ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; த.மு.மு.க,விடியல்,பொய்யன் ஜமாஅத் ஆகியன மார்க்க விஷயத்தில்தான் நம்மோடு மோதுகின்றன.நம்மை ஒழிப்பதற்காக யாருடனும் அவர்கள் கூட்டு சேர்கின்றனர்.அப்படிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உள்ள தலைமை தான் அவர்களுக்கு பொறுப்பாகும்.நாம் இவர்களுக்காக களம் இறங்குவது 60 ;8 ,9 )வசனத்திற்கு எதிரானது" என்று பீஜே வழங்கிய பத்வா குறித்து உங்கள் பதில் என்ன?
-சாகுல் ஹமீது. தாங்கல் சென்னை.
பதில்; "மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை.நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கி கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 60- 8 ,9 )
மேற்கண்ட வசனத்தை ஆதாரமாக காட்டி, நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு பீஜே பத்வா வழங்கியுள்ளார்.
இது சரியா என்று பார்ப்பதற்கு முன்னால், அதே வார இதழில் இதற்கு முந்தைய கேள்வியாக 'முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமையவேண்டும்?' என்ற கேள்விக்கு மேற்கண்ட இதே வசனத்தையே மேற்கோள் காட்டி, 'நமது மார்க்கத்தை விட்டுக்கொடுக்காத வகையில் பழகுவதும் உதவிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதுதான்' என்று பத்வா வழங்குகிறார்.
நன்றாக கவனிக்கவேண்டும். ஒரே வசனத்தை வைத்து முஸ்லிமல்லாதவர்களுடன் பழகலாம்-உதவலாம் என்பவர், அதே மாதிரி மார்க்கத்திற்கு முரணில்லாத விஷயங்களில் முஸ்லிம்கள் எந்த அமைப்பினராக இருந்தாலும் அவர்களுக்கு உதவலாம் என்று இவர் கூறினால் இவர் அறிவாளி எனலாம். ஆனால் மார்க்க விஷயத்தில் மேற்கண்ட அமைப்பினர் அண்ணன் ஜமாஅத்துடன் மோதுகின்றனர் என்று நொண்டிக் காரணம் கூறி அவர்களுக்கு அதாவது முஸ்லிம்களுக்கு உதவுவது இந்த வசனத்திற்கு எதிரானது என்கிறார். உதவக்கூடாது என்கிறார்.
அண்ணனின் கூற்றுப்படி மேற்கண்ட இயக்கத்தினர் மார்க்க விஷயத்தில் மோதுகின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அணியாயமாக அவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டாலும் அவர்கள் வேறு அமைப்பில் இருப்பதால் உதவக் கூடாது என்பது சங்பரிவாரின் சிந்தனையல்லவா? ஆனால் இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வழிமுறை என்ன?
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்கள்;
என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புஹாரியில் உள்ளதே.
இதன் மூலம் விளங்குவது என்ன? ஒருவர் இணைவைப்பவராகவே இருந்தாலும் மார்க்க முரணில்லாத விஷயங்களில் உதவலாம் என்பதுதானே? அந்த வகையில் மற்ற அமைப்பு சகோதரர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு உதவுவது மார்க்க முரண் என்று பத்வா வழங்குவது இவரது வஞ்சத்தின் வெளிப்பாடல்லவா? ஒரு முஸ்லிம் அநியாயமாக பாதிக்கப்பட்டாலும் அவர் எங்கள் இயக்கத்தை எதிர்க்கிறார். எனவே அவர்களுக்கு உதவமாட்டோம் என்பது அநீதியல்லவா? ஆக முஸ்லிமல்லாதவருக்கு இறங்கும் இவர், முஸ்லிம்களுக்கு உதவக் கூடாது என்றால் இவர் யார் எனபதை சமூகம் புரிந்து கொள்ளட்டும்.
மேலும், மேற்கண்ட அமைப்பினர் மட்டுமன்றி, இன்னும் பல ஜமாத்தினர் அண்ணன் ஜமாஅத்தோடு மோதுகிறார்கள். எனவே அவர்கள் அண்ணன் ஜமாஅத்தில் சரணடைந்து கடிதம் தராத வரையில் அவர்களுக்கு உதவக் கூடாது என்றால், அண்ணன் ஜமாஅத்தை எதிர்க்கும் ஜாக்-இதஜ-லீக்குகள்-சுன்னத்வல் ஜமாஅத்-தப்லீக் ஜமாஅத்-அஹ்லே ஹதீஸ்-ஜமாத்தே இஸ்லாமி இப்படி தமிழகத்தில் இவரது அமைப்பில் இல்லாத 99 சதவிகித முஸ்லிம்களுக்கு இவரது அமைப்பு உதவாது என்றால், இவர் யாருக்காக இயக்கம் நடத்துகிறார் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ளவேண்டும்.
அண்ணன் ஜமாத்தினர் நீங்கலாக வேறு எவரும் முஸ்லிம்கள் இல்லை என்றும், மேற்கண்ட வசனம் யாரை நோக்கி இறங்கியதோ அந்த இணைவைப்பாளர்களுக்கு ஒப்பானவர்கள் என்றும் நேரடியாக சொல்லாமல் சுத்தி வளைத்து சொல்லும் இவர், மாநாடு-கூட்டம் என்றால் முஸ்லிம்களே வாருங்கள் என்பார்; கேட்டால் உலக கணக்கில் இவர்கள் முஸ்லிம்கள் என்பார். ஆனால் உண்மை அதுவல்ல சகோதர்களே! நீங்கள் அண்ணன் ஜமாஅத்தில் சேராதவரை அல்லது அடிமைக் கடிதம் எழுதித் தராதவரைக்கும் உங்களுக்கு உதவமாட்டோம் என்று சொல்வதன் மூலம் நீங்கள் அண்ணன் பார்வையில் உலக கணக்கில் கூட முஸ்லிம்களாக கணக்கிடப் படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இவரது சங்பரிவார சிந்தனையை தெரிந்து கொள்ளுங்கள்.
********************************************************************************************
0 comments:
Post a Comment