ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; ததஜ வசூலித்த சுனாமி காசிலிருந்து உணர்வுக்கு இரண்டு லட்சம் உள்ளிட்ட பல லட்சங்களை சுருட்டியது வசூலித்த நோக்கத்திற்கு முரணி ல்லையா என்ற உங்களின் கேள்விக்கு, சுனாமி கணக்கு வழக்குகளை பாக்கர் தான் கையாண்டார். எனவே அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று திரும்ப திரும்ப பொய்ஜே' யின் பினாமி தளம் கூறுகிறதே. உங்கள் பதில் என்ன?
-ஜன்னா மைந்தன்- காரைக்குடி.
பதில்; சகோதரரே! பொய்யனின் பினாமிக்கு சுனாமி வரலாறு தெரியாமல் புலம்புகிறது. சுனாமிக் காசில் அண்ணன் ஜமாஅத் சுருட்டியதை இப்போது நாம் எடுத்து வைத்துள்ளதால், இந்த குற்றச்சாட்டு இப்போது எழுந்தது என்று நினைத்துக் கொண்டு இந்த பினாமி உளறுகிறது. இந்த குற்றச்சாட்டு மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகளின் அடிப்படையில் அந்த காலகட்டத்திலேயே எழுப்பப்பட்டதாகும். இந்த குற்றசாட்டு வைக்கப்பட்ட காலகட்டத்தில் பாக்கர், அண்ணன் ஜமாத்தில் தான் இருந்தார். அப்போது அண்ணன், பாக்கர் தான் சுனாமி நிதியை கையாண்டார்; எனவே அவர்தான் பதில் சொல்ல வேண்டும் என்று இந்த பினாமியை போல புலம்பாமல், வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் சிலவற்றுக்கு மார்ச் 31- ஏப்ரல்06 - 2006 உணர்வு இதழில் பதில் என்ற பெயரில் பினாத்தினார். இப்போது நாம் கேட்பது,
உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை நாம் இப்போது வைப்பது வரை, இந்த ஊழல் விவகாரம் எங்களுக்கு தெரியாது என்று தனது தளத்தின் பெயருக்கேற்ப புளுகும் இந்த பினாமி, இந்த ஊழல் விவகாரம் தெரியாமலா 2006 ல் சிலவற்றுக்கு பதில் என்ற பெயரில் இந்த ஊழலை நியாயப்படுத்தி சப்பைக் கட்டு கட்டினார் அண்ணன் ? என்று இந்த பினாமி சொல்லவேண்டும்.
மேலும், சுனாமி பணத்தை பாக்கர் கையாண்டார். எனவே அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லும் இந்த பொய்யனின் பினாமி,''மக்களிடம் சுனாமி நிவாரண நிதியை கேட்டு பாக்கர் தான் கோரிக்கை வைத்தார்.பாக்கரை நம்பி மட்டும் தான் மக்கள் பணம் தந்தார்கள். அண்ணன் ஜமாத்துக்காக தரவில்லை. எனவே சுனாமி நிதிக்கும் அண்ணன் ஜமாஅத்திற்கும் சம்மந்தமில்லை என்று துணிவிருந்தால் அண்ணனின் இணையதளத்தில் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் பாக்கரின் சட்டையை பிடித்து உணர்வுக்கு 2 லட்சம் சுருட்டியது உள்ளிட்ட அனைத்திற்கும் பதில் கேட்க நாம் தயார் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
ஏற்கனவே 2006 சட்டமன்றத் தேர்தலில் அண்ணன் ஜமாஅத் ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை நாம் போட்டுடைத்த போது, அதை ஒப்புக்கொண்டு, 'ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியது உண்மைதான்; ஆனால் நான் வாங்கவில்லை. வாங்கியது பாக்கரும்- முனீரும்- அலாவுதீனும் தான் என்று அவர்கள் மேல் போட்டு விட்டு தப்பித்தது போல், இந்த சுனாமி ஊழலையும் பாக்கர் மேல் போட்டு விட்டு 'எஸ்கேப்' ஆக நினைத்தால் விடமாட்டோம். சுனாமியில் அண்ணன் ஜமாஅத்தின் இந்த ஊழலை மக்கள் மறந்தாலும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம் இறைவன் நாடினால்.
0 comments:
Post a Comment