மூட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி!
வருகிறது கார்டிலேஜ் தானம்வயதானவர்களை மட்டுமே வருத்தி வந்த மூட்டுத் தேய்மானப் பிரச்னை இப்போது இள வயதினரையும் தாக்கத் தொடங்கிவிட்டது. கை, கால், விரல்கள்
உள்ளிட்ட உறுப்புகளின் அசைவுகளுக்கு காரணகர்த்தாவாக
இருப்பவை, மூட்டுகள்தான். மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும்போது, அது தொடர்பான உறுப்பின் மொத்த இயக்கமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்கு ஆட்களைப் படுக்கையிலும் சாய்த்துவிடுகிறது.
மூட்டுத் தேய்மானத்தைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை வரை மருத்துவம் வளர்ந்துவிட்டாலும், முழுமையான தீர்வுக்கு சாத்தியம் இல்லாத நிலை. இப்போது புதிதாக வந்திருக்கும் 'கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன்’ சிகிச்சை மூலம் மூட்டு தேய்மானத்தை நிச்சயம் சரிசெய்யலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இது குறித்து எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை நிபுணர் இளங்கோவனிடம் பேசினோம்.
''இரண்டு எலும்புப் பகுதிகளை இணைக்கும் பகுதியைத்தான் மூட்டு என்கிறோம். கழுத்து, தோள்பட்டை, கை, கால் என்று அசைவு இருக்கும் பகுதிகளில் எல்லாம் இந்த மூட்டுப் பகுதி காணப்படுகிறது. மூட்டின் உள்பகுதியில் மென்மையான கார்டிலேஜ் என்கிற பரப்பு காணப்படுகிறது. எலும்புகளில் அசைவு ஏற்படும்போது அதில் உராய்வு ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு இதனுடையதுதான். இந்த கார்டிலேஜ் பகுதி பாதிப்புக்கு உள்ளாகும்போது எலும்புகள் ஒன்றோடு ஒன்றாக உரசி மூட்டுத் தேய்மானத்தை ஏற்படுத்துகிறது.
இத்தகைய தேய்மானம் பெரும்பாலும் முழங்கால் மூட்டு பகுதியிலேயே அதிகம் ஏற்படுகிறது!'' என்றவர், அதற்கான காரணங்களையும், அதை சரிசெய்யும் கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை பற்றியும் விளக்கினார்...
''பொதுவாக 20 வயதில் இருந்து 45 வயது வரை நாம் அதிகமான வேலைப் பளுவைச் சுமக்கிறோம். வண்டி ஓட ஓட சக்கரம் தேய்வதுபோல், ஒருவருடைய வேலையைப் பொறுத்து, அவருடைய மூட்டில் உள்ள கார்டிலேஜ் என்கிற பகுதியும் தேய்கிறது. அதிக நேரம் நடப்பவர்கள், நின்றுகொண்டே வேலை செய்பவர்கள், அடிக்கடி படிக்கட்டுக்களில் ஏறி இறங்குபவர்கள் மூட்டு தேய்மானத்தினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கார்டிலேஜ் பகுதி மட்டும் இன்றி அதற்கு சக்தியை அளிக்கும் சைனோவியல் ஃப்ளூயிட் என்கிற திரவம் குறைவதாலும் மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது. பொதுவாக எலும்பு உடைந்தால், மறுபடி வளரும். ஆனால், இந்த கார்டிலேஜ் பகுதி பாதிப்புக்கு உள்ளானால் மீண்டும் வளர்வது இல்லை. அதனை வளரவைத்தால், இந்த மூட்டு தேய்மானத்துக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்ற சிந்தனையில் தோன்றிய ஆராய்ச்சிதான் கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேசன்!
சைனோவியல் ஃப்ளூயிட் அளவு குறைவது மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப கட்ட நிலை. இதைப் போக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட சைனோவியல் ஃப்ளூயிட்டை ஊசி மூலமாக மூட்டுக்குள் செலுத்துவார்கள். கார்டிலேஜ் பகுதியில் பாதிப்பு எனில், அதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் சிறந்தது. இதில் செயற்கையாக மூட்டு செய்து பொருத்தப்படும். பெரும்பாலான எலும்பு முறிவு நிபுணர்கள் இந்த முறையைத்தான் கையாளுகின்றனர். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை. வெளிநாடுகளில் இந்த சிகிச்சை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்களில் இம்முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது.
