ஆறு மாதக் குழந்தைக்கு அதிரடி சிகிச்சை!
உயிர் பிழைத்த ஸ்மரா
இதய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அதுவே ஒரு கைக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்... அதிலும் அந்த குட்டி இதயத்துக்குள் நான்கைந்து பிரச்னைகள்
இருந்தால் என்ன ஆகும்? ஈராக் நாட்டைச் சேர்ந்த ஸமரா என்ற குழந்தைக்கு அப்படித்தான் பிரச்னைகள் இருந்தன. அந்தக் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து, உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்து உள்ளனர் சென்னை மருத்துவர்கள்.
இது குறித்து சென்னை, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை தலைமை இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என்.மதுசங்கர் பேசுகிறார். ''கடந்த மாதம் ஈராக் நாட்டைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர், அவரது பெண் குழந்தை ஸமராவை இங்கே கொண்டுவந்தார். பிறந்ததில் இருந்து அந்தக் குழந்தை நீல நிறத்தில் இருந்துள்ளது. கார்பன் டை ஆக்ஸைட் அதிகம் கலந்த கெட்ட ரத்தம் ஓடிய காரணத்தால்தான், அந்தக் குழந்தை நீல நிறமாக இருப்பது தெரிய வந்தது. குழந்தையின் தாயாருக்கு முதுகுத்தண்டில் பிரச்னை இருந்த காரணத்தால், அவர் ஈராக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த இக்கட்டான நிலையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மனைவியை அங்கே விட்டுவிட்டு, ஸமராவை சென்னைக்குக் கொண்டுவந்தார்.
குழந்தையின் நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வரும் ரத்தக் குழாயில், அதாவது நல்ல ரத்தம் வரும் குழாய் சுருங்கி இருந்தது. மகாதமனி வெளியே வந்திருக்க வேண்டிய இடத்துக்கு பதில், இதயத்தின் மற்றோர் அறையில் இருந்து வெளியே வந்திருந்தது. இதயத்தில் ஓட்டையும் இருந்தது. வலது பக்க இதய அறை தடிமனாகி மிகவும் விரிவடைந்து இருந்தது. இதை டெட்ராலஜி டிஃபெக்ட் என்று கூறுவோம். இப்படி சிக்கலான இதய நோய்களுடன் குழந்தை பிறப்பது மிகவும் அரிது.
அந்தக் குழந்தைக்கு இதயத்தில் இருந்து அசுத்த ரத்தம் நுரையீரலுக்குப் போகாததால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தது. அதனால், அதிக அளவில் அசுத்த ரத்தம் இருந்தது. ஆக்சிஜன் அளவு குழந்தைக்குச் சாதாரணமாக 100 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்தக் குழந்தைக்கு 60 - 70 என்ற அளவில்தான் இருந்தது. இதனால் உடல் வளர்ச்சி குறைபடும், மூளையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்பதை முடிவு செய்தோம்.
