மிஸ்டர் கழுகு: 'வில்லங்க' விஜி!

அதையே கழுகாரிடம் சொன்னோம். ''இரண்டு நாட்களாக போலீஸ் வட்டாரத்தில் கேட்கும்
புலம்பல் இதுதான். 'கோட்டைவிட்டதா போலீஸ்?’ என்று ஆட்சி மேலிடத்தில் இருந்து கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போலீஸ் உயர் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்'' என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார் கழுகார்!
''மதுரை மண்டலம் அண்ணன் அழகிரியின் கோட்டை என்றால், அதன் காரியதரிசி பொட்டு சுரேஷ். யார் கலெக்டர், யார் எஸ்.பி. என்பது முதல் யார் யாருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கலாம் என்பது வரைக்கும் முடிவு எடுக்கும் நபர். தகுதியான பலர் காத்திருக்க, இவரைக் கவனித்துவிட்டு ஈஸியாகப் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பல்வேறு துறைகளிலும் இருக்கிறார்கள். தவிர, வெளியே வராத பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களும் இருந்தன. இதை மதுரைப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதாவே வெளிப்படையாகத் தாக்கினார்.''
''அதைத்தான் நாடறியுமே!''

''அதுதான் நிராசையாக ஆகிவிட்டதே?''
''பொட்டு சிறைக்குள் போய் 120 நாட்கள் தாண்டிவிட்டன. 'ஆள் ரொம்ப உடைஞ்சுட்டாராம்’ என்றெல்லாம் சொந்தக் கட்சியினரே பேசிக்கொள்ள, அத்தனை வழக்குகளையும் உடைத்துவிட்டு வெளியே வந்துவிட்டார் பொட்டு. 'போலீஸ் நடவடிக்கையில் நிறைய ஓட்டைகள் இருந்ததால், குண்டாஸை ஈஸியாக உடைத்துவிட்டார்கள்’ என்றார் ஒரு தி.மு.க. வக்கீல். நீதிபதிகள் சி.நாகப்பன், டி.சுதந்திரம் ஆகியோர், 'பொட்டு சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் அடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி பிறப்பித்த உத்தரவு, ஆவணங்களின் அடிப்படையில் இல்லை... அவை மேம்போக்கானவை என்பது தெரிகிறது.’ என்று சொல்லி போலீஸைத்தான் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். இதுவே ஆட்சி மேலிடத்தில் இருப்பவர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது.''
''இந்த விவகாரத்தைக் கவனிக்கும் உயர் அதிகாரிகள் கடுமையான ஆட்கள்தானே?''
'மதுரை மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் சிலரைத் தவிர, 'எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் அளவிலான அதிகாரிகள் இப்போதும் பொட்டுவுக்கு விசுவாசமாகவே இருக்கிறார்கள்’ என்ற கருத்தும் உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விவகாரம் இது. வாரப் பத்திரிகை நிருபர் பாண்டியனைத் தாக்கிய வழக்கில் பொட்டுதான் முதல் குற்றவாளி. ஒருவரைக் கைது செய்தால், அடுத்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்ட சுரேஷை

''அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணுவாரா?''
''மதுரையில் இப்போது எவருமே ஆக்டிவ் பாலிடிக்ஸ் பண்ணவில்லை. பொட்டு மட்டும் பண்ணுவாரா என்ன?'' என்று சிரித்த கழுகாரைப் பார்த்து நாமும் சிரித்தோம்!
''முதல்வர் ஜெயலலிதாவை மையப்படுத்தி சர்ச்சை கிளப்பிய சிறுதாவூர் பங்களா விவகாரம் மீண்டும் சிறகடிக்க ஆரம்பித்துவிட்டது. மாநிலம் முழுவதும், தி.மு.க. மற்றும் பலரால் கடந்த ஆட்சியில் அபகரிக்கப்பட்ட நிலங்களை விசாரிக்க மாவட்டக் குற்றப் பிரிவுடன் இணைந்த தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் முன்னாள் அமைச்சர்கள் வரை பலரும் சிறைக்கு செல்கிறார்கள். இதில் சந்தடியில்லாமல் ஒரு திடுக் வழக்குப் பதிவாகிவிட்டது...''
''என்ன சொல்ல வருகிறீர்?''
''சில தினங்களுக்கு முன்பு காஞ்சி மாவட்டத்தில் இயங்கி வரும் நில அபகரிப்புப் புகார் தொடர்பான பிரிவுக்கு, சென்னை பாலவாகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்மணி சத்தம் இல்லாமல் வந்து போனார். ஓர் இடத்தையும் குறிப்பிட்ட சர்வே எண்ணையும் புகாரில் தெரிவித்து, இந்த இடம் தன்னிடம் இருந்து சில நபர்களால் மோசடியாக அபகரிக்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவித்தார். நில அபகரிப்புப் புகார் என்றாலே ஆர்வம் காட்டும் போலீஸாரும், முறைப்படி புகாரைப் பதிவுசெய்துகொண்டார்கள். விசாரணைக்காக எதிர்த் தரப்புக்கு தேதி குறிப்பிட்டு சம்மனையும் ஓர் அதிகாரி மூலம் கொடுத்து அனுப்பினார்களாம்.''
''வந்தாரா எதிர் பார்ட்டி?''
''வருவதாவது...! குறிப்பிட்ட அந்த விலாசத்துக்கு இரண்டு காவலர்கள் இயந்திரத்தனமாக சம்மனைக் கொண்டுசேர்த்த அடுத்த அரை மணி நேரத்தில், காஞ்சி மாவட்டக் காவல் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சி. சம்பந்தப்பட்ட புகாருக்கு உரிய இடம் வேறு எதுவும் அல்ல; அந்த சிறுதாவூர் பங்களாவேதான்!''
''நீர் உண்மையைத்தான் சொல்கிறீரா?''
''விஷயத்தை முழுமையாகக் கேளும்! அந்த நிலம் யார் பெயரில் உண்டோ... அவருக்குத்தான் காவல் அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். அவர்கள் மூலமாகக் காவல் துறை உயர் வட்டாரத்தில் விசாரிப்பு நடக்கவும்...... சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல் அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து காச்மூச்சென்று கத்திவிட்டார்களாம் பெரிய அதிகாரிகள்!''
''ஹையோ... ஹையோ!''
''கேளும்... 'ஏன்யா, எந்தப் புகார் வந்தாலும் முன்னப்பின்ன விசாரிக்காம சம்மனைக் கொண்டுபோய் நீட்டுவீங்களா?’ என்று எழும்பிய கேள்விக்கு போலீஸ் அதிகாரிகளால் சரியான பதில் சொல்ல முடியவில்லையாம். 'சம்பந்தப்பட்ட அந்த பெண்மணியிடம் பேசி விசாரணை செய்து, விஷயம் வெளியே தெரியாதவாறு அடுத்தக் கட்ட விஷயத்தைக் கவனியுங்கள்’ என்று கூடுதல் உத்தரவு வந்ததாம். இதனால், இப்போது இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ள போலீஸார், மேலிட உத்தரவுப்படி சத்தம் இல்லாமல் விசாரணை செய்கிறார்கள். இந்தப் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 22-ம் தேதி, உரிய ஆவணங்களுடன் வருமாறு விஜயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆவணங்களில் போலித்தன்மை இருந்தால், அவர் மீதே கைது நடவடிக்கை எடுக்கலாம். மாறாக அந்த விஜயலட்சுமிக்கு மாற்றுக் கட்சியின் ஆதரவு கிடைத்தால், சிறுதாவூர் மறுபடி தலைப்புச் செய்தி ஆகலாம்.''
''சம்மன் அனுப்பிய அதிகாரிகளை சும்மா விட மாட்டார்களே..?''
''மூன்று பேருக்கு துறைரீதியாக மெமோ கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி, கனிமொழியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தபோதே, ராஜாத்தி அம்மாள் ஆவேசமாகி, 'நம் வழக்கறிஞர்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. டெல்லியையே ஆட்டிப்படைக்கும் எத்தனையோ வல்லமை மிகுந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் அவர்களை வைத்து வாதாடினால்தான் ஜாமீன் சாத்தியமாகும்’ எனக் கருணாநிதியிடம் எவ்வளவோ போராடிப் பார்த்தாராம். ஆனால், 'எல்லாம் நல்லபடி நடக்கும்’ எனச் சொல்லி, வழக்கமான சட்டப் போராட்டத்தையே முழுமையாக நம்பி இருந்தார் கருணாநிதி.
''உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு டிசம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட, ராஜாத்தி அம்மாள் தரப்பு ரொம்பவே கோபமாகிவிட்டது. 'சி.பி.ஐ. தரப்பில் ஆட்சேபனை இல்லாதபோதே ஜாமீன் பெற முடியாதவர்கள், சி.பி.ஐ. ஆட்சேபித்து இருந்தால்... ஜாமீன் விவகாரத்தையே கை கழுவி இருப்பார்கள். தி.மு.க-வின் சில சக்திகள் திட்டமிட்டு கனிமொழியை உள்ளேவைக்கப் பார்க்கின்றன'' என்று சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.
*********************************************************************************
கழுகார் பதில்கள்


மானியம் என்பது ஏதோ ஆகாயத்தில் இருந்து யாரோ தூக்கிப் போடும் பணம் அல்ல. அதுவும் நம் பணம்தான்!
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசின் பட்ஜெட்டில் சுமார்


வண்ணை கணேசன், சென்னை 110.

தொண்டர்கள்தான். எந்தப் பக்கத்தை ஆதரிப்பது என்று தெரியாமல் குழம்பிப்போய் இரண்டு பக்கத்து எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொள்வது அவர்கள்தானே!
சில மாதங்களுக்கு முன்னால் முக்கியக் கட்சியில் சேர்ந்தார் காமெடி நடிகர் ஒருவர். தனது பேட்டியில் தலைவரின் ஒரு வாரிசு பெயரை மட்டும் சொன்னார். இன்னொரு வாரிசுக்கு இதனால் கோபம். 'என் பெயரை ஏன் சொல் லலை?’ என்று கோபித்துக்கொண்டார். அடுத்த பேட்டியில் இரண்டு பேர் பெயர்களையும் சொன்னார். 'அவரு பேரையும் எதுக்கு சொன்னீங்க?’ என்று மூத்தவருக்கு கோபம். 'அவ்வ்வ்வ்வ்வ்வ்...’ என்றார் காமெடி!
இர.இரபீந்த், இரணியல்

ஜெயலலிதா, 109 தடவை இழுத்து இப்போதுதான் பெங்களூருவை நெருங்கி இருக்கிறார்.
கனிமொழிக்கு சிறைக்குள் இருப்பதால் கோர்ட்டுக்கு வர மாட்டேன் என்று சொல்ல முடியாது. உங்கள் கேள்விக்கான பதிலை இதில் இருந்து தேடிப் பாருங்கள்!
பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4

அந்த அரசியல்வாதிகளின் மனைவிகளும் வாரிசுகளும் இருக்கிறார்களே!
உலகமே அதிரக்கூடிய ஊழலில் அரசியல்வாதி கைதானாலும் 'எதுவுமே நடக்காதது மாதிரி’ உட்கார்ந்து பேட்டிகள் கொடுக்கும் சாமர்த்தியசாலிகள் அவர்கள்!
வரதப்பன், சுங்குவார்சத்திரம்


மொழியைக் காக்க தனது உடலைக் கொடுக்கலாம் என்ற எண்ணத்துக்கு வித்திட்ட முதல் தியாகி சின்னச்சாமி. 'இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி, 1965, ஜனவரி 25-ம் நாள் முதல் அது அமலாகும்’ என்ற உத்தரவு வந்தது. அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வந்துகொண்டு இருந்தார். 'தமிழை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று அவரது காலடியில் போய் சின்னச்சாமி விழுந்தார். 'யாரோ ஒரு பைத்தியக்காரர்’என்று நினைத்து போலீஸ் கைது செய்து 15 நாள் சிறையில் அடைத்தது. விடுதலையான சின்னச்சாமி விரக்தியோடு திருச்சி திரும்பினார்.
அன்றைய 'தினத்தந்தி’ நாளிதழில் ஒரு செய்தி. புத்த மதத்தைக் காப்பாற்ற தாய்லாந்தில் இரண்டு புத்த பிட்சுக்கள் தங்களது உடலுக்குத் தீவைத்து இறந்துபோனதாகச் சொன்னது அந்தச் செய்தி. நாமும் தமிழுக்காக தீ வைத்துக்கொண்டால் என்ன என்று யோசித்து, அதன்படியே தீக்குளித்து இறந்தார். அவரைத் தொடர்ந்து, தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள்!
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி

தமிழகம் பரவாயில்லை, இந்த அளவுக்கு நம் மாநிலத்தின் நிலைமை மோசமாகவில்லை என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி

ஏதோ ஒரு கட்சியாக இருங்கள் என்றுதானே எதிர்பார்க்கிறான் வாக்காளன்!
'காசி’ யோக அக்ஷயா, கோவை.14

மீடியாக்களால் குற்றம் குறைகளைச் சொல்லத்தான் முடியும். தண்டிக்க வேண்டிய அதிகாரமும் சக்தியும் மக்கள் கையில்.
இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் ஆயினும் கெடும் - என்கிறார் வள்ளுவர். இடித்து உரைக்கின்றன மீடியாக்கள். முன்னதாகவே உஷாரானால்... அவர்களுக்கு நல்லது. இல்லாவிட்டால் ஆபத்துக்கள் சூழும். எனவே மீடியாக்கள் நினைத்தால், அனைத்து அட்டூழியங்களையும் ஒழித்துவிட முடியும் என்று உங்களைப் போன்ற பொதுமக்கள் சும்மா இருந்துவிடக் கூடாது!
பா.சு.மணிவண்ணன், திருப்பூர்.4

தயாராகி வருகிறது. ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்!
*********************************************************************************
பொங்கலில் புதுக் கட்சி!
பொளந்து கட்டும் போட்டி பா.ம.க.



