம் அடைய நேரிடும்.''
யாழ்ப்பாணத்தில் மக்களின் முழு ஆதர​வோடு விடுதலைப் புலிகள் ஆட்சிதான் நடக்கிறது. ''வரி வசூலே நாங்கள்தான் செய்கிறோம் என்றால் பார்த்துக்​கொள்ளுங்​களேன்'' என்றார் புன்முறுவலுடன் பிரபாகரன்.
''யாழ்ப்பாணத்துக்கு நீங்கள் எப்போது போய் வந்தீர்கள்?'' என்று கேட்டபோது, ஒரு கணம் தயங்கி சிறு புன்னகையுடன், ''இடையிடையே போய் வருவேன்... யுத்த முனையில் எதுவும் எனது உத்தரவுகள்படியே நடக்கும். அவசர முடிவுகள் எடுக்க அங்கே உள்ள எனது தளபதிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் எல்லோரும் நான் எப்படிச் சிந்திப்பேனோ... அப்படிச் சிந்திக்கப் பயிற்சி பெற்றவர்கள்!'' என்றார்.
விடுதலைப் புலிகளுக்கு நவீன ஆயுதங்கள் அத்தனையும் அத்துப்படியாகி இருக்கிறது. மிலிட்​டரி சயின்ஸைப் புத்தக வடிவில் தமிழில் கொண்டுவந்து இருக்கிறார்கள் இவர்கள். 'போர்க் குரல்’ என்ற இந்தப் புத்தகம் தமிழில் முதல் முயற்சி. இத்தனை போராட்டத்துக்கு நடுவில் தமிழில் ராணுவத்தைப் பற்றியும், போர் முறைகளைப் பற்றியும் விஞ்ஞானரீதியில் பல வால்யூம்களாகத் தயாரித்திருக்​கிறார்கள்.
பொதுவாக, பிரபாகரனுக்குப் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் அதிகம். உலக நாடுகள் முழுவதிலிருந்தும்
 3 லட்சம் பெறுமான யுத்த நுணுக்கப் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு, 'போர்க் குரலில்’ அவற்றின் மொழிபெயர்ப்பு தரப்படுகிறது... போர்க் குரல் லே-அவுட் எல்லாம் பிரமாதம். இருப்பினும் பிரபாகரன் திருப்தி அடையவில்லை.
''என்னைத் திருப்திபடுத்துவது எளிதான காரியம் அல்ல... இன்னும் சிறப்பாகத் தயாரித்திருக்க முடியும்'' என்று சிரித்தார் பிரபாகரன்.
அவரது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான 'புலி’ முத்திரைக்குச் சரியான புலித் தலையைத் தேர்ந்தெடுக்கப் பட்டபாடு சுவை​யானது. சிவகாசி பட்டாசில் இருக்கும் புலியின் படத்தில் இருந்து உலகம் முழுவதும் வெளியாகும் புலிப் படங்கள் வரை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. எதிலும் அப்படி ஒரு 'பெர்ஃபெக்ஷன்’ எதிர்பார்க்கிறார் பிரபாகரன். ''நாளைக்கு ஒரு புலியின் படத்தைப் பார்த்துவிட்டு, 'அடடா, இதை உபயோகித்திருக்கலாமே!’ என்று வருத்தப்​படக் கூடாதல்லவா?'' என்று விளக்கம் தந்தார். இந்த அணுகுமுறை அவரது எல்லாச் செயல்களிலும் எதிரொலிக்கிறது.
''எங்கள் இயக்கத்தில் சேருவதற்குக் கட்டுத்திட்டங்கள் உண்டு. வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் யாரும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுவது இல்லை. தோல்வி உணர்வுகொண்டவர்களுக்கு இதில் இடம் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை இருக்காது. இந்தப் போராட்ட விஷயத்திலும் விரக்திதான் அடைவார்கள். தமிழ் ஈழம் உடனே கிடைத்துவிடும் என்ற கனவோடும் வரக் கூடாது. போராட்டத்துக்குக் கால வரம்பு கிடையாது. தனி ஈழம் கிடைக்க சர்வதேச சூழ்நிலைகள்கூட அனுசரணையாக இருக்க வேண்டிய நிலை உண்டு.'' என்ற பிரபாகரன் சற்று உணர்ச்சி வசப்பட்டார்.
''இலங்கையில் தமிழனாகப் பிறந்ததால், வாழும் நிலம் பறிக்கப்பட்டது... கல்வி பறிக்கப்பட்டது... பொருளாதார வசதிகள் மறுக்கப்பட்டன. இதை எதிர்த்துப் போராடாவிட்டால், நாம் ஒரு ஜடம்தான். பிறகு, ஒரு மனிதனாக வாழ்வதில் அர்த்தம் ஏதும் இல்லை. நாங்கள் போராடுவதை எங்கள் சரித்திரக் கடமையாகக் கருதுகிறோம். பதவிகளையோ அல்லது வேறு எதையும் எதிர்பார்த்துப் போராட்டம் நடத்தவில்லை.''
