********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தொடர்கள் (04 செப்டம்பர் 2011)

Saturday, September 3, 2011

 பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 29: 26.2.92
தாமதமாகத் துவங்கப்​பட்ட பரா மரிப்பு வேலைகள், அரசுத் துறைகளின் மெத்த​

னம், ஆகம விதிகள் மீறப்பட்டதாக எழுந்த புகார்...
என்று பல்வேறு சர்ச்சைகளோடு இம்முறை கும்பகோண 'மகாமக நாள்’ நெருங்கியது. 'தமிழக முதல்வர் ஜெயலலிதா மகாமகக் குளத்துக்கு வந்து நீராடப்போகிறார்’ என்கிற செய்தி மேலும் பரபரப்பை உண்டாக்கியது. கட்டுக்கடங்காத கூட்டத்தில் கும்பகோணம் சென்று பத்திரமாகத் திரும்புகிற பயம், லட்சக்கணக்கான பக்தர்​களிடையே இருந்தது. முதல்வரின் நேரடி விசிட், அதனால் ஏற்படப்போகும் பாதுகாப்புக் கெடுபிடிகள், பக்தர்களை மேலும் பயமுறுத்திக்​கொண்டுதான் இருந்தன.
 பக்தர்களின் பயத்தை உறுதி செய்வதுபோல், மகாமகத்துக்கு முதல் நாளான 17-ம் தேதியே நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. 'முதல்வர் வந்து நீராடிவிட்டுப் போகும் வரை பக்தர்கள் குளத்தில் இறங்க அனுமதி இல்லை!’ என்று 17-ம் தேதி போலீஸ் செய்த அறிவிப்பு பக்தர்களைத் திகிலடையச் செய்தது. போலீஸ் அறிவிப்பை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்கள் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பி.ஜே.பி. தொண்டர்கள். போலீஸ் அறிவிப்பை மீறி, பி.ஜேபி-யினர் முதல் நாளே குளத்தில் இறங்க ஆரம்பித்தனர். அதனால் போலீஸின் கெடுபிடிகள் அவ்வளவாக இல்லாமல்போனது. ஆகவே, முதல்வர் வருகைக்கு முன்பே பல்லாயிரம் பேர் நீராடிவிட்டுக் கிளம்பினர்.
மகாமகத்தன்று காலை 8.30 மணிக்கு, குளத்தில் மிதமான பக்தர்கள் கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் காவல் துறையினர் கூட்டத்தை ஓரளவு கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர்.
இந்த ஒழுங்கு முறை காலை 9.30 மணி வரை நீடித்தது. ஆனால், குளத்தில் இருந்து வெளியேறாமல் அங்கேயே நின்ற கூட்டம், முதல்வர் ஜெயலலிதா நீராடும் காட்சியைக் காணவேண்டி அதற்கென அமைக்கப்பட்டு இருந்த பிரத்யேகமான குளியல் அறைப் பகுதியை நோக்கி நகர்ந்து அந்தப் பகுதியிலேயே தங்கி நின்றது.
குளத்தின் கொள்ளளவு 40 ஆயிரம் பேர் என்று கணக்கிடப்பட்டு இருந்தது. ஆனால், அதைவிடப் பலமடங்குக் கூட்டம் குளத்தில் நின்றது. குளத்தில் கால்வாசி பகுதிக்கு மேல் முதல்வரின் பாதுகாப்பு கருதி காவல் துறை வளைத்து நின்றது. இதனால் நேரம் ஆக ஆகக் குளத்தின் உள்ளே மக்கள் நெருக்கம் அதிகரித்தது. முதல்வர் நீராடும் இடத்தை நோக்கி நெருக்கியடித்தபடி நகர்ந்தது மக்கள் கூட்டம்...
முதல்வர் வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்த தேவாரம் ஐ.ஜி., அடிக்கடி பைனாகுலர் மூலம் மக்கள் அவதிப்படுவதைப் பார்த்துக்​கொண்டு இருந்தார். ஆனால், குளத்துக்குக் கூட்டம் வருவதைத் தடுக்க முடிய​வில்லை.