அடுத்து, தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காமராஜ் எழுந்து, ''இனி நமது தலைவர் வேல்முருகன்தான். அவரது தலைமையில் நாம் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு மாவட்டமாக அவர் வரப்போகிறார். மக்களைச் சந்திக்கப்போகிறார். ராமதாஸ் குடும்பம் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றியது என்பதை பா.ம.க-வினரிடமும் பொதுமக்களிடமும் புட்டுப்புட்டுவைக்கப் போகிறார். பா.ம.க-வை பத்தியோ அதனுடைய கொள்கையை பத்தியோ தெரியாமல் இருக்கும் அன்புமணியைவிட எங்கள் வேல்முருகன் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். இனி பா.ம.க-வும் எங்களுடையதுதான்; மாம்பழச் சின்னமும் எங்களுடையதுதான். அதைக் கைப்பற்றாமல் ஓய மாட்டோம்'' என்று சீறினார்.
முன்னாள் எம்.பி-யான பு.தா.இளங்கோவன், அவரது சகோதரர் பு.தா.அருள்மொழி ஆகியோரை யும்

வன்னியர் சமுதாய மக்களின் நாயகனாக விளங்கும் வேல்முருகன் என்ன சொல்கிறார்? ''ராமதாஸுக்கு முன்னாடி ஏ.கே.நடராஜன் வன்னியம் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்தே நானும் அதில் இணைந்திருந்தேன். இந்த இனத்துக்காக அவர் செய்த துரோகங்களை ஆதாரத்தோடு என்னால் பட்டியல் போட முடியும். புதிய கட்சி தொடங்குவதுபற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள நம் உறவுகள் என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறேன். தமிழர்களுக்கு நிச்சயமாக தை பிறந்தால் வழி பிறக்கும். நான் ஏற்கெனவே, மாவீரர் தினம், கூடங்குளம் பிரச்னை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக உறுதி கொடுத்திருக்கிறேன். அதற்காக, நேரம் இல்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன். ஆகவே, எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம், தை மாதத்தில் கண்டிப்பாக நடக்கும்.'' என்று உறுதியாகச் சொன்னார்.
தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு ஊராகப் போய் அதிருப்தியில் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகளிடமும் பேசுவதற்காக டூர் புரோகிராமைத் தயார் செய்துவிட்டாராம் வேல்முருகன்.
தைலாபுரத்தின் பதிலடியையும் கவனிப்போம்!
- கே.ராஜாதிருவேங்கடம், வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார், ஜெ.முருகன்
'கொசுவை அடித்தோம்!’
'கடலூர் மாவட்ட பா.ம.க. கட்சி அலுவலகம் எனக்குத்தான் சொந்தம். தைரியம் இருந்தால் ஐயாவோ, மணியோ அல்லது குருவோ இந்த மண்ணில் கால் வைத்துவிட்டு அலுவலகத்தின் சாவியை வாங்கிக்கொள்ளட்டும்’ என வேல்முருகன் பகிரங்கமாகச் சவால் விட்டிருந்தார். ராமதாஸ் ஆதரவாளர்களோ கட்சி அலுவலகத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி காவல் துறையில் புகார் செய்தனர்.
கடலூரில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருக்க, சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட் கிரன் குராலா உத்தரவின் பேரில், வட்டாட்சியர் எழிலன் மூலம் பா.ம.க. அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். அலுவலகத்தின் ஒரிஜினல் டாக்குமென்டை நீதிமன்றத்தில் சரண்டர் செய்துவிட்டு சாவியை வாங்கிக்கொள்ளுங்கள் என வட்டாட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்.
இந்தச் சூழ்நிலையில்தான், வேல்முருகன் சவாலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என, கடந்த 13-ம் தேதி கடலூர் மாவட்ட பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டி இருந்தார் ராமதாஸ். கூட்டத்துக்கு அவரே தலைமையும் ஏற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் வேல்முருகனைத் திட்டித் தீர்த்தனர். எந்தச் சலனமும் இல்லாமல் கடைசியாக மைக் பிடித்தார் ராமதாஸ். ''இந்தக் கூட்டத்துக்கு நான் வர வேண்டுமா என முதலில் யோசித்தேன். நிர்வாகிகளை மட்டும் அனுப்பலாம் என நினைத்தேன். ஆனால், அது சரியா வராது என்றுதான் புறப்பட்டு வந்தேன். பிஞ்சிலேயே பழுத்தவர்கள் மக்களுக்குப் பயன்பட மாட்டார்கள் என்றுதான் தூக்கிப் போட்டுவிட்டோம். கொசு கடிச்சா, யாராவது வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போமா? கடிச்சது... தட்டினோம்... விழுந்துடுச்சு. அதுக்காக வருத்தப்பட வேண்டியது இல்லை. பா.ம.க. ஒரு ஆலமரம். இதில், எந்தப் பறவைகளும் வந்து தங்கலாம்; பழங்களைத் தின்னலாம்...'' என்று எதையோ மறைமுகமாகப் பேசி முடித்தார்.
''கடலூர் மாவட்டப் பொதுக் குழு என்று பெயர் போட்டுவிட்டு பல மாவட்டத்தில் இருந்தும் ஆட்களைக் கொண்டுவந்துட்டாரு ராமதாஸ்'' என்று அங்கே இருந்தவர்களே சொல்லிக்கொண்டதைக் கவனிக்க முடிந்தது!
- க.பூபாலன்
************************************************************************
வைகோ மேடையில் தமிழச்சி!

''என் தந்தையின் நீண்ட நெடுங்கால நண்பர் அண்ணன் வைகோ அவர்களே...''என்று புன்ன கையுடன் ஆரம்பித்த தமிழச்சி, காசி ஆனந்தனின் பல்வேறு கவிதைகளைப் படித்துக் காட்டிக் கூட்டத்தை வசப்படுத்தினார். ''இலங்கையில் லட்சக் கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது நாம் மௌனமாக இருந்தோம். கை கட்டி வேடிக்கை பார்த்தோம். இந்த உலகத்தில் கை கட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, கருத்து மட்டும் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை...'' என்றார் தமிழச்சி.
அடுத்துப் பேசிய காசி ஆனந்தனின் பேச்சில் ஏக சீற்றம். ''வியட்நாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில், இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். ஆனால், ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலை யுண்டு விழுந்த நேரத்தில், யார் ஈழத் தமிழ் மக்களுக் காக எழுதினார்கள்?

அவற்றை எல்லாம் எழுத்தில், கவிதையில், திரைப்படத்தில், சிற்பத்தில் வடிக்கும் காலம் வந் துள்ளது. ஓவியர் சந்தானம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை வைத்து வரைந்த படத்தினை மாதிரியாகக்கொண்டு முருகன் என்கின்ற சிற்பி தஞ்சையில் சிலை வடிக்கிறார். அந்த நினைவுச் சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை இந்த உலகுக்கு என்றும் பறை சாற்றி நிற்கும். அப்படிப்பட்ட கலைஞனே இன்று இந்த மண்ணுக்குத் தேவை.'' என்று சீறினார்.
அடுத்து மைக் பிடித்த வைகோ, '' 'காந்தித் தாத்தா நல்ல தாத்தா... கருணை உள்ளத் தாத்தா... மாந்தரிலே பெரிய தாத்தா... மகாத்மா காந்தித் தாத்தா’ என்பதுதான் காசி ஆனந்தன் சிறு வயதில் எழுதிய முதல் கவிதை. காலம் எத்தகைய ஒரு பிரளயத்தை அவரின் இதயத்தில் உருவாக்கி இருக்கிறது. சின்ன வயதில் இப்படி எழுதியவர் இப்போது வெளியிட்ட நறுக்குகளில், 'மகாத்மா... கொல்லாதவன் உனக்கு மகாத்மா’ என்று எழுதி இருக்கிறார். என்ன சொல்ல வருகிறார் தெரிகிறதா? கொன்றவர்களைக் கொல்ப வன் எனக்கு மகாத்மா என்கிறார்...'' என்று வைகோ நிறுத்த, விசில் பறந்தது!
- தி.கோபிவிஜய்
படம்: வீ.நாகமணி
*********************************************************************************
எப்படி இருக்கிறது உயர் நீதிமன்றப் பாதுகாப்பு?
சென்னை செக்கப்

அனுமதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, காவலரின் கையப்பம் பெற்றபிறகு வரிசையாகச் செல்லவேண்டும். முதலில் பேக்கேஜ் ஸ்கேனர் கொண்டு உடைமைகள் சோதிக்கப்படுகிறது. பின்பு வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் கருவி கொண்டு உடல் சோதனை நடைபெறுகிறது. இதன்பிறகே கோர்ட் வளாகத்துக்குள் நுழையமுடியும். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு நீதிமன்ற வளாகம் எப்படி இருக்கிறது என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கருத்து கேட்டோம்.
விமலா: (உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர்)

வழக்கு சம்பந்தமாக வருபவர்கள், தங்களுடைய வழக்கு எண் பற்றியும் எந்தக் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு வருவது நல்லது. சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் முக்கிய நுழைவாயிலான எஸ்பிளனேட் கேட், மக்கள் உள்ளே வர பயன்படுத்தப்படுகிறது. மற்ற நுழைவாயில் களான பார் கவுன்சிலிங் கேட், ஆவின் கேட், நார்த் கேட், சௌத் கேட் மற்றும் லீகல் எய்ட் கேட் போன்ற அனைத்து வழிகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை நடைபெறுகிறது. காலை 8 மணி தொடங்கி இரவு 8 மணி வரை காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விரைவில், உயர்நீதிமன்ற வளாகத்தினுள் 16 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. அதனால் ஒரு நல்ல பாதுகாக்கப்பட்ட வளாகத்தில் நுழையும் இனிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த மாற்றங்கள்.
.jpg)

இப்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வரவேற்கப்பட வேண்டியது. வழக்கறிஞர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை, அவர்களின் வாகனத்திற்கு பார் கவுன்சிலின் அனுமதிச்சீட்டு தரப்பட்டுள்ளது. பொது மக்கள் வாகனங்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்கள் பணியை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வெளியே செல்லமுடிகிறது. இப்போதும் வாதி, பிரதிவாதிகளோடு சேர்ந்து உறவினர்களும், நண்பர்களும் வந்து விடுகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.
மோகன கிருஷ்ணன்: (சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர்)

