********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகம்

Saturday, November 12, 2011
அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் கொலம்பஸ் எனப் பெருமைமிகு அறிமுகத்தை மட்டுமே பெற்றிருக்கும் பலருக்கும் அதிர்ச்சி தரக் கூடிய வகையில் கொலம்பஸ்ஸின் மற்றுமொரு முகத்தை
ஆதாரபூர்வமாக வெளிப்படுத்துக்கின்றார் இக்கட்டுரையாளர்.
வருடந்தோறும் அக்டோபர் 12 ந்தேதி  கொலம்பஸ் நினைவு கூரப்படுகின்றார். கொலம்பஸ் கொண்டாடப்படவேண்டியவரா என்ற கேள்வியைத் தோற்றுவிக்ககும் இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்ய அனுமதியளித்த கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 12 ம் தேதி, கொலம்பஸ் என்ற கொலை வெறியனை நினைவு கூர்ந்து விழா எடுக்கிறார்கள். "கொலம்பஸ் தினம்" ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஒரு முக்கியமான விடுமுறை தினம். கொலம்பஸ் அமெரிக்காவை "கண்டுபிடித்த" கதையை பாலர் பாடசாலையில் இருந்தே சொல்லிக் கொடுக்கிறார்கள். யார் இந்த கொலம்பஸ்? கரீபியன் தீவுகளில் வாழ்ந்த இரண்டு லட்சம் மக்களை இரு வருடங்களில் இனவழிப்பு செய்த சாதனையாளன். ஒன்பது வயது சிறுமிகளைக் கூட பாலியல் அடிமைகளாக்கிய கயவன். அமெரிக்காவில் முதன் முதலாக அடிமை வாணிபத்தை அறிமுகம் செய்த அயோக்கியன். இன்று உயிரோடிருந்தால், மனித குலத்திற்கு எதிரான குற்றம் இழைத்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பான்.
அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? கொலம்பஸ் தானே எழுதி வைத்த தினக்குறிப்புகள் இருக்கின்றன. கொலம்பஸின் ஆட்களில் ஒருவரான பார்த்தலோமே லாஸ் காஸாஸ், கொடுமைகளால் மனம்வருந்தி எழுதிய குறிப்புகள் இருக்கின்றன. அவற்றில் அமெரிக்க மக்களை இனவழிப்பு செய்த கொடூரங்கள் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளன. இன்று யாரும் இவற்றை நினைவு கூற விரும்புவதில்லை. வரலாற்றுப் பாடநூல்களும் சம்பிரதாயத்திற்காக என்றாலும் குறிப்பிடுவதில்லை.
இனவழிப்பு செய்த கொலம்பஸை தேசிய நாயகனாக விழா எடுத்துக் கௌரவிக்கும் வெட்கக்கேடு அமெரிக்காவில் நடக்கின்றது. இதை அறியாத பல தமிழர்கள், அமெரிக்கர்கள் நாகரீமானவர்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் கொண்டாடப் பட வேண்டுமென அரசுக்கு பிரேரணை செய்தது Knights of Columbus என்ற அமைப்பு. இது ஒரு வெளிநாட்டவருக்கெதிரான நிறவெறிக் கொள்கை கொண்ட கத்தோலிக்க அமைப்பு. அவர்கள் கொலம்பஸை தமது பிள்ளைகளுக்கு கத்தோலிக்க ஆதர்ச நாயகனாக காட்டினார்கள். 1934 ம் ஆண்டு, ஜனாதிபதி பிராங்கலின் ரூஸ்வெல்ட் கொலம்பஸ் தினம் என்ற விடுமுறை நாளை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முதன் முதலாக அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த உண்மை. செவ்விந்திய பூர்வீக குடிகள், பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் என்றும் கூற முடியாது. Leif Ericson என்ற கடலோடி தலைமையில், ஸ்கன்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள், கனடாவில் நியூபவுன்லாந்து மாகாணத்தில் குடியேறி வாழ்ந்தனர்.
12 அக்டோபர் 1492 ம் ஆண்டு, கொலம்பஸ் பஹாமாஸ் தீவுகளில் காலடி எடுத்து வைத்த காலத்தில், அங்கே அரவாக்ஸ் இன மக்கள் வாழ்ந்து வந்தார்கள். சமாதான விரும்பிகளான அந்த மக்களைப் பற்றி கொலம்பஸ் தினக்குறிப்பில் இவ்வாறு எழுதி வைத்தார். "அவர்கள் தம்மிடம் இருப்பதை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கேட்பதற்கெல்லாம் இல்லை என்று மறுப்புக் கூறுவதில்லை....."
"அரவாக்ஸ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை. அவர்களது சமூகத்தில் குற்றவாளிகள் இல்லை, கைதிகள் இல்லை, சிறைகள் இல்லை. எமது கப்பலான சாந்தா மரியா கரைதட்டி உடைந்த பொழுது, கப்பலில் வந்தோரையும், பொருட்களையும் மீட்க அரவாக்ஸ் மக்கள் உதவி செய்தனர். கப்பலில் இருந்த ஒரு பொருளையேனும் அவர்கள் ஒளித்து வைக்கவில்லை..."