சரியாகக் காலை மணி 11.32-க்கு பிரத்யேகமாக அமைக் கப்​பட்டிருந்த குளியல் அறைப் பகுதிக்கு வந்த முதல்வர், படிக்கட்டில் நின்று மக்களைப் பார்த்துக் கையை அசைத்தார். அவருக்கு நேர் எதிர்ப்புறம் வடக்கு வீதிப் பக்கம் நின்ற கூட்டத்தினர் முதல்வரைக் காண முடியாமல் குளக்கரையில் இருந்த கோயில் ஒன்று மறைத்தது. எனவே, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு வந்து 'பாங்கூர் தர்மசாலா’ கட்டடத்தின் வெளிப்​புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது ஏற முயல, அதைத் தொடர்ந்துதான் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் கிரில் விழுந்தபோது, அந்தப் பகுதி மக்கள் தங்களைக் காப்பாற்றிக்​கொள்​வதற்காக நாலாபுறமும் திக்குத் தெரியாமல் ஓடினார்கள். அதனால் குளத்தில் இருந்து கரையேறிய மக்களும், சிதறி ஓடிய மக்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். அப்போது வீதிகளில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட நெருக்கடியில் ஆண்களும் பெண்களுமாகப் பல உயிர்கள் பலியாகின.
போலீஸ் தரப்பில் 'பலியானது 48 பேர்’ என்று புள்ளிவிவரம் கொடுத்தாலும், இன்​னும் பல உயிர்கள் பலியாகி இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். அந்த அள​வுக்குக் களேபரம், கூக்குரல்கள், துயர சம்​பவங்கள் முதல்வர் நீராடிய இடத்துக்குச் சில நூறு அடிகள் தள்ளி நடந்தன. நிகழ்ச்சியை வர்ணித்துக்கொண்டு இருந்தவர்களின் மைக் ஒலிக்கும், கூட்டத்தின் இரைச்​சலுக்கும் நடுவே, மனித உயிர்களின் மரண ஓலங்கள் கேட்கவே இல்லை.
''முதல்வர் மதியம் 2.30 மணிக்கு மேல்தான் கும்பகோணத்தில் இருந்து கிளம்பினார். அதுவரையில் அவருக்கு நடந்த சம்பவங்கள் எதுவும் தெரியாது. தெரிந்து இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்திருப்பாரே...'' என்கிறார்கள் ஊர் மக்கள்.
இறந்தவர்களின் உடல்களை மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குடந்தை அரசு மருந்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் செஞ்சிலுவை சங்கத்தினர்.  நகரில் தொடர்ந்து ஆம்புலன்ஸ் 'சைரன்’ பரபரப்பாக ஒலித்துக்கொண்டே இருந்தது!
மருத்துவமனையின் புதிய கட்டடமான அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவில் அவசர கேஸ்களும் இறந்தவர்களின் உடல்களும் சரிசமமாக வந்து குவிந்தன.
ஊரில் இந்த சம்பவம் காட்டுத் தீ போலப் பரவ ஆரம்பித்ததும்... பொதுமக்கள் 'இறந்தவர்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?’ என்று மருத்துவமனைக்கு அருகில் உள்ள கோயில்களில் வேண்டிக்கொண்டு, பிணங்களை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்து துக்கத்துடன் குழுமிவிட்டனர்.
இறந்துபோனவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய நிருபர்களை போலீஸ்காரர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றியதோடு, ''நீங்க உள்ளுக்குள்ள நுழைஞ்சா பிரச்னை பெரிசாயிடும்!'' என்று மிரட்டினார்கள்.
குடந்தை மருத்து​வமனையில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கடந்த 18.10.91 அன்றுதான் தொடங்கப்​பட்டதாம். அந்தக் கட்ட​டம் திறக்கப்பட்ட பிறகு நடந்திருக்கும் பெரிய விபத்து இது!
''12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மகாமக விழாவில், இது வரையிலும் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்ததே இல்லை...'' என்கிறார்கள்.