குழந்தை வளர்ச்சிக்கும், உயிர் வாழவும் தேவையான ஆக்சிஜன் உடல் முழுக்கக் கொண்டுசெல்லப்பட வேண்டியதே முதல் தேவை. அதற்கான அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. எங்கள் மருத்துவமனையின் டாக்டர்கள் மதுசங்கர், கார்த்திக் வைத்தியநாதன், கீர்த்திவாசன், சவுந்தர ராஜன், ராஜா சரவணன் மற்றும் கணேஷ் ஆகியோர் அடங்கிய டீம் வெற்றிகரமாக சிகிச்சையில் இறங்கியது. பொதுவாக பெரியவர்களுக்கு அறுவை சிகிச்சை என்றால், இதயத்தின் பரப்பளவு பெரியதாக இருக்கும், இது தவிர இதயத்தின் தாங்கும் வலிமையும் அதிகமாக இருக்கும். ஆனால் ஸமரா, ஆறு மாதக் குழந்தை. அந்தக் குழந்தையின் எடையும் ஆறு கிலோ மட்டுமே என்பதால் மிகமிகக் கவனத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மார்பு எலும்பை வெட்டி, இதயத்தை அடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஹார்ட் லங் கருவியைப் பயன்படுத்தாமல், குழந்தையின் இதயத் துடிப்பை நிறுத்தாமல் வலது நுரையீரல் தமனிக்கும், மகா தமனிக்கும் இடையே 6 மி.மீ. தடிமன்கொண்ட பைப் போட்டு அறுவை சிகிச்சை செய்தோம். இது வெறும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைதான். இதன் மூலம் குழந்தையின் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கச் செய்துள்ளோம். குழந்தை இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த ஏழாவது நாளில் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தோம். உயிருக்கு எந்த ஆபத்தும் இன்றி குழந்தை தனது சொந்த நாட்டுக்குத் திரும்பியது. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்துக் குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு மேலும் ஓர் அறுவை சிகிச்சையை அந்தக் குழந்தைக்குச் செய்தாக வேண்டும். அதன் பிறகு ஸமரா பூரண குணமடைந்துவிடுவார்...'' என்றார்.
ஆபத்தான உடல் நலப் பிரச்னை என்றால், வெளிநாட்டுக்கு ஓடோடிச் செல்லும் நிலை மாறி, வெளி நாட்டினரும் இங்கே வந்து சிகிச்சை பெறும் நிலை உருவாகி இருப்பது தமிழகத்துக்கே பெருமை!

**********************************************************************************
அணு ஆட்டம்!
புறக்கணிக்கப்படும் போராட்டமும் உண்மைக் கொதிப்பும்!
'நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து
வஞ்சகமழிக்கும் மாமகம் புரிவம் யாம்!’
- மகாகவி பாரதியார்
'அணு ஆட்டம்’ தொடர் முடிவடைவதற்கு முன்பே அணு சக்திக்கு எதிரான ஆட்டம் இத்தனை வீச்சுடன் தொடங்கும் என்று நான் கடுகளவும் எதிர்பார்க்கவில்லை. விகடன் குழுமத்தின் தமிழினப் பற்றால் தமிழக அரசியலில், அடிப்படை உரிமைகளில் எதிர்கால நலனில் ஒரு முக்கியப் பிரச்சினையாகிவிட்ட அணு சக்தி, சந்திக்கு இழுத்து வரப்பட்டது. கல்பாக்கம், கூடங்குளம், தேனி, தேவாரம் என தமிழகம் எங்கும் அணுசக்தி ஆக்டோபஸின் பிடி இறுகிக்கொண்டு இருக்கும்போது... இன்னும் நம் மக்கள் இருளுக்குள் இருத்தலாகாது என்று என்னை எழுதப் பணித்தனர்.
'வாளைவிடக் கூர்மையானது பேனா’ என்பார்கள். இந்தப் பேனாப் போராட்டம் தமிழினத்தை சிந்திக்கவைத்திருக்கிறது... பேசவைத்திருக்கிறது... செயல்படவும் வைத்திருக்கிறது!
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ஜூலை, 2011 அன்று 'ஹாட் ரன்’ என்று அழைக்கப்படும் சோதனை வெப்ப ஓட்டம் துவங்க இருக்கிறது என்பது தெரியாமலேயே நாங்கள் கூடங்குளத்தில் ஓர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருந்தோம். ஃபுகுஷிமா விபத்தைத் தங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் தெள்ளத் தெளிவாகப் பார்த்திருந்த மக்கள், ஆதரவு நல்கினர். இந்த நிலையில் பேரிடர் பயிற்சி ஒன்றை மக்கள் மத்தியில் நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த அணு மின்நிலையத்தார், தயங்கித் தயங்கி, பயந்து பயந்து மெதுவாகக் காய் நகர்த்தினர். சிறு சிறு குழுக்களை அழைத்துச் சென்று பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் தகவல்களைச் சொல்லி வந்தனர்.