அன்பு: (துணை கமிஷனர், பூக்கடை)
கடந்த ஒரு மாதமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் பாதுகாப்புப் பணிகள் செவ்வனே நடைபெறுகிறது. பெண்களுக்கெனத் தனி வரிசையும் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேக வரிசையும் இருப்பதால் மிகவும் எளிதாக பரிசோதனை நடைபெறுகிறது. தலைமை நீதிபதி இக்பால், அவ்வப்போது ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் செய்கிறார். பாதுகாப்பு காரணமாக தேவையற்ற ஆட்களும், வெளி வாகனங்கள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வளாகம் இப்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உள்ளே நுழைவதற்கு வழங்கப்படும் என்ட்ரி பாஸ், திரும்ப வாங்கப்பட்டு பதிவு செய்யப்படுவது இல்லை. ஒரு கேஸ் சம்பந்தமாக ஒன்பது பேர் வருகிறார்கள் என்றால் அனைவரது தகவல்களும் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், ஒரே அனுமதி சீட்டில் 9 என்று எழுதிவிட்டு அனைவரும் நுழைகிறார்கள். மேலும் அனுமதிச் சீட்டினை நிரப்புவதற்கான இட வசதி எதுவும் இல்லை என்பதால் மேஜை தேடி அலைகிறார்கள்.
இந்தக் குறைபாடுகளை நீக்க,''டெல்லி, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புகைப்படத்துடன் அனுமதிச் சீட்டு கம்ப்யூட்டர் மூலம் கொடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடு இங்கேயும் கையாளப்பட வேண்டும்'' என்கிறார்கள் நீதிமன்ற ஊழியர்கள்.
அடுத்தகட்டமாக அதுவும் நடைமுறைக்கு வரும் என்றே நம்புவோம்!
- ரமா ஆல்பர்ட்
படங்கள்: என்.விவேக், கே.கார்த்திகேயன்
*********************************************************************************
ஐ.டி. நிறுவனத்தில் 'சாதி'ப் போட்டி
தலைநகரத்தில் நடந்த கொடுமை!
.jpg)
'பேபால்’ என்ற ஐ.டி. நிறுவனத்தின் வாயிலில் திரண்டு நின்றது 'சேவ் தமிழ்’ இயக்கம்! 'பேபால் நிறுவனம் சாதியத்தை வளர்க்கிறது’ என்று அர்த்தம் தொனிக்கும் பேனரைப் பிடித்திருந்த இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளைக் கொடுத்தனர். இதைக் கேள்விப்பட்டு ஆடிப்போனது பேபால் நிறுவனம்!
என்ன பிரச்னை?
சென்னைக்கு அருகே சோழிங்கநல்லூரில்இருக்கிறது பேபால் ஐ.டி. நிறுவனம். அது தனது ஆண்டு விழாவைக் கொண்டாட இருந்தது. வழக்கமாக இதுபோன்ற விழாக்களுக்கு முன்பு ஊழியர்கள் மத்தியில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களுக்கு இடையே போட்டிகள் நடத்தி பரிசுகள் அளிப்பதும் வழக்கம். இந்த ஆண்டும் அப்படி கொண்டாட நினைத்தது பேபால் நிறுவனம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அந்தக் குழுக்களுக்கு 'அய்யர்ஸ் ஆஃப் தமிழ்நாடு’, 'பானர்ஜீஸ் ஆஃப் வெஸ்ட் பெங்கால்’, 'பட்டேல்ஸ் ஆஃப் குஜராத்’ என்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சாதிக்களின் பெயர்களை சூட்டியதுதான் பிரச்னை.

உடனே பதறிப்போன பேபால் நிறுவனம், சாலையில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை எல்லாம் அகற்றியது. அதோடு, நிறுவன தரப்பில் இருந்து செக்யூரிட்டி பிரிவின் தலைவர் தமிழ் சேவ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தைக்கு வந்தார். அவரிடம் பேச மறுத்த போராட்ட அமைப்பு, 'ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட் நபர்கள் வரவேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது. ஹெச்.ஆர். கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அதிகாரியான கிருத்திகா செல்போனில் பேசி இருக்கிறார். போராட்டக் குழுவோ, 'அவர் நேரில் வந்து பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அதை பத்திரிகைகளுக்கு செய்தியாகத் தர வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது.
காவல் துறைக்கு தகவல் சொல்லி, லோக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வந்து சேர்ந்த பின்னரே கிருத்திகா ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்க வந்தார். வரும்போதே மன்னிப்புக் கடிதம் எழுதி வந்திருந்தார். ''குறிப்பிட்ட நோக்கம் எதுவும் இன்றியே இந்தப் பெயர்களை வைத்தோம். இந்தியாவில் பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இப்படி பெயர் வைத்தோம். அதைத் தவறு என்று உணர்கிறோம். பேபால் நிறுவனம் இதற்காக மன்னிப்புக் கேட்கிறது. குழுக்களுக்கு வைத்தப் பெயர்களை மாற்றி அமைக்கிறோம்!'' என்று கிருத்திகா சொன்ன பிறகுதான்
சர்ச்சை ஓய்ந்தது!
- கவின் மலர், படங்கள்: காயத்ரி
*********************************************************************************
''மனுஷ உயிரு மலிவாப் போயிருச்சா..?''
நாய்க் கடிக்கு நடுங்கும் காஞ்சி மக்கள்
.jpg)
பாதிக்கப்பட்ட பாலசுந்தரம், ''வீட்டு வாசல்ல பாவு போடுறதுக்காக நின்னுக்கிட்டு இருந்தேன். அந்த நாய் காலை கடிச்சிடுச்சி. சுதாரிக்கிறதுக்குள்ள, ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது'' என்று சொல்ல, குறுக்கிட்ட ரவி என்பவர், ''இதுல கொடுமை என்னன்னா வெறிநாய் கடித்த விஷயத்தை, எங்க கவுன்சிலர் சுபாஷினிகிட்ட சொன்னோம். 'நாய்தானே கடிச்சது. போய் டாக்டரைப் பாருங்க!’ன்னு சாதாரணமா சொல்லிட்டாங்க. இவங்களுக்கு மனுச உயிரு ரொம்ப மலிவா போயிடுச்சி'' என்றார் ஆதங்கத்துடன்!

நாய்க்கடி குறித்து அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட கவுன்சிலர் சுபாஷினியிடம் பேசினோம். ''நகராட்சிக் கூட்டத்துக்குச் செல்வது மட்டும்தான் என்னுடைய வேலை. மற்ற விஷயங்களை என் கணவர்தான் கவனிக்கிறார். அதனால், இந்த விவகாரத்தில் எனக்கு ஒன்றும் தெரியாது'' என்றார்.
அவரது கணவர் ரவி, ''நாய் கடித்தவுடன் முதலில் மருத்துவமனைக்குச் செல்லுங்கள், எதற்கு கவுன்சிலரிடம் வருகிறீர்கள் என்றுதான் சொன்னேன். அதைத் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள். நாயிடம் கடிபட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அந்தத் தெருவில் தி.மு.க-வினர் அதிகம். அதனால், வேண்டுமென்றே புகார் சொல்கின்றனர்'' என்றார்.
இதுகுறித்துப் பேசிய நகராட்சித் தலைவர் மைதிலி, ''சம்பவம் பற்றி அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ரெட் கிராஸ் அமைப்புக்கு தகவல் கொடுத்து விட்டோம். காஞ்சிபுரம் நகர் முழுவதும் திரியும் நாய்களைப் பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.
வேகமா செய்ங்க!
- கிருபாகரன்
************************************************************************
''சிவானந்தம் தனி ராஜ்யம்!''
ஆரணி தி.மு.க.வில் உள்குத்து அமர்க்களம்!

ஆரணி தி.மு.க. முக்கிய புள்ளிகளிடம் பேசியபோது, ''மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் சங்கருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-வான சிவானந்தத்துக்கும் இடையே கடந்த சில வருடங்களாகவே பனிப்போர்தான். கடந்த சட்டசபைத் தேர்தலில் சிவானந்தம் எம்.எல்.ஏ. ஸீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தார். அதோடு, 'வேறு யாரும் மனு செய்யக் கூடாது’னு கறாரா சொல்லிட்டார். உடனே, மாவட்டச் செயலாளரிடம் சங்கர் கோஷ்டி முறையிட்டது. அவரோ, 'யார் வேண்டுமானாலும் விருப்ப மனு செய்யலாம்’னு சொன்னார். அதன் பிறகு பலர் மனு செய்தார்கள். அந்தத் தேர்தலில் சிவானாந்தம் தோற்றுவிட்டார். உடனே அவர் கூட்டம் போட்டு, 'தனது தோல்விக்கு சங்கரும் அவரது ஆதரவாளர்களும்தான் காரணம். அவர்களை கட்சியைவிட்டு நீக்க வேண்டும்’னு


தனக்கு ஸீட் கிடைக்காத காரணத்தால் சங்கர் தேர்தல் வேலைகளை செய்யாமல் ஒதுங்கிக்கொண்டார். அவரது ஆதர வாளர்கள் நாலு பேரையும் தோற்கடிக்க சிவானந்தம் முயற்சித்தார். அப்படியும் திருமால் என்பவர் மட்டும் ஜெயித்தார். அவரும் சிவானந்தத்தின் செயலால் திடீரென அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித் தார். அ.தி.மு.க-வும் அவரையே பஞ்சாயத்து யூனியன் தலைவர் வேட்பாளராக அறிவித்தது. கடுமையான போட்டிக்கு பிறகு மேற்கு ஆரணி யூனியன் தலைவர் பதவியை ஒருவழியாக தி.மு.க. கைப்பற்றியது. இதை எல்லாம் அறிந்த தலைமை, சங்கர் உட்பட அவரது ஆதரவாளர்களை தற்காலிகமாக நீக்கியது. அப்புறம் சிவானந்தம் ஆதரவாளர் கள், 'மேற்கு ஆரணி ஒன்றிய தி.மு.க. துரோகிகளை நீக்கிய தலைவர், தளபதி மற்றும் மாவட்ட கழகத்துக்கும் நன்றி நன்றி நன்றி’னு போஸ்டர் அடித்து ஒட்டினர்'' என்றனர்.
சங்கரிடம் பேசியபோது, ''ஆரணியில் சிவானந்தம் தனி சாம்ராஜ்யம் நடத்த நினைக்கிறார். அவரை யாரும் எதிர்த்து கேட்கக் கூடாது. அவரை எதிர்த்து குரல் கொடுப்பதாலேயே என் மீது அவருக்குக் கோபம். சட்டசபை தேர்தலில்கூட அவரை எதிர்த்து நான் விருப்ப மனு கொடுத்தேன் என்பதற்காக தலைமைக்கு என்னைப்பற்றி தவறான தகவல்களை கூறினார். ஆரணியில் அவரும் அவரது தம்பிகளும் செய்த கட்டப் பஞ்சாயத்து காரணமாகதான் அவர் தோல்வி அடைந்தார். அதை எல்லாம்

தற்காலிகமாக நீக்கப்பட்ட ஒன்றிய இளைஞர் அணி அமைப் பாளர் பாபுவோ, ''நான் பரம்பரை தி.மு.க-காரன். சிவானந்தம் கட்சிக்கு எப்படி வந்தார் என்பது மற்றவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... எனக்கு நல்லாவே தெரியும். அவரோ இன்னிக்கு