பிணங்களை அடையாளம் காட்டி உடல்களைப் பெற்றுச் செல்வதற்காக மருத்து​வமனைக்கு வந்திருந்த பலர், அடையாளம் காட்டிய பிறகும் அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவர்களில் ஒருவரிடம் காரணம் கேட்டபோது,
''இறந்துபோனது எங்க அம்மா. அவங்க 'மகாமகக் குளத்துக்குப் போறேன்’னு கிளம்பி​னப்ப, கிட்டத்தட்ட 25 பவுனுக்கு மேல நகைகள் போட்டுட்டுப் போனாங்க. அவங்க மூச்சுத் திணறி மயக்கமா இருக்காங்கனு சொல்லி ஆஸ்பத்திரில சேர்க்கிற வரைக்கும்கூட எல்லா நகைகளும் சரியாத்தான் இருந்திச்சு. அதுக்கப்புறம் அவங்க இறந்துட்டாங்கனு சொல்லிப் பிணத்தோட பிணமாக்கிடத்தினாங்க! அப்புறம் நாங்க போயி பாத்தா, எங்க அம்மா உடம்புல ஒரு துண்டு நகைகூட இல்லை. கேட்டா.... 'அந்தம்மாவே போயிடுச்சு... நகையா முக்கியம்’கிறாங்க. ஆனா, 'பிணத்தோட, நகைகளையும் பெற்றுக்கொண்டோம்’னு எழுதிக் கையெழுத்து போடச் சொல்றாங்க'' என்றார் அழுதபடியே!
தேவகோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கையைப் பிடித்து ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து, ''இங்க பாரு... உன்னோட அப்பாவும் அம்மாவும் இறந்து போயிட்டாங்க! இப்ப அழுவறதுக்கு நேரம் இல்லை. தேவகோட்டைக்கு ஏற்கெனவே ஒரு பாடியை ஏத்தி ஆம்புலன்ஸ் புறப்படத் தயாரா நிக்குது. உங்க அப்பாவையும் அம்மாவையும் வண்டில ஏத்திரலாம் இல்லையா...'' என்று கேட்டதும் அந்த இளைஞர் அதிர்ந்து கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது.
இந்தத் துயரக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அரசுத் தரப்பில் இருந்து பல முரண்பட்ட செய்திகள்...
இதுவரையில் இறந்தவர்கள் என்று அரசுத் தரப்பில் சொல்லப்படும் எண்ணிக்கை - 48 பேர்.
ஆனால்... ஆஸ்பத்திரியில் பிணங்களை அடுக்கி இருக்கும் பகுதிக்கு நிருபர்கள் சென்று பார்வையிட்டபோது... இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாகவே இருந்தது.
நம் கண் முன்னாலேயே வயதான பெண்மணி ஒருவர் கூட்டத்தில் மிதிபட்டுக்கொண்டு இருந்தார். அவரைக் காப்பாற்ற முற்பட்டபோது போலீஸாரால் பலவந்தமாக இடத்தைவிட்டு நாம் அப்புறப்படுத்தப்பட்டோம்!
பிறகு அந்தப் பெண்மணி மயக்கமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, இறந்துபோனார். கூட்ட நெரிசலில் பலரது ஆடைகள் கிழிபட்டன. நகைகள் பறிபோயின. பணம் ஏராளமாகப் பறிபோனது. பலர் அரை நிர்வாணமாக போலீஸாரின் கெடுபிடிகளால் கூட்டத்தில் மூச்சுவிடக் கூட முடியாமல் முன்னேறினார்கள். அப்போது பொதுமக்கள் இழந்த பொருட்களின் மதிப்பு மட்டும் பல லட்ச ரூபாய்கள் இருக்கும்!
ரோட்டில் ஏராளமான சட்டைகள், வேஷ்டிகள், புடவைகள், செருப்புகள்...
ஒரு சில மணி நேரத்தில், ஆன்மிக விழா ஒன்று, மரண பூமியாக மாறிப்போனதை நேரில் கண்ட அதிர்வில் இருந்து விலக முடியவில்லை!
