********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)

Tuesday, August 23, 2011

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 37: 1.8.2001
து ஒரு பெண்ணின் வலி நிறைந்த 38 வருட வாழ்க்கை!

10 வயதில் திருமணம்... 11 வயதில் கணவனின் சித்ரவதை... 13 வயதில் கொள்​ளைக்​காரி... 17 வயதுக்குள் மூன்று பேருக்கு மனைவியாக வாழ்க்கை... 18 வயதில் துப்பாக்கியால் சுட்டு, 20 பேரைப் பழிக்குப் பழி... 20-வது வயதில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு சரண்டர்.

அடுத்து வந்த 11 வருடங்கள் சிறை வாசத்தில் கழித்த பூலன்தேவி, கையில் நயா பைசா இல்லாமல் நிராதரவாக டெல்லித் தெருக்களில் நடமாடியது சில வருடங்கள். வீட்டுப் பணிப் பெண்ணாக வேலை பார்த்து வயிற்றைக் கழுவிய பூலன்தேவிக்கு, அரசியல் பிரவேசம் கிடைத்த​துமே வாழ்க்கை மளமளவென மாறியது.
33 வயதில் சமாஜ்வாடி கட்சி சார்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிர்சாபூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இந்திய அரசால் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பப்படும் அளவுக்கு செல்வாக்கோடு விளங்கினார். மறுபடி 36-வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கைப்பற்றிய பூலன்தேவி, உள்ளுக்குள் தொடர்ந்து மரண பயத்தில் நடுங்கிக்கொண்டே இருந்தார்.
''செக்கச்சிவந்த கண்களுடன், தலையில் கட்டிய துணியுடன் சம்பல் பள்ளத்தாக்கில் கொள்ளைக்​காரியாக வலம் வந்த காலத்தில் சம்பாதித்துக்கொண்ட விரோதம், தன்னை டெல்லி வரை விடாமல் துரத்துகிறது என்பதை பூலன்தேவி அறிந்திருந்தார். அவரால் படுகொலை செய்யப்பட்ட தாக்கூர் இனத்தவரின் குடும்பத்தினர் சபதம் போட்டு நினைத்ததை முடித்துவிட்டனர்!'' என்று அரசியல் வட்டாரம் சொல்ல...
''பூலன்தேவியின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்களில் சிலரேகூட திட்டமிட்டு இந்தப் பாதகத்தை நிறைவேற்றி இருக்கக்கூடும்...'' என்கிறது போலீஸ்.
பார்லிமென்ட்டில் இருந்து சுமார் முக்கால் கி.மீ. தூரம் உள்ள அசோகா ரோட்டில்தான் பூலன்​தேவிக்கு ஒதுக்கப்பட்ட வீடு இருக்கிறது. வீட்டு எண் 44. கூட்டுத் தொகை 8. ராசி இல்லாத வீடு என்று மற்ற எம்.பி-களால் ஒதுக்கப்பட்ட இந்த வீட்டில் தைரியமாகக் குடியேறினார் பூலன்தேவி.
நாடாளுமன்றத்தில் இருந்து சக எம்.பி-யான ரகுராஜ் சிங் சாக், தனது காரில் பூலன்தேவியை வீட்டில் கொண்டுவந்து டிராப் செய்தார். வரப்போகும் ஆபத்தை அறியாமல் தன் வீட்டு வாசலில் காரில் இருந்து இறங்கினார் பூலன்தேவி. இறக்கிவிட்ட எம்.பி-யின் கார் கிளம்பிப் போய்விட, கேட்டைத் திறப்பதற்காக கை நீட்டினார் பூலன்தேவி. அதற்குள் காத்திருந்த இளைஞர்கள் தங்களிடம் இருந்த பிஸ்டலினால் அடுத்தடுத்து சுட, ஒன்பது குண்டுகளால் துளைக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டச் சரிந்து விழுந்தார் பூலன்தேவி. அவருடன் பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் பல்விந்தர் சிங் தனது துப்பாக்கியால் சுட, அவரையும் திருப்பிச் சுட்டனர் இளைஞர்கள். இப்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கிறார் இந்த கான்ஸ்டபிள்.
வீட்டு வாசலில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பூலன்தேவியை அவரது தாயும் கடைசித் தங்கை முன்னியும் ஓடி வந்து மடியில் ஏந்திக் கதறினார்கள். அந்த வழியே போன வாகனங்களை மறித்து லிஃப்ட் கேட்க, எதுவும் நிற்கவில்லை. போலீஸ் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தபோது பூலன்தேவி உடலில் உயிர் இல்லை!