இவ்வாறு மனமுவந்து உதவி செய்த நேர்மையான அரவாக்ஸ் மக்களுக்கு கொலம்பஸ் செய்த கைம்மாறு என்ன? அந்த மக்களை அடிமைகளாக்கி தங்கச் சுரங்கங்களில் கட்டாய வேலை வாங்கினான். இருப்பதை பங்கிட்டு மகிழச்சியாக வாழ்ந்த மக்கள், இன்னலுற்று மனமொடிந்து தற்கொலை செய்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் நூற்றுக் கணக்கானோர் கூட்டாக தற்கொலை செய்தனர். அரவாக்ஸ் பெண்களை கொலம்பஸின் ஆட்கள் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தார்கள். அதைப் பற்றி கொலம்பஸ் இவ்வாறு எழுதியுள்ளார்: "இளம் பெண்களுக்கான கேள்வி அதிகரித்த காரணத்தால், அவர்கள் 9 , 10 வயது சிறுமிகளை தேடிச் சென்றார்கள்..."
அரவாக்ஸ் அடிமைகளை இறக்கும் வரை இரத்தத்தை பிழிந்து வேலை வாங்கினார்கள். ஒரு செவ்விந்திய அடிமை தினசரி குறிப்பிட்ட கோட்டா தங்கம் எடுத்துக் கொடுக்கா விட்டால், தண்டனையாக இரு கைகளையும் வெட்டினார்கள். அடிமை முறைக்கு எதிர்ப்புக் காட்டிய அரவாக்ஸ் தொழிலாளியின் மூக்கையும், காதுகளையும் அறுத்தனர். அடிமை விலங்கை உடைத்துக் கொண்டு தப்பியோடி பிடிபட்டால் உயிரோடு கொளுத்தினார்கள். கொலம்பஸ் தனது இரண்டாவது பயணத்தில் வேட்டை நாய்களை கொண்டு வந்தான். தப்பியோடும் அடிமைகள் மீது நாய்களை அவிழ்த்து விடுவார்கள். தப்பியோடியவர்களை வேட்டையாடும் நாய்கள், அவர்களை கடித்துக் குதறி, கை வேறு, கால் வேறாக பிய்த்து விடும். கொலம்பஸின் ஆட்கள் தமது வேட்டை நாய்களுக்கு மாமிச உணவு தீர்ந்து விட்டால், அரவாக்ஸ் இனக் குழந்தைகளை வெட்டி உணவளித்தார்கள்! ஸ்பெயினில் இருந்து நீண்ட கடற்பயணம் செய்து வந்தவர்களை விருந்தாளிகளாக ஏற்று உபசரித்த அரவாக்ஸ் மக்களுக்கு, கொலம்பஸ் செய்த நன்றிக்கடன் அப்படியானது. தான் செய்த கொடூரங்களுக்காக கொலம்பஸ் வருந்தியதாக தெரியவில்லை. கிறிஸ்தவர்களை அடிமைகளாக வைத்திருக்க கத்தோலிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்காக கொலம்பஸ் ஒரு தந்திரம் செய்தான். செவ்விந்திய குடிமக்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்கு தடை விதித்தான். கிறிஸ்தவர்கள் அல்லாதோரை கொன்றாலும் பாவம் இல்லை அல்லவா?
ஜெர்மனியில் ஹிட்லரை தேசிய நாயகனாக கொண்டாடினால் உலகம் எந்தளவு அதிர்ச்சி அடையும்? மனித நேயம் மிக்கவர்களாக உலகிற்கு காட்டிக் கொள்ளும் அமெரிக்கர்கள், கொலைவெறியன் கொலம்பஸை தேசிய நாயகனாக கொண்டாடுவதைக் கண்டு யாரும் அதிர்ச்சி அடையவில்லை. ஏன்? உலக வரலாறு முழுவதும் இனப்படுகொலையாளர்கள் மாவீரர்களாக போற்றப் பட்டு வந்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீசர், அலெக்சாண்டர், நெப்போலியன்.... உதாரணத்திற்கு சில. இதையெல்லாம் தெரிந்தாலும் மூடி மறைக்கும் அறிவுஜீவிகள் தான்; ஸ்டாலின், மாவோ எத்தனை பேரை கொலை செய்தார்கள் என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். "மேலைத்தேய நலன்களுக்காக கொலை செய்பவர்கள் பரிசுத்தவான்கள். அதனால் அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கலாம்."
மேலதிக தகவல்களுக்கு :
Genocide of Christopher Columbus
Slavery and Colonialism Make Up the True Legacy of Columbus
Columbus Day
Knights of Columbus
Leif Ericson

********************************************************************************************வருடந்தோறும் அக்டோபர் 12 ந்தேதி  கொலம்பஸ் நினைவு கூரப்படுகின்றார். கொலம்பஸ் கொண்டாடப்படவேண்டியவரா என்ற கேள்வியைத் தோற்றுவிக்ககும் இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்ய அனுமதியளித்த கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010