நமது நிருபர்கள்
படங்கள் : கே.ராஜசேகரன்
ஒரு பக்கம் சாவு... மறுபக்கம் குதூகலம்!
. ''கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பகுதி புதிய கட்டடத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதிதான் முதல்வர் திறந்துவைத்துவிட்டுப் போனார். சரியாக நான்கு மாதங்களுக்குப் பிறகு அதே 18-ம் தேதி பிணங்களால் நிரம்பி வழிந்தது!'' என்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் சொல்லி வருந்தினார்.
. கண் இமைக்கும் பொழுதில் நிகழ்ந்துவிட்ட இந்தக் கோரச் சம்பவத்தால் அந்த இடத்தையே துக்கம் சூழ்ந்துகொண்டது. எங்கும் அழுகை மயம்... ஒரு புறம் இந்த சம்பவம் நடந்துகொண்டு இருக்க... இன்னொரு புறத்தில் முதல்வர் குளித்து முடித்து 'பந்தா’வாக காரில் ஏறிச் செல்ல, அவர் சென்றதும் காவல் துறை உயர் அதிகாரிகளின் குடும்பத்தினர் அதே இடத்தில் குளித்தனர்.
. குளத்தில் போடப்பட்ட காசுகளைப் பொறுக்குவதில் ஏகப்பட்ட போட்டா போட்டி. இதில் காசு எடுப்பதில் பலர் முட்டி மோதி விழுந்து எழுந்ததில் பலர் மூச்சுத் திணறி மயங்கி விழுந்தனர். சிலர் இறந்தனர்.
*******************************************************************************
அணு ஆட்டம்!

அணுக் கழிவு உலகின் அழிவு!
''நமது அணு சக்திக் கழிவுகளை, நம் வழித்தோன்றல்களுக்காக விட்டுச் செல்வது நகைப்புக்கு உரியது. இந்தத் தீர்வை ஏற்றுக்கொள்ள, அடுத்த 20,000 தலைமுறைகளிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!''
- டேவிட் ஆர் புரோவர்

ன்னாட்டு ஒப்பந்தங்கள்பற்றியும், யுரேனியம் தோண்டுவது அல்லது வாங்குவது குறித்தும், அணு மின் உலைகள் நிறுவுவது தொடர்பாகவும் வாய் கிழியப் பேசுகிற மத்திய அரசு, அணு உலைகளின் அந்திமக் காலத்தைப்பற்றி வாய் திறப்பதே இல்லை! உதாரணமாக, நாடெங்கும் அணு உலைகள் தொடங்கினால், அவற்றில் இருந்து வரும் கழிவுகளை என்ன செய்யப் போகிறோம் என்று பிரதமரோ, அணு சக்தித் துறை அதிகாரிகளோ பேசிக் கேட்டது உண்டா?
அணு சக்திக் கழிவு, பல வழிகளில், பல வடிவங்களில் வெளிவருகிறது. யுரேனியத்தைத் தோண்டி எடுத்து, சுத்திகரித்து முடிக்கும்போது, மணல்போன்ற கழிவு எஞ்சுகிறது. இதில் மிகவும் ஆபத்தான ரேடியம், ரேடான் வாயு, பொலோனியம், தோரியம் போன்ற கதிர்வீச்சுத் தன்மைகொண்ட பொருட்கள் கலந்திருக்கின்றன.
கதிர்வீச்சுத் தன்மைகொண்ட துடைப்பங்கள், துணிமணிகள், உபகரணங்கள், குழாய்கள் போன்றவையும் அணுக் கழிவுகள்தான். இவை பெரிய பீப்பாய்களில் அடைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு நிலத்துக்குள் புதைக்கப்படுகின்றன. அணு உலைகளில் எரிகோல்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்கள், பிற இயந்திரங்களின் பாகங்கள் போன்றவற்றில் யுரேனியம், புளூட்டோனியம் தோய்ந்து இருப்பதால், இவையும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய கழிவுகள்தான்.
