முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக குடந்தையிலும், சென்னையிலும் அப்பாவி முஸ்லிம்களின் கோடிகளை கொட்டி மாநாடு நடத்திய பீஜே, ''இடஒதுக்கீடு நமக்கு கிடைத்து விட்டால் நமது சமுதாயம் எங்கோ போய்விடும் என்று அளந்து விட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இட ஒதுக்கீட்டால் எந்த பலனுமில்லை என்று அவரே சொல்லும் காட்சி. சில மாதங்களுக்கு முன்னால் மூன்டிவி'யில் பாஜகவின் தமிழக பொதுச்செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் உடன் நடந்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்;
பீஜே; தலித் சமுதாயத்திற்கு தனி ரிசெர்வேஷன் இருப்பது போல் முஸ்லிம்களுக்கும் தந்துவிட்டால் அந்த தொகுதியில் யார் வேட்பாளரை நிறுத்தினாலும் முஸ்லிமைத் தான் நிறுத்த முடியும். அதில் எந்த கட்சி ஜெயித்தாலும் ஒரு முஸ்லிம் வெற்றி பெற்றுவிடுவார்.
தொகுப்பாளர்; நீங்க சொல்ற மாதிரி யாராவது ஒரு கட்சி சார்பா வர்ற முஸ்லிம்கள் அந்த கட்சித் தலைமை சொல்றதைத் தானே கேட்பார். அப்புறம் எப்பிடி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நன்மை செய்வார்?
பீஜே; நன்மை செய்ய முடியாது. அரசியல பொருத்தவரைக்கும் கூட்டணில நிண்டு நம்மலே போட்டியிட்டாலும்...
தமிழிசை குறுக்கிட்டு; அந்த கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்தாலும் கட்சி தலைமையை மீறி அவரால் தடுக்க முடியாதே?
பீஜே; தடுக்கமுடியாது. அதுல எந்த டவுட்டும் கெடையாது. நாங்க என்ன சொல்றம்னு கேட்டா இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது. அதுவும் அந்த அர்த்தத்துல தான் வரும்.
தமிழிசை; அப்ப அதுல பயன் என்ன?
பீஜே; முஸ்லிம்களுக்கு பங்கு இருக்குன்றதுதான். அதுல ஒரு திருப்தியே தவிர அவங்களால சமுதாயத்துக்கு ஒன்னும் இல்ல.
பார்க்க வீடியோ; http://www.youtube.com/watch?v=QxTu28tlJQU&NR=1
அன்பு சகோதர்களே! நமக்கு தனி இடஒதுக்கீடு கிடைத்துவிட்டால் நம்ம சமுதாயம் சார்பாக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் சென்றால் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் குரல் கொடுப்பார்கள் என்று முழங்கிய பீஜே, இந்த விவாதத்தில் ரிசெர்வேஷனில் ஜெயிக்கும் எம்.பி., எம்.எல்.ஏக்களால் சமுதாயத்திற்கு எந்த பயனும் ஏற்படாது என்கிறார். வெறும் திருப்திக்குத் தான் என்கிறார். வெறும் திருப்திக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் ஏன் மாநாடு நடத்தினார்?
அடுத்து மமக கட்சி, கலவரத் தடுப்பு மசோதா- இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதாவிடம் வாய் திறக்க முடியவில்லை என்று சாடும் பீஜே, இந்த வீடியோவில் 'இப்ப நாங்களே தேர்தல்ல போட்டியிட்டு நாலு எடம் வாங்குனாலும் நாங்க கூட்டனிய அனுசரிச்சுதான் பேசுவோமே தவிர நாங்க வேற கருத்து சொல்ல இயலாது என்கிறார் . அப்படியானால் இவர் ஜெயிச்சுப் போனாலும் இதுதான் நிலை எனும்போது மமகட்சியை மட்டும் ஏதோ ஜெயலலிதாவிடம் மண்டியிட்டது போன்று விமர்சிப்பது சரியல்ல என்பது இவரது வாதத்திலிருந்தே விளங்கிக் கொள்ளலாம். ஆக இவரது மாநாடுகள் இஸ்லாமிய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பயன்தரக் கூடியது அல்ல என்று அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இதற்கு பிறகாவது 'தீவுத்திடல் மாநாடு வெற்றி எதிரொலி; பிரதமருக்கு ஒரே வாந்தி பேதி; அண்ணனுக்கு உடன் அழைப்பு' என்ற அலட்டல் செய்திகளை அனுப்பும் அவரது அபிமானிகள் திருந்தட்டும்.
0 comments:
Post a Comment