சில நிமிடங்கள் அந்த ஹாலில் அமைதி நிலவியது... பேட்டி - 'டெலோ’ - விடுதலைப் புலிகள் மோதலைப்பற்றி திரும்பியது. நாங்கள் கேட்டோம்: ''இந்த மோதல்... சிறீ சபாரத்​தினத்தின் மரணம் ஆகியவற்றால், தமிழ் மக்கள் கசப்படைந்து இருக்கிறார்கள். தமிழர்களிடையே ஒற்றுமை என்பதே இல்லையா? அந்தக் காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து மோதியதில் இருந்து இந்த நிலைமைதானா?''
''சேர, சோழ, பாண்டியர்கள் என்று பிரிந்து சண்டையிட்டதும் உண்மை. ஒரு கால கட்டத்தில் சோழர்கள்... சேர, பாண்டியர்களை அடக்கியதும் உண்மை'' என்றார் பிரபாகரன் சுருக்கமாக. பிறகு தொடர்ந்தார்.
''எங்களிடம் வஞ்சகத்தன்மை இல்லை. இரண்டு எதிரிகளைச் சந்திக்க முடியாது. முதலில் கத்திக்கொண்டு இருந்தவர்களைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிரம்பத் தள்ளிப்போட்டு எடுத்த முடிவுதான் அந்த மோதல். சிறிய யுத்தமாகவே நடத்தித் தீர்வு காண வேண்டியதாயிற்று. நாட்டைக் காக்க யுத்தத்தில் இறங்கும்போது, மெத்தனமாக முடிவெடுக்க முடியாது. பகவத் கீதையும் அதைத்தான் சொல்கிறது. உற்றார், உடன்பிறப்பு, குரு, நண்பன் என்று யுத்த களத்தில் இரக்கம் பார்ப்பதற்கு இல்லை. சொந்த தந்தை, சகோதரன் போன்றவர்கள் துரோகியாக மாறினால், அவர்களை அழிக்கத் தயங்காதவர்கள் எங்கள் இயக்கத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் நிறையப் பொய்களை அவிழ்த்துவிட்டவாறு இருந்தார்கள்... உண்மை செருப்பை மாட்டிக்கொள்வதற்குள்... பொய், பாதி உலகம் உலா வந்திருக்கும் என்பதற்கு ஏற்ப, எங்களைப்பற்றிய பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. எனக்குப் பொதுவாகவே பிறரை விமரிசித்து அறிக்கைவிடுவது பிடிக்காது... அவர்களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால்... குழாயடிச் சண்டைபோல, அவலங்கள் வெளிவரும்!
நாங்கள் அவர்கள் இயக்கத்தவரை உயிரோடு கொளுத்தியதாகச் சொல்கிறார்கள். அப்படி எதுவும் என் இயக்கத்தில் நடக்காது. அது நினைத்துப் பார்க்கவே இயலாத செயல். அப்படி யாராவது செய்தால், நான் பதிலுக்கு அவரை உயிரோடு கொளுத்துவேன். என் இயக்கத்தில் யாராவது தெரிந்து தவறு செய்தால், அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஆகவே இங்கே இருப்பவர்களுக்குத் தவறு செய்ய நிறையவே துணிச்சல் தேவைப்படும்!
தமிழ்நாட்டு அரசியலில் சிலர், சிலரை தியாகி ஆக்குகிறார்கள். நான் கலைஞரைச் சந்திப்பது இல்லை என்று குற்றச்சாட்டு போல சொல்லப்படுகிறது. உண்மையில் நான் யாரையுமே சந்திப்பது இல்லை. எம்.ஜி.ஆரையும் நான் சந்திக்கவில்லை. இலங்கைத் தமிழருக்காக எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தபோதுகூட நான் அங்கே போகவில்லை. எங்கும் நான் போவது இல்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் நான் கலந்துகொள்வது இல்லை.
தமிழ் ஈழம் சுதந்திரம் அடையும் விழாதான் நான் கலந்துகொள்ளும் முதல் பொது விழாவாக இருக்கும். எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்த பிறகுதான், யாரையும் எங்கேயும் சந்திப்பேன்!'' என்கிறார் பிரபாகரன் அழுத்தம் திருத்தமாக.
''யாழ்ப்பாண மக்களிடம் விசாரியுங்கள். விடுதலைப் புலிகள் தவறு செய்வதாகச் சொல்லட்டும்... மண்டியிடுகிறேன்... சொல்ல மாட்டார்கள்! மற்ற இயக்கத்தவர்கள் செய்யும் தவறுகளை மக்கள் வந்து சொன்னதாலேயே, தடி எடுத்தவன் தண்டல்காரனாக ஆகக் கூடாது என்பதாலேயே, 'டெலோ’ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.''