இதில், இறந்தவர்களின் உடம்பில் இருந்து கார்டிலேஜ் பகுதியை எடுத்து தேய்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தப்படும். 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இறந்துபோனவர்களுடைய கார்டிலேஜ் பகுதிதான் இதற்குப் பொருத்தமானது. இந்த வயது உடையவர்களின் கார்டிலேஜ் பகுதி அதிகத் தேய்மானத்துக்கு உள்ளாகாமல் இருக்கும். மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இந்த கார்டிலேஜ் பகுதி ஒட்டி வளர ஆரம்பித்துவிடும். இதில் உள்ள ஒரே சிக்கல் பொருத்தப்படும் கார்டிலேஜை, அந்த நபரின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். தற்போது இந்த முறையில் 50 பேர்களுக்கு கார்டிலேஜைப் பொருத்தினால் 30 பேருக்குத்தான் பொருந்துகிறது.
இதைத் தவிர கார்டிலேஜ் பகுதி தேய்மானத்துக்கு உள்ளானவர்களிடம் இருந்தே கார்டிலேஜை எடுத்து வெளியில் வளரவைக்கலாம். இதனால் கார்டிலேஜ் கொடுப்பவர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதற்கான தொழில்நுட்பம் தற்போது நம் நாட்டில் இல்லை. இதனால், இறந்த பிறகு கண் தானம் செய்வதுபோல் இந்த கார்டிலேஜ் பகுதியையும் தானம் செய்ய மக்கள் முன்வந்தால், இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
இதனால், எதிர்காலத்தில் செயற்கையாக மூட்டு பொருத்துவதற்குப் பதிலாக இயற்கையாகவே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இதனால் பெரிய அளவில் செலவையும் குறைக்க முடியும்!'' என நம்பிக்கை வார்க்கிறார் டாக்டர் இளங்கோவன்.
கார்டிலேஜ் தானம் செய்யக் கிளம்புவோமா?
உள்ளிட்ட உறுப்புகளின் அசைவுகளுக்கு காரணகர்த்தாவாக
இருப்பவை, மூட்டுகள்தான். மூட்டுகளில் தேய்மானம் ஏற்படும்போது, அது தொடர்பான உறுப்பின் மொத்த இயக்கமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. சில சமயங்களில் நடக்கவே முடியாத அளவுக்கு ஆட்களைப் படுக்கையிலும் சாய்த்துவிடுகிறது.
மூட்டுத் தேய்மானத்தைச் சரிசெய்ய அறுவை சிகிச்சை வரை மருத்துவம் வளர்ந்துவிட்டாலும், முழுமையான தீர்வுக்கு சாத்தியம் இல்லாத நிலை. இப்போது புதிதாக வந்திருக்கும் 'கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன்’ சிகிச்சை மூலம் மூட்டு தேய்மானத்தை நிச்சயம் சரிசெய்யலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இது குறித்து எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை நிபுணர் இளங்கோவனிடம் பேசினோம்.
இத்தகைய தேய்மானம் பெரும்பாலும் முழங்கால் மூட்டு பகுதியிலேயே அதிகம் ஏற்படுகிறது!'' என்றவர், அதற்கான காரணங்களையும், அதை சரிசெய்யும் கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை பற்றியும் விளக்கினார்...
''பொதுவாக 20 வயதில் இருந்து 45 வயது வரை நாம் அதிகமான வேலைப் பளுவைச் சுமக்கிறோம். வண்டி ஓட ஓட சக்கரம் தேய்வதுபோல், ஒருவருடைய வேலையைப் பொறுத்து, அவருடைய மூட்டில் உள்ள கார்டிலேஜ் என்கிற பகுதியும் தேய்கிறது. அதிக நேரம் நடப்பவர்கள், நின்றுகொண்டே வேலை செய்பவர்கள், அடிக்கடி படிக்கட்டுக்களில் ஏறி இறங்குபவர்கள் மூட்டு தேய்மானத்தினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கார்டிலேஜ் பகுதி மட்டும் இன்றி அதற்கு சக்தியை அளிக்கும் சைனோவியல் ஃப்ளூயிட் என்கிற திரவம் குறைவதாலும் மூட்டுத் தேய்மானம் ஏற்படுகிறது. பொதுவாக எலும்பு உடைந்தால், மறுபடி வளரும். ஆனால், இந்த கார்டிலேஜ் பகுதி பாதிப்புக்கு உள்ளானால் மீண்டும் வளர்வது இல்லை. அதனை வளரவைத்தால், இந்த மூட்டு தேய்மானத்துக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்ற சிந்தனையில் தோன்றிய ஆராய்ச்சிதான் கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேசன்!
