மகளைக் கடத்தி கட்டாய மத மாற்றம் செய்ததாக குமரியில் கர்நாடக பெற்றோர் கதறி அழுதனர்.
தக்கலை அருகே உள்ள செம்பருத்தி விளையை சேர்ந்தவர் சுனில் (25). 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கடந்த வருடம் கர்நாடக மாநிலம் பெங்களூரில்
உள்ள செல்போன் கடை ஒன்றில் பணி யாற்றி வந்தார். அப்போது பெங்களூர் ஹாசன் சிட்டி பகுதியை சேர்ந்த சைனபா என்ற பிளஸ் 2 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் சைனபாவின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சைனபாவை பள்ளியை விட்டு நிறுத்தினர். இதன் பின்னர் செல்போன் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்த சைனபா கடந்த செப்டம்பர் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி காதலன் சுனிலுடன் குமரி மாவட்டம் வந்தார்.
இங்கு அவரது பெயரை சாரோஏஞ்சல் என மாற்றிய சுனில் சைனபாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே சைனபா மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஹாசன்சிட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துவிட்டு பல இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சைனபாவை பிரசவத்திற்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுனில் அனுமதித்தார். அங்கு கடந்த 20ஆம்தேதி சிசேரியன் மூலம் சைனபாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. சைனபா மருத்துவமனையில் இருப்பதை எப்படியோ அறிந்த அவரது பெற்றோர் கர்நாடக காவல் துறையின் உதவியுடன் கடந்த 3 நாட்களுக்கு முன் குலசேகரம் வந்தனர்.
மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்த கர்நாடக காவல்துறையினர் சைனபாவை சுனில் ஏமாற்றி இங்கு அழைத்து வந்ததாகவும் அவர் சைனபாவை கொடுமை படுத்துவதாகவும் அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அவரை பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியுள்ளது என்றும் அதனால் அவரை தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தனர்.
ஆனால் மருத்துவர்களோ, சைனபாவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் அவரை இப்போது அனுப்பி வைக்கமுடியாது என்று கூறிவிட்டனர். இதையடுத்து கர்நாடக காவல்துறையினர் குலசேகரம் காவல்துறையின் உதவியை நாடினர். குலசேகரம் காவலர்களும் டாக்டர்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் சைனபாவின் பெற்றோரோ எப்படியாவது சைனபாவை தங்களுடன் அழைத்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணத்தில் தங்களது ஆதரவாளர்களுடன் மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் சுனில் நேற்று மதியம் யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து சைனபாவை டிஸ்சார்ஜ் செய்து மருத்துவக் கல்லூரி பின் வாசல் வழியாக அழைத்துச் சென்று விட்டார். நீண்ட நேரத்திற்கு பிறகு சைனபா மருத்துவமனையை விட்டு சென்றதை அறிந்த சைனபாவின் பெற்றோர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
********************************************************************************************

0 comments:
Post a Comment