இந்தக் குற்றச்சாட்டுக்களை சிவானந்தத்திடம் கேட்டோம். ''ஆமாம், உண்மைதான். நான்தான் தலைமைக்கு அவர்கள் மீது புகார் அனுப்பினேன். அவர்கள் கட்சிக்கே துரோகம் செய்தவர்கள். தி.மு.க-வில் நின்று ஜெயித்துவிட்டு அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தருகிறவர்களை எப்படி கட்சியில் வைத்துக்கொள்ள முடியும்? தலை மையும் ஆராய்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறது. இன்னும் இதுபோல் சிலர் நீக்கப்பட வேண்டி யவர்கள். அவர்கள் மீதும் தலைமை விரைவில் நடவடிக்கை எடுக்கும்'' என்றவரிடம், ''தலைமை நடவடிக்கை எடுத்திருக்கும்போது நீங்கள் போஸ்டர் அடித்து கொண்டாடியது சரியா?'' என்று கேட்க, ''அவர்கள் மீதுள்ள வெறுப்பில் கட்சிக்காரர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி இருக் கிறார்கள்'' என்று மட்டும் சொன் னார்.
ஆரணியில் நடக்கும் உள்கட்சிப் பூசலை தி.மு.க. தலைமை ஆராயுமா?
- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்
*********************************************************************************
குடிக்கத் தண்ணீர்... கடக்க நடை பாதை!
குறைகளைத் தீர்ப்பாரா வேலூர் மேயர்
.jpg)
இப்போது, இவர் முன்னே இருக்கும் பிரச்னைகளைப் பட்டியல் இட்டார்கள் வேலூர் மக்கள். ''சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் உள்ள சென்னை - பெங் களூரு தேசிய நெடுஞ்சாலையை, பாதசாரிகள் கடக்கவே முடியாத அளவுக்கு சிரமமாக இருக்கிறது. எப்போதும் அதிவேகமாக போக்குவரத்து இருக்கிறது. அதனால் நொடி நேரம் கவனிக்காமல் சாலையைக் கடந் தாலும் விபத்தில் சிக்கி உயிரிழக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஏராளமான

ஏற்கெனவே மக்கள் தொகை அதிகம் உள்ள வேலூர் நகரத்தில் சி.எம்.சி. மருத்துவமனை, ஸ்ரீபுரம் தங்கக் கோயில் போன்ற இடங்களுக்கு மற்ற இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வருகிறார்கள். அவர்களை மோச மான முறையில் வரவேற்கிறது புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கட்டணக் கழிப்பறைகள். அசுத்தத்தில் முதலிடம் வகிக்கும் இந்த கழிப்பறைகள்
முறையற்ற பராமரிப்பில் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட

பாதாள சாக்கடைத் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதே தெரியவில்லை. மழைக்காலங்களில் சாலைகளில் கரைபுரண்டு ஓடும் நீரில் கழிவுகளும் சேர்ந்து வருவதால், மூக்கைப் பிடித்துக்கொண்டுதான் வாழ வேண்டி இருக்கிறது'' என்று ஒருசேரச் சொன்னார்கள், பொதுஜனங்கள்.
மக்களின் குமுறல்களை மேயர் கார்த்தியாயினியிடம் முன்வைத்தோம்.
''வேலூர் மாநகராட்சியின் முந்தைய நிலை பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. தற்காலிக அடிப்படையில் எதையும் செய்யாமல் நிரந்தரத் தீர்வாக மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. மக்கள் குறைகளை உடனடியாக அறிந்து செயல்படும் விதமாக, எந்த நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் என்னுடைய அலைபேசி எண்ணையும் மின்னஞ்சல் முகவரியையும் மக்களிடம் கொடுத்து இருக்கிறேன். விரைவில் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வேன்'' என்றார் நம்பிக்கை வார்த்தைகளுடன்.
நம்பிக் காத்திருக்கிறார்கள் மக்கள்.
- ரியாஸ், படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
படித்த பள்ளியை தத்து எடுத்த எம்.எல்.ஏ.!
ஆற்காடு அசத்தல்
.jpg)
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் பேசியபோது, 'இந்தப் பள்ளி 85 ஆண்டு பழைமை வாய்ந்தது. இந்தப் பள்ளியின் பழைய மாணவர்தான், எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்று இருக்கும் வி.கே.ஆர்.சீனிவாசன். வெற்றி பெற்றதும் இந்தப் பள்ளிக்கு முதல் விசிட் செய்து, இந்தப் பள்ளியை தத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுத்திருக்கிறார். இப்போது பள்ளியின் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. வகுப்பறைகள், மீட்டிங் ஹால் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கும் வேலைகள் முடிந்துவிட்டன.
எங்கள் கழகத்தின் மூலமாக நியமிக்கப்பட்டிருக்கிற ஆசிரியர், காவலாளி மற்றும் துப்புரவுப் பணியாளருக்கான மாதச் சம்பளத்தை எம்.எல்.ஏ. தன் சொந்தப் பணத்தில் வழங்குகிறார். மேலும் மாணவர்களின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் பரிசுகளும் அறிவித்து இருக்கிறார்'' என்று பட்டியல் போட்டார்கள்.
.jpg)
சீனிவாசனைத் தொடர்புகொண்டபோது, ''புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாட்சியில் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்ற நோக்கோடுதான் எனது பணிகளை சேவை மனப்பான்மையோடு செய்துவருகிறேன். அம்மாவின் ஆட்சியில் மாணவ மாணவிகளுக்கென அரிய பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சிறந்த கல்விச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால்தான் ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தத்து எடுத்தேன். ஏழை மாணவர்களுக்கு வறுமையாலோ வசதி வாய்ப்பு இன்றியோ அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கு மறுப்பின்றி உதவிகள் செய்து வருகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்து இப்பள்ளியை தத்து எடுத்திருக்கிறேன். இந்த ஒப்பந்த காலங்களுக்குள் அம்மாவின் ஆசியோடு எந்த தரத்துக்கும் குறை இல்லாத பள்ளியாக இதனை உருவாக்கிக் காட்டுவேன்'' என்றார்.
நாமும் பாராட்டுவோம்.
- ரியாஸ்
************************************************************************
பரஞ்சோதி 'இன்' சிவபதி 'அவுட்'
திருச்சி பாலிடிக்ஸ் கலக்கல்

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தார் பரஞ்சோதி. எதிர்க் கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்த காரணத்தால் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பரஞ்சோதி வசம் இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கட்சித் தலைவியான ஜெய லலிதாவே போட்டியிட்டதால், வேறு தொகுதி எதுவும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வரானதும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் பரஞ்சோதி. அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று பூரித்தார், பரஞ்சோதி.

அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட கையோடு, கடந்த 9-ம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவலில் நடந்த மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப் மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய பரஞ்சோதி, ''தமிழகத்திலேயே ஸ்ரீரங்கத்தில் தான் அதிகமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலேயே முதன் முறையாக மகளிர் தோட்டக் கல்லூரி திருச்சியில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஸ்ரீரங்கத்தில் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. ஒரு அரசு 50 ஆண்டு காலத்தில் செய்யும் சாதனையை முதல் அமைச்சர் ஜெயலலிதா இந்த ஐந்து மாதத்திலேயே செய்து முடித்துவிட்டார்'' என்று பேசினார்.


அடுத்து பேசிய திருச்சி எம்.பி-யான குமார், ''லோக்சபாவில் இருக்கும்போது என்னை சந்தித்த பஞ்சாப் எம்.பி. ஒருவர், தமிழகத்தில் எல்லாமே இலவசமாகத் தருகிறார்களாமே... நாங்களும் அங்கேயே வந்துவிடலாம் என்று நினைக்கிறோம்’ என்று சொன்னார். அதற்கு நான், 'நீங்கள் தமிழ் நாட்டுக்கு வர வேண்டும் என்றால், எங்கள் முதல்வர் பிரதமராக ஏற்பாடு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அந்த எண்ணம் நிறைவேற மக்களா கிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
பதவி பறிக்கப்பட்ட சிவபதி, ''என்றும் உங்களில் ஒருவனாக இருந்து இந்த மாவட்டத்துக்கும், தொகுதி மக்களுக்கும் நல்ல விஷயங்கள் கிடைக்கப் பாடுபடு வேன்'' என்றார் அடக்கமாக.
திருவானைக்காவலில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர், தனது ஆதரவாளர்கள் புடைசூழ சைரன் காரில் வலம் வந்து திருச்சியை சுற்றிச்சுற்றி வந்து கலக்கினார் பரஞ்சோதி.
- ஆர்.லோகநாதன்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
*********************************************************************************
தஞ்சாவூரை சரி பண்ணுவாங்களா?
.jpg)
தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹுமாயுன், 'சோழர் காலத்தில், மிகப் பெரிய பரப்பளவில் சரியாக திட்டமிடப்பட்டு நிர் மாணிக்கப்பட்ட நகரம் தஞ்சாவூர். ஆனால், இன்று மிக மோசமாக இருக்கிறது. சுற்றுலா மற்றும் வரிகளுடன் போதுமான வருவாய் கிடைத்து வந்தாலும், மக்களுக்கான வசதிகள் குறைவாகவே உள்ளன. பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக இருப்பதால் சாலைகள் மோசமாகிவிட்டன. நெற்களஞ்சிய மண்ணில் குடிநீருக்கும் தட்டுப்பாடு

அடுத்துப் பேசிய வழக்கறிஞர் சுதாகர், 'முக்கிய


இதுபற்றி தஞ்சாவூர் நகராட்சியின் புதிய தலைவர் சாவித்திரி கோபாலிடம் கேட்டபோது, 'சாந்தப்பிள்ளை கேட்டில் நிச்சயம் மேம்பாலம் அமைக்கப்படும். பழைய பேருந்து நிலையத்திலும் மக்கள் போக்குவரத்து வசதிக்காக பாலம் அமைக்க முயற்சிக்கிறோம். கடந்த ஆட்சியில் குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய், முறையாக செல விடப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் நகரம் முழுக்க குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நகரம் முழுக்க குப்பைகளை அள்ள போதுமான அளவுக்கு கருவிகள் வாங்கப்படும். நகர சுகாதாரம் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்காக அருகில் கட்டப்பட உள்ள கலையரங்க இடத்தை பயன்படுத்திக்கொள்வோம். தஞ்சாவூர் நகராட்சியை முதல் முறையாக அ.தி.மு.க. வசம் நம்பிக்கையோடு மக்கள் கொடுத்துள்ளனர். அதை காப்பாற்றுவோம்' என்றார் தெளிவாக.
பார்ப்போம்!
- சி.சுரேஷ்
படங்கள்: கே.குணசீலன்
*********************************************************************************
திவாகரனின் மந்திரப் புன்னகை
கொண்டாடும் டெல்டா அ.தி.மு.க-வினர்
.jpg)
சசிகலாவின் உடன் பிறந்த தம்பி திவாகரன் 'அமைதியான தோற்றமும், தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாத குணமும்கொண்டவர்’ என பெயர் எடுத்தாலும், டெல்டாவில் நடக்கும் அத்தனை அரசியல் நிகழ்வுகளுக்கும் அவர் பெயர் ஏதோ ஒரு வகையில் அடிபடும். இந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா வெளியிட்ட முதல் வேட்பாளர்கள் பட்டியல், பின்னர் திருத்தி வெளியிடப்பட்டது. பல

'தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில், மன்னார்குடியில், திவாகரன் சிபாரிசு செய்த வேட்பாளர் சிவா.ராஜா மாணிக்கம் தோல்வியைத் தழுவினார். இதனால், திவாகரன் மீது ஜெயலலிதா மனக்கசப்புகொண்டார். அதன் விளைவாக, திவாகரன் ஆதரவாளர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மன்னார்குடி குடும் பத்தைக் கண்டுகொள்ளாத வைத்திலிங்கத்துக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனை அடுத்து, 'திவாகரனுக்கு செல்வாக்கு இருக்கிறதா?’ என்கிற பட்டிமன்றமே டெல்டாவில் நடக்கத் தொடங்கியது.
விட்ட இடத்தைப் பிடிக்க திவாகரன் உள்ளாட்சித் தேர்தலை பயன்படுத்திக் கொண் டார். திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் ஜெயலலிதாவிடம் டெல்டா அ.திமு.க. கோட்டை என நிரூபித்தார். அமைச்சரவை மாற்றத்தில், திவாகரனின் ஆதரவாளரான ஆர்.காமராஜுக்கு உணவுத் துறை கொடுக்கப்பட்டது. பதவியேற்று மன்னார்குடி வந்த ஆர்.காமராஜ், 'பாஸ் மேல் கொண்ட விசுவாசத்துக்குதான் அமைச்சர் பதவி கிடைத்தது’ என நெகிழ்ந்து கண்ணீர்விட்டார். இன்னொரு வகையில், வைத்திலிங்கத்தின் கை டெல்டாவில் உயர்வதை தடுக்கவும் ஆர்.காமராஜுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததாகவும் சொல்கிறார்கள்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபய துல்லாவை தோற்கடித்த ரெங்கசாமி, திருமயம் எம்.எல்.ஏ-வான வைரமுத்து மற்றும் விராலிமலை எம்.எல்.ஏ-வான விஜயபாஸ்கர் ஆகியோரும் அடுத்த மந்திரி சபையில் இடம் பெற திவாகரன் திசையை நோக்கி உள்ளனர்' என பட்டியலிட்டு முடித்தனர் டெல்டா அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஆனால், வழக்கம்போல மந்திரப் புன்னகை மட்டுமே வெளிப்படுத்துகிறார் திவாகரன்!
- சி.சுரேஷ்
படம். கே.குணசீலன்
*********************************************************************************
சேலம் ஜாமியா மஸ்ஜித்தில் முறைகேடா?
கொந்தளிக்கும் மீட்புக் குழுவினர்