சைனோவியல் ஃப்ளூயிட் அளவு குறைவது மூட்டு தேய்மானத்தின் ஆரம்ப கட்ட நிலை. இதைப் போக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட சைனோவியல் ஃப்ளூயிட்டை ஊசி மூலமாக மூட்டுக்குள் செலுத்துவார்கள். கார்டிலேஜ் பகுதியில் பாதிப்பு எனில், அதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் சிறந்தது. இதில் செயற்கையாக மூட்டு செய்து பொருத்தப்படும். பெரும்பாலான எலும்பு முறிவு நிபுணர்கள் இந்த முறையைத்தான் கையாளுகின்றனர். அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது கார்டிலேஜ் டிரான்ஸ்ப்ளான்டேஷன் சிகிச்சை. வெளிநாடுகளில் இந்த சிகிச்சை பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்களில் இம்முறை தற்போது கையாளப்பட்டு வருகிறது.
இதில், இறந்தவர்களின் உடம்பில் இருந்து கார்டிலேஜ் பகுதியை எடுத்து தேய்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தப்படும். 20 வயதில் இருந்து 25 வயதுக்குள் இறந்துபோனவர்களுடைய கார்டிலேஜ் பகுதிதான் இதற்குப் பொருத்தமானது. இந்த வயது உடையவர்களின் கார்டிலேஜ் பகுதி அதிகத் தேய்மானத்துக்கு உள்ளாகாமல் இருக்கும். மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் இந்த கார்டிலேஜ் பகுதி ஒட்டி வளர ஆரம்பித்துவிடும். இதில் உள்ள ஒரே சிக்கல் பொருத்தப்படும் கார்டிலேஜை, அந்த நபரின் உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். தற்போது இந்த முறையில் 50 பேர்களுக்கு கார்டிலேஜைப் பொருத்தினால் 30 பேருக்குத்தான் பொருந்துகிறது.
இதைத் தவிர கார்டிலேஜ் பகுதி தேய்மானத்துக்கு உள்ளானவர்களிடம் இருந்தே கார்டிலேஜை எடுத்து வெளியில் வளரவைக்கலாம். இதனால் கார்டிலேஜ் கொடுப்பவர்களுக்காக நாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதற்கான தொழில்நுட்பம் தற்போது நம் நாட்டில் இல்லை. இதனால், இறந்த பிறகு கண் தானம் செய்வதுபோல் இந்த கார்டிலேஜ் பகுதியையும் தானம் செய்ய மக்கள் முன்வந்தால், இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.
இதனால், எதிர்காலத்தில் செயற்கையாக மூட்டு பொருத்துவதற்குப் பதிலாக இயற்கையாகவே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். இதனால் பெரிய அளவில் செலவையும் குறைக்க முடியும்!'' என நம்பிக்கை வார்க்கிறார் டாக்டர் இளங்கோவன்.
கார்டிலேஜ் தானம் செய்யக் கிளம்புவோமா?
**********************************************************************************
பழசு இன்றும் புதுசு
நேற்றும் நமதே - 43: 1.8.99
தாமிரபரணி நதிக் கரையில் நின்று போலீஸ் போட்ட வெறியாட்டம் பற்றிய கடந்த
ஆம்... வெள்ளிக்கிழமை மூன்றாக இருந்த உயிர்ப் பலிகள், 17 ஆக உயர்ந்திருக்கிறது. தேடத் தேட ஆற்றுக்குள் இருந்து கிடைத்த உடல்களைக் கண்டு, நெல்லை நகரமே பதைபதைத்துப்போனது.
திங்கட்கிழமை 'பந்த்’ என்று 'புதிய தமிழகம்’ முதலில் அறிவித்து இருந்தபோதிலும், நெல்லை வந்து சோகத்தில் பங்கெடுத்த மூப்பனார், ''பந்த் வேண்டாம். இதை ஒரு கறுப்பு தினமாக துக்கம் அனுஷ்டிப்போம்...'' என்று சொல்லிவிட்டார்.