அணு உலையில் இருந்து எழும் 99 சதவிகிதக் கதிர்வீச்சு அதன் எரிகோல்களில் இருந்துதான் வருகிறது. ஓர் உலையில் இருந்து வெளியே எடுத்துவைக்கப்பட்ட எரிகோல்களின் அருகே ஒரு மனிதன் நின்றால், ஓரிரு விநாடிகளிலேயே உயிரை இழக்கும் அளவுக்குக் கதிர்வீச்சைக் கிரகித்துவிடுவார். இந்த எரிந்துபோன எரிபொருளைத்தான் உயர்தரக் கழிவு என்கிறோம். புளூட்டோனியம், கியூரியம், அமெரிஷியம் போன்றவை கலந்து இருப்பதால், இந்தக் கழிவு லட்சக்கணக்கான வருடங்களுக்கு ஆபத்து நிறைந்ததாக இருக்கும்.
அணு உலை செயல் இழக்கச் செய்யப்படும்போதும், அதிக அளவில் கழிவு உருவாகிறது. உலையின் மையப் பகுதியைச் சுற்றி இருக்கும் கட்டுமானப் பொருட்கள் உலை செயலிழந்து 40 ஆண்டுகள் ஆன பிறகு கவனமாக இடிக்கப்பட்டு 60 வருடங்களில் அப்புறப்படுத்தப்படுகின்றன. நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளியேற்றப்படும் இந்தக் கழிவுகளைக் கையாள உலையினைக் கட்டும்போது ஆன செலவே இப்போதும் ஆகிவிடுகிறது.
மேற்கண்ட கழிவுகள் தவிர, கதிர்வீச்சுத் தன்மைகொண்ட திரவக் கழிவு நிலத்தடித் தேக்கங்களில் தேக்கிவைக்கப்படுகிறது. எரிந்துபோன எரிபொருளும் இப்படித் தொட்டிகளில் சேர்த்துவைக்கப்படுகிறது. திறந்த குழிகளில் கதிர்வீச்சு ஐசோடோப்புகள் வீசப்படுகின்றன. அணு உலை பாகங்கள் புதைக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான லிட்டர் திரவக் கழிவுகள் வெளியே கொட்டப்படுகின்றன. இந்தக் கழிவுகளின் நேரடித் தொடர்புக்குள் வந்தால் ஆபத்து அதிகம். அதேபோன்று மறைமுகத் தொடர்புக்குள் வந்தால், உயிரைக் குடிக்கும் நோய்களுக்கு உள்ளாக வேண்டி வரும்.
அணுக் கழிவுகளை எப்படிப் பாதுகாத்துவைப்பது என்பது இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. விண்வெளியில் எறிந்துவிடலாமா, கடலின் தரையில் கொண்டுவைக்கலாமா, அல்லது ஒட்டுமொத்த உலகின் கழிவுகளையும் ஓரிடத்தில் சேர்த்துவைக்கலாமா என பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, இறுதியில் ஆழக் குழி தோண்டிப் புதைப்பதுதான் சிறப்பு என முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
அணுக் கழிவைப் புதைப்பது புதிய பிரச்னைகளை விதைப்பது போன்றதுதான் எனும் உண்மையை நேரடியாகவே உணர்ந்து இருக்கிறேன். 2009-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள அஸ்ஸே 2 எனும் அணுக் கழிவு சுரங்கத்தைப் பார்வையிட்டு இருக்கிறேன், ஒரு சர்வதேசக் குழுவினரோடு. ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் உள்ள ஓர் உப்புப் படிவத்துக்குள் சுரங்கம் தோண்டி, 1965 முதல் 1992 வரை பலதரப்பட்ட அணுக் கழிவுகளை ஜெர்மன் அரசு பாதுகாத்துவைத்தது. பூமிக்குள்ளே 975 மீட்டர் ஆழத்தில் இருப்பதாலும், கடினமான உப்புப் பாறை என்பதாலும், கழிவுப் பீப்பாய்கள் அப்படியே அசையாது இருக்கும் என்ற எண்ணத்தாலும் இந்தச் சுரங்கம் அனைவராலும் விரும்பப்பட்டது.
