********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தொடர்கள் (04 செப்டம்பர் 2011)

Tuesday, September 6, 2011

வயிற்றுக்குள்ளே உளவாளி!

புதுப்புது கருவிகள் அறிமுகம்
'ஒரு சாண் வயித்துக்காகத்தான் இந்தப் பாடு!’ என்பார்கள். அதனால்தானோ என்னவோ... மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள்தான்.

 வயிறு சம்பந்தமான நோய்களைக் கண்டுபிடிப்பதற்காகப் பல்வேறு பரிசோதனை முறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் லேட்டஸ்ட் வரவு, எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட். இந்த எண்டோஸ்கோபி கருவியையும், அல்ட்ராசவுண்ட் கருவியையும் பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள்

பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, இந்த இரண்டையும் சேர்த்து, புதிய கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த புதிய கருவி குறித்து மியாட் மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சைப் பேராசிரியர் டாக்டர் ஜார்ஜ் எம்.சாண்டி சொல்கிறார்..
'அல்ட்ராசவுண்ட் என்பது உடலுக்கு வெளிப்புறத்தில் இருந்து ஒலி அலையைச் செலுத்தி, அதன் எதிரொலியைக் கொண்டு உடலில் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனை முறை. இந்தக் கருவியில் உள்ள டிரான்ஸ்யூசர் என்ற பகுதியின் வழியாக ஒலி அலைகள் வயிற்றுக்குள் செலுத்தப்படுகின்றன. அந்த அலைகள் குறிப்பிட்ட உறுப்புக்குள் சென்று திரும்பும் எதிரொலியைப் படமாகப் பதிவு செய்து, அந்த உறுப்பில் எந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இந்த கருவியின் மூலம் இரைப்பை, கணையம், பித்தப் பாதை, பித்தப் பை, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், சிறுநீர்ப் பாதை போன்ற உறுப்புகளில் பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். குறிப்பாக, கல்லீரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், பித்தப்பைக் கல், புற்றுநோய்க் கட்டி, சிறுநீரகக் கல் போன்ற நோய்களைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
வளையும் தன்மை கொண்ட ஒரு டியூபை வாய் வழியாக செலுத்தி, உணவுக்குழாய், இரைப்பை, பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள பாதிப்புகளைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் கருவி, எண்டோஸ்கோபி. இந்த வளையும் தன்மையுடைய டியூப்பின் முனையில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் எந்த உறுப்பில் பிரச்னை உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். இந்த கேமரா மூலம் உள் உறுப்புகளில் மேற்கொள்ளும் செயல்பாட்டை வெளியே கம்ப்யூட்டர் திரையில் பார்த்தபடி சிகிச்சை அளிக்க முடியும். உள்ளே செலுத்தப்படும் குழாயானது சுமார் 1 மீட்டர் நீளம் கொண்டது. இதன் முனையில் கேமராவும், வெளிச்சத்துக்காக பல்பும் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த கேமரா மூலம் படம்பிடிக்கப்படும் காட்சிகளைக் கொண்டு மேலே சொன்ன நோய்கள் தவிர அல்சர், குடல்புண், ரத்தக் கசிவு போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்பதையும் அறிய முடியும். தேவைப்பட்டால் குழாயின் முனைப்பகுதியில் உள்ள சிறிய துளை மூலம் பயாப்சி சோதனைக்காக திசு எடுக்கலாம்.
தற்போது இந்த இரண்டையும் ஒன்றாக இணைத்து எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட் என்ற நவீன கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக அல்ட்ரா சவுண்ட் கருவியில் உள்ள டிரான்ஸ்யூசர் பகுதியை சிறிதாக வடிவமைத்து, எண்டோஸ்கோபி கருவியில் உள்ள டியூப் முனையில் பொருத்தி உள்ளனர். இதனால், இது வரை வயிற்றின் வெளியில் இருந்து அனுப்பப்பட்டு வந்த ஒலி அலைகள், தற்போது வயிற்றுக்கு உள்ளேயே அனுப்பப்பட்டு, எதிரொலி பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் எதிரொலி, படமாக சேமிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றிய அதிக விவரங்களும், துல்லியமான படங்களும் நமக்குக் கிடைக்கின்றன.
எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட் செய்யும்போதும் தேவைப்பட்டால் மட்டுமே நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இந்த சோதனைக்கு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். பழைய எண்டோஸ்கோபி முறையில் வயிறு, குடல் பகுதிகளை மட்டுமே பார்வையிடலாம். ஆனால் நவீன எண்டோஸ்கோபி அல்ட்ராசவுண்ட் முறையில் கணையம், கணைய நாளம், பித்தப்பை, கல்லீரல்,  போன்ற வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் துல்லியமாகவும், தெளிவாகவும் கண்டறிய முடியும். மேலும், புற்றுநோய், இரைப்பை மற்றும் உணவுக் குழாயில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
இது தவிர புதிதாக கேப்ஸ்யூல் எண்டோஸ்கோபியும் வந்துள்ளது. சிறிய மாத்திரை வடிவிலான கேமராவை உணவு மண்டலத்துக்குள் அனுப்பி நோயின் பாதிப்பைக் கண்டறிய இது பயன்படுகிறது. கேப்ஸ்யூல் வடிவிலான கேமரா சுமார் 8 மணி நேரம் வரை வயிற்றில் இருந்து 50,000 படங்களை அனுப்பும் திறன் கொண்டது. வயிற்றுக்குள் அமர்ந்து கொண்டே ஓர் உளவாளி போன்று, அதன் செயல்பாடுகள் பற்றி முழுமையான தகவல்களைக் கொடுக்கிறது. இந்த நவீன கருவியின் துணைக் கொண்டு வயிற்று நோய்களுக்குச் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடிகிறது!'' என்றார்.
அதிரடி முன்னேற்றம்தான்.
சி.காவேரி மாணிக்கம்
படங்கள்: வீ.நாகமணி
*******************************************************************************
பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 40: 4.3.92
கும்பகோணம் மகாமத் திருவிழாவில் நடந்து முடிந்த அந்த மாபெரும் சோகச் சம்பவத்தின் பாதிப்பு துளியும் மாறவில்லை. மீண்டும் ஒருமுறை, அந்த நகரைச் சுற்றி வந்தபோது, விபத்து பற்றி மேலும் பல புதிய தகவல்கள் தெரியவந்தன.

விழா ஏற்பாடுகளைச் செய்வதற்கு நிறைய கால அவகாசம் இருந்தும் மிகத் தாமதமாக அரசு விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்ததே, பல குளறு​படிகளுக்குக் காரணம் என்று தெரிய வருகிறது.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே, மகாமகத்துக்கான முதல் கட்ட வேலைகள் துவங்கப்பட்டு, அதற்காக  40 லட்சம் ஒதுக்கப்பட்டது. அப்போதைய தொகுதி எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான கோ.சி.மணி அதற்கான பணியில் தீவிரமானபோதுதான் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.
அ.தி.மு.க. அரசு புதிதாகப் பதவி​யேற்​ற​வுடன், மகாமக வேலைகள் கண்டு​ கொள்ளப்​படவே இல்லை. அரசு ஒதுக்கிய  10 கோடி  மகாமகத்துக்கு ஒரு வாரம் முன்புதான் வந்து சேர்ந்ததாகத் தகவல்!
வழக்கமாக மகாமகப் பணிக்கு அரசு அதிகாரிகள் ஒரு குழுவாகவும், ஊர் முக்கிய பிரமுகர்களைக்கொண்ட ஒரு கமிட்டியும் அமைக்கப்படும். ஆனால், இந்த முறை மகாமகத்துக்குச் சில நாட்கள் முன்புதான், ஊர் முக்கியப் பிரமுகர்களைக்கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அதிலும், சம்பந்தமே இல்லாத வெளியூர் பிரமுகர்கள் சிலர் சேர்க்கப்பட்டதில் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலருக்கு வருத்தம்.
இது இப்படியிருக்க, மகாமகக் குளத்துக்கு வருகை தரும் பக்தர்கள் எப்படி வந்து, போக வேண்டும் என்று போலீஸ் தரப்பில் ஒரு ரூட் வரைபடம் பிரின்ட் செய்து விநியோகித்தார்கள். நாளிதழ்கள் வரைபடத்தைப் பிரசுரித்தன. வெளியூரில் இருந்து வந்திருந்த பலர் அந்த வரைபடைத்தை மறக்காமல் கையில் வைத்திருந்தனர். அதேபோல, மிகப் புனிதமான என்று சொல்லப்படும் 'தீர்த்தவாரி நேரம்’ பகல் 11.45 முதல் 12.30 என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

''ஏற்கெனவே வரைபட மேப், குளத்தில் நீராட வேண்டிய நேரம்... இப்படிப் பல விஷயங்களை விளம்பரப்படுத்தி விட்ட நிலையில், சி.எம். வந்தால் அந்த புரோகிராம்களை மாறுதல் செய்ய வேண்டிவரும். அப்படி மாறுதல் செய்தால்கூட, அதை மக்களுக்கு விளம்பரப்படுத்த அவகாசம் இல்லையே! என்ன செய்வது?'' என்று ஓர் அதிகாரி கருத்துச் சொல்ல... அவருக்கு ஆளும் கட்சிப் பிரமுகர்முதல்வர் அங்கே வரப்போகிறார் என்பதை மகாமகம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பே அமைச்சர் அழகு திருநாவுக்கரசு அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கிறார். அதுவரை மக்கள் வசதிக்காக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த அதிகாரிகள், திடீரென்று முதல்வர் வருகைக்கான ஏற்பாட்டில் திசைதிரும்பிவிட்டார்கள்.
