********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஹைய்யா.. ஜாலி - பகுதி 1

Saturday, July 30, 2011

குவைத்திற்கு இ.த.ஜ. தலைவர்கள் வருகிறார்கள் என்றதும் பல அவதூறுகளை பரப்பி 'ஐந்து பேர் கூட இவர்களின் கூட்டத்திற்கு வர மாட்டார்கள் ' என்றெல்லாம் அகமகிழ்ந்தோரின் எண்ணங்களில் இடி விழும் அளவிற்கு முதல் நாளன்று மண்ணு சல்வா உணவகத்தில் மக்கள் கூட்டம்
நிரம்பி வழிந்தது!

இதைக் கண்ட தக்லித் ஜமாத்தினர்   மறு நாள் நிகழ்ச்சி நடந்த ஷாலிமார் உணவக வாசலில் வந்து 'விடுதலைப் புலிகள் ஆதரிக்கும் இயக்கங்கள் ' என கடுமையாக சாடி நோட்டீஸ் ஒன்றை வாசலில் நின்று விநியோகிக்க சற்று சலசலப்பு ஏற்பட்டது ! 

அவர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் இது போன்று யாரேனும் நோட்டீஸ் விநியோகித்தால் இவர்கள் அனுமதிப்பார்களா? என நம் சகோதரர்கள் கோபப் பட்ட போது அவர்களை மாநில செயலாளர் செங்கிஸ் கான் கட்டுப்படுத்தி , அந்த த.த.ஜ.சகோதரரை தோளில் கை போட்டு வாஞ்சையோடு நலம் விசாரித்து 'நோட்டீஸ் கொடுப்பது உங்கள் உரிமை   தாரளமாக எனக்கும் கொடுங்கள்! ஆனால் அந்த உரிமையை த.த.ஜ வினராகிய நீங்கள் மற்றவர்களுக்கும் அளிக்க வேண்டும்' என கூறிய போது அந்த த.த.ஜ சகோதரர் 'நலமாக இருக்கின்றீர்களா ?    பாக்கர் அண்ணன் எப்படி இருக்கிறார் ? என நலம் விசாரித்தார்!  உடனே கீழே  வந்த தொண்டியப்பா , மற்றும் பாக்கரிடம் அந்த சகோதரை செங்கிஸ் கான் அறிமுகப் படுத்தி  சகோதரருக்கு   சலாம் சொல்லி கை குலுக்கி நலம் விசாரித்தனர். இதை அங்கு வந்த பொதுவான மக்கள் பாராட்டினர்!

அவர்களின் கூட்டத்தில் இது போன்று நடந்திருந்தால் பெரும் ரகளை செய்திருப்பார்கள் ! ஆனால் கொள்கை சகோதர்களுக்கு இடையில் 
மோதல் வந்து விடக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்!
அதனால் தான் அவர் இதஜ பெயரை அபகரித்த  போது கூட அமைதி காத்தோம்!.

கொள்கை சகோதர்களுக்கு இடையில் மோதல் நடந்தால் தான் அவர்கள் எந்தக் காலத்திலும் இணைய மாட்டார்கள்! எனும் பி.ஜே.வின் பிரிவினைக் கொள்கையை நாம் அன்பால் முறியடிப்போம்! இன்ஷா அல்லாஹ்! 
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010