சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் " தஜ்ஜால் மக்காவிற்குள் நுழைய முடியாது! ஆகையால் இவர் அங்கு செல்ல
முடியாது' என்று கூறுகின்றனர்.
முடியாது' என்று கூறுகின்றனர்.
இந்தக் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை எனினும் நமக்கு வேறு ஒரு சந்தேகம் எழுகிறது! அது யாதெனில் ஹஜ் கிரியைகளின் மேல் அவருக்கு நம்பிக்கை இல்லை எனும் சந்தேகமே! ஏன் எனில் ஹஜ் செய்ய வசதி வாய்ப்புகள் இருந்தும் , அதற்க்கான உடல் ஆரோக்கியம் இருந்தும் இத்தனை ஆண்டுகளாக செய்யாமல் இருப்பது நிச்சயமாக ஏதோ உள்ளர்த்தம் கொண்ட செயல் தான். உடனே அண்ணனின் பக்த கோடிகள் அண்ணனிடம் பணம் இல்லை அவர் அன்றாட செலவுகளுக்கே சிரமப் படுகிறார். எனக் கூறலாம். ஆனால் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக அவரே கூறியுள்ளார். ஹஜ் செய்ய ஆகும் செலவு சில லட்சங்களே!
அடுத்ததாக ஜகாத் எனும் கடமை. இதிலும் நிச்சயமாக ஜகாத் வாங்கும் நிலையில் அண்ணன் இல்லை!
நிச்சயமாக கொடுக்கும் நிலையில் தான் உள்ளார் . ஜகாத்தை கூட்டாக வசூலித்து விநியோகிக்கிறோம் எங்களிடம் உங்கள் ஜகாத்தை கொடுங்கள் எனக் கேட்கும் இவர் எந்தக் காலத்திலும் தன்னுடைய ஜகாத்தை ஜமாஅதிற்கு கொடுத்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை !
அடுத்ததாக நோன்பு இதிலும் இவருக்கு நம்பிக்கை உள்ளதாக தெரியவில்லை! ஏன் எனில் த.த.ஜ துவங்கிய காலத்தில் இருந்து தலைமை அலுவலகத்தில் சஹர் உணவு உண்பதற்கோ , அல்லது வீட்டில் உண்டு விட்டு ஸுபுஹ் தொளுகைக்கோ வந்ததில்லை ! மேலும் நோன்பு திறந்ததை யாரும் பார்த்ததும் இல்லை. இரவுத் தொழுகைக்கு கூட மேலே இருந்து கொண்டு வரமாட்டார். தொழுகை முடிந்து பயான் செய்ய மட்டுமே வருவார்.
அடுத்ததாக தொழுகை! இதைப் பற்றி உலகத்திற்கே தெரியும்! மக்கள் நம்மைப் பற்றி தவறாக நினைப்பார்களே எனும் கவலை சிறிதுமின்றி அலுவலகத்தில் இருந்து கொண்டே தொழுகைக்கு கீழே இறங்கி வர மாட்டார். தலைமை அலுவலகத்தில் இருந்து கொண்டு தொழாதவர் தனியே இருக்கும் போது தொழுவாரா? மோசமான நிலையில் உள்ள முஸ்லிம்கள் கூட வெள்ளிக் கிழமை தொழ வந்து விடுவார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை கூட தொழாமல் இருந்த சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு!
"அபு அப்துல்லாஹ் தொடங்கி நேற்று வெளியேறிய சைபுல்லாஹ் வரை இதற்க்கு அவரோடு நெருங்கி இருந்த சாட்சிகள் நிறைய உண்டு!"
"அபு அப்துல்லாஹ் தொடங்கி நேற்று வெளியேறிய சைபுல்லாஹ் வரை இதற்க்கு அவரோடு நெருங்கி இருந்த சாட்சிகள் நிறைய உண்டு!"
இறுதியாக கலிமா! இதை வாயளவில் சொன்னாலும் உள்ளப் பூர்வமானதா என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த விஷயம்! ஏன் எனில் பல வருடம் மதரசாவில் மார்க்க கல்வி கற்று ஆலிமான பின்னால் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு சென்று திரும்பி இஸ்லாத்திற்கு வந்ததாக அவரே கூறியுள்ளார். ஆகையால் அதிலும் சந்தேகமே மிஞ்சுகிறது!
மொத்தத்தில் இஸ்லாத்தின் எந்த அடிப்படை கடமைகள் மீதும் நம்பிக்கை இல்லாத இவர் இஸ்லாத்தைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் இஸ்லாம் எளிய மார்க்கம் என சொல்லில் கூறி விட்டு செயலில் அதன் கடமைகளை செய்யாமல் இஸ்லாம் கடின மார்க்கம் எனக் காட்டிக் கொண்டிருப்பது நகைப்புக்குரியது!
பலருக்கு வழி காட்டி விட்டு கை காட்டி மரம் போல் அதே இடத்தில் நிற்கும் அவருக்கு நேர்வழி காட்ட அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக! !
0 comments:
Post a Comment