ஒருவரிடம் இருந்து பயங்கர டோஸ்!
அதேபோல, மேற்குக் கரை வழியாக காரில் முதல்வர் நுழைந்தவுடன் ஓரப் பகுதியிலேயே ஓர் இடத்தில் முதல்வர் குளித்துவிட்டு, வந்தவழியே திரும்பிப் போகும்வகையில் ஓர் ஏற்பாட்டை அதிகாரிகள் செய்திருந்தார்கள். இதன்படி நடந்திருந்தால், மேற்குக் கரையின் ஒரு வழி மட்டுமே அடைபட்டிருக்கும். கரையின் மறுமுனை வழியாக மக்கள் போக்குவரத்து இருந்திருக்கும். ஆனால், இங்கேயும் ஆளும் கட்சிப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு, மேற்குக் கரையின் நடுவில் ஓர் இடத்தில் முதல்வர் குளிக்க இடம் குறித்திருக்கிறார். அதிகாரிகள் வாயடைத்துப்போய் நின்றார்களாம்.
இப்படி இடம் மாறியதால்தான் மேற்குக் கரையின் இருமுனையும் முதல்வர் வருகைக்காக போலீஸாரால் தடை ஏற்பட்டுத்தப்பட்டது.
இப்படித்தான் குழப்பம் ஆரம்பித்தது. இது ஒருபுறம் இருக்க... காசி விஸ்வநாதர் கோயிலின்கொடிக்கம்பம் முறிந்து விழுந்த தகவலை அப்போதைக்கு அதிகாரிகள் மூடி மறைக்கப் பார்த்திருக்கிறார்கள். இருந்தும், அந்தத் தகவல் மக்களிடத்தில் பரவிவிட்டது.
மகாமகப் பணிக்கான ஸ்பெஷல் டியூட்டிக்​காக டி.ஐ.ஜி-யான செல்வராஜைப் போடுவதாக முடிவாகி இருந்தது. இந்த நிலையில், டி.ஐ.ஜி. திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார். இதனால் போலீஸார் மத்தியிலும், 'அபசகுணமான பீதி’ பரவியிருந்தது. ஒரு கட்டத்தில், போலீஸ் டி.ஜி.பி-யான ஸ்ரீபால் கும்பகோணத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் டெலிபோனில் தொடர்புகொண்டு, ''அன்று எதுவும் அசம்பாவிதம் நடக்கக் கூடாது! எல்லாம் நல்ல​படியாக நடக்க வேண்டும் என்று நீங்கள் எல்லாம் கோயிலில் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்றாராம்!
ஆக மொத்தத்தில் மகாமகத் தினத்தன்று, 'நிச்சயம் ஏதோ ஒரு விபரீதம் நடக்கும்’ என்று போலீஸார் மத்தியில் ஒருவித பயம் இருந்தது! அதனால், முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் அவர்கள் மிகத் தீவிரமாக இருந்தனர்.
நீராட வருபவர்கள் குளத்தில் வடகரைப் பகுதியில் இறங்கி மேற்குக் கரையில் ஏறுவதாக முன்கூட்டி திட்டமிட்டு அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த வழியெல்லாம் கடைசி நிமிடத்தில் முதல்வர் வருகையால் தடை செய்யப்பட்டன. வடகரையில் இறங்கி தென்கரையில் ஏறவேண்டும் என்ற போலீஸார் திடீரென திட்டத்தை மாற்றினர். இந்த 'மாற்ற விவரம்’ பொதுமக்களுக்குப் போய்ச் சேராததுதான் பெரும் குழப்பம்!
காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் குளத்தில் இறங்கியவர்கள் மீண்டும் கரையேற வழி இல்லாமல் குளத்துக்குள்ளே நிற்கத் தொடங்கினர். குளத்தின் படிகளில் நின்றவர்கள் வெகுநேரம் நிற்க முடியாமல் அப்படியே நெருக்கமாக உட்கார்ந்துவிட்டனர். அவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான மக்கள் குளத்தில் இறங்க வாய்ப்பு எதிர்பார்த்தபடி பதற்றத்துடன் முட்டிமோதி நின்றுகொண்டு இருந்தனர்.