ஜாமியா மஸ்ஜித் உரிமை மீட்புக் குழுவின் தலைவர் நிசாருதீன் நம்மி டம் பேசினார். ''தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபு போர்டில், குறிப்பாக சேலம் வக்ஃபு போர்ட்டுக்குத்தான் சொத்து அதிகம். இங்குள்ள ஜாமியா மஸ்ஜித் மிகப் பழமையான மஸ்ஜித். இதற்குப் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன. இவற்றை நிர்வகிக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தி முத்தவல்லி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்படி 1999-ல் நடந்த தேர்தலில் முத்தவல்லியாக நாசர்கான் என்கிற அமான், துணை முத்தவல்லி காதர்

ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமாக சேலத்தில் மட்டும் 200 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கிறது. சில இடங்களில் கடைகளாகவும், வீடுகளாகவும், விளை நிலங்களாகவும் இருக்கின்றன. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு உள்ளது. இதில் இருந்து மாதம்தோறும் பல லட்ச ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் முறையான கணக்குகள்

இவர்களின் பதவிக் காலம் முடிந்த பிறகும் தேர்தல் நடத்தாமல் 13 ஆண்டுகளாக இவர்களே ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க-வில் இருப்பதால், யார் கேட்டாலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லி மிரட்டுகிறார்கள். ஆரம்பத்தில், வசதி குறைவாக இருந்த இவர்கள் இன்றோ பல நூறு கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்'' என்றார் வேதனையாக.
ஜாமியா மஸ்ஜித்தின் உரிமை மீட்புக் குழு உறுப்பினர் பரித் அகமது, ''சேலத்தில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய சமூகத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். ஜாமியா மஸ்ஜித்தின் சொத்துக்களை முறையாகப் பராமரித்து ஏழை இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் செய்தாலே, அவர்கள் நல்ல நிலையில் இருக்கலாம். ஜாமியா மஸ்ஜித் அருகில்கூட ஏகப்பட்ட இஸ்லாமியர்கள் பரிதாபமான நிலையில்தான் வசிக்கிறார்கள். அவர்களுக்கு உதவிகள் செய்யாமல், அங்கு குடியிருப்பவர்களைக் காலி செய்ய சொல்லி விட்டு சூப்பர் மஹால் திட்டம் தீட்டுகிறார்கள். இறைவனின் பணத்தை யார் அபகரிக்க நினைத்தாலும் இறைவன் அவர்களைச் சும்மா விடமாட்டார்'' என்றார்.
இதற்கெல்லாம் விளக்கம் சொல்லும் ஜாமியா மஸ்ஜித்தின் முத்தவல்லி நாசர்கான், ''நான் ஜாமியா

எனக்கு முன்பு 14 வருடங்கள் தேர்தல் நடை பெறவில்லை. அதற்கு முன்பு 18 ஆண்டுகள் தேர்தல் நடைபெறவில்லை. சேலத்தில் இருக்கும் அனைத்து சமூக மக்களுக்கும் என்னை நன்றாகத் தெரியும். நான் மதநல்லிணக்கத்தைப் பேணி வருகிறேன். எனக்குப் பதவி முக்கியம் இல்லை. முஸ்லிம் மக்களும் அனைத்து சமூக மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இவர்கள் என் மீது குற்றம் சொல்ல காரணம், ஜாமியா மஸ்ஜித்தின் வாடகை தாரர்கள் முறையாக வாடகை தராததைக் கேட்டதற்காகத்தான். இவர்கள் சொல்வதுபோல ஜாமியா மஸ்ஜித்துக்குச் சொந்தமான நிலங்களில் இஸ்லாமிய சமுதாயத் தினரை தவிர, மற்ற சமுதாயத்தினரும் பல வருடங்களாக குடியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் காலி செய்யச் சொல்லி மத நல்லிணக்கத்துக்கு விரோதமாக செயல் படுகிறார்கள்.
வக்ஃபு விதிமுறைப்படி ஒரு ரூபாய்கூட யாருக் கும் கொடுக்கக் கூடாது. ஏழை இஸ்லாமிய குழந்தை களின் கல்விக்கும், திருமணத்துக்கும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மஸ்ஜித்தில் இருந்து உதவிகள் செய்ய வக்ஃபு போர்டிடம் முறையிட்டிருக்கிறேன். ஜாமியா மஸ்ஜித்தின் செலவுகளுக்கும் சரியான கணக்குகள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை இழுப்பது மிகவும் பாவம்'' என்றார்.
சேலம் வக்ஃபு கண்காணிப்பாளர் பீர் முகமது விடம் பேசினோம். ''தற்போது வக்ஃபு போர்டே தேர்தலை நடத்தச் சொல்லி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் காரணமாக போர்டின் தலைவர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை. கூடிய சீக்கிரம் தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு ஜாமியா மஸ்ஜித்துக்கு தேர்தல் நடத்தப்படும்'' என்றார்.
- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
*********************************************************************************
கொட்டும் மழையில் ஈழ முழக்கம்!
பாதியில் முடிந்த கோவை மாநாடு!
.jpg)
இனப் படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் ஈழ ஆதரவு அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் கடந்த 6-ம் தேதி, 'ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு’ ஒன்றை நடத்தினர். தூக்குக் கயிற்றை நோக்கியிருக்கும் மூன்று பேரை மீட்டெடுப்பதற்கான முயற்சியும் இந்த மாநாட்டின் மற்றொரு நோக்கம். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்க, 'செங்கொடி அரங்க’ மேடையில் எழுச்சியுடன் ஆரம்பமானது மாநாடு. அது மழை வரும் மாலைப்பொழுது என்பதைப் பொருட்படுத்தாமல் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.



அடைமழையில், நாற்காலிகளையே குடையாகப் பிடித்தபடி 'வானம் வெறிக்கும்’ என்ற நம்பிக்கையில் நின்றது மொத்த கூட்டமும். அடுத்தடுத்து தலைவர் களும் பேச முயற்சித்தார்கள். ஆனால், மழையின் சீற்றம் அதிகரிக்க... மாநாடு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தலைவர்கள் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் மேடையின் முன்புறம் கூடிய இன உணர்வுமிகு இளைஞர்கள், 'அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லை... ஆனாலும் சிறை தகர்ப்போம்! மூவரை காப்போம்! தம்பியே ஓடிவா இந்தத் தம்பிகளைக் காக்கவா!’ என்று மழை மறையும் வரை விண் ணதிர குரல் கொடுத்தது நெகிழ்வான காட்சி.
மறுநாள் 'இதே கோவையில் மீண்டும் மாநாட்டை நடத்துவோம். இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்தமிழ் ஈழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 2013-ல் இலங்கையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டை கனடா போல் இந்தியா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் விரிவாக மேற்கொள்ளப்படும் ராணுவ மயமாக்கல், சிங்களமயமாக்கல் போன்ற இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட வேண்டும் உலக சமுதாயம்'' போன்ற அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான அர்ஜுன் சம்பத், கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருக்கும் இந்து அமைப்புகளின் தலைவர்களை இலங்கை தமிழர்களைக் காக்கும் நோக்கில் ஒருங்கிணைத்து 'இலங்கை இந்து மக்கள் பாதுகாப்புப் பேரவை’ என்ற ஒன்றை விரைவில் மதுரையில் துவக்குகிறார். அவரிடம் பேசியபோது... ''இலங்கையில் தமிழ் என்கிற இனம், மொழிக்கு எதிரான அட்டூழியங்கள் மட்டும் நடக்கவில்லை 'இந்து’ என்கிற ஒரு மதத்துக்கு எதிராகவும் நடக்கிறது. இலங்கையை ஆளும் நபர்களை கடந்த 60 ஆண்டுகளாக ஆட்டிவைப்பது அங்கிருக்கும் புத்த குருமார்கள்தான். சுமார் 1,400 இந்து சமய கோயில்கள் அழிக்கப்பட்டு உள்ளன. எனவே, இலங்கை வாழ் தமிழர்களாகிய இந்துக்களை காக்கத்தான் இந்த முயற்சி. அதற்காக அங்கிருக்கும் தமிழர்களாகிய கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமியர்களின் நலனில் எங்களுக்கு அக்கறை இல்லை என்று தனிச் சாயம் பூச வேண்டாம்'' என்கிறார்.
- எஸ்.ஷக்தி
படங்கள்: வி.ராஜேஷ்,
மகா.தமிழ்பிரபாகரன்
*********************************************************************************
அழகப்பச் செட்டியாருக்கு அவமரியாதை?
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சை

காரைக்குடியை கல்விக்குடியாக்கிய பெருமை அழகப்ப செட்டியாரையே சேரும். சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைந்திருக்கும் அழகப்பர் கல்வி நிறுவனங்களில், ப்ரீ கே.ஜி முதல் மாஸ்டர் டிகிரி வரை படிக்கலாம். பள்ளிக்கூடங்கள் தவிர மற்ற அனைத்துக் கல்லூரிகளையும் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் அரசுக்கு எழுதிக் கொடுத்தவர். இந்தக் கல்லூரிகளைத்தான் 25 வருடங்களுக்கு முன்பு அழகப்பா பல்கலைக்கழகமாக மாற்றி பெருமை

நம்மிடம் ஆதங்கத்துடன் பேசிய சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் பழனியப்பன், ''வள்ளல் பெருந்தகை அழகப்ப செட் டியார், பி.எட். கல்லூரிக்குக் கட்டடம் இல்லை என்ற போது, தான் வசித்த வீட்டையே கொடுத்துவிட்டு வெளியேறியவர். கடந்த காலங்களில் பல்கலைக்கழக முகப்பில் அமைந்திருக்கும் அழகப்பரின் சிலையும் சேர்த்து எடுக்கப்பட்ட போட்டோவைத்தான் அழைப்பிதழ்களில் போட்டார்கள். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு வெள்ளி விழா ஆண்டு என்பதாலும், அதற்கு முந்தைய ஆண்டு அழகப்ப செட்டியார் நூற்றாண்டு விழா ஆண்டு என்பதாலும் அழைப்பிதழ்களில் அவரது சிலையுடன் படத்தையும் ஸ்பெஷலாக போட்டிருந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு எதிலுமே அழகப்பர் படமும் இல்லை; சிலையும் இல்லை. இப்படி திட்டமிட்டு அவரது படத்தை இருட்டடிப்பு செய்வதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. ஒரு நிறுவனம் அதை உருவாக்கிய நிறுவனரின் பெயரையும் புகழையும் கால் நூற்றாண்டுக்குள்ளாகவே மறைக்கப் பார்ப்பது கொடுமை இல்லையா? இது குறித்து பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர்கள் முன்கூட்டியே கேள்வி எழுப்பி தவறை திருத்தி இருக்க வேண்டும். அழகப்பரை அவமரியாதை செய்திருக்கும் இந்த விஷமத்தனத்தை கண்டித்து மக்களைத் திரட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அத்துடன், ஆளுநர் ரோசய்யா மற்றும் தமிழக முதல்வருக்கு தந்திகளை அனுப்புவோம்'' என்று படபடத்தார்.