பந்த் என்ற பெயரில் புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள், போலீஸார் மீது தாக்குதல் நடத்திப் பழிவாங்கக்கூடும் என்று பரவியிருந்த அச்சம், இதன் மூலம் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டது.
இறந்த 17 பேரில் 11 பேர் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள். 'வேறு மாநில டாக்டர்களைக்கொண்டு போஸ்ட்மார்ட்டம் செய்யாவிட்டால், இந்த உடல்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று அக்கட்சியினர் விடாப்பிடியாகச் சொல்வதால், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், போதிய குளிர்சாதன வசதி இல்லாத மார்ச்சுவரியில் அந்த உடல்கள் 'டீ-கம்போஸ்’ ஆகி சிதையத் துவங்கி உள்ளன. இன்னும் இரண்டொரு நாட்களில் உடல்களைப் பெறாவிட்டால், அரசே தகனம் செய்துவிடவும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடக்கிறது.
எதிர்பாராத விதமாக போலீஸ் நிகழ்த்திய இந்தப் படுகொலைகளால், நிலைதடுமாறிப் போயிருக்கும் தமிழக அரசு, சட்ட அமைச்சர் ஆலடி அருணாவையும் கூடுதல் டி.ஜி.பி-யான குமாரசாமியையும் நெல்லையிலேயே முகாமிடச் செய்து பதற்றம் தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
நடக்கப்போகும் விசாரணையில், 'எங்கள் மீது தவறு இல்லை’ என்று போலீஸ் சொல்லக்கூடும். ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த நிருபர்களுக்கு இன்னமும் பதற்றம் அடங்கவில்லை.
ஊர்வலத்தினர் தங்கள் மீது கல் எறியத் துவங்கியதும், போலீஸ் அவர்களைத் துரத்தித் தாக்கியபோது தாமிரபரணி தண்ணீர் முழுக்க மனிதத் தலைகள்தான். தண்ணீரில் தத்தளித்தவர்கள் கரைக்கு வர முயல, தண்ணீரிலும் சில போலீஸார் நீண்ட லத்திகளை வீசி மண்டையைப் பிளந்தனர். நீச்சல் தெரிந்த ஆண்களும், சில பெண்களும் மறு கரைக்கு நீந்தித் தப்பித்துவிட, மற்றவர்கள் தண்ணீர் குடித்தே மூழ்கிவிட்டனர்.
தன் கண் முன்னே அடிபட்டவர்கள் தண்ணீருக்குள் மூழ்கிச் சாக, அதிர்ஷ்டவசமாக மீண்டு வந்திருக்கும் மாஞ்சோலை டீ எஸ்டேட் பெண் தொழிலாளி விக்டோரியா படபடப்புடன் நம்மிடம் பேசினார். ''நீச்சல் தெரியாத நான் தண்ணீரைக் குடிச்சுட்டே இருந்தேன். மூச்சு வேற வாங்குது. நல்லபடியா ஒரு படிக்கல் கிடச்சப்போ அதைப் பிடிச்சுக்கிட்டேன். அதுக்குள்ள தத்தளிச்ச ஒரு பொண்ணை கேமராக்காரர் குதிச்சுக் காப்பாத்தினார். கட்சிக்காரங்க சிலரும் பெண்களைக் காப்பாத்திக் கரையில் போட்டாங்க. எனக்கும் ஒருத்தர் கை கொடுத்தார். அவரை என் வயித்துல ரெண்டு மூணு முறை இடிக்கச் சொன்னேன். அதுக்கப்புறம்தான் குடிச்சிருந்த தண்ணி எல்லாம் வெளியே வந்து எனக்கு சுவாசிக்கவே முடிஞ்சது!'' என்றார்.