கொலைகாரர்கள் தப்பிச் சென்ற பச்சை நிற மாருதிக்குள் ஒரு சேலையும், சில முகமூடிகளும் ரிவால்வர் தோட்​டாக்களும் கிடைத்துள்ளன. அந்த சேலை உமா காஷ்யப் என்ப​வருக்கு உரியது என்பதைக் கண்டு​பிடித்து, அவரையும் அவர் கணவர் விஜய​குமாரையும் போலீஸார் கைது செய்தனர். கார் டிரைவர் பங்கஜ்சிங் சரணடைந்துவிட்டான். பெரும் பணக்காரனான இவன், உமா காஷ்யப்​பிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்தது ஏன் என்றும் போலீஸ் விசாரிக்கிறது.
'ஏகலவ்ய தலித் சேனா’ என்பது பூலன்தேவியால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதன் ஹரித்வார் மாவட்டப் பெண்கள் பிரிவு தலைவிதான் உமா காஷ்யப். அவருக்கு பூலன்தேவி மீது என்ன பகை இருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைத்ததும், கொலை மர்மம் மளமளவென விடுபடத் துவங்கிவிடும்!
உத்தரப் பிரதேசத்தின் பேமாய் கிராமத்தில் பிறந்து, காலத்தின் கட்டாயத்தால் கொள்ளைக்காரியாக மாறிய பூலன்தேவி என்ற காரெக்டரை வெளியுலகத்துக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் கல்யாண் முகர்ஜி.
இந்தப் பத்திரிகையாளர், பூலன்தேவி பற்றிக் கேள்விப்பட்டு, உயிரைப் பணயம் வைத்துத் தேடிப் போனார். துப்பாக்கியுடன் கொள்ளைக்காரத் தோழர்கள் நிற்க, கொஞ்சம் கொஞ்சமாக இளகிப்போய், தனது கடந்த காலத்தை கல்யாண் முகர்ஜியிடம் அப்போது பகிர்ந்துகொண்டார் பூலன்தேவி.
தாழ்த்தப்பட்ட 'மல்லா’ (மீனவ) வகுப்பில் பிறந்த தன்னையும் தன் சுற்றத்தாரையும் உயர் சாதிக்காரர்களான தாக்கூர் வம்சத்தினர் எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்பதையும், கதறக் கதற தன்னைக் கற்பழித்துச் சித்ரவதை செய்தார்கள் என்பதையும் சொல்லிக்கொண்டே வந்தபோது, பூலன்தேவியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
தாக்கூர் வம்சத்தினரைப் பழிவாங்கத்தான் துப்பாக்கியைக் கையில் எடுத்ததாகவும், உண்மையில் இந்தக் கொடூர வாழ்க்கை தான் விரும்பி ஏற்றது அல்ல என்றும், வாய்ப்புக் கிடைத்தால் திருந்தி வாழத் தயார் என்றும் பூலன் சொன்னபோது, கல்யாண் முகர்ஜி கலங்கிவிட்டார்.
பூலனின் சோகக் கதையைச் செய்தியாக வெளியிட்டதோடு நிற்கவில்லை கல்யாண் முகர்ஜி. சரணடைய விருப்பம் என்று தன்னிடம் பூலன் தெரிவித்ததை, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன்சிங்கிடம் எடுத்துச் சொன்னார். இந்த முயற்சிகள் வெளியுலகுக்கு அதிகம் தெரியாது. ஆனால், எம்.பி. ஆகி பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதெல்லாம், 'என் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கல்யாண்ஜிதான்’ என்று உருக்கமாகச் சொல்லி வந்தார் பூலன்தேவி. (இரண்டாம் முறை எம்.பி-யான பிறகு அவரது வீட்டில் நாம் அவரை சந்தித்தபோது, 'மீண்டும் கல்யாண்ஜியை சந்திக்க விரும்புகிறேன். ஆனால், இப்போது அவர் எங்கோ வெளிநாட்டில் இருக்கிறாராமே..?’ என்று ஏக்கத்தோடு நம்மிடம் சொன்னார் பூலன்தேவி.)
பூலன்தேவி சரணடைந்து குவாலியர் சிறையில் அடைபட்ட சமயத்தில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டு பிரான்ஸில் இருந்து வந்து பேட்டி எடுத்தார் ஓர் எழுத்தாளர். பூலன்தேவியுடன் பல முறை சந்திப்பு நிகழ்த்திய அந்த பிரெஞ்சு எழுத்தாளர் விரிவாக ஒரு புத்தகம் எழுதினார்.