நாங்கள் பார்வையிடச் சென்றபோது, ஆபத்துகளை விளக்கிச் சொல்லி, தொடர்ந்து செல்ல விரும்புகிறீர்களா எனக் கேட்டார்கள். 650 மீட்டர் ஆழம் பூமிக்குள் செல்வது திகைப்பாகவே இருந்தது. அதுவும் அணுக் கழிவு விஷக் கிடங்குக்குள் செல்வது விபரீதப் பயணம் அல்லவா? எங்களது உள்ளாடைகளைக்கூட கழற்றச் சொல்லிவிட்டு, புதிதாக வாங்கி வைத்திருந்தவற்றை அணியச் சொல்லி வெண்மை நிற சூட் கொடுத்தார்கள். காலில் உயரமான பூட்ஸ். தலையில் இரும்புத் தொப்பி, மற்றும் ஹெட்லைட். இடது தோளில் ஆக்சிஜன் கருவி, வலது தோளில் கதிர்வீச்சை அளக்கும் டோசிமீட்டர். நான்கு பேர் மட்டும் பயணம் செய்யும் நெருக்கடியான லிஃப்ட்டில் பயணம் செய்து பூமிக்குள் சென்றபோது, திறந்த ஜீப் ஒன்றில் ஒரு ஜெர்மன் பெண்மணி நின்றிருந்தார். குகைகளின் ஊடே இதயம் திக்... திக் என்று திகிலோடு இயங்கிக்கொண்டு இருக்க முன்னேறி, திடீரென ஓர் அறைக்குள் நுழைந்தோம். ஓர் உப்பு மண்டபம். எங்கள் கால்களுக்குக் கீழே இருந்த பாதாள அறைக்குள் மிக மிக ஆபத்தான உயர்தரக் கழிவுப் பீப்பாய்கள் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தன. தரையின் நடுவே இருந்த ஒரு ராட்சத ரோபோ இயந்திரம் இந்த வேலையைச் செய்து முடித்தது. ஆங்காங்கே கழிவுப் பீப்பாய்கள் குவித்துவைக்கப்பட்டு, உப்புப் பொடியால் மூடப்பட்டு இருந்தன.
வளைந்தும் நெளிந்தும் சென்ற சுரங்க உலகத்துக்குள் ஆங்காங்கே உப்புத் தண்ணீர் சுரந்து ஓடியபடி இருந்தது. பீப்பாய்கள் துருப்பிடிக்கவும், உடையவும், வெடிக்கவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி வேதனைப்பட்டார் எங்கள் வழிகாட்டி. மொத்தச் சுரங்கமுமே இடிந்து விழும் ஆபத்தும் உள்ளது என்றார். பல்லாயிரக்கணக்கான் பீப்பாய்களில் இருந்து கதிர்வீச்சுக் கசிந்து, நிலத்தடி நீரில் கலந்தால் என்னவாகும்? ஜெர்மன் அரசு கையைப் பிசைந்து நிற்கிறது. சுரங்கத்தைவிட்டு வெளியே வந்து நீண்ட நேரம் குளித்து, உடை மாற்றி பரிசோதனைகள் முடிந்த பிறகு யதார்த்தம் முகத்தில் அறைந்தது.
ஜெர்மனியில் இந்த நிலை என்றால், நமது நாட்டில்?
 ஆர்.சகாய இனிதா
1970-ம் ஆண்டு பிறந்தவர். தனது 18-வது வயதில் இருந்தே கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு எதிராகச் செயல்பட்டு வருபவர். வீட்டுப் பணியாளர் சங்கத்தில் இயங்கத் துவங்கி, தற்போது தேசியக் கடலோரப் பெண்கள் இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, கடலோரப் பெண்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கும் இவர், சிறந்த பேச்சாளரும்கூட.
-அதிரும்..

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010