சென்ற இதழில், இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்த பெண்ணின் புகைப்படம் வந்திருந்ததே... அந்தப் பெண்மணியைத் தேடிப் பிடித்துப் பேசினோம். மாஞ்சோலையைச் சேர்ந்த அவர் பெயர் பார்வதி. ''முதுகுல அடிபட்ட உடனேயே தண்ணியில குதிச்சுட்டேன். எனக்கு நீச்சல் தெரியும் உடனே நீந்தி கரைக்கு வந்துட்டேன். அப்போ ஒரு பெண் மூழ்கிட்டிருக்க... யாரோ ஒரு ஆள் அவர் கையில் இருந்த குழந்தையைப் பிடுங்கிக் கரைக்குத் தூக்கிப் போட்டார். இதைப் பார்த்த நான் குழந்தையைக் கையில் தாங்கிப் பிடிச்சுக்கிட்டேன். குழந்தை கையில் இருந்ததால், போலீஸ்காரங்க என்னை அடிக்கலை. 'குழந்தையைக் கொண்டுட்டு ஓடுடீ’னு விரட்டினாங்க. அப்புறம் பெண் போலீஸார் வந்து என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினாங்க. போற வழியிலேயே அந்தக் குழந்தை விக்னேஷ் இறந்துட்டான். இன்னிக்குத்தான் அந்தக் குழந்தையின் தாய் ரத்தினமேரியும் இறந்துட்டாங்கன்னும், அவங்க பாட்டி மேரி என்கிற மாரியம்மாள் ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்துட்டு வர்றதும் தெரிஞ்சது...'' என்று கண் கலங்கினார். குழந்தையின் தந்தை மாரியப்பன், கடந்த மாதம் நடந்த மாஞ்சோலை டீ எஸ்டேட் போராட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் இருக்கிறாராம்.
இரண்டாவது நாள் மீட்புப் பணியின்போது, ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த கெய்சரின் உடல் கிடைத்தபோது, ஆரூண் எம்.எல்.ஏ. கலங்கிவிட்டார். ஐக்கிய ஜமாத்தின் சென்னை அலுவலகத்தைக் கவனித்தவர் கெய்சர். ராமநாதபுரத்துக்காரர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாம். அவர் அணிந்திருந்த ஒமேகா வாட்ச் உடலோடு சேர்ந்து ஒரு நாள் முழுக்க மூழ்கிக்கிடந்தும் ஓடிக்கொண்டே இருந்தது. அண்மைக் காலமாக ஆர்ப்பாட்டம், ஊர்வலம் எது நடந்தாலும் அவற்றை வீடியோ எடுக்கும் போலீஸார், இந்த முறை ஒன்றுக்கு மூன்றாக கேமராக்களை வைத்து ஊர்வலம், தடியடி எல்லாவற்றையும் 'ஷூட்’ பண்ணினார்கள். மதுரையில் இருந்து வந்த தென் மண்டல ஐ.ஜி-யான விபாகர் ஷர்மா இந்த வீடியோ டேப்பைப் போட்டுப் பார்த்து அதிர்ந்துவிட்டார்.
அரணாக நின்று போலீஸாரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, தலைவர்கள் ஜீப்பை கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கும்படி தொண்டர்கள் கோஷம் போடுகிறார்கள். அப்போது யாரோ சிலர் அங்கே நின்றுகொண்டு இருந்த ஒரு பெண் போலீஸைத் தொட போலீஸ் வெறிகொள்கிறது. அங்கே நின்று இருந்தவர்களைக் கலைக்க முதலில் கலவரத் தடுப்புப் படை லத்தியைச் சுழற்றுகிறது. அந்தப் பகுதியில் இருந்து நதிக் கரையை நோக்கி ஓடியவர்கள் கற்களை வீச, போலீஸ் மீதும் எதிர்ப் புறம் நின்ற மக்கள் மீதும் கற்கள் விழுகின்றன. தலைவர்கள் நின்று இருந்த ஜீப் அருகே நின்ற பெண்கள் கூட்டத்தில் இருந்தும் சிலர் போலீஸாரை நோக்கிக் கற்களை வீச, அதன் பிறகுதான் ஒட்டுமொத்தமாக இரண்டாவது கட்டத் தடியடி... போலீஸாரும் கற்களைத் தூக்கி மக்கள் மீது விட்டெறிகிறார்கள். கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட அதே நேரத்தில், விண்ணை நோக்கியும் இரண்டு முறை போலீஸார் துப்பாக்கியால் சுடுகிறார்கள். மேலப்பாளையம் நோக்கி விரையும் தலைவர்கள் ஜீப்புக்குப் பின்னாலேயே ஒரு பெண் ஓடுகிறார். அதிரடிப் படையினர் அந்த ஜீப்பை நோக்கியும் கற்களை வீசிய காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது!