பிரபாகரன் எதிரில் ஒரு மருந்து 'குப்பி’ இருந்தது. ''அது என்ன?'' என்று கேட்டோம்! ''இதில்தான் எனது இயக்கத்தவர்கள் சயனைட் நிரப்பி கழுத்தில் மாட்டிக்கொண்டு இருப்பார்கள். எதிரிகளிடம் சிக்கினால், சயனைடை வாயில் போட்டுக்கொண்டு உயிர்த் தியாகம் செய்வார்கள். பலர் செய்தும் இருக்கிறார்கள்...'' என்று சொல்லிவிட்டு ஏதோ நினைவுகளில் மூழ்கினார் பிரபாகரன்...
(பிரபாகரன் வரைந்த ஓவியங்கள் -  அடுத்த இதழில்)
*********************************************************************************
தொடங்கும் பயணம் விரைவில்...

மிஸ்டர் மியாவ்

ஒரு சினிமாப் புள்ளி ரஜினியிடம், 'உங்களை கமல் இன்னும் பார்க்க வரலையே’ என்று பிட் போட்டாராம்.  'கண்ணா, கமல் என்னை சந்திக்கவும் செஞ்சார், போன் லயும் விசாரிக்கிறார். நானே பரட்டை... என்கிட்டேயே பத்தவெக்கிறியா..?’ என்று சிரித்தாராம், ரஜினி.
வம்பு பண்ணுவது சிம்பு ப்ளஸ் நண்பர்கள் வழக்கம்.  தனுஷ் பாடி இருக்கும் 'கொலைவெறி’ பாடலை சிம்பு ரசிகர்கள் இன்டர் நெட்டில் ஏடாகூடமாகக் கேலி செய்துள்ளனர். சினம்கொள்ள வேண்டிய தனுஷ் ஆழ்கடலாய் அமைதி காக்க...  'என் நண்பன் தனுஷை எப்படி நீங்க திட்டலாம்’ என்று தன் ரசிகர்கள் மீதே சீறி இருக்கிறார் சிம்பு!
'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ பட பூஜை யில் பாரதிராஜாவின் அந்நாள், இந்நாள் உதவி டைரக்டர்கள் அத்தனை பேரும் ஆஜர். மணி வண்ணன் மட்டும் மிஸ்ஸிங் ஆன மர்மம் குறித்து அவரிடமே கேட்டோம்.  ''எனக்கு மட்டும் அழைப்பு தரக் கூடாதுன்னு நினைக்கிற ஆள் கிடையாது எங்க டைரக்டர். ஆபீஸ்ல வேலை செய்றவங்க மறந்து இருக்கலாம். இதெல்லாம் ஒரு பிரச்னையா... விடுங்க பாஸ்'' என்கிறார்.
கா... கா... கார்த்திக்!
ஹைதராபாத்தில் தெலுங்கு நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவை 'மா’ டி.வி. நடத்தியது. விழாவில், நம்ம ஹீரோ  கார்த்தி கலந்துகொண்டார். ''உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது தெலுங்கு ரசிகர்களா? தமிழ் ரசிகர்களா?'' என்று கேள்வி கேட்டார் தொகுப்பாளினி. கொஞ்சம்கூட யோசிக்காத கார்த்தி, ''நிச்சயமா தெலுங்கு ரசிகர்கள்தான்'' என்று நிறுத்தினார். ''ஏன்...'' என்று மீண்டும் அவர் கொக்கி போட, ''இங்கே தியேட்டர்ல சீனுக்கு சீன் கை தட்டி ரசிக்கிறாங்க. அங்கே அப்படி இல்லை...'' என்று சொன்னார். ஆக, சர்ச்சை வெடித்தது.
'7-ஆம் அறிவு’ படத்தில் அண்ணன் சூர்யா, தமிழனின் பெருமையை அகிலத்துக்கே பறை சாற்றுகிறார். ஆனால், கார்த்தியோ தமிழ் ரசிகர்களை இழிவுபடுத்தலாமா?
கார்த்தியிடமே கேட்டோம்.
''தமிழ் மக்கள் எனக்கு அம்மா, அப்பா மாதிரி. அவங்க இல்லைன்னா... நான் இல்லவே இல்லை. எந்த மகனாவது பெத்தவங்க மேல் வெச்சு இருக்கிற அன்பை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியுமா? அப்படித்தான் நான் தமிழ் மக்கள் மேல் வெச்சிருக்கும் அன்பு. தமிழ்நாடு என் வீடு. வீட்ல இருக்கிறவங்க என்னைப் பாராட்டுறது இயல்பு. ஆனா, பக்கத்து வீடான ஆந்திராவில், 'புதுசா வந்த பையன் நல்லா நடிக்கிறானே’னு பாராட்டுறது ஆச்சர்யமானது. அங்கே நான் யாரோ... மூணு படம் மட்டுமே நடிச்ச புதுமுகம். அதனால என்னோட ஒவ்வொரு மூவ்மென்ட்டுக்கும் அவங்க தர்ற ரெஸ்பான்ஸை மதிக்கிறேன்னு சொன்னேன். மத்தபடி நான் தப்பா எதுவும் பேசலைங்க...'' என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் கார்த்தி.          

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010