********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தவ்ஹீத்வாதிகளே உஷார்! உஷார்!! - அப்துல் முஹைமின்

Sunday, September 4, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

சமீபத்தில் அண்ணன் ஜமாத்தின் ஆக்டோபஸ் பிடியில் மாட்டுவதிலிருந்து திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளி தப்பித்தது அனைவரும் அறிந்த செய்தியே. இந்த பள்ளிக்கும் அண்ணன் ஜமாஅத்துக்கும் எந்தச் சமபந்தமும் இல்லை என்பதற்கு  பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கூறும் காரணம் பாரீர்;

''பள்ளியின் நிர்வாகிகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று பீஜே அவர்களை தலைமையகத்தில் வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிறகு சந்தித்தனர். அப்போது மாநில துணைப் பொதுச் செயலாளரான ஸையித் இபராஹீமும், மாநிலச் செயலாளர் சாதிக்கும் உடன் இருந்தனர்.

அந்தச் சந்திப்பின் போது நம்மால் நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்களை ஜும்மா உரை நிகழ்த்த நீங்கள் அழைத்துள்ளீர்களா?  என்று பீஜே விசாரித்த போது ஆம் என்று அதை ஒப்புக் கொண்டனர். அப்படியானால் ஒரு நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்யும் போக்குக்கு இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. நீங்கள் செல்வந்தர்கள் என்பதற்காகவும், அந்தச் சொத்து உங்கள் பெயரில் உள்ளது என்பதற்காகவும் துரோகத்தை அனுமதிக்க முடியாது என்று நேருக்கு நேராக பீஜே சொல்லியனுப்பினார். அதன் பின்னர்  ஜமாஅத்துக்கு எதிராக கட்டுக் கோப்பைக் குலைக்கும் விதத்தில் நடந்த அந்தப் பள்ளிக்கும் ஜமாஅத்துக்கும் எந்தச் சமபந்தமும் இல்லை என்று முறைப்படி பொதுச் செயலாளராகிய நான் அறிவித்தேன்' என்கிறார்.

ஆனால் உண்மை அதுவல்ல; சைபுல்லாஹ்வை ஜும்மாவிற்கு அழைத்து பேச வைத்ததுதான் காரணம் என்பது  பொய்யாகும். இந்த பள்ளிக்கும் அண்ணன் ஜமாஅத்திற்கும் தொடர்பில்லை என்று அறிவிக்க காரணம் அப்பள்ளியை அண்ணன் ஜமாஅத்திற்கு பட்டா போட்டுத்தறாததுதான்  என்று கூறும் பள்ளி நிர்வாகம், இந்த இறையில்லக் கொள்ளையர்கள்  பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒட்டியுள்ள போஸ்டர்;
பள்ளியை அண்ணன் ஜமாஅத்திற்கு தாரை வார்த்தால் அவர்கள் தவ்ஹீத்வாதிகள்; இல்லையேல் கொள்கையற்றவர்கள் என முத்திரை குத்தப்படுவார்கள். தவ்ஹீத்வாதிகளே உஷார்! உஷார்!! ஊரில் உள்ள டிரஸ்டு சொத்தையெல்லாம் ஜமாஅத் பெயருக்கு எழுதி கேட்பதும் கொடுக்க மறுத்தால் அவர்களை களை எடுப்பதையும் கொள்கையாக 
வைத்திருக்கும் அண்ணன் ஜமாஅத்,  முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் என்ற பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்து ஏக போக உரிமை கொண்டாடிவரும் பொய்யன் பீஜேயை கண்டு கொள்ளாதது ஏனோ?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010