மக்களின் கல்லெறியில் இருந்து தப்ப சுவர் ஏறிக் குதித்து ஓடியும், நெஞ்சில் காயம்பட்டு மயங்கி விழுந்த பெண் போலீஸ் ஒருவர் பி.ஆர்.ஓ அலுவலகத்துக்குள் கொண்டுசெல்லப்பட்டு அவருக்கு முதல் உதவி செய்யப்பட்டது.
தூத்துக்குடி டி.எஸ்.பி-யான மாரியப்பன் முகத்தில் கல் பட்டு ரத்தம் சொட்ட... இன்னொரு போலீஸ்காரரின் தலையிலும் கல் பட்டு ரத்தம் கொட்டியது. துணை கமிஷனர் சைலேஷ் குமார் யாதவின் கையில் கல்லடி பட்டாலும், கையை உதறிக்கொண்டே திரும்பி, கல் எறியும் போலீஸாரைத் தடுக்கிறார் அந்த வீடியோ காட்சியில். ஐ.ஜி. விபாகர் ஷர்மா இந்த வீடியோ காஸெட்டுகளை அப்படியே காப்பி எடுத்து சென்னைக்கு அனுப்பியதுடன், ''மூன்றாவதாக ஆற்றுக் கரையிலும் ஓடிச் சென்று தடியடி நடத்தாமல் பொறுமை காத்திருந்தால், இத்தனை சாவுகள் நடந்திருக்காதே...'' என்று அதிகாரிகளிடம் கோபம் கொட்டினார். இந்த காஸெட்டுகளை எடிட் பண்ணாமல் அப்படியே கமிஷன் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று த.மா.கா., புதிய தமிழகம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசைக் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சாவுகள் குறித்து மனித உரிமை கமிஷனுக்கும் புகார் செய்யப்படுகிறது.
கலெக்டர் தனவேல் மற்றும் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் டி.ஐ.ஜி-யான ராஜேந்திரன் இருவர் மீதும் முக்கியமாகக் குற்றம்சாட்டுகிறார்கள் தொண்டர்கள்.
இதுபற்றி நாம் டி.ஐ.ஜி-யிடம் கேட்டபோது, ''நான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்துகொண்டு, 'மைக்’கை வாட்ச் பண்ணியபடியே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால்தான் ஸ்பாட்டுக்கு வர முடியவில்லை. தலைவர்கள் போலீஸ் தடுப்பை மீறிச் செல்ல ஜீப்பைக் கிளப்பியபோது, டென்ஷனான தொண்டர்கள் மறுபக்கமும் சூழ்ந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்ததால்தான், தடியடி நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தலைவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், இந்தச் சோகம் நிகழ்ந்திருக்காது...'' என்றார்.
ஏற்கெனவே டி.ஐ.ஜி-க்கும் உதவி கமிஷனர் சைலேஷ்குமார் யாதவுக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாட்டால் இரண்டு பேருமே சரிவரக் கலந்தாலோசித்துச் செயல்படவில்லை. அதனால் வந்த வினைதான் அத்தனையும் என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள். டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கைப்படி நீதி விசாரணை நடத்தப்பட்டால், டி.ஐ.ஜி. தலைதான் அதிகம் உருளும் என்கிறது போலீஸ் வட்டாரம்.
மனதைப் பிசையும் கடைசிச் செய்தி: இது வரையிலும் 17 உடல்கள் கிடைத்தாலும் 40 முதல் 50 பேரை இன்னமும் காணவில்லை என்று கிராமப்புறங்களில் இருந்தும் மாஞ்சோலைப் பகுதியில் இருந்தும் தகவல் வந்திருப்பதாக கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் சொல்கிறார். காணாமல் போனவர்களின் பட்டியலையும் தயாரித்துத் தருவதாகச் சொல்லி இருக்கிறார்!
கட்டுரை, படங்கள்: அ.பால்முருகன்
நிருபர்களும் சிக்கினர்!