'இதோ வருகிறது, அதோ வருகிறது’ என்று பல வருடங்களாகப் பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த பொல்லாங்கு வந்துவிடுமோ என மக்கள் அஞ்சத் துவங்கினர். 'வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு ஓடுங்கள்’, 'அருகில் உள்ள கட்டடத்துக்குள் சென்று கதவை சாத்திக்கொள்ளுங்கள்!’ என்றெல்லாம் கட்டளைகள் பத்திரிகைகளில் வெளிவரவே விழித்து எழுந்தனர் மக்கள். இனியும் பொறுத்து இருந்தால், முதலுக்கே மோசமாகி விடும் என்று தெருவுக்கு வந்தனர். ஆகஸ்ட் 11 அன்று கூடங்குளத்து மக்கள் பெரும் கூட்டமாகக் கூடிப் போராடத் தயாராயினர். அருகே உள்ள இடிந்தகரையில் கோயில் மணியை அடித்து மக்களைத் திரட்ட, அங்கே யும் அலையடிக்க ஆரம்பித்தது. இந்த, 'மக்கள்சுனாமி’ பரவும் செய்தி பறந்து வந்துகொண்டே இருந்தது. அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத் தோழர்கள் தலைமை ஏற்று, ஆகஸ்ட் 16 அன்று இடிந்தகரையிலும், 17-19 அன்று கூடங்குளத்திலும் உண்ணாவிரதம் என்று அறிவித்தோம். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 17-ம் தேதி காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டு, அரசு அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, செப்டம்பர் 7-ம் தேதி வரை போராட்டங்களை நிறுத்திவையுங்கள் எனக் கேட்டுக்கொண்டனர். அதீத சிரமத்துடன் மக்களை இதற்கு சம்மதிக்கக் கேட்டுக்கொண்டு போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தினோம்.
ஆனால், ஆகஸ்ட் 28 தேதியிட்ட 'தி ஹிந்து’ நாளிதழில் அணு சக்தித் துறை தலைவர் பானர்ஜி, 'கூடங்குளம் முதல் உலை செப்டம்பர் மாதம் இயங்கத் துவங்கும்’ என்று அறிவித்து இருந்தார். இது அரசுடனான எங்கள் உடன்பாட்டை முறித்து விட்டதால், நாங்கள் மீண்டும் போராட்டக் களம் புகுந்தோம்.
செப்டம்பர் 11 அன்று இடிந்தகரையில் உண்ணா விரதம் இருக்கத் தீர்மானித்தோம். ஒரு நாள் நிகழ்வு எனத் திட்டமிட்டு இருந்தாலும், திரண்டு வந்த மக்கள் கூட்டம்... போராட்டம் தொடர வேண்டும் என வற்புறுத்தியது. காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள 127 பேர் முன்வந்தனர். இது போதும் எனச் சொல்லி மக்களைத் தடுக்கவேண்டியதாயிற்று. தினமும் சுமார் 20,000 மக்கள் வந்து மதியம் பட்டினி கிடந்து, கருத்தாளர்கள் பேச்சுகளைக் கேட்டு, கோஷமிட்டு, அமைதியாகக் கலைந்து சென்றனர். ஓர் அமைதிப் புரட்சி எழுச்சியோடு நடந்தது. தமிழக அரசியல் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் பலரும் வருகை தந்தனர்.
