ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்
'ஹஜ் சர்வீஸ்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடும்' என்ற பெயரில் ஒரு செய்தி அண்ணன் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியாகியுள்ளது. அதில்,
''நம் ஜமாஅத்திற்கு எந்த நேரத்தில் களங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக மாநில நிர்வாகம் கடந்த காலங்களில் இது போன்ற பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்..உதாரணமாக,
• மாநில நிர்வாகிகள் மற்றும் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் தாங்கள் நடத்துகின்ற அல்லது நடத்த திட்டமிட்டுள்ள தொழிலுக்கு பகிரங்கமாக மக்களிடம் பங்கு சேர்க்கக்கூடாது. பொதுமக்கள் என்ற அடிப்படையில் தங்களது தனிப்பட்ட சொந்தம் மற்றும் தனிப்பட்ட நட்பு அடிப்படையில் தவிர.• மாநில மற்றும் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பகிரங்கமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடக்கூடாது'''. என்று இடம்பெறுள்ளது.
மாநில நிர்வாகிகளை ஒரு தொழிலை செய்யக்கூடாது என்று தடுப்பதாக இருந்தால் அந்த தொழில் மார்க்கத்திற்கு முரணானதாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு தொழிலில் லாபத்திலும் நஷ்டத்திலும் பொறுப்பேற்கும் வகையில் பங்குதாரரை சேர்த்து மார்க்கத்திற்கு உட்பட்ட தொழிலை செய்வது மார்க்கத்திற்கு முரணானதல்ல. அதே போல் ரியல் எஸ்டேட் தொழிலும் மார்க்கத்திற்கு முரணான ஒன்றல்ல. எனவே இவர்கள் மார்க்க அடிப்படையில் இதை தடுக்க முடியாது. அவர்களும் மார்க்கத்திற்கு முரண் என்பதால் தடுப்பதாக சொல்லவுமில்லை.
ஆனால் இவர்கள் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்ததற்கு காரணம், ஜமாஅத்திற்கு களங்கம் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் தான் என்று சொல்கிறார்கள். அப்படியாயின், இதுதான் இவர்கள் நோக்கமென்றால், பங்கு சேர்த்து செய்யும் தொழிலையும், ரியல் எஸ்டேட் தொழிலையும் மாநில நிர்வாகிகள் அறவே செய்யக்கூடாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் 'பகிரங்கமாக' செய்யக்கூடாது என்று மட்டும் சொல்கிறார்கள்.
இதன் மூலம் பகிரங்கமாக மாநில நிர்வாகிகள் பங்கு சேர்க்க கூடாது. ஆனால் ரகசியமாக சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்களா? பகிரங்கமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடாது. ஆனால் ரகசியமாக செய்யலாம் என்கிறார்களா?
இவர்களின் கூற்றுப்படி மாநில நிர்வாகிகளின் இந்த 'ரகசிய' தொழிலிலும் மக்கள் பாதிக்கப்படுவார்களே! அப்போதும் மக்கள், அண்ணன் ஜமாஅத்காரன் ஏமாத்தி விட்டான் என்று தானே கூறுவார்கள்? அப்போது அமைப்பின் மானம் கப்பலேறாதா? எது எப்பிடியோ அண்ணன் ஜமாஅத் நிர்வாகிகள் இனி தைரியமாக 'ரகசியமான தொழில்' செய்ய கிளம்பலாம்.
********************************************************************************************
0 comments:
Post a Comment