பத்திரிகை புகைப்படக்காரர்களுக்குக் கல்வீச்சில் லேசாகக் காயம் ஏற்பட்டதையும் பொருட்படுத்தாது அவர்கள் தடியடியைப் படம் எடுத்துக்கொண்டு இருக்க, தனியார் டி.வி. நிருபர் ஒருவர் போலீஸாரால் தாக்கப்பட்டார். தடியடி ஓய்ந்து, ஆற்றில் மூழ்கிய குழந்தையைப் படம் எடுக்கப்போன இன்னொரு பத்திரிகை நிருபரைப் 'படம் எடுக்காதே’ என்று சொல்லியபடியே இரண்டு போலீஸார் சுற்றி வளைத்துத் தாக்கியதில், அவரது கேமரா 50 அடி தூரத்தில் பறந்து சென்று விழுந்தது. வயிற்றில் பூட்ஸ் காலால் எட்டி மிதித்தனர். முதுகில் லத்தித் தழும்புகள். பின்பு, அவர்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆக... கலெக்டர், டி.ஐ.ஜி. உட்பட அதிகாரிகள் சென்று பார்த்து, வருத்தம் தெரிவித்தனர்!
பந்த் ரத்தான கதை...
ஞாயிற்றுக்கிழமை நெல்லை வந்த மூப்பனார், பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். கடைசியாக, ஒன்றரை வயதுச் சிறுவன் விக்னேஷின் உடலுக்கு மலர்வளையம் வைத்தபோது, அவர் கண்கள் கலங்கிவிட்டன.
எம்.ஜி.ஆர். சிலை முதல், தடியடி நடந்த பி.ஆர்.ஓ. அலுவலகம் வரை நடந்தே சென்று பார்த்தார். அங்கு குவிந்துகிடந்த செருப்புகள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, அவசர அவசரமாகத் தண்ணீர்விட்டு கழுவிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்துக் கொதித்துப்போன மக்கள், ''இங்கே ரத்தக்காடாக் கிடந்தது ஐயா... எல்லாத்தையும் தண்ணி ஊத்திக் கழுவிவிட்டிருக்காங்க...'' என்று கொதிப்புடன் முறையிட்டனர்.
பின்பு, அவர் ஐக்கிய ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார். உயிரிழந்த ஷாநவாஸ் என்பவரின் அம்மா மும்தாஜ் பேகம், ''இப்போதானே ஐயா அவன் சம்பாதிக்க ஆரம்பிச்சான்... அதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சே...'' என்று கண்ணீர்விட்டு அழுதார். விதவையான அவருக்கு இரண்டு பையன்கள். இரண்டாவது பையனுக்குப் 12 வயதுதான் ஆகிறது!
பின்பு நிருபர்களை சந்தித்த மூப்பனார், ''இந்தப் போராட்டத்துக்குச் சாதிச் சாயம் பூசுவது தவறு. இது முழுக்க முழுக்கத் தொழிலாளர் பிரச்னை. ஆகவேதான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி இருக்கின்றன. போலீஸாரின் அத்துமீறலுக்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும்...'' என்று கோபம் கொப்பளிக்கச் சொல்ல... உறுதியான தி.மு.க. எதிர்ப்பு நிலையை அவர் எடுத்துவிட்டார் எனப் புரிந்துகொண்டனர் அங்கு இருந்தவர்கள்.
**********************************************************************************
மிஸ்டர் மியாவ்: சீரியஸ் சிமரன்
ஆர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முதன்முறையாக செல்வராகவன் உடன் இணைந்து பணியாற்றுகிறார், ஹாரீஸ் ஜெயராஜ்.
கர்நாடகாவின் ஜாக் ஃபால்ஸ் சினிமா உலகத்துக்கு சென்டிமென்ட்டாக ராசி. அங்கே படமாக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட். அதனால் பிரபுசாலமன் தனது கன்னட 'மைனா’வை அந்த அருவிக்கு அழைத்துப் போயிருக்கிறார்.
ராதிகா மாதிரி டி.வி. சீரியல் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கப் போகிறராம், சிம்ரன். ஜெயா டி.வி-யில் கம்மி ரேட்டுக்கு ஸ்லாட் கேட்க... சேனலும் ஓகே சொல்லிவிட்டதாம்.
'படம் தயாரிக்கிறேன்னு பணத்தை அழிச்சான், இப்போ என் பெயரையும் அழிச்சுட்டானே...’ என்று வேதனையில் இருக்கிறாராம் சிகரப் பாடகர்.
பாட்டு நடிகை சூதாட்ட டைரக்டர் வலையில் விழுந்து சொக்கிக்கிடக்கிறாராம்!
**********************************************************************************
0 comments:
Post a Comment