எங்கள் போராட்டத்தை 'மீனவர் போராட்டம்’ என்றனர். தென் மாவட்டங்களில் பரந்து வாழும் நாடார் இனத்தவர், தலித் மக்கள், பிற சாதியினர் பெருமளவில் கலந்துகொண்டு அதனைப் பொய்யாக்கினார். இது ஒரு 'கிறிஸ்துவப் போராட் டம்’ என்றனர். ஆனால் இந்து சமயத் தலைவர்களும், முஸ்லிம்களும் ஏராளமாகக் கலந்துகொண்டு அதனையும் பொய்யாக்கினர். இந்தப் போராட்டம் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகத் தி.மு.க-வினரால் தூண்டிவிடப்பட்டது எனும் பிரசாரம் தொடங்கியது. 2001 நவம்பர் 10 அன்று மதுரையில் தொடங்கப்பட்ட 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்ற பதாகையின் கீழ் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தி வருவதையும், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நாங்கள் எங்கள் கொள்கைகளையோ, கோரிக் கைகளையோ மாற்றிக்கொள்ளவில்லை என்பதையும் தெளிவாக எடுத்துரைத்தோம். தமிழக முதல்வரைச் சந்தித்தபோதும் இதுபற்றி விளக்கம் அளித்து, தி.மு.க. எம்.பி. கனிமொழி இந்தியா - அமெரிக்கா அணு சக்தி உடன்பாட்டை ஆதரித்து அணு உலைகளைப் போற்றிப் புகழ்ந்த கன்னிப் பேச்சுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்ததையும், கட்டுரை எழுதியதையும், அதனை வெளியிட்ட 'காலச்சுவடு’ இதழின் அரசு நூலக சந்தாக்கள் நீக்கப்பட்டதையும் சொன்னோம். நாங்கள் சுதந்திரமானவர்கள் என்பதை முதல்வரே புரிந்துகொண்டார்!
கடைசி ஆயுதமாக, 'நாங்கள் வெளிநாடுகளின் ஏஜென்ட்கள்; வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்!’ எனும் கருத்து பரப்பப்படுகிறது. உண்மையில் நாங்கள் நம் நாட்டு மண்ணை, மக்களை நேசிக்கும் மண்ணின் மைந்தர்கள். எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளுக்காகவோ, மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவோ அலைந்து திரிபவர்கள் அல்ல. ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்சு உலைகள் அனைத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம். இந்திய நாடு புதிய எரிசக்தி, ஏற்றுக்கொள்ளத்தக்க தொழில்நுட்பம், நீடித்த நிலைத்த வளர்ச்சி எனும் அம்சங்களோடு ஒரு மாற்று உலகத்தின் தலைமையாக விளங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் நாங்கள். அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்து, அவர்களின் காயலாங்கடைச் சரக்குகளை நம் மக்கள் தலையில் கட்டி, நமது இயற்கை வளங்களை நாசமாக்கி, நமது குழந்தைகள் எதிர்காலத் தலைமுறைகளை அடிமைகளாக்கும் சர்வதேச வல்லாதிக்க சூழ்ச்சிகளை, இந்திய ஆளும் வர்க்கம் இதற்குச் செய்கின்ற ஏவல்களை நாங்கள் எதிர்க்கிறோம். இதுதான் உண்மை!
பொய்க் குற்றச்சாட்டுகளுக்கோ, ரெய்டு நடக்கப்போகிறது எனும் மிரட்டல்களுக்கோ, வீட்டில் கஞ்சா, கறுப்புப் பணம் கண்டுபிடித்துவிடுவோம் எனும் அச்சுறுத்தல்களுக்கோ பயப்படவில்லை. அண்ணல் காந்தியடிகளின் அற வழியிலே, அடிமட்ட மக்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க நடத்தப்படுகிற, பன்னாட்டுச் சந்தையிலே விற்கப்பட்டுவிட்ட நமது நாட்டை மீண்டும் நமதாக்கிக்கொள்ள நடத்தப்படுகிற இரண்டாவது விடுதலைப் போர் இது. பாரதியார் சொல்வது போல, 'சிந்தையன்று இனி இல்லை; எது சேரினும் நலமெனத் தெளிந்துவிட்டோம்!’

-அதிரும்..
**********************************************************************
கயிறே, என் கதை கேள்!
முருகன் சொல்லும் கண்ணீர்
தூங்கியும் தூங்காமலும்..!
சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எல்லாம் விதம்விதமாகச் சிதைக்க முடியும் எனக் குரூரத்தோடு யோசித்து, பரிசோதனை எலியாக என்னைப் பயன்படுத்தினார்கள்.
இரவு 10 மணிக்கு ஒரு அதிகாரி என்னை அழைத்தார். ஈரக்குலை நடுங்க உயிரைக் கையில் பிடித்தபடி நின்றேன். 'அந்தக் கொலை விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஒன்றுவிடாமல் என்னிடம் சொல்’ என்று மிரட்டினார். இதேபோல் எத்தனையோ தடவை அதிகாரிகள் என்னை விசாரித்து இருக்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைக் கண்ணீரோடு அவர்களிடம் சொல்வேன். புதுமுக இயக்குநரிடம் கதை கேட்கும் தயாரிப்பாளர் போல் அலட்டிக்கொள்ளாமல் கேட்பார்கள். 'இவராவது நம் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்வாரா?’ என ஏக்கத்தோடு நடந்த விஷயங்களைச் சொல்வேன். எந்த பதிலும் சொல்லாமல், பிரம்பைக் கையில் எடுப்பார்கள்.
என்ன நடக்கப்போகிறதோ என்கிற பதற்றத்தில் என் நரம்புகள் எல்லாம் உடலுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளும். ரத்தச் சிவப்பைப் பார்த்தால்தான் பிரம்புகளுக்கு நிறைவு வரும்.
ஆனால், மௌனத்தோடு என் முகத்தை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டு இருந்த அந்த அதிகாரி மீது எனக்கு மெல்லிதாக நம்பிக்கை வந்தது. 'நிச்சயம் இவர் என்னைப் புரிந்துகொள்வார்’ என என்னை நானே தேற்றிக்கொண்டு, நடந்த விஷயங்களை சொல்லத் தொடங்கினேன். பல முறைச் சொல்லிச் சொல்லி என் வேதனைகள் எனக்கே பழகிப்போய் இருந்தன.
தலை குனிந்தபடி சொல்லிக்கொண்டு இருந்த நான் சற்று நிமிர்ந்து பார்த்தேன். அவர் டேபிளில் சாய்ந்தபடி கண்களை மூடி இருந்தார். இவ்வளவு கோரங்களைக் கேட்டபடி ஒருவர் தூங்குகிறார் என்றால், குரூரத்தின் எத்தகைய ரசனையாளராக அவர் இருந்திருப்பார்?
என் கண்ணீரும் ஒப்பாரியும் அவருக்குத் தாலாட்டுப் பாடல் மாதிரி இருந்திருக்குமோ என்னவோ... தன்னை மறந்து நாற்காலியில் சாய்ந்துகிடந்தார். 'இவரிடம் பேசி என்னாகப் போகிறது? எதுவுமே செய்ய முடியாதவனின் கடைசி வெளிப்பாடுதான் கண்ணீர். ஆனால், அதனையும் அலட்சியப்படுத்துபவர்களிடம் நாம் என்ன செய்ய முடியும்? என நினைத்தபடி, என் பேச்சை நிறுத்தினேன். ஆலங்கட்டி மழை தகரக் கூரையில் விழுந்தால் எப்படி இருக்கும்? சடசடவென அப்படி ஒரு சத்தம்... லத்தியை எடுத்து முதுகு, முகம் என விளாசத் தொடங்கிய அந்த அதிகாரி, பெரும் குரலெடுத்து அலறினார்.
'என்னையா ஏமாத்தப் பார்க்குறே... நாயே...’ எனக் காட்டுக் கத்தல் கத்தியபடி பிரம்பால் விளாசித் தள்ளினார். நாய் என்கிற வார்த்தையின் தொடர்ச்சியாக அவர் சொன்ன... இல்லை இல்லை... அவர் உமிழ்ந்த அசிங்க வார்த்தைகள் இப்போதும் என் நெஞ்சுக்குள் அமிலத் துளிகளாக அரிக்கின்றன. 'மன்னிச்சுக்கங்க சார்... நீங்க தூங்கிட்டீங்கன்னு நெனச்சு பேச்சை நிறுத்திட்டேன்’ என ஈனஸ்வரத்தில் புலம்பினேன்.
