ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..
கேள்வி; ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணன் பீஜே கூறியுள்ளாரே?
-அப்துர்ரஹ்மான் தொண்டி.
பதில்; பீஜே மட்டுமன்றி எவரும் தன் பெயரில் இணையதளம்
வைத்துக் கொள்வதில் தவறில்லை. எப்போது எனில் அந்த இணையதளம்
முழுக்க முழுக்க அவரது சொந்த செலவில் நடத்தப்படும் நிலையில் தாராளமாக தனது பெயரை வைத்துக் கொள்வதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் ஆன்லைன் பீஜே இணையதளம் என்பது பீஜேயின் சொந்த செலவில் நடத்தப்படவில்லை என்பதற்கு அவரது இணையதளத்திலேயே சான்றுஉள்ளது. தனி சர்வர் எடுத்து அதற்கான கட்டணத்தை வளைகுடா
வைத்துக் கொள்வதில் தவறில்லை. எப்போது எனில் அந்த இணையதளம்
முழுக்க முழுக்க அவரது சொந்த செலவில் நடத்தப்படும் நிலையில் தாராளமாக தனது பெயரை வைத்துக் கொள்வதில் எவரும் குறை காண முடியாது. ஆனால் ஆன்லைன் பீஜே இணையதளம் என்பது பீஜேயின் சொந்த செலவில் நடத்தப்படவில்லை என்பதற்கு அவரது இணையதளத்திலேயே சான்றுஉள்ளது. தனி சர்வர் எடுத்து அதற்கான கட்டணத்தை வளைகுடா
சகோதர்கள் கட்டுவதாக அண்ணனே கூறியுள்ளார். எனவே எப்போது பொதுமக்களின் பணம் இதில் கலந்து விட்டதோ அப்போதே இந்த இணையதளம் தனியொருவரின் உடமையல்ல என்பது திண்ணம்.
மேலும் பொதுப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பின் இணையதளம் தனிநபர் பெயரில் இயங்குவது முறையல்ல. எஸ்.எம்.பாக்கர் தனி அமைப்பு கண்டவுடன் அந்த அமைப்பின் இணையதளம் எஸ்.எம்.பாக்கர் ஆன்லைன் டாட் காம் என்ற பெயரில் இருந்தபோது அதை நாம் உட்பட விமர்சித்தோம். உடனடியாக அவர் அமைப்பின் பெயரில் மாற்றிவிட்டார். இப்போது ஒரு சந்தேகம் வராலம். ஆன்லைன் பீஜே இணையதளம் அமைப்பு இணையதளம் அல்லவே என்று.
உண்மையில் அவ்வாறு சொல்லப்பட்டாலும்
அது டி.என்.டி.ஜே.வின்
அதிகாரப் பூர்வ இணையதளமாகவே செயல்படுகிறது. பீஜே என்ன சொன்னார்? டி.என்.டி,ஜே. இயக்கம் குறித்த செய்திகளை வெளியிட தனி இணையதளம் இருப்பதால் எனது இணையதளத்தில் இயக்கம் தொடர்பான எதுவும் இடம்பெறாது என்றார். ஆனால் உண்மை என்ன? ஐநூறு-ஆயிரம் உதவி பற்றிய செய்திகள் தான் டி.என்.டி.ஜே டாட் நெட்டில் வருகிறது. இயக்கம் சார்ந்த முக்கிய செய்திகள் அனைத்தும் இவரது இணையதளத்தில் தான் வெளியாகிறது எனபதை அனைவரும் அறியலாம்.
சாம்பிளுக்கு சொல்வதனால் சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா ததஜ மீது வைத்த குற்றச்சாட்டிற்கு அப்துர்ரஹ்மான் பிர்தவ்சியும், அப்துன்நாசரும் விளக்கமளிக்கிறார்கள். இந்த வீடியோ முறைப்படி ததஜ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நீங்கள் பார்க்கமுடியாது. இவரது இணையதளத்தில் பார்க்கலாம். இதுபோன்று இயக்கம் சார்ந்த செய்திகள் அடுக்கடுக்காக இவரது இணையதளத்தில் உள்ளது. எனவே இது சந்தேகமின்றி இயக்கத்தின் இணையதளமேயன்றி இவரது அல்ல என்பது தெளிவு.
எனவே பொதுப்பணத்தில் நடத்துவதாலும், இயக்கத்தின் இணையதளமாக நடத்துவதாலும் ஆன்லைன் பீஜே இணையதளத்தை பொதுப்பெயரில் மாற்றுவதே முறையாகும். இல்லை தன் பெயரில்தான் இயங்கும் என்றால் எவரிடத்திலும் ஐஞ்சு பைசா வாங்கமாட்டேன்; சர்வர் உட்பட எல்லா செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று பீஜே அறிவிக்கட்டும். அதே போல் அவர் சொன்னது போன்று இயக்கத்தின் செய்திகள் குறித்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும். அப்படியானால் மட்டுமே பெயர் மற்றம் செய்யும் அவசியமில்லாநிலை ஏற்படும்.
ஆனாலும் அண்ணன் பீஜெயிடம் இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் டிரஸ்ட் கூடாது என்று சொல்லிக்கொண்டு அவரே உடும்புப் பிடியாக இரண்டு டிரஸ்டையும் அதற்குரிய சொத்துக்களையும் நிர்வகிக்கிறாரே?
0 comments:
Post a Comment