இந்த நெருக்கடியான கூட்டத்தில் முதல்வரின் ஹெலிகாப்டர் வேறு சத்தமிட்டபடி வானத்தில் சுற்றி வர... பக்தர்களிடம் சலசலப்பு!
நெட்டியடித்துக்கொண்டு முன்னேறத் தொடங்கினர். ''மேற்குக் கரையை ஒட்டிய குளத்துக்குள் நின்றவர்களிடம் குடந்தை போலீஸ் உதவிக் கண்காணிப்பாளர் கந்தசாமி லேசாக லத்திப் பிரயோகம் செய்தார். இதுதான், போலீஸின் முதல் அத்துமீறல் சம்பவம்... கூட்டம் மிரண்டு ஓடத் தொடங்கியது!'' என்கிறார்கள் நேரில் பார்த்த பிரமுகர்கள்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் சாமிநாதன் ஓடிப்போய், ''பக்தர்களை அடிக்காதீர்கள்!'' என்று கந்தசாமியிடம் கெஞ்சினார். ஆனால், சிதறிய கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
சரியாக 11.45 மணிக்கு ஜெயலலிதா புனித நீராடத் தொடங்கியபோது ரெடியாக இருந்த தேவாரம் ஐ.ஜி., தீர்த்தவாரிக்கான நேரம் தொடங்கிவிட்டதை அறிவிப்பதற்காக மூன்று முறை துப்பாக்கியால் வானத்தில் சுட்டுக் காட்டினார்.
தேவாரம் துப்பாக்கி உயர்த்துவதைப் பார்த்ததுமே, 'ஏதோ அசம்பாவிதம்’ என்று தவறாக எண்ணி மக்கள் சிதறத் தொடங்கினர். மக்கள் பீதி அதிகமாகிறது. உடனே அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தியதில், கூட்டத்தில் சிக்கிப் பலர் மூர்ச்சையாகி இருக்கிறார்கள்.
12.00 மணிக்குப் புனித நீராடிவிட்டுக் கரையேறிய ஜெயலலிதா, பொதுமக்களைக் கவர்வதற்காக கையசைத்துக் காட்டும்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில், வடகரையில் உள்ள 'பாங்கூர் தர்மசாலா’ கிரில் கவர் தடுப்பு அருகே மக்கள் வெள்ளம் ஆரவாரித்தது. அப்போது கிரில் சுவர் சாய்ந்தது. இதைப் பார்த்ததும் கூட்டம் மேலும் சிதறி ஓடியது. அப்போது கட்டடம் இடித்துவிட்டதாக நினைத்த மக்கள் நாலா பக்கமும் ஓடியபோது அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் லத்தியால் சுழற்றிச் சுழற்றி அடித்தார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ''அடிக்காதீர்கள்!'' என்று அந்த இன்ஸ்பெக்டரின் காலைப் பிடித்துக் கெஞ்சியதாகத் தெரிகிறது.
ஒரு கும்பல் குளத்தில் இருந்து கரையேறவும், மற்றொரு கும்பல் போலீஸ் தடியடி பொறுக்கமுடியாமல் குளத்தில் இறங்க முற்பட்டதும் இடையில் மக்கள் சிக்கி மூச்சுத் திணறினர்.
சிறிது நேரத்தில் ஜெயலலிதா அங்கு இருந்து புறப்பட்டு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்கு ரெஸ்ட் எடுக்கச் சென்றதும், குளத்தில் இருந்து ஒட்டுமொத்த மக்களும் மேற்குக் கரையிலும், வடகரையிலும் கரையேறிப் போக முற்பட்டனர். போலீஸார் மீண்டும் ஒரு முறை தடியடிப் பிரயோகம் நடத்தினர்!
இப்படியாகப் பல தடவை குறுகிய ஏரியாவுக்​குள்ளே போலீஸ் தாக்குதல் நடத்தியிருக்கிறது. எல்லாம் முடிந்து கூட்டம் வடியத் தொடங்கியபோது, வடகரையில் பாங்கூர் தர்மசாலா அருகில் கிட்டத்தட்ட 200 அடி இடைவெளியில் நூற்றுக்​கணக்கானவர் விழுந்துகிடந்தனர். காயம்​பட்டுப் பலர் துடித்துக்கொண்டு இருந்தனர். இவர்களைத் தவிர, குளத்தின் மற்ற கரைகளில் நெரிசலில் சிக்கிக் காயம்பட்டவர்கள் பலர். இவர்கள் அனைவரையும் தர்மசாலா வாசலருகே தூக்கி வந்து தரையில் வரிசையாகப் படுக்க வைத்திருந்தனர்.