'என்னையப் பார்த்தா சினிமா போலீஸ் மாதிரி தெரியுதா? விசாரணை செய்யிறப்பவே நான் தூங்குவேனாடா நாயே...’ எனக் கொந்தளித்தார்.
மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து கொட்டத் தொடங்கினேன். வழக்கம்போல் நாற்காலி மீது சாய்ந்தார்; கண்களை மூடியபடி படுத்தார். தூங்கிவிட்டார் என நினைத்துப் பேச்சை நிறுத்தினாலும் மிருகம்போல் அடிப்பாரே என நினைத்து, அவரை அந்த அறையின் ஐந்தாவது சுவராக நினைத்து முழு விஷயங்களையும் சொல்லி முடித்தேன். நேரம் நள்ளிரவைத் தொட்டது. காயங்களால் கிழிந்து தொங்கிய உடல் சாய்வுக்காக ஏங்கியது. என்னையும் மீறி உடல் தடுமாறத் தொடங்கியது.
'டேய்... முழுசும் சொல்லிட்டியா?’ - டேபிள் மீது கிடந்த அதிகாரி தலையை உயர்த்திக் கேட்டார். ஆமாம் எனத் தலையாட்டினேன். 'சரி, நீ பேசிக்கிட்டு இருந்தப்ப நான் தூங்கிட்டேன். அதனால, மறுபடியும் ஆரம்பத்தில இருந்து சொல்லு...’ என்றார்.
'தண்ணி’ எனக் கேட்கக்கூட என் தொண்டைக்கு சக்தி இல்லை. தூக்கம் இல்லாமலும், கால் கடுக்க நின்றதாலும் தொண்டைக்குக் கடுமையான வறட்சி... 'தண்ணி கொடுங்க’ என்பதைக் கைகளைக் காட்டி சைகையாகச் சொன்னேன். ''ஏண்டா, வேசி மகனே... என்னையவே முறைக்கிறியா..?'' எனத் திட்டியபடியே கண்மூடித்தனமாக அடித்தார். அவருக்கு கை வலிக்கும் என நினைத்து இன்னும் சில காவலர்கள் அடிப்பதற்குத் தோதாக என்னைத் தூக்கிப் பிடித்துக்கொண்டார்கள்.
அடித்து, திட்டி, காறி உமிழ்ந்து, 'இன்னிக்கு இது போதும்’ எனச் சொல்லி அவர் என்னை விடுவித்தபோது மணி அதிகாலை 4. அறையில் வந்து விழுந்ததுகூட எனக்கு நினைவு இருக்காது. அதிகபட்சம் ஒரு மணி நேரம்கூட நகர்ந்திருக்காது. மறுபடியும் தலைக்குப் பக்கத்தில் லத்தியால் தரையைத் தட்டுவார்கள். தூக்கமும் அசதியும் போன இடம் தெரியாமல், மறுபடியும் உடல் பதறிப்போய் துடிக்கும். அவ்வளவுதான்... அதன் பிறகு என்னைத் தூங்க அனுமதிக்க மாட்டார்கள். நிற்க முடியாமல், மண்டியிட்டுக் கெஞ்சிக் கூத்தாடுவேன். மனதில் இரக்க நரம்புகளே இல்லாத மிருகங்களைப்போல், வார்த்தைகளால் துளைத்தெடுப்பார்கள். நக்கல் அடித்துச் சிரிப்பார்கள், நான் புனிதமாக மதிக்கும் உறவுமுறைகளைத் தவறாகச் சித்திரித்துச் சிரிப்பார்கள். அவ்வளவு அசதியிலும், அந்த வார்த்தைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்பதற்கு பதில், ஒரே வெடுக்கில் நாக்கைப் பிடுங்கிப்போட்டு இறந்தே போகலாம். ஆனால், உறவுகளைக் கொச்சைப்படுத்திப் பேசுவதுதான் எனக்கு வலிக்கிறது எனத் தெரிந்து, துன்புறுத்தித் துடிக்கவைக்கும் வழியைக் கண்டுபிடித்தவர்களைப்போல், அதே மாதிரியான வார்த்தைகளையும் அசிங்க வர்ணிப்புகளையும் செய்தார்கள்.
