********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் 'கை' வைக்க தயாராகிவிட்ட அண்ணன் ஜமாஅத்..?

Sunday, November 13, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒரு தொழுமிடத்தில் அரைடவுசர் போட்டு ஒருவன் பாங்கு சொல்ல, அதை சில சகோதரர்கள் சுட்டிக்காட்டியபோது அண்ணனை பின்பற்றுபவர்கள், அரைடவுசர் போட்டு பாங்கு சொல்ல தடையுண்டா? என்று அலறியதை இணையதள வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவர்களுக்கு தேவை என்றால் தடையுண்டா? என்பார்கள். அவர்களுக்கு தேவை என்றால் அனுமதியுண்டா? என்பார்கள். அவர்களுக்கு தேவை என்றால் மார்க்கத்தில் தடையில்லாத ஒன்றை தடுக்கும் நோக்கில் சிறந்ததை கையிலெடுப்பார்கள். அந்தவரிசையில் இப்போது இவர்கள் கையிலெடுத்திருப்பது திருமண விருந்து பற்றியதாகும்.

மார்க்கத்துக்கு முரணில்லாத வகையிலும் வீண்விரயம் இல்லாமலும் பெரும் பொருட்செலவில் அதிகமான மக்களுக்கு விருந்தளித்து நடத்தப்படும் திருமணங்கள் விஷயத்தில் அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது அவரவர் சக்திக்கு உட்பட்ட விஷயம் என்ற ஒன்று அனைவரும் அறிந்ததுதான். இவ்வளவு காலமும் மண்டபத்தில் நடந்த பலநூறு பேர்களுக்கு விருந்தளித்த திருமணங்களை கண்டு கொள்ளாத அண்ணன் ஜமாஅத், இப்போது இந்த விசயத்தை வழக்கம் போல் 'மறு ஆய்வு'க்கு எடுத்து, கீழ்கண்டவாறு ஒரு புதிய ஃபத்வா வழங்கியுள்ளது.

''தனது சக்திக்கு உட்பட்டு ஒருவர் அதிகமான மக்களுக்கு விருந்தளிப்பது குற்றமாகாது என்றாலும் அது சிறந்ததல்ல. ஏனெனில் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணத்தையே நபிகள் நாயகம் (ஸல்) சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அந்தக் காலத்தில் திருமணச் செலவு என்பது விருந்துச் செலவு மட்டும் தான். எனவே விருந்துக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்ப்பது தான் சிறந்தது எனினும், அனுமதிக்கப்பட்ட செயலுக்கு நாம் தடை போடவும் முடியாது. அனுமதிக்கப்பட்டதையும் சிறந்ததையும் சமமாகவும் கருத முடியாது என்ற அடிப்படையில்,

எளிமையான திருமணத்தில் தான் பரக்கத் எனும் பேரருள் அடங்கியுள்ளது என்பதாலும் அதைத் தான் மக்களுக்கு நாம் ஆர்வமூட்ட வேண்டும் என்பதாலும் ஏழை எளிய மக்கள் அதிகமாக உள்ள சமுதாயத்தில் நம்முடைய செயல்கள் ஏழைகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்ற சமூக நலன் கருதியும்,
மார்க்கத்துக்கு முரணான எந்த அம்சமும் இல்லாமல் அதிகமான நபர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நடத்தப்படும் திருமணங்களை நம்முடைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யலாம். ஆனால் அந்த திருமணங்களில் பேச்சாளர்களை அனுப்பி திருமண உரை நிகழ்த்துவதில்லை.
மார்க்கத்திற்கு முரணில்லாத வகையிலும் விருந்துக்காக குறைந்த அளவு செலவிட்டும் நடத்தப்படும் திருமணங்களை நமது ஜமாஅத்தின் பதிவேட்டில் பதிவு செய்வதுடன் அந்தக் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் திருமண உரை நிகழ்த்த பேச்சாளரை அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு திருமண விருந்தில் இந்த வேறுபாட்டைக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அண்ணன் ஜமாஅத்தின் மேற்கண்ட முடிவின் படி, மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்படா விட்டாலும், அதை விட சிறந்ததை கண்டால் அதைத்தான் கடைபிடிக்க வேண்டும். சிறந்ததை செய்வதற்குத் தான் ஆர்வமூட்ட வேண்டும் என்று தெரிகிறது. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட சிறந்ததாக கூறப்பட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விசயத்தில் கடந்த  காலங்களில் அண்ணன் ஜமாஅத்தின் நிலை என்ன? சிறந்தவைகளுக்கு முன்னுரிமை கொடுத்ததா? இல்லை.

உதாரணத்திற்கு, தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதை ஊக்கப்படுத்தியது அண்ணன் ஜமாஅத். அதன் காரணமாக இன்றைக்கு அண்ணன் ஜமாஅத் நிர்வாகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பெண்கள் தொழ வரும் காட்சியைக் காணலாம். பெண்கள் பள்ளிக்கு தொழ வருவதை குறித்து மார்க்கத்தின் நிலை என்ன?

பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
(இப்னு குசைமா, அஹ்மது 5211)
عنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ (سنن أبي داود)
உங்கள் பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடை
செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்ததாகும்.
(அபூதாவூத்)
 
பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீடுகளில்
 
தொழுவதே சிறந்தது
 
என மார்க்கம் சொல்லியிருக்க, இவர்கள் சிறந்தவைகளுக்கு
 
முன்னுரிமை
 
தருபவர்களாக இருந்தால், பெண்கள் அவர்களாகவே
 
பள்ளிக்கு வந்தால்
 
வரட்டும் என்று இருக்காமல் பெண்களை பள்ளிக்கு
 
அழைக்கும் நோக்கில்
 
பள்ளியில் தொழுவதை அழுத்தம் திருத்தமாக பேசியது
 
ஏனோ? பெண்களை
 
பள்ளிக்கு அழைப்பதில் காட்டிய வேகத்தை அவர்களுக்கு
 
சிறந்ததான
 
வீட்டில் தொழுமாறு
 
இவர்கள் ஊக்கப்படுத்தியதில் காட்டியதுண்டா?
 
குறைந்த பட்சம் இப்போதாவது, தங்களின் தவ்ஹீத்
 
பெண்கள் சிறந்ததை
 
செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் 'பெண்களே உங்கள்
 
வீடுகளில்
 
தொழுங்கள்; அதுதான் சிறந்தது' என்று அண்ணன் ஜமாஅத்
 
அறிவிக்குமா?
 
போராட்டக் களங்களில், மாநாடுகளில், பொதுக்கூட்டங்களில் 
 
பெண்கள் கலந்து கொள்வதை விட,
 
அவர்கள் வீட்டில் இருப்பதே மார்க்கத்தில்
 
சிறந்தது என்பதால், இனிமேல் தங்கள் போராட்டங்கள்-
 
மாநாடுகளுக்கு
 
பெண்களுக்கு தடை விதிக்குமா?
 
அதோடு, இனிமேல் எல்லா விஷயத்திலும் மார்க்கத்தில்
 
அனுமதிக்கப்பட்டதை விட,
 
சிறப்பித்துக் கூறப்பட்டதற்குத்தான் தான்
 
முன்னுரிமை என்று அறிவிக்கத் தயாரா?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010