த.மு.மு.க விடமிருந்து அபகரிக்கப்பட்ட உணர்வு இதழில் இந்த வாரம் (ஜூலை 8 -14 -2011 ) பதில்கள் பகுதியில் கேட்கப்பட்ட கேள்வி..
தாராபுரம் டி.என்.டி.ஜே கிளையில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சிலபேர் தற்போது வேறு இயக்கத்தில் இருக்கிறார்கள்.சில நேரங்களில் காவல் துறையினர் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு
விடுகின்றனர்.இம்மாதிரியான நேரங்களில் அவர்களுக்கு உதவலாமா?இதற்காக போராட்டங்களில் ஈடுபடலாமா?சில சகோதரர்கள் இதற்கு உதவலாம் என்றும் வேறு சிலர் நமக்கு எதிராக செயல்படும் அவர்களுக்கு உதவத் தேவை இல்லை என்றும் கூறுகின்றனர். இப்பிரச்சனையை குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் விளக்குங்கள்....
இதற்கு பதிலளித்த சகோ.பி.ஜே.அவர்கள், இது பொத்தம் பொதுவாக பதில் சொல்லத்தக்க கேள்வி அல்ல...என்று ஆரம்பித்து...வழ வழா கொழ கொழா என்று நீட்டி முழக்கி விட்டு... குர்ஆன்-ஹதீசுக்கு வருகிறார்.டி.என்.டி.ஜே. காரர்கள் வேறு இயக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவக்கூடாது. இது டி.என்.டி.ஜே.வின் நிலைப்பாடு என்று சகோ.பீ.ஜே சொல்லியிருந்தால் தொலைந்து போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் அவர் மார்க்கம் என்ற பெயரில் அப்பாவி தொண்டர்களை எங்கே இழுத்துச் செல்கிறார் என்பதை தெளிவு படுத்தவே இந்த விமர்சனம். அவரது குர்ஆன்-ஹதீஸ் விளக்கம் பாருங்கள்......
(முழு பக்கத்திற்கான விளக்கத்தில் மூன்றாம் பத்தியில் ) "மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை.நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கி கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 60- 8 ,9 )
த.மு.மு.க,விடியல்,பொய்யன் ஜமாஅத் ஆகியன மார்க்க விஷயத்தில்தான் நம்மோடு மோதுகின்றன.நம்மை ஒழிப்பதற்காக யாருடனும் அவர்கள் கூட்டு சேர்கின்றனர்.அப்படிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உள்ள தலைமை தான் அவர்களுக்கு பொறுப்பாகும்.நாம் இவர்களுக்காக களம் இறங்குவது மேற்கண்ட வசனத்திற்கு எதிரானது" என்று பத்வா கொடுக்கிறார் சகோ பீ.ஜே.
மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு இவர் உணர்வில் தந்த விளக்கம் இது. ஆனால் அவரது திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் (நான்காம் பதிப்பில் பக்கம் 1121ல்) மேற்கண்ட வசனத்திற்கு அவர் தந்திருக்கும் விளக்கம் இது:
முஸ்லிம்கள் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கட்டளை இடுகிறது.திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும் ,யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக படை திரட்டிக்கொண்டிருந்தர்கள்.எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார்கள்.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளின் பகுதியில் இருந்தனர்.அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர்.முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்கு தகவல்கள் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.காபிர்கள் குறித்தும்,இஸ்லாத்தின் எதிரிகள் குறித்தும் அதாவது முஸ்லிம்களை அழித்து,இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த,இப்படிப்பட்டவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தவர்களைப் பற்றி கூறப்பட்ட வசனத்தை மேற்கண்ட மூன்று அமைப்புகளுக்கு எதிராகத் திருப்பி குழப்பம் ஏற்படுத்துகிறார் சகோ.பீ.ஜே!
இதன் மூலம் பல அமைப்புகளில் இருக்கும் சகோதரர்கள் இணைந்து இணக்கத்தோடு இருப்பதற்கு வேட்டு வைக்கிறார் சகோ.பீ.ஜே. பீ.ஜே காழ்ப்புணர்ச்சி காட்டும் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் அவரது அமைப்பை எதிர்ப்பதாக பிதற்றுகிறார். அப்படியே ஒரு வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும், அவரது அமைப்பை எதிர்ப்பவர்கள் எப்படி இஸ்லாத்தை அழிப்பவர்களாக ஆக முடியும்?
இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாத்தை அழிக்கவும்,முஸ்லிம்களை ஒழிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார அமைப்புகள் தான்.முஸ்லிம்களை பார்த்து பாகிஸ்தானுக்கு ஓடுங்கள் என்று வீடுகளில் இருந்து வெளியேற்ற நினைப்பவர்களும் அவர்கள் தான்.அவர்களுக்கு வேண்டுமானால் மேற்கண்ட வசனத்தை பொருத்திப்பார்க்கலாம்.ஆனால் இவர்களுக்கு எதிராக,அதாவது...சங் பரிவாருக்கு எதிராக டி.என்.டி.ஜே வை விட வீரியமாக களமாடும் - பீ.ஜே விமர்சிக்கும் மூன்று அமைப்புகளை காபிர்களாக சித்தரிப்பது கயமைத்தனம் அல்லவா?
இன்னும் சொல்லப்போனால்.... "உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியற்றியோர், அவர்களுக்கு உதவி புரிந்தோர்" என்ற குர்ஆன் வசனத்திற்கு ஏற்ப மேற்சொன்ன அமைப்புகள் சங் பரிவார்களுக்கு உதவியும் செய்யவில்லை. ஆனால் அந்த வேலையை செய்தது டி.என்.டி.ஜே தான்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த டிசம்பர் ஆறு அன்று பாப்ரி மஸ்ஜித் போராட்டத்திற்காக தயாரான நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள டி.என்.டி.ஜே வினரை தூண்டி விட்டு ஐ.என்.டி.ஜே டிசம்பர் ஆறு போராட்டத்தை நடத்தக்கூடாது என்று பெட்டிஷன் கொடுத்து போராட்டத்தை தடுக்க முற்பட்டவர் பீ.ஜே. உயர் நீதி மன்றத்தில் வாழ்க்கை போட்டவர் பீ.ஜே.
அது மாத்திரமல்ல... இவரது தடை முயற்சியை தவிடு பொடியாக்கி போராட்டத்தை நடத்தியதால் கோபம் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்து..பாப்ரி மஸ்ஜித் போராட்டம் நடத்தியவர்களை தண்டிக்க சொன்னவர் பீ.ஜே.
இந்த வகையில் பார்த்தால் மேற்கண்ட குர்ஆன் வசனம் டி.என்.டி.ஜே வைத் தன சுட்டுகிறது என்று எடுத்துக்கொள்ள இடமுண்டு,முகாந்திரமும் உண்டு..ஆனாலும் நாம் பீ.ஜே வைப்போல் யாரையும் காபிர்கள் என்று சொல்ல மாட்டோம்.பீ.ஜே தொழவில்லை என்றாலும் காபிர் என்று சொல்ல மாட்டோம்.
தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள், கோபதாபங்களை வைத்துக்கொண்டு மார்க்கத்தை தவறாக சொல்வதும், சகோதரர்களுக்கிடையே பகைமையை உண்டாக்கி சமுதாயத்தில் புதிய ஃபித்னாவுக்கு வழி அமைப்பதை சகோ.பீ.ஜே நிறுத்திக் கொள்வது நல்லது.
- விமர்சகன்.
********************************************************************************************

0 comments:
Post a Comment