இத்தனை விபரீதம் நடந்து முடிந்ததும், போலீஸ் கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப் போனது. உடனடியாக ஆம்புலன்ஸ், போலீஸ் கன்ட்ரோல், ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு எல்லாம் மின்னல் வேகத்தில் தகவல் சொல்லி உஷார்படுத்தியது ஹாம் (பிகிவி) ரேடியோ சங்கத்தினர்தான்!
எல்லாவற்றிலும் கொடுமையான ஒரு விஷயம்... குளத்தின் வடகரையில் இருமுனைகளிலும் நின்றிருந்த போலீஸார், நிலைமை தங்கள் கைமீறிப் போவதைப் பார்த்து பயந்து போய்விட்டனர்.  எப்படி மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்று புரியாமல், தங்கள் கைகளில் இருந்த வயர்லெஸ் மூலம் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டனர். ''முதல்வர் பத்திரமாகப் போகட்டும்... அப்புறம் பார்க்கலாம்!'' என்றே எல்லா முனைகளில் இருந்தும் பதில் வந்தது. அதோடு... கீழ்மட்ட போலீஸாரிடம் இருந்து வந்த வயர்லெஸ் அழைப்புகளைச் சட்டை செய்யாமல், முதல்வரையும் தங்கள் குடும்பத்தினரையும் பத்திரமாக காரில் அனுப்புவதில்தான் உயர் அதிகாரிகள் சிலர் கண்ணும்கருத்துமாய் இருந்து இருக்கிறார்கள்!
கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்த பொதுமக்களிடம் அகப்பட்டத்தைப் பறிக்கவே ஒரு கூட்டமும், சில்மிஷம் செய்ய வந்திருந்த ஒரு கூட்டமும் போலீஸார் முன்னிலையிலேயே தங்கள் பணியை அரங்கேற்றியதுதான் அனைத்திலும் சோகமானது!
'தர்மசாலாவில் உணவுப் பொட்டலங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் விநியோகித்ததைப் பார்த்ததாக’ உள்ளூர்க்காரர்கள் சிலரைக் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கி இருக்கிறார்கள். அதனால்தான் பதற்றம் உண்டானது என்று காட்டப் பார்க்​கிறார்கள். அப்படி எழுதிக் கொடுத்தவர்கள் என்னிடம் வந்து முறையிட்டார்கள். உடனே, நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்து, அவர்கள் எழுதிக் கொடுத்ததை வாபஸ் பெறச் செய்தேன்!'' என்கிறார் சாமிநாதன்.
உண்மையில் மகாமகத்தை முன்னிட்டு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மருத்துவ முகாம், இலவச உணவு என்று சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதை, கட்சி வித்தியாசம் இன்றி அரசியல் பிரமுகர்கள் பாராட்டி இருக்கிறார்கள். விழாவுக்கு வந்திருந்த மக்களும் பாராட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசு தரப்பில், இவர்கள் மீதுதான் ஒட்டுமொத்தமாகக் குற்றம் சுமத்தப்படுகிறது.
********
விருந்து நடந்தது..!
முதல்வரும் சசிகலாவும் குளத்துக்கு வந்தவுடனே - அங்கு அவருக்காக ஏற்பாடாகி இருந்த பாத்ரூமைப் பார்த்த முதல்வர் முகம் சுளித்திருக்கிறார். அந்த பாத்ரூமுக்குள் போய் குளிக்கலாமே என்று முதல்வரை சசிகலா அழைத்திருக்கிறார். ஆனால், முதல்வர் மறுத்துவிட்டு, குளத்தின் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து குளிக்க முடிவு செய்தார். முதல்வரின் இந்தத் திடீர் முடிவு, ''அடடா, இத்தனை ஏற்பாடுகளைச் செய்தும் வேஸ்ட்டா போச்சே!'' என்று அமைச்சர் ஒருவர் உட்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் கவலைப்பட்டனர். அவர்களுக்கு அருகில் இருந்து ஓர் அதிகாரி இப்படிச் சொன்னாராம்... ''மக்களோடு மக்களாக நின்று முதல்வர் குளிக்கும் வரையில் சிறு தடுப்பு அமைத்து ஏற்பாடு பண்ணி இருக்கலாம். அதைச் செய்யாமல், தனி பாத்ரூமே கட்டியது முதல்வருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.''