அழகப்பர் படம் இல்லாத அழைப்பிதழை பார்த்துவிட்டு குமுறிய அழகப்ப செட்டியாரின் மகளும்


பட்டமளிப்பு விழா முடிந்து சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்த உமையாள் ராமநாதனை சந்தித்தபோது, உணர்ச்சிப் பிழம்பாக, ''எங்க அப்பச்சியோட படத்தை ஏன் போடலைனு என்னென்னமோ காரணம் சொன்னாங்க. படம் போட்டு புதிதாக நூத்தம்பது பத்திரிகை அடிச்சுக் கொடுக்குறதா துணை வேந்தர் சொன்னார். கடைசி வரைக்கும் அதையும் கொடுக்கலை. கேட்டா, 'அவகாசம் போதலை’னு சொல்றார். இந்த விஷயத்தில் நாங்கள் மட்டுமல்ல... அழகப்பரை நேசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் வருத்தத்தில் இருக்கு. எதிர்காலத்தில் இதுமாதிரி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை கட்டாயம் செய்வோம்'' என்றார்.
துணை வேந்தர் சுடலைமுத்துவிடம் பேசியபோது, ''வள்ளல் அழகப்பரை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். நான் துணை வேந்தராக வந்ததில் இருந்து, அவருக்காக பாடப்பட்ட வள்ளல் வாழ்த்துப் பாடலை தினமும் காலை 10 மணிக்கு பல்கலைக்கழகத்தில் ஒலிக்கச் செய்திருக்கிறேன். அழைப்பிதழ் விவகாரம் கவனக் குறைவால் நடந்த தவறுதானே தவிர, இதில் யாருக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை'' என்று சொன்னவர், கவர்னர் அலுவலக வழிகாட்டுதல்படியே அழகப்பரின் படத்தை போடாமல்விட்டதாக சொல்லப்படுவதையும் திட்டவட்டமாக மறுத்தார்.
ஆயிரம் சொன்னாலும் அழகப்பர் விசுவாசி களின் ஆத்திரம் இப்போதைக்கு தனியாது போலிருக் கிறது!
- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்
*********************************************************************************
சாதி பார்க்கிறார்களா பேராசிரியர்கள்?
மேலூர் அரசுக் கல்லூரி பரபரப்பு
.jpg)
'எங்க காலேஜ்ல தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் படிக்கிறதால, உயர் சாதி மாணவர்களுக்கு ஆதரவா சில பேராசிரி யர்களே செயல்படுவாங்க. 2009-ம் ஆண்டில் பி.ஏ. வரலாறு மாணவர்களுக்கு பாலாஜி என்ற பேராசிரியர் அம்பேத்கர், பெரியார் பற்றிய பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சில மாணவர்கள், 'அம்பேத்கரைப் பத்தியெல்லாம் எதுக்கு பாடம் நடத்துறீங்க’ன்னு பிரச்னை செய்து, பாதியில் நிறுத்த

மாணவர் சக்தி, 'கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த கல்லூரி ஆண்டுவிழாவில், உயர்சாதி மாணவர்கள் சிலர் சினிமாவில் வரும் சாதிப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்கள். கீழே இருந்த அவர்கள் சாதி

மற்றொரு மாணவரான ஆண்டி, 'காலேஜ்ல குடிக்க நல்ல தண்ணி கிடையாது. லைட், ஃபேன்களும் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகளுக்கான போராட்டங்களில் முதுகலை மாணவர்கள் என்கிற முறையில் நான், அய்யனார், சிவகுருநாதன் 3 பேரும் முன்னே நிப்போம். அதனால அந்தப் பேராசிரியர்களுக்கு எங்க மேல செம கடுப்பு. புதுசா வந்த பிரின்ஸிபல் மேடத்துக்கு கல்லூரியில் இதுவரை நடந்த பிரச்னைகளும், பேராசிரி யர்களின் சாதி மனோபாவமும் முழுசாத் தெரியாது. அதைப் பயன்படுத்திக்கிட்டு கல்லூரியின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு என்ற பெயரில் மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேராசிரியர்கள் எங்களை கட்டம் கட்டிட்டாங்க' என்றார் வேதனையாக.
மாணவர் சுகதேவின் தந்தை நாகேந்திரனோ, 'சஸ்பெண்டான அன்னிக்கே காலேஜ் கொடுத்த

.jpg)
'இருபாலர் அரசுக் கல்லூரியில் வேலை பார்க்கிறது ரொம்ப கஷ்டம். ஹீரோயிசம் காட்டுறதுக்காக பசங்க எங்களைப் பண்ற கேலியும் கிண்டலும் கொஞ்சம் நஞ்சமல்ல. மொத்தம் 2,000 பேர் படிக்கிறாங்க. ஒருசில பசங்கதான் மற்ற பசங்களையும் கெடுக்கிறாங்க. அடிக்கடி ஸ்டிரைக் பண்றது அது இதுன்னு ரகளை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. கல்லூரி நலனுக்காக எல்லா துறையின் தலைவர்களும் சேர்ந்து ஒரு ஆலோசனைக் கமிட்டியைப் போட்டு எடுத்த முடிவு இது. பேராசியர்கள் சாதி பார்க்கிறதாச் சொல்றது முழுப் பொய். அப்படிப் பார்த்திருந்தா, ஏற்கெனவே இளங்கலை படிச்சப்ப சாதி மோதலில் ஈடுபட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவரான அய்யனாருக்கு எம்.ஏ. படிப்பில் இடம் கொடுத்திருப்போமா? அந்த மாணவர்கள் மேல் நடவடிக்கை எடுத்த பிறகு கல்லூரி அமைதிப் பூங்காவாக மாறிவிட்டது. பயமின்றி வகுப்பறைக்குப் போகிறோம்' என்கிறார்கள் சில பேராசிரியர்கள்.
மாணவர்களோ, 'என்னதான் இருந்தாலும், டிஸ்மிஸ் என்பது ரொம்ப ஓவர். அந்தப் பசங்களோட எதிர்காலம் என்ன ஆகும்னு பேராசிரியர்கள் கொஞ்சம் யோசிக்கணும்'' என்கிறார்கள்.
- கே.கே.மகேஷ்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
*********************************************************************************
'கைதுப் படலம் முடியவில்லை!'
பிரகடனம் செய்த ஜெ. பீதியில் தி.மு.க.!

''மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் லஞ்சம் பெறுவதோ முறைகேடுகளோ இருக்கக் கூடாது'' என்று தீர்க்கமான குரலில் முதல்வர் ஜெயலலிதா தனது முன்னுரையில் சொன்னார். பல்வேறு விஷயங்களைப் பேசினாலும் அவர் குறிப்பால் உணர்த்த நினைத்தது, தடங்கல் இல்லாத நிர்வாகம்தான்!
இன்று தமிழகத்தைக் கலக்கிக்கொண்டு இருக்கும் நில அபகரிப்புக் கைதுகள் தொடர்பாக, தனது நடவடிக்கைகளை பட்டவர்த்தனமாக முதல்வர் சொல்லியது பல அதிகாரிகளுக்கே திகிலைக் கொடுத்தது!
''தமிழகத்தில் நில அபகரிப்பாளர்கள் மீதான நடவடிக்கை தொடரும்...'' என்று சொன்ன முதல்வர் இது தொடர்பான சில டெக்னிக்கல் விளக்கங் களையும் சொன்னாராம்.

''குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள சட்டப் பிரிவுகளில் குடிசைப் பகுதி நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் என்று சொல்லி வழக்கு போட வேண்டிருக்கிறது. இதையே நில அபகரிப்பு என்று பொதுவாகத் திருத்தம் செய்தால், எங்களுக்கு உதவியாக இருக்கும். இதேபோல், மிகப் பெரியக் குற்றச் செயல்களில் யாராவது ஈடுபட்டால், உடனே அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயிலில் போட நினைக்கிறோம். ஆனால், இங்கேயும் சட்டச் சிக்கல். அந்த நபர் தொடர் குற்றங்களைச் செய்வது வருவராக இருந்தால் மட்டுமே, அதாவது, ஹேபிச்சுவல் அஃபெண்டர் (லீணீதீவீtuணீறீ ஷீயீயீமீஸீபீமீக்ஷீ) என்று போலீஸ் ரெக்கார்டுகளில் ஏற்கெனவே இருந்தால் மட்டுமே, குண்டர் தடுப்புச் சட்டத்தில் போட முடிகிறது. இதிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும்'' என்றார்.
உடனே முதல்வர் சட்டத் துறை செயலாளரிடம், ''இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?'’ என்று கேட்டார். அவர் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொண்டு, ''தேவைப்பட்டால் ஆலோசனை செய்து மாஹாளி சொல்கிற மாற்றங்களைக் கொண்டுவாருங்கள்'’ என்று உத்தரவிட்டார். இதைக் கேட்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் முகங்களில் மகிழ்ச்சி ரேகை பரவியது. அப்போது சில போலீஸ் அதிகாரிகள் அருகில் இருந்த சக அதிகாரிகளிடம், ''பெரும்பாலான வழக்குகளில் சரியாக வாதாடத் தெரியாமல் குழப்புகிறவர் தமிழக அரசின் சட்டத் துறையின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர். அவரிடம் எவ்வளவுதான் ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தாலும், அவர் அதை சட்டை செய்வதில்லை. டாஸ்மாக் துறைக்கு எதிராகத் தனியார் ஒருவரால் தொடரப்பட்ட சிறு வழக்கில் தேவை இல்லாமல் இவரே நேரில் ஆஜராகி ஆதாரங்களை எடுத்துவைக்காமல் விட்டதன் விளைவு வழக்கு தோற்றுவிட்டது. அவரை மாற்றி வேறு யாரைப் போட்டாலும் சந்தோஷம்'' என்று பேசிக்கொண்டார்களாம்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பேசும்போது, ''2002-ல் நக்சலைட் நடமாட்டம் இருந்தது. அதன் பிறகு இல்லை'' என்று பேசிக்கொண்டே போக, முதல்வர் ஜெயலலிதாவின் முகம் மாறியது. ஏனென்றால், 2002-ல் முதல்வராக இருந்தவரும் இவர்தான். அந்த எஸ்.பி-யிடம், ''ஏன் 2007, 08, 09 - ம் ஆண்டுகளில்கூட நக்சலைட் நடமாட்டம் இருந்ததாக நோட்டீஸில் பார்த்தேனே? நீங்கள் அதைச் சொல்லவில்லையே...'' என்று கேட்க... அந்த எஸ்.பி. கொஞ்சம் தயங்கி. ''அந்தப் பகுதிகள் தர்மபுரி மாவட்டத்தில் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை'’ என்று சொல்லவும் அமைதியானார் முதல்வர்.
''நில அபகரிப்புப் புகார்கள் அதிகம் பதிவாகின்றன. அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. நில அபகரிப்புப் புகார் பிரிவை இன்னும் செம்மைபடுத்த வேண்டும்'' என்று பெரும்பாலானவர்கள் பேசினார்கள்.
''நில அபகரிப்புப் புகாரில் இரண்டு தரப்பையும் தீர விசாரித்த பிறகே உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். வழக்கு போடுவதோடு முடிந்து விடாமல் தண்டனை வாங்கிக் கொடுத்து சம்பந்தப்பட்டவர்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்கும்போது இந்த ஆட்சியின் மீது மக்களின் நம்பிக்கை அதிகமாகும்'' என்று பதில் சொன்னார் ஜெயலலிதா.
''போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு வரும் உளவுத் தகவல்களை கலெக்டர்களுடன் பகிர்ந்துகொண்டு முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கை மேற் கொண்டாலே, மாவட்டங்களில் ஏற்படும் சிறு சிறு பிரச்னைகளைச் சமாளித்துவிடலாம்'' என்று இடையில் யோசனை தெரிவித்தார் ஜெயலலிதா.
கடலோர மாவட்டங்களில் இருக்கும் கலெக்டர் கள், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் காணாமல் போவது பற்றியும் இலங்கை கடற்படையால் தாக்கு தலுக்கு உள்ளாவது பற்றியும் குறிப்பிட்டார்கள். ''இப்படி அடிக்கடி ஏற்படும் மீனவப் பிரச்னையால் இப்போது பாதிப்பு இல்லை என்றாலும், வரும் காலங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக உருவெடுக்கலாம். அதற்கான முன்னேற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். நமது கடலோரப் பாதுகாப்பு படையில் போதுமான அளவுக்கு ரோந்து படகுகள், நவீன கருவிகள் போன்ற வசதிகள் இல்லை. மீனவர்களைத் தேடும் பணியை கடற்படை மட்டுமே செய்வதால், தொய்வு ஏற்படுகிறது. காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு தரும் நிதியில் ஹெலிகாப்டர் போன்றவற்றை நாம் வாங்கலாம்.'' என்று யோசனை தெரிவித்தார்கள். ''அதற்கான நிதி இப்போது நம்மிடம் இல்லை. தேவை ஏற்பட்டால், ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்'' என்றார் ஜெயலலிதா. மாநாட்டின் முடிவில் இதுவே அறிவிப்பாக வெளியானது.
கலெக்டர்கள், எஸ்.பி-கள் மாநாட்டின் முதல் நாளான 13-ம் தேதி முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவருக்குமான பொதுவான கூட்டமாக இருந்தது. 14-ம் தேதியன்று காலையில் கலெக்டர்கள், அனைத்துத் துறைச் செயலாளர்கள் கூட்டமும், மதியத்துக்கு மேல் போலீஸ் அதிகாரிகள் கூட்டமும் நடந்தது. இரு நாட்களும் கோட்டையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்ட முதல்வர், முக்கால் மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்போதும் இல்லாதவாறு மிகவும் கடுமையாக இருந்தன. கோட்டைக்கு உள்ளேயே இருக்கும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவுகூட இல்லாத மாநாட்டுக் கூட்டம் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு, ஜெயலலிதா வந்தபோது எல்லாம் இரு மருங்கிலும் ஓவர் அலெர்ட் காட்டினர். முதல் நாள் ஞாயிறன்று தலைமைச் செயலக ஊழியர்கள் யாரும் வராததால், அவர்கள் தப்பித்தார்கள். மறு நாள் காலையில் வழக்கம்போல, 10 மணி அளவில் எல்லா ஊழியர்களும் வரும்போது, 'முதல்வர் வருகிறார்’ என்று சொல்லி, ஊழியர்களின் நுழைவாயிலை போலீஸார் தடுக்க, பதற்றம் ஏற்பட்டது.
வழக்கமாக இது போன்ற மாநாடுகளில் அனைத்துப் புகைப்படக்காரர்களும் சில நிமிடங்களாவது படம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை குறிப்பிட்ட சில பத்திரிகைகளின் போட்டோ கிராபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. முதல்வரின் அறிமுக உரையின்போது எப்போதும் நிருபர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவும் இம்முறை அனுமதிக்கப்படவில்லை.
இன்னமும் நில அபகரிப்பு தொடர்பாக ஜெயலலிதா காட்டிவரும் தீவிரம் தி.மு.க. புள்ளி களுக்கு பீதியைக் கிளப்பி இருக்கிறதாம்.
- சூர்யா, எம்.பரக்கத் அலி, இரா.தமிழ்கனல்
அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்
*********************************************************************************
சிதம்பரத்துக்காக காத்திருக்கும் ஆ.ராசா?
தொடங்கியது ஸ்பெக்ட்ரம் விசாரணை

இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஆ.ராசா எடுத்த எடுப்பிலேயே சாட்சிகள் விசாரணைக்கு முட்டுக்கட்டை போடவந்தார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் பாலாஜி சுப்பிரமணியம் மற்றும் மனுசர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வழக்கில் விசாரணை முழுமையாக முடிந்த பின்னர்தான் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் குற்றப் பதிவு செய்யப்பட்ட பின்னரும், இந்த வழக்கில் விசாரணை முடியவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது’ என்று சொல்லி இருந்தனர்.

முதல் நாள் மூன்று சாட்சிகளிடம் விசாரணை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சாட்சியிடம்தான் முழு விசாரணை நடந்தது. பவர் கட் ஏற்பட்டதால், இன்வெர்ட்டர் மூலம் லைட்கள், மின் விசிறிகள் இயங்கியதால் ஏக இரைச்சல். என்ன பேசுகிறார்கள் என்பது புரியாமல், பத்திரிகையாளர்களும் வழக்கறிஞர்களும் திணறி னார்கள். அடிக்கடி மின் விசிறியை ஆஃப் செய்து, கேட்க வேண்டிய அளவுக்கு நிலைமை இருந்தது.
முதல் சாட்சியாக வந்தவர் ஆனந்த் சுப்பிரமணியம். மும்பைக்காரான சுப்பிரமணியம், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் தொடங்கப்பட்ட கதையைக் கூற, இவர் வந்தார். ரிலையன்ஸ் கேப்பிடல்


ஆனந்த் சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டெல்லிப் பொது மேலாளர் சேதுராமன் இரண்டாவது சாட்சியாக ஆஜரானார். தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் நீண்ட வருடங்களாக அம்பானிகளோடு இருப்பவர். ஸ்வான் டெலிகாம் உரிமங்களுக்கான விண்ணப்பத்தில் இவர் கையெழுத்து போட்டு இருப்பதால், சாட்சியாக இவர் விசாரிக்கப்பட்டார். இவரும், 'நான் ஸ்வான் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டது உண்மை. ஆனால் ரிலையன்ஸுக்கு அந்த டெலிகாம் வட்டங்களில் உரிமம் இருந்ததா என்பது தெரியாது’ என்றார். முதல் நாள் அரைகுறையாக விசாரிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி மீண்டும் சாட்சியம் அளிக்க வந்தார். அன்றைய தினமும் இவரிடம் மட்டுமே முழு விசாரணை நடைபெற்றது. அதனால், மூன்றாவது சாட்சியாக அழைக்கப்பட்டு இருந்த டி.பி. எடிஸலாட் நிறுவன அதிகாரி வினோத் குமார் புத்திராஜ் இரண்டு நாட்களிலும் விசாரிக்கப்படவில்லை.
ஆ.ராசா சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை மறுப்பதற்கு, ப.சிதம்பரம் விவகாரத்தையே காரணமாகச் சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட், சிதம்பரத்திடம் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுமா, இல்லையா என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, வழக்கை எப்படிக் கொண்டுசெல்வது என்று முடிவு எடுக்க இருக்கிறதாம் ராசா தரப்பு. அதனால்தான் விசாரணையைத் தள்ளிப்போடவும் முயற்சி செய்தார்கள்.
நீரா ராடியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பா ராவ், தயாளு அம்மாள் ஆகியோர் விரைவில் சாட்சியம் அளிக்க வர இருப்பதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
- சரோஜ் கண்பத்
படங்கள்: சிவராம கிருஷ்ணன்
*********************************************************************************
எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸை அசைக்க முடியாது!
துள்ளலுடன் தொடங்கும் ஞானதேசிகன்!

''தேர்தல் மூலம் தேர்வு செய்யாமல், நியமன முறையில் தலைவரை அமர்த்தும் கலாசாரம் உங்கள் கட்சியில் எப்போது ஒழியும்?''
''இப்போதும் பல மாநிலங்களில் தேர்தல் மூலமே நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். கட்சித் தேர்தலை நடத்துவதற்கு என்றே, தனி அமைப்பைக் கட்சிக்குள் கொண்டுவந்திருக்கிறோம். இதற்காக கட்சியின் விதிகளில் மாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் ஒரு சில காரணங்களால் தேர்தல் நடத்த முடியவில்லை. விரைவில் இங்கும் மாற்றம் வரும்.''
''உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸைக் கழற்றிவிட்டு தி.மு.க. தனித்துப் போட்டியிட்டது. இது, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸோடு தி.மு.க-வுக்கு உரசல்கள் இருப்பதைத்தானே காட்டுகிறது?''

''எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் ஜெயலலிதாவைச் சந்தித்தது கிடையாது. ஆனால், உங்கள் மகன் திருமணத்தை முன்னிட்டு இரண்டு மாதங்கள் முன்பு அவரை நீங்கள் சந்தித்தீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி சேர்வதற்கு வசதியாகத்தான் உங்களை நியமனம் செய்திருப்பதாகப் பேசப்படுகிறதே?''
''என் நியமனத்துக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமே இல்லை. விருப்பமானவர்களுக்கு திருமணப் பத்திரிகை கொடுப்பது, அரசியலைத் தாண்டிய விஷயம். அது என் தனிப்பட்ட விருப்பம். இதில் அரசியலைக் கலக்க கூடாது. தமிழகத்தில் எல்லா விஷயங்களையும் அரசியலோடு முடிச்சுப் போடுவது வாடிக்கையாகிவிட்டது. அறிவாலயத்திற்குப் போய் கலைஞரை சந்தித்தால், உடனே தி.மு.க. ஆதரவாளர் என்று முத்திரை குத்துகிறார்கள். எல்லாவற்றையும் அரசியல் கண் கொண்டு பார்க்கும் நிலை தமிழகத்தில் மாற வேண்டும்.''
''ஜெயலலிதாவை சந்திக்க யாருக்குமே வாய்ப்பு கிடைக்காதபோது, உங்களுக்கு மட்டும் தனி மரியாதை எப்படி?''
''காங்கிரஸில் இருந்து பலரும் ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கேட்டு இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. என் மகனின் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று சொன்னதும், வரச் சொன்னார்கள். அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வந்தேன். அங்கே அரசியல் எதுவும் பேசப்படவில்லை. என்னை மட்டும் அவர் சந்தித்ததை தனி மரியாதை என்று கருதவில்லை. அப்படி ஒரு தனித்துவம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் கருதினால் மகிழ்ச்சிதான்.''
''மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலகம் இடம் மாற்றம் என்று அதிரடி கிளப்பும் தமிழக அரசைப்பற்றி..?''
''காங்கிரஸ் கட்சித் தலைவராக நான் இன்னும் பதவி ஏற்கவில்லை. முறைப்படி அது நடந்த பிறகுதான், என்னுடைய கருத்தைச் சொல்ல முடியும். அதற்கு சில நாட்கள் காத்திருங்கள். நல்லாட்சி யார் நடத்தினாலும் அதை வரவேற்பதும், தவறுகள் செய்யும்போது தட்டிக்கேட்பதும் எதிர்க் கட்சிகளின் கடமை. அதை காங்கிரஸ் நிச்சயம் செய்யும்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும்?''

''முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றக் கூடாது என்று தமிழகத்தில் கிளம்பியிருக்கும் எழுச்சி பற்றி..?''
''நீதிமன்றமே குற்றவாளிகள் என்று சொல்லிய பிறகு, 'அவர்கள் நிரபராதிகள்’ என்று வைகோ போன் றவர்கள் எப்படிச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை. அவர்கள் நிரபராதிகள் என்றால், உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதையும் வைகோ சொல்ல வேண்டும். தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லி, அதை ஜனாதிபதியும் உறுதி செய்த பிறகு இப்படிக் கருத்து சொல்வது அழகு அல்ல.''
''அடிக்கடி அடிதடி நடக்கும் வன்முறைக் களமாக சத்தியமூர்த்தி பவன் காட்சி அளிக்கிறதே..?''
''அப்படி ஒரு நிலை இனி ஏற்படாத அளவுக்கு என்னுடைய பணிகள் இருக்கும். கட்சியின் தலைமை அலுவலகம் கோயில் மாதிரி. கோயிலின் புனிதத்தன்மையைக் காப்பாற்றுவது போல, சத்தியமூர்த்தி பவன் காப்பாற்றப்படும்.''
''சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சரிவுதானே...?''
''வெற்றி, தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம். இதனை ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கவேண்டும். எந்த சீமான் வந்தாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது. சீமான் நன்றாகப் பேசுகிறார். பேசிக்கொண்டே இருக்கட்டும்...''
''தங்கபாலு நீக்கத்திற்கு என்னதான் காரணம்? தமிழக காங்கிரஸ் தலைவராக நீங்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், ஜி.கே.வாசனின் கை ஓங்கியதாகத் தெரிகிறதே?''
''தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்து இருந்தார். அது, ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றபடி அவர் நீக்கப் படவில்லை. காங்கிரஸின் சின்னம் 'கை’ எப்போதும் ஓங்கிதான் இருக்கும்!''
- எம். பரக்கத் அலி, படங்கள்: என்.விவேக்
*********************************************************************************
லோக்கல் சேனலைக் கைப்பற்றுகிறதா அ.தி.மு.க.?
கேபிள் கலாட்டா

''இரண்டு மாசத்துக்கு அஞ்சு லட்ச ரூபாய் வரை அட்வான்ஸாக டி.டி வாங்கிட்டு, உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்தாங்க. எந்த வரைமுறையும் இல்லாம, உள்ளூர் சேனல்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தாங்கன்னு தெரியலை. ஒவ்வொரு சேனலிலும், ஒளிபரப்பும் பாடல் களுக்கு யாருமே காப்பிரைட்ஸ் வாங்கவே இல்லை. அப்படி வாங்காம ஒரு பாட்டை சேனலில் ஒளிபரப்பினா, அடுத்த நாளே வக்கீல் நோட்டீஸ் வந்துடும். ஆனா, இரண்டு நாளைக்கு முன்னாடி சேலத்தில் ஒரு லோக்கல் சேனலில் 'எங்கேயும் எப்போதும்’ படமே முழுசா ஓடி இருக்கு. இதுக்கு யார் அனுமதி கொடுத்தாங்க?

