ஜார்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண், பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர்.
பிறக்கும் போதே, இருவரது தலையும் ஒட்டியே இருந்தது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும், மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன.
இதனால், மருத்துவ வசதிகள் அதிகமாக முன்னேறாத அக்காலத்தில்,இந்த விசித்திரமான பிறவிகள், நீண்ட நாள் வாழ முடியாது என,டாக்டர்கள் கைவிரித்து விட்டனர்.
ஆனால், டாக்டர்களின் ஊகங்களை முறியடித்து, இவர்கள் தற்போது தங்களது, 50வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளனர்.
இந்தக் கொண்டாட்டத்தை லண்டனில் நிகழ்த்தியுள்ள இவர்களில், லோரி ஐந்தடி 1 அங்குல உயரமும், ஜார்ஜ் நான்கடி 4 அங்குல உயரமும் கொண்டவர்களாக தற்போது உள்ளனர்.
ஜார்ஜ் மேற்கத்திய இசைப் பாடகராகத் திகழ்கிறார். லோரி "டென் பின் பவுலிங்' என்ற விளையாட்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.வாழ நினைத்தால் வாழலாம் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது வாழ்க்கை குறித்து, "டெய்லி மெயில்' பத்திரிகைக்கு லோரி அளித்த பேட்டி ஒன்றில், "நாங்கள் பிறந்த போது, எங்களது வாழ்க்கை மிஞ்சிப் போனால், 30 ஆண்டுகளைத் தாண்டாது என்று கூறினர்.
ஆனால், அவர்களின் ஊகங்கள் தவறு என்று, நாங்கள் நிரூபித்து விட்டோம். கடந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கையில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து முடிப்போம்' என்று பெருமிதத்துடன் கூறினார்.
|
0 comments:
Post a Comment