அவற்றை விளக்கமாகச் சொல்வதே என்னை இன்னொரு முறை நானே அவமானப்படுத்திக்கொள்வதற்குச் சமம். என் மனைவி, தாயார், சகோதரிகள், மாமியார் ஆகியோரை மற்ற ஆண்களுடன் தொடர்படுத்தித் திட்டினார் அந்த அதிகாரி. என் மாமியார் அவர்களை நான் என் தாய்க்கு நிகராக மதிப்பவன். அந்தப் புனிதத்தை எல்லாம் மதிக்காமல் அடிப்படைப் பண்புகளே அற்றுப்போனவர்களாக அந்த அதிகாரி சொன்ன வார்த்தைகள் என்னை ஒரேயடியாகப் பொசுக்கிப்போட்டன. எதையுமே செய்ய முடியாத என் சொரணை அவமானத்தில் சுருண்டுபோனது.
இதேபோல் தொடர்ந்து 20 நாட்கள் விசாரித்தார்கள். என் மனைவி நளினிக்கும் இதேபோல் சித்ரவதை. எட்டு கண்காணிப்பாளர்கள் மாறி மாறி நளினியை அடியாலும், அமிலத்தைப் போன்ற வார்த்தைகளாலும் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் எமது ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்த அதிகாரி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கொடூரர். அவர் பெயரைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் மனு போட்டோம். சி.பி.ஐ., எஸ்.ஐ.டி-யில் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றியதால், சித்ரவதை செய்தவர்களின் பெயர்களைக்கூட எங்களால் நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை. எமக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகள் பற்றி குறுக்கு விசாரணையின்போது பதிவு செய்தேன்.
அந்த வழக்கில் என் மனைவி நளினியை அப்ரூவர் ஆக்க சி.பி.ஐ, எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் மூலம் அதிகாரிகள் விருப்பப்படி என்னை முதன்மை எதிரியாக மாற்ற நினைத்தார்கள். இதற்காக அவர்கள் செய்த சதிதான் சகிக்க முடியாதது. அதற்கு முன்னர் இன்னொருவருக்கு நடத்தப்பட்ட சதியைச் சொல்கிறேன். நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தை நான் கண் முன்னால் எதிர்கொண்டவன்.
அந்தக் கொலை வழக்கில் ரங்கநாத் (ஏ-26) என்பவரைக் கைது செய்த பின்னர், அவரது மனைவி மிருதுளாவை அவரிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்தார்கள். ரங்கநாத்துக்கு எதிராக சாட்சி சொல்லவைத்து டிரையல் கோர்ட்டில் மரண தண்டனை வாங்கிக் கொடுத்தனர். ரங்கநாத் அவர்களின் மனைவி மிருதுளாவை ஒரு சி.ஆர்.பி.எஃப். அதிகாரிக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். 36 வயதுக்கு மேலான மிருதுளாவுக்கு அரசு விதிகளை மீறி மத்திய அரசில் வேலையும் வாங்கிக் கொடுத்தனர்.