இப்போ மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விட்டு யார் அதிக தொகைக்கு கேட்கிறாங்களோ... அவங்களுக்கு உள்ளூர் சேனல் நடத்த அனுமதி கொடுக்கப்போறதா சொல்றாங்க. அதை முன்னாடியே செய்ய வேண்டியதுதானே!'' என்கிறார்கள் முன்பு லோக்கல் சேனல் நடத்தியவர்கள்.
''அரசு கேபிளுக்கு மாதக் கட்டணமாக




அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றிப் பேசினோம். ''இப்போது பரிசோதனை முயற்சியாகத்தான் உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறோம். சீக்கிரமே அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலமாக டெண்டர் விடப்போகிறோம். யார் அதிகக் கட்டணம் செலுத்தி சேனல் நடத்தத் தயாராக இருக்கிறார்களோ... அவர்களுக்கு அனுமதி கொடுப்போம். ஒரு மாவட்டத்துக்கு 10 சேனல்கள் வரை அனுமதி கொடுக்கப்போகிறோம். உள்ளூர் சேனல்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டால், அவர்கள் விருப்பத்துக்கு எது வேண்டுமானாலும் ஒளிபரப்ப முடியாது. அதற்காக ஏழு விதிமுறை களை வகுத்திருக்கோம். செய்திகளை ஒளிபரப்பக் கூடாது என்பதுதான் முதல் விதி. காப்பிரைட் இல்லாமல் பாடல்களையோ, படக் காட்சிகளையோ ஒளிபரப்ப அனுமதி கொடுக்க மாட்டோம். அதனால், யார் வேண்டுமானாலும் இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே லோக்கல் சேனலை நடத்த முடியும். அ.தி.மு.க-வினர் மட்டும்தான் லோக்கல் சேனல் நடத்துகிறார்கள் என்பது பொய்யான குற்றச்சாட்டு.
சில இடங்களில் அரசு நிர்ணயித்து இருக்கும் கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. அப்படி யாராவது வசூலித்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சன் டி.வி. இணைப்பை அரசு கேபிள் வழியாகக் கொடுத்துத் தொழிலைக் காப்பாத்திக்க சிலர் இப்படி செய்கிறார்கள். இனி அப்படி நடக்காது. நாங்களே சன் டி.வி-யோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விரைவில் அரசு கேபிள் வழியாக சன் டி.வி-யும் கிடைக்கும். இதில் யாரும் குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்'' என்றார் தெளிவாக.
சரிதான்!
- கே.ராஜாதிருவேங்கடம்
************************************************************************
ராஜீவ் கொலை நடந்த போது எங்கே இருந்தீர்கள்?
வேலூரில் விசாரணை நடத்திய ஜெத்மலானி!
' அனைத்து இந்திய சாய்பாபா பக்தர்கள் மாநாடு’ வேலூரில் கடந்த 12, 13 தேதிகளில் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்த கலைவாணன், இந்த மாநாட்டில்

எப்போதும் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் வேலூர் சிறையில், அன்று அளவுக்கு அதிகமான பாதுகாப்பு. ராம்ஜெத்மலானி மற்றும் வைகோ உள்பட்டவர்கள் சிறைக்குள் சென்று சுமார் 12 நிமிடங்களில் வெளியே வந்துவிட்டனர். பத்திரிகையாளர்களிடம் ராம்ஜெத்மலானி அதிகமாகப் பேசவில்லை. ''மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் அப்பாவிகள், நிச்சயமாக அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன். மற்றபடி என் தொழில் தர்மத்தை மீறி என்னால் எதுவும் பேச இயலாது, நான் இங்கு வந்ததற்கு முக்கியக் காரணம் வைகோதான்!'' என்று மட்டும் அவர் சொல்ல... நிருபர்கள் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தனர். ராம்ஜெத்மலானியோ புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்துவிட்டு சென்னைக்குக் கிளம்பினார்.
''சிறைக்கு உள்ளே என்ன நடந்தது?'' என்று வைகோவிடம் கேட்டோம். ''கிட்டத்தட்ட 21 வருடங்களாக சிறையில் தவிக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை ராம்ஜெத்மலானியிடம் அறிமுகப்படுத்தினேன். அவர் நம் தம்பி களிடம் பொறுமையாகப் பேசினார். 'ராஜீவ் காந்தி

சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை ராம்ஜெத்மலானி பார்த்துச் சென்று இருப்பது, தமிழ் ஆர்வலர் களிடையே நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கி இருக்கிறது!
- கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்
*********************************************************************************
இருப்பவனுக்கு ஒரு கடை... இல்லாதவனுக்கு ஒரு கடை!
அதுதான் எலைட்...
கடந்த 2003-ம் ஆண்டு தமிழக அரசு, மது விற்பனையைத் தனது கையில் எடுத்ததில் இருந்தே அதற்கு நல்ல வருமானம்தான். 2004-05-ல்







டாஸ்மாக் மதுபானங்களில் இவ்வளவு கேடு இருப்பதால்தான், உயர்தட்டு மக்களுக்காக எலைட்

ஆனால், இன்னொரு தரப்பினரோ, ''வாடிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை டாஸ்மாக் கடைகள் அளிப்பது இல்லை. பார்களில் கால்வைக்க முடியாத அளவுக்கு நாறிக்கிடக்கின்றன. அதிக விலைக்கு விற்பது, கேட்கும் மதுபானத்தைக் கொடுக்காமல் இருப்பது என நுகர்வோருக்கு உரிய அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறார்கள். இந்த நிலையில், எலைட் மதுபானக் கடைகள் வருகை நியாயமானதே...'' என்கிறார்கள்.
டாஸ்மாக் அதிகாரிகளோ, ''இது அரசின் கொள்கை முடிவு. அதை செயல்படுத்துவது எங்கள் கடமை'' என்கிறார்கள் சின்சியராக!
இப்படி ஆயிரம் நியாயங்களைக் கற்பித்தாலும், தமிழக அரசின் டாஸ்மாக் கொள்கைகளைப் பார்க்கும்போது, 'இந்த நாடும் நாட்டு மக்களும் எப்படியும் போகட்டும்’ என்ற நினைப்பில் இருக்கிறார்களோ என்னவோ!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
************************************************************************
செய்தியும் சிந்தனையும் - டயல் செய்தால் எஸ்.ராமகிருஷ்ணன் பேசுவார்!

*********************************************************************************
கார் வாங்கப் போகிறீர்களா?

*********************************************************************************
கப்சா விட்ட மாஜி மந்திரி!
பட்டம் வாங்காமலேயே 'பி.ஏ.'ன்னு போட்டவர்தானே அவர்!''


ரஞ்சித் (பாலிடெக்னிக் மாணவர் மூன்றாம் ஆண்டு):
''கல்வித் துறை அமைச்சராக கல்யாண சுந்தரத்தை முதல்வர் ரங்கசாமி அறிவித்தபோதே, தலையில் அடிச்சுக்கிட்டோம். ஏனென்றால், 8-ம் வகுப்பு ஃபெயி லானவர், ஐந்து கிரிமினல் வழக்கு கள் உள்ளவர், ஹோட்டலில் காபரே டான்ஸ் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பட்டப் படிப்பு படிக்காமலே, கல்யாணப் பத்திரிகையில் பி.ஏ., என்று போட்டுக்கொண்டவர். இப்படிப் பட்ட ஒருவரை 'தவறான’ காரியங்கள் செய்வதற்கு ஒத்தாசையாகத்தான் முதல்வர் வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!''

80 சதவிகிதம் படித்தவர்கள் நிரம்பியுள்ள புதுவையில், 8-ஆம் வகுப்பு முடிக்காத ஒருவரைக் கல்வி அமைச்சர் ஆக்கியது கொடுமை. ரங்கசாமி மீது மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரவுடிகளுக்கும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும்தான் இந்த ஆட்சியில் மரியாதை இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் கொலை செய்யப்பட்ட ஜெயராமன் விவகாரத்தில் கல்யாணசுந்தரத்துக்கு தொடர்பு இருப்பதாகச் சொல் கிறார்கள். இதுகுறித்தும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற வேண்டும்!''
சிந்து (பி.காம் முதலாம் ஆண்டு, பாரதிதாசன் கல்லூரி) :
''ஒரு மாணவர் பிட் அடித்தாலோ, ஆள் மாறாட்டம் செய்தாலோ, அவர் களுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும். இதே தவறினை ஒரு கல்வி அமைச்சர் செய்திருக்கிறார் என்றால், தண்டனை எவ்வளவு கடுமையாக இருக்க வேண்டும்? அவர் மீது தவறு இல்லை என்றால், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்து இருக்கலாமே? எதற்காக ஓடி ஒளிகிறார்? பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மாணவர்களுக்கு எந்த ஒரு நல்ல காரியமோ, திட்டமோ நிறைவேற்றவே இல்லை. அமைச்சர் செய்த காரியத்தால் புதுச்சேரியில் இருக்கும் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் அதிருப்தியில் தலை குனிந்து நிற்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை அமைச்சராக நியமித்த, முதல்வர் ரங்கசாமி இந்தத் தோல்விக்கும் அவமானத்துக்கும் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும்!''
ஜெயராமன் (நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி, ஆசிரியர் சங்கத் தலைவர்) :
புதுச்சேரி மாநிலத்துக்கு என்று நேரு காலத்தில் இருந்து ஒரு தனி மரியாதை இருக்கிறது. அதற்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாகச் சொல்லப்படும் கல்யாணசுந்தரம், இதுவரை ஏன் தன்னிலை விளக்கம் கொடுக்கவில்லை? கல்வித் துறைக்கு ஒரு இளையவர் அமைச்சராகிறார் என்றதும் ரொம்பவும் சந்தோஷப்பட்டேன், ஆனால் இப்போது அவமானமாக இருக்கிறது. அந்தந்தத் துறைக்கு ஏற்றவர்களைத் தேர்ந்து எடுத்தால், எதிர்காலத்திலாவது இது போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம்!''

''அவர் படித்தாரா, படிக்கவில்லையா என்பது முக்கியம் அல்ல. காமராஜர் படிக்காமலே பல சாதனைகள் செய்த வர்தான். ஆனால், ஒருவருக்குத் தனிமனித ஒழுக்கம் முக்கியம். 16 சட்டமன்ற உறுப்பினர்கள்கொண்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவரை நீக்கிவிட்டால், கட்சிக்குக் கெட்ட பெயர், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று முதல்வர் இவ்வளவு காலம் நடவடிக்கை எடுக்கத் தாமதம் ஆகியிருக்கலாம். அடுத்து வருபவராவது பெற்றோர்கள் மனம் புரிந்து கல்வித் துறை மீது கவனம் செலுத்துபவராக வரட்டும்!''
சரவணன் (விவசாயி , பாகூர் பகுதி):
''கல்வித் துறை அமைச்சரே இப்படி ஆள்மாறாட்டம் பண்ணுவார்னு எதிர்பார்க்கலை. சமூகக் குற்றங்கள் செய்தவரைக் கட்சியில் சேர்த்து, அமைச்சர் பதவியும் கொடுத்த ரங்கசாமி, இப்போது பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சரியில்லைன்னுதான் என்.ஆர். காங்கிர ஸுக்கு ஓட்டுப் போட்டோம். இவங்க அதைவிட மோசமாக இருக்கிறார்கள். உடனே ரங்கசாமி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சி கானல் நீர் போன்று மறைந்தேபோகும்!''
- நா.இள. அறவாழி
ஆ.நந்தகுமார்
*********************************************************************************
0 comments:
Post a Comment