உலகத்தின் பல மொழி​களிலும் மொழி​பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்​பட்ட இந்தப் புத்தகமே பிறகு, 'பண்டிட் குயின்’ எனும் பேரில் சேகர் கபூரால் படமாக உருவாகப் பேருதவி புரிந்தது.
ஜப்பான் மொழியிலும் வெளியிடப்பட்ட இந்த நூலின் விற்பனை சாதனையை, இது வரை எந்த நூலும் முறியடிக்கவில்லையாம்!
சிறையில் இருந்து விடுதலையாகி, ஒருவேளை உணவுக்கே கஷ்டம் என்ற நிலையில் டெல்லியில் நிர்கதியாக நின்ற பூலன்தேவிக்கு கைகொடுத்ததும் இந்தப் புத்தகம்தான். ஜப்பான் மொழியில் இந்தப் புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகத்தினர் பூலனை தேடிப் பிடித்து, ராயல்ட்டியாக டெல்லியில் ஒரு வீட்டையும் 25 லட்சம் ரொக்கத்தையும் கொடுத்தனர். (சித்தரஞ்சன் பார்க் பகுதியில் உள்ள அந்த வீட்டில் இப்போது பூலனின் தங்கை வசித்து வருகிறார்.)
ஜெயிலில் இருந்து விடு​தலை​யாகி வந்த​போது, வரவேற்கவோ கைகொடுக்கவோ முன்வராத அவரது உறவினர்கள், வீடும் பணமும் வந்த பிறகு ஓடி வந்து உறவு கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்படி வந்து சேர்ந்தவர்களில் ஒருவர்தான், பூலன்தேவியின் கணவர் உம்மேத்சிங்.
''இளம் வயதில் பல முறை காட்டுமிராண்டித்​தனமாக கற்பழிக்கப்பட்டதாலும் வயிற்றில் துப்பாக்கிக் கட்டையால் அடி வாங்கியதாலும் பூலன்தேவிக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என மருத்துவர்கள் கூறிவிட்டார்களாம். எனவே, தன் தங்கை குழந்தைகளையே தன் குழந்தைகளாக வளர்த்து வந்தார். கடைசி வரை வாழ்க்கையின் எந்தச் சுவையையும் முழுமையாக அறியாமலே இறந்து போய்விட்டார்...'' என்று கூறி, கண்ணீர் வடிக்கிறார் ஃப்ரான்சிஸ் மேரிதாஸ். (கேரளாவைச் சேர்ந்த இவர், பூலன்தேவி அரசியலுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடன் இருப்பவர். பூலன் தேவியின் முதன்மை உதவியாளர்.)
''தற்போதைய உ.பி. முதல்வர், தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர், இவருடைய இனத்தினர் நடத்தும் க்ஷத்திரிய மகாசபை பூலன்தேவி மீதான விரோதத்தை மறக்கவில்லை. 'பூலன்தேவியின் ரத்தம் வேண்டும்’ என்று கடுமையான பிரசாரம் செய்து வந்தது அது. இந்தக் கொலையில் இவர்களுக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்...'' என்று குமுறினார் ஃப்ரான்சிஸ் மேரிதாஸ்.
பூலனைத் தீர்த்துக்கட்ட சதி நடப்பதாக அவரது ஆதரவாளர்கள் சுப்ரீம் கோர்ட் வரை புகார் செய்தார்கள். அவருக்குப் பாதுகாப்பை பலப்படுத்தச் சொல்லி சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் கொடுத்தது. 'அப்படியும் போலீஸ் அலட்சியமாக இருந்ததால்தான் இந்தப் படுகொலை நடந்துவிட்டது!’ என்று கலங்குகிறார்கள் அவரது உறவினர்கள்.
தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்​வதற்காக ஒரு துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு பூலன் ஏகத்துக்கும் போராடி​யதாகச் சொல்கிறார்கள். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த இந்திரஜித் குப்தா அதற்கு அனுமதி வழங்கவில்லை.
