வலி இல்லாத பல் சிகிச்சை!
சேலர் கருவி அறிமுகம்

பிரச்னைகளுக்கு வலி இல்லாமல் சிகிச்சை அளிக்கும் புதிய லேசர் கருவி வந்துவிட்டது.
சொத்தைப் பல் பிடுங்குதல், பற் குழியை நிரப்புதல் போன்றவை மட்டுமே பல் மருத்துவமாக முன்பு இருந்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகுதான் பல் மருத்துவத்தில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வர ஆரம்பித்தன. இந்த வளர்ச்சியை இம்பிளான்ட், லேசர் என்று இரண்டாகப் பிரிக்கலாம். கடந்த சில ஆண்டுகளில் இம்பிளான்ட் முறையில் நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. ஒரு பல் மட்டும் செயற்கையாகப் பொருத்தும் முறை வந்தது. பின்னர் பல் தாடை எலும்பில் ஸ்குரூ போட்டு, செயற்கை பல் வைக்கும் சிகிச்சை அறிமுகமானது. இன்று, டோட்டல் மவுத் இம்பிளான்ட் என்ற அளவுக்கு சிகிச்சை வளர்ந்துவிட்டது. பற்கள் முழுமையாகக் கொட்டியவர்களுக்குக்கூட கழற்றி மாட்டுவதுபோல இல்லாமல், இயற்கையாக இருப்பதுபோலவே பற்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.

இந்தக் கருவி மூலம் வாய் மற்றும் ஈறு பகுதிகளில் உள்ள அனைத்து மென் திசுக்களிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியும். ரூட்கேனல், பயாப்ஸி, ஈறு, கட்டி, சீழ், வீக்கம் என்று 17 வகையான சிகிச்சைகளுக்கு இந்த டயோட் லேசர் பயன்படுகிறது.
முன்பு பல் ஈறு பகுதியில் திசுவை அகற்ற வேண்டும் என்றால், அதனை அறுத்துத் தைக்க வேண்டும். இப்போது, புதிய லேசர் கருவியின் முனையை, எந்த இடத்தில் திசு அகற்ற வேண்டுமோ... அங்கு கொண்டுசென்றாலே போதும்... தானாகவே அந்தப் பகுதியை வெட்ட ஆரம்பித்துவிடும். அப்படி வெட்டும்போது ஏற்படும் புண்ணை இந்த லேசர் கதிர்கள் விரைவாக ஆறவைத்துவிடும். இதனால், ரத்தக் கசிவும் குறையும்.
டயோட் லேசர் கருவியைப் பயன்படுத்தி, வாய் மற்றும் ஈறு பகுதியில் சிகிச்சை அளிக்கும்போது, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில், இந்த சிகிச்சையில் வலி இல்லை. மிகவும் பயப்படும் ஒரு சிலருக்கு மட்டும் உணர்வு நீக்க மருந்து கொடுக்கிறோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தையல் போடவும் அவசியம் இல்லை. இதுபோன்ற காரணங்களால், சிகிச்சைக்குப் பின் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளின் அளவும் குறைகிறது.
இந்த லேசர் கருவி அதிக அளவு வெப்பத்தை வெளியிடுவது இல்லை என்பதால், நோயாளிகளுக்கு எந்தப் பக்க விளைவும் ஏற்படுவது இல்லை. இதில் உள்ள ஒரே குறைபாடு, இந்தக் கருவியால் மிக வேகமாக சிகிச்சை அளிக்க முடியாது... மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும்தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், சிகிச்சைக்கான நேரம் அதிகமாகும்...'' என்றார்.
இனி, பல் சிகிச்சைக்குப் பிறகும்... வலி இல்லாமல் சிரிக்கலாம்!
**********************************************************************************
அணு ஆட்டம்!

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
- திருக்குறள் 691
அரசு ஒரு தாய்போன்று தன் மக்களை அரவணைத்துக் காக்கும்பட்சத்தில், மக்கள் அந்தக் கரிசனத்தில், கதகதப்பில் திளைத்துப் பூரித்து வாழ்வர். ஆனால், அரசு அதிகார வர்க்கமும், கார்ப்பரேட் நிறுவனங்களும், அணு சக்தித் துறை போன்ற மக்கள் விரோத சக்திகளும் வறுமையை வளர்த்தால், குடிமக்கள் திசை மாறிப் போவார்கள். முத்துக்குமரனாக, செங்கொடியாக எரிந்து மடிவார்கள்.
காமராசரும், கக்கனும், ஜீவாவும், சிங்காரவேலரும் ஆட்சியாளர்களாய், அரசியல் தலைவர்களாய் இருந்தபோது, அதனை மக்கள் ஆட்சி என்றோம். மக்கள் ஆட்சி என்பது, மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி.

'கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்ற அறிவுமிலார்’ என்று பாரதியார் குறிப்பிடுகிறாரே, ஏதும் அறியாத, எந்த அதிகாரமும் அற்ற, தங்களுக்குத் தாங்களே உதவ முடியாத ஏழை மக்கள் ஏமாளிகளாகித் துன்புறுகிறார்கள்.
மக்கள் ஆட்சி என்பது ஏய்ப்போரால் ஏமாளிகளுக்காக நடத்தப்படும் ஏவல் செய்வோரின் ஆட்சியாக மாறிவிட்டது.
121 கோடி இந்தியர்களில் 83.3 கோடிப் பேர் - கிட்டத்தட்ட 70 சதவிகிதம், கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர். வருமானம் மற்றும் செலவிடும் திறனில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் அதிக இடைவெளி காணப்படுகிறது. கிராமவாசிகளில் 10 சதவிகிதப் பரம ஏழைகளின் மாதாந்திரத் தனிநபர் சராசரி செலவு


பொதுமக்கள் பணத்தைத் திருடுவதைத் தவிர, பிற துறைகள் அனைத்திலும் இந்தியா பின்தங்கியேதான் இருக்கிறது. ஒரே நாளில் (செப்டம்பர் 7, 2011) இந்தியத் தலைநகர் டெல்லியில் தீவிரவாதக் குண்டுவெடிப்பும், 4.2 அளவிலான நிலநடுக்கமும் நடந்திருக்கின்றன. பாதுகாப்பின்மைக்கு இதைத் தவிர வேறு உதாரணம் தேவை இல்லை.
'யாரிடம் சொல்லி அழ?’ என்று தலைப்பிட்ட 8.6.2011 தலையங்கத்தில் தினமணி நாளிதழ் சொல்

நில நடுக்கமும், தீவிரவாதக் குண்டு வெடிப்பும் நடந்து முடிந்த கையோடு, பகல் 12:30 மணிக்கு 'அணு பாதுகாப்பு ஒழுங்காற்று அதிகாரச் சட்டம் 2011’ எனும் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். AERB எனும் அணு சக்தி ஒழுங்காற்று வாரியத்துக்குப் பதிலாக இந்த புதிய அதிகார அமைப்புத் தோற்றுவிக்கப்படுகிறது. பழைய கள்... புதிய மொந்தையில்!
பிரதமரும், சுற்றுச் சூழல், வெளி விவகாரம், நல்வாழ்வு, உள்துறை, அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சர்களும் அணு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் இயங்குவர். இதன் கீழே ஒழுங்காற்று அதிகார அமைப்பு இயங்கும். இதன் உறுப்பினர்கள், தலைவர் அனைவருமே அணு உலை, அணு சக்தி வல்லுனர்களாகவே இருப்பார். இந்த அதிகார அமைப்பு திறந்தவெளித் தன்மைகொண்டு இருக்குமாம், ஆனால், முக்கியமான தகவல்களை யாருக்கும் தராதாம். தேசியப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு இந்த அமைப்பு தற்போது செய்துகொண்டு இருக்கும் தவறுகளையே மீண்டும் செய்யலாம்.
சுயமாக இயங்கும், அரசின் தலையீடற்ற, மக்கள் ஆதரவான அணு சக்திப் பாதுகாப்பு சட்டமும், அதிகார ஆணையமும் தேவைப்படும்போது, அரைத்த மாவையே அரைக்கிறது அரசு. தினமணி தலையங்கம் சொன்னதுபோல, 'மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறைபற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின் தேவையைப்பற்றி மட்டும் அரசு கவலைப்பட்டால், இப்படித்தான் முடிவுகள் எடுக்கப்படும்!’

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் கிராமத்தில் பிறந்தவர். சென்னை திரு இருதய குருத்துவக் கல்லூரியில், இறையியல், மெய்யியல், இதழியல், மனித உரிமைப் பாடங்களைப் பயின்றார். கடந்த 11 வருடங்களாக, பாளையங்கோட்டை, புளியங்குடி, சேரன்மகாதேவி பங்குகளில் பங்குத் தந்தையாகப் பணியாற்றி வருகிறார். 'தமிழர் களம்’ அமைப்பின் தென் மண்டலச் செயலாளராகவும் 'நம் வேர்கள்’ இதழின் ஆசிரியராகவும் இயங்குகிறார். பள்ளி மாணவப் பருவத்தில் இருந்தே கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
- அதிரும்
************************************************************************
0 comments:
Post a Comment