முதல்வர் தனது அமைச்சரவை சகாக்களை ஒவ்வொருவராக அழைத்து, புனித நீரை அவர்கள் மீது தெளித்து வாழ்த்தினாராம். பிறகு, தொகுதி எம்.எல்.ஏ-வான ராமநாதன், தொகுதி எம்.பி-யான மணிசங்கர ஐயர் இருவருக்கும்கூடப் புனித நீரைத் தெளித்து வாழ்த்தியபோது மெய்சிலிர்த்துவிட்டார்களாம்.
முதல்வர் நீராடிய பிறகு முன்பே ஏற்பாடு செய்தவாறு பெண்கள் கல்லூரி ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டார். அங்கே, தஞ்சாவூர் பாணியில் மாபெரும் விருந்து காத்திருந்தது. முதல்வருக்கு ராசியான எண் 9. அதன் இரண்டு மடங்காக 18 வகை காய்கறிகளுடன் சாப்பாடு. அமைச்சர்கள் உட்பட 300 பிரமுகர்கள் அந்த விருந்தில் கலந்துகொண்டார்கள். மகாமகக் குளத்தருகே நடந்து முடிந்த அந்தத் துயரச் சம்பவம் குறித்து அப்போது முதல்வரிடம் சொல்லத் தயங்கிய சில அதிகாரிகள் மட்டும் விருந்தில் கலந்துகொள்ளவில்லை! அந்தச் சம்பவம்பற்றி சென்னை சென்ற பிறகுதான் முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ''இந்த விஷயத்தைக் கும்பகோணத்திலேயே தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை?'' என்று அதிகாரிகளிடம் முதல்வர் கோபப்பட்டாராம்.
_ நமது நிருபர்கள்
 ******************************************************************************

அணு ஆட்டம்!

அணு சக்தியில் பாதுகாப்பு...?
''பாதுகாப்பு என்பது வெறும் கோஷமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை!''
- யாரோ 

இயற்கைப் பேரிடர், மனிதத் தவறுகள், மனித விஷமங்கள் மூலமாக அணு உலைகளுக்கு ஆபத்துகள் வரலாம். அண்மையில் நடந்த ஃபுகுஷிமா விபத்து முதல் வகையைச் சார்ந்தது. நில நடுக்கம் ஏற்பட்டு, அதனால் சுனாமி உருவாகி, அணு உலைகளைத் தாக்கி, உலைகளை வெடிக்கச் செய்து பெரும் விபத்து நிகழ்ந்தது. ஆகஸ்ட் 29, 2006 அன்று ராஜஸ்தான் மாநிலத் திலுள்ள ராவத்பட்டா அணு உலை யின் அருகே உள்ள கன்வர்புரா என்ற கிராமத்தின் மீது ஒரு விண்கல் வந்து மோதியது. அது அணு உலையின் மீது மோதியிருந்தால் பெரும் விபத்து நிகழ்ந்து இருக்கும். காரில் நாம் வேகமாகப் போகும்போது, ஒரு பெரிய பாறை வந்து விழுந்தால் எத்தனை பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை கற்பனை செய்துபாருங்கள். அதுபோலத்தான் தலை தெறிக்கும் வேகத்தில் சுற்றிக் கொண்டும், சுழன்று கொண்டும் இருக்கும் பூமியின் மீது ஒரு விண்கல் வந்து விழுந்தால் ஏற்படும் விளைவும் இருக்கும்!'வேலியில் போறதைப் பிடிச்சு மடியில் கட்டிக் கொள் ளாதே...’ என்று தமிழில் அழகான ஓர் அறிவுரை உண்டு. கொடிய நச்சுப் பாம்பைப் பிடித்து தலையணைக்குக் கீழே வைத்துக் கொண்டு அமைதியாகத் தூங்க முயல்வது எத்தனை முட்டாள்தனமானதோ... அது போன்றதுதான் அணு உலையை ஊருக்குள் கட்டிவைத்துவிட்டு, பாதுகாப்பை அதிகரிக் கிறோம் என்று சொல்வதும்!
மனிதத் தவறுகளின் காரணமாகத் தான் உக்ரைன் நாட்டில், செர்னொ பில் அணு உலை வெடித்தது. எந்தத் தொழிலிலும், எந்த நிலையிலும், எந்தத் தருணத்திலும் மனிதத் தவறுகள் நிகழ லாம்; நிகழ்கின்றன. கவனமாகக் கட்டப்படும் கம்ப்யூட்டர்களே தவறு செய்யும்போது, ரத்தமும், சதையும் கொண்ட, பல்வேறு சிந்தனைகளும், கவலைகளும், பயங்களும், கனவுகளும், ஆசைகளும், விருப்பு-வெறுப்புகளும், கோபதாபங்களும் கொண்ட மனிதர்கள் தவறு செய்வதில் என்ன விந்தை இருக்கமுடியும்?
மனித விஷமங்கள் ஒரு பெரிய பிரச்னை. உள்நாட்டு பாதுகாப்புப் பற்றி கலந்து ஆலோசிக்க இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர் களையும் செப்டம்பர் 5, 2006 அன்று பிரதமர் அழைத்தார். அன்றைய முக்கிய விவாதங்களுள் ஒன்று என்ன தெரியுமா? பயங்கரவாதக் குழுக்கள் இந்தியாவிலுள்ள முக்கிய நிறுவல்கள் (Installations) மீது தாக்குதல் நடத்தலாம், அணு உலைகள் உட்பட என்பதுதான். பிரதமர் இந்தக் கூட்டத்தை நடத்தியதற்கும், அணு உலைகளின் பாதுகாப்பு பற்றி கவலைப் பட்டதற்கும் காரணம் இருந்தது. ஆம், ஆகஸ்ட் 22, 2006 அன்று குஜராத் மாநிலத்திலுள்ள சாக்ரபார் அணு மின் நிலையத்தின் உள்பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். வேறு தகவல்கள் எதையும் தராத மத்திய அரசு, 'அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது’ என்று மட்டும் ஓர் அறிக்கை விடுத்தது (தி ஹிந்து, ஆகஸ்ட் 23, 2006). ஆகஸ்ட் 17. 2011 அன்று கூட உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், 'அணு மின் நிலையங்கள், பயங்கரவாதக் குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன’ என்றார். பயங்கரவாதச் செயல்களை நமது அரசு எப்படித் தடுக்கும் திறனுடன் இருக்கிறது என்பது, மும்பை வெடிகுண்டு நிகழ்வுகளில் இருந்தே அறிந்துகொள்ள முடியும். ஜெயிஷ்-இ-முகமது (ஜெம்) எனும் பயங்கரவாதக் குழு கடற் பிரிவு ஒன்றினைத் துவக்கி, தீவிரவாதிகளுக்கு 18 மாதங்கள் பயிற்சி கொடுத்து, நடுக்கடலில் முகாம் அமைத்து, கல்பாக்கம் அணு மின் நிலையத்தைத் தாக்கத் திட்டமிட்டு இருப்பதாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது (தினத்தந்தி, பிப்ரவரி 2, 2007). கல்பாக்கம் அருகே அனுமதியின்றி ஒரு ஹெலிகாப்டர் தரையிரங்கிப் பரபரப்பு ஏற்படுத் தியது (தினமலர், டிசம்பர் 22, 2009). தவறான பெயரும், முவரியும் கொடுத்து பல இளைஞர்கள் வருடக்கணக்காக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் வேலை பார்த்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. தேசத் தந்தை மகாத்மா காந்தியை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, ஏன் இவர்கள் அனைவருக்கும் மேலான நாடாளுமன்றத்தையே பாதுகாக்க முடியாத இந்திய அரசு அணு உலைகளைப் பாதுகாக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
அணு உலைகளை அச்சுறுத்தும் மனித விஷமங் களுள் இன்னொரு வகை இருக்கிறது. அதுதான் அணு சக்தித் துறையே செய்வது, அல்லது செய்துவிட்டு மறைப்பது. கல்பாக்கத்தின் தகிடுதத்தங்களை எல்லாம் எழுத இங்கே இடமில்லை என்பதால், ஒன்றிரண்டைச் சொல்கிறேன்.
1999-ம் ஆண்டு மார்ச் 26 அன்று கல்பாக்கம் அணு உலையில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அணு உலையில் மாபெரும் கனநீர் கசிவு ஏற்பட்டு கதிரியக்கம் பரவியது. ஏழு தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் எஞ்சியுள்ள வாழ்க்கையில் கதிர்வீச்சுக்கு ஆளாகவே கூடாது என்று அறிவிக்கப்பட்டு நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார்கள். சுமார் 50 தொழிலாளர்கள் 'கவனம் தேவை’ பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள். இது குறித்து கல்பாக்கம் அதிகாரிகளோ, அணு சக்தித் துறையோ கடைசி வரை வாய் திறக்கவேவில்லை.
2003-ம் வருடம் ஜனவரி மாதம் கல்பாக்கத்தில் கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டு ஆறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். பார்க் (BARC) நிறுவனத் தலைவர் பி.பட்டாச்சார்ஜி, 'தாங்கள் ஓர் எந்திரம் பழுதுபட்டதை கவனிக்காமல் விட்டதாலும், தொழி லாளர்களின் கவனக்குறைவினாலும் இந்த விபத்து நிகழ்ந்தது’ என்று குறிப்பிட்டார். ஜனவரியில் நடந்த தவறை அவர் ஒப்புக்கொண்டது, 2003 ஆகஸ்ட் மாதம் (த ஹிந்து, ஆகஸ்ட் 7, 2003), என்பது கவனிக் கப்பட வேண்டியது!
2003 டிசம்பர் மாதம் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் மூன்று பேர் மரணமடைந்தனர். கதிர் வீச்சு காரணமாக புற்றுநோய் ஏற்பட்டு அவர்கள் மரணித்ததாக செய்தி வெளியானது. ஆனால், பாபா அணு ஆய்வு மைய (பார்க்) இயக்குநர் பட்டாச்சார்ஜி என்ன சொன்னார் தெரியுமா? 'இந்தத் தொழிலாளர்கள் சுற்றுலா ஸ்தலமான மகாபலிபுரத்துக்கு சொந்த விஷய மாகச் சென்றிருந்தபோது சாலை விபத்தில் பலியானார்கள்’ என்று தெரிவித்தார் (தினத்தந்தி, டிசம்பர் 6, 2003). வேதனை என்னவென்றால் இறந்தவர்களுள் ஒருவர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். மகாபலிபுரத்து விபத்தில் சிக்கியவர் வேலூருக்குப் போவாரா, வேலூர் மருத்துவமனை எந்த மாதிரியான சிகிச்சைக்கு பெயர் போனது போன்ற கேள்விகளுக்கு நமது குழந்தைகள்கூட அழகாக பதில் சொல்வார்கள்.
மொத்தத்தில் இந்தியாவின் முக்கியமான சிவப்புச் சிந்தனையாளர்களுள் ஒருவரான டி.டி.கொசாம்பி சொல்வதுதான் உண்மை. 'அணுசக்தி என்பது, இன்னும் பிறக்காத எத்தனையோ தலைமுறைகள்கூட எதிர்கொள்ள இருக்கும் ஒரு மாபெரும் அச்சுறுத்தல்!’
அ.வின்ஸ் ஆன்டோ
கணிதத்தில் இளமறிவியல் படிப்பும், திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றிருக்கும் வின்ஸ், குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர். 1996-ம் ஆண்டு த.மா.கா-வில் இணைந்து இன்று காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தாலும், அணு சக்தி திட்டங்களை எதிர்க்கிறார். மாணவப் பருவத்திலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கத் துவங்கியவர், 'ஒவ்வொரு நாளும் எனது எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது...’ என்கிறார். குமரி மாவட்ட பாசனத் துறை சேர்மன் ஆகப் பணியாற்றும் வின்ஸ், நீர் ஆதாரங்களைக் காப்பதிலும், கூடங்குளம் அணு உலையை விரட்டுவதிலும், தம் மக்களைப் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயல்படுகிறார்.
- அதிரும்..

மிஸ்டர் மியாவ்: அள்ளுகிறார் ஆன்ட்ரியா

'மங்காத்தா’ படத்தில் அர்ஜுன் மனைவியாக நடிக்க ஆன்ட்ரியா கொடுத்த கால்ஷீட் ஆறே நாட்கள்... ஆனால் வாங்கிய சம்பளம் பல லகரமாம்!
ரஜினி பட ரேஞ்சுக்கு எம்.ஜி.ஆரின் 'படகோட்டி’ பட உரிமைக்கு விலைபேசுகிறதாம், சரவணா பிலிம்ஸ்.
'வேலாயுதம்’ படத்துக்குப் பிறகு தனது ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தைப் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற்றப் போகிறார், ரவிச்சந்திரன்.
ரஜினி நடித்த 'பில்லா’ ரீமேக்கில் நடித்தார், அஜீத். அடுத்து பில்லா-2 நடிக்கப் போகிறார். படத்தின் கதை அப்படியே 'ஸ்கார் பேஸ்’ படத்தின் கதையைத் தழுவியது என்று காதைக் கடிக்கிறார்கள்.
வெப்பன்ஸ் படத்தை பட்டாசு தினத்தில் வெளியிட ஒற்றைக்காலில் நிற்கிறாராம், தள நடிகர். அதே நாளில் பிரகாச நடிகரின்  பிரமாண்ட படமும் ரிலீஸாவதால் தள்ளிப்போட நினைக்கிறது, தயாரிப்புத் தரப்பு.
மட்டை வீரரை மறந்துவிட்ட மங்களகர நடிகை பாலிவுட் பேய் படத்தில் சான்ஸ் தருவதாகச் சொன்ன நடனத்தின் பின்னால்  சுற்றுகிறாராம்.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010