''இரண்டு தடவை எம்.பி-யாக ஜெயித்தவர்... ஏராளமான எதிரிகளை சம்பாதித்துக்கொண்டவர்... ஒரு பெண்மணி தன் உயிர் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் கேட்டுப் போராடியும் தரவில்லை என்றால் அதற்குக் காரணம் இந்த சமுதாயத்தைப் பிடித்து ஆட்டும் ஆணாதிக்கம்தான்!'' என்று வேதனையுடன் குமுறுகிறார், பூலன்தேவியின் ஆன்மீக குருவான தர்ம வீர்யோ. ''பூலன்தேவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவர் போட்டியிட்ட மிர்சாபூர், ரிசர்வ் தொகுதி அல்ல. இருந்தாலும் எல்லா சாதிக்காரர்களும் அவர் மீது நம்பிக்கைவைத்து இரண்டு முறை ஜெயிக்கவைத்து இருக்கிறார்கள். அம்பேத்கரின் கொள்கைகளைவைத்து அவர் செய்த பிரசாரம் மக்களை ரொம்பவே கவர்ந்தது. அதனால்தான் அவரது ஜென்ம எதிரிகளான தாக்கூர் சமுதாயத்தைச் சேர்ந்த வீரேந்திர சிங் (போலீஸ் பார்வை இவர் மீதும் திரும்பியிருக்கிறது) எதிர்த்துப் போட்டியிட்டபோதும், பூலன்தேவிக்கு மக்கள் வெற்றியைக் கொடுத்தார்கள். ஆனால் விதி வேறு மாதிரி ஆகிவிட்டது!'' என்று சொல்லி முடிக்கிறார் தர்ம வீர்யோ!
- டெல்லியிலிருந்து: சரோஜ் கண்பத்,
மிர்சாபூரிலிருந்து: சாந்தினி
படங்கள் : டி.குமார், அசோக் வாஹி
*******************************************************************************
மிஸ்டர் மியாவ்: ரஜினி தரிசனம்!

நீண்ட நாள் ஆஸ்பத்திரி வாசத்துக்குப் பிறகு, ரஜினி முதன்முதலாக வெளியுலகத்துக்கு வரப்போகிறார். செப்டம்பர் 2-ம் தேதி லீ மெரிடியன் ஹோட்டலில் கே.எஸ்.ரவிக்குமாரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. விழாவில் கலந்துகொள்வதாக உறுதி அளித்து இருக்கிறாராம் சூப்பர்!
கார்த்திக் மகன் கௌதம், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். கடலோரக் காதல் கதையாம். ராமேஸ்வர மீனவனாக நடிக்கிறார் கௌதம். ஒளிப்பதிவு, ராஜீவ்மேனன்.
பழம்பெரும் மக்கள் தொடர்பாளர் 'கிளாமர்’ கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் மறைந்தார். கார் செல்ல முடியாத குறுகலான சந்தில் அவரது வீடு இருந்ததால், மெயின் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு நடந்தே வந்தார், கமல். அவரைக் கண்டவுடன் துக்கம் தாளாமல் குடும்பத்தார் குமுற, ''சாருக்கு திடீர்னு தூக்கத்தில் உயிர் பிரிஞ்சது நல்ல சாவு... நானும் அப்படித்தான் சாகணும்னு ஆசைப்படுறேன்!'' என்று கமல் கண்ணீர் வழியச் சொல்ல... விக்கித்துப்போனது கிளாமரின் குடும்பம்.
  கனவுப் படமான 'கொடிவீரனும் அன்னக்கொடியும்’ வேலைகளில் இறங்கிவிட்டார், பாரதிராஜா. கொடிவீரன் வேறு யாரும் அல்ல... வித்தியாசத் திலகம் பார்த்திபன்தான். அன்னக்கொடியை வலை வீசித் தேடி வருகிறார் இமயம்!
'சிங்கம்’ இரண்டாம் பாகம் ரெடியாகிறது. இரண்டாம் பகுதியின் பட்ஜெட் 32 கோடியாம். ஜனவரியில் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார், சூர்யா.
வரி விலக்கு நிபந்தனைகளை மாற்றி வகுத்தது தமிழக அரசு. அதனால் கோடம்பாக்கத்தில் மீண்டும் ஆங்கில டைட்டில்கள். நகுலன் பொன்னுசாமி இயக்கத்தில் சேரன் நடிக்கும் படத்தின் பெயர், 'சிட்டி’.

  விதவிதமான போஸ்கள் கொடுத்தும், பிரமாண்ட நடிகைக்கு தமிழில் நோ சான்ஸ். அதனால் மைசூர்பாகு பூமியில் மையம் கொண்டுவிட்டது பிரமாண்டம்!
************************************முற்றும்*************************************
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010