சித்திரிப்புகளுக்காகக் கல்யாணக் கலாட்டாக்களைக்கூட அதிகாரிகள் நடத்தினார்கள். இதேபோல் என் மனைவியை எனக்கு எதிராக மாற்ற சாம, பேத, தான, தண்ட உத்திகளை எல்லாம் கையாண்டார்கள். என் மனைவிக்கு ஒரு போலீஸ் அதிகாரியைத் திருமணம் செய்துவைக்கவும், அரசு வேலை பெற்றுத்தரவும், சொந்த வீடு வாங்க அரசு உதவி பெற்றுத் தரவும், பாதுகாப்பு கிடைக்கவும் ஆசை காட்டினார்கள். அடி உதைக்கு மசியாதவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அதிகாரிகளின் சிறுபிள்ளைத்தனமான எண்ணம்.
அந்த வார்த்தைத் தூண்டில்களில் நளினி சிக்கவில்லை. அடுத்தபடியாக இன்னொரு அஸ்திரம் எடுத்தார்கள். நளினி என்னை எப்படியாவது வெறுக்க வேண்டும் என நினைத்து என்னைப் பற்றி அவதூறு பரப்ப ஆரம்பித்தார்கள். எனக்கும் நளினிக்கும் இடையேயான வயது வித்தியாசத்தை நளினியிடம் சுட்டிக் காட்டினார்கள்.
'அவன் சிலோன்காரன்... உன்னைய ஏமாத்திட்டுப் போயிடுவான். நாங்க விசாரிச்ச வரைக்கும் உன் மேல அவனுக்கு அன்பே கிடையாது. அவனுக்கு ஏற்கெனவே பல பொண்ணுங்களோட தொடர்பு இருக்கு. அதை எல்லாம் எங்க விசாரணையிலேயே அவன் ஒப்புக்கிட்டான். ஆனா, உன்கிட்ட அவன் நடிக்கிறான்!’ என விதம் விதமாகத் திரைக்கதை எழுதி, நளினியிடம் சொன்னார்கள்.
நளினி கடைசி வரைக்கும் அசைந்து கொடுக்காததால், அதே வித்தைகளை என்னிடமும் பரப்பத் தொடங்கினார்கள். 'அவளுக்கு ஏற்கெனவே ரெண்டு லவ்வர்ஸ் இருக்காங்க. நளினியின் பழக்கவழக்கம் தப்பானது. நீ நம்பவில்லை என்றால், நாங்கள் நிரூபித்துக் காட்டுகிறோம். நீ அவளைவிட சின்னப் பையன். அதனால்தான் உன்னைய சுளுவா ஏமாத்திட்டா..!’ என ஆபாசக் கதைகள் எழுதும் ஆசாமிகளைப் போல் சொன்னார்கள்.
இருவருமே இந்த அபவாதங்களை நம்பாத நிலையில், சின்னஞ்சிறு சிசுவாக நளியின் வயிற்றில் வளர்ந்த எங்களின் வாரிசு மீது அவர்களின் பார்வை திரும்பியது. வரம்புமீறலையே வாய்ப்பாடாக வைத்திருப்பவர்களுக்கு எங்களின் சிசுவைச் சிதைப்பது சிரமமே அல்ல. ஆனால், எங்கள் தாம்பத்தியத்தின் அடையாளம் அந்த சிசு. ரத்தச் சுவடுகளுடன் கர்ப்பப்பையில் வளரும் அபாக்கியக் குழந்தை அது. என் வாரிசுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்கிற அவஸ்தையில், எதற்கும் ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.

- காயங்கள் ஆறாது
**********************************************************************
மிஸ்டர் மியாவ்
சின்ன பட்ஜெட்டில் பெரிய்ய்ய மெசேஜ் கொடுத்துள்ள, 'எங்கேயும் எப்போதும்’ படத்தைப் பார்த்து அசந்துவிட்டார் லிங்குசாமி. அடுத்து தன்னுடைய பேனரில் ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை சரவணனுக்குக் கொடுத்து இருக்கிறார்.
ஒரே நேரத்தில் 'அப்பனும் ஆத்தாளும்’ தொலைக்காட்சித் தொடரையும், 'கொடிமர வீரனும் அன்னக்கொடியும்’ திரைப்படத்தையும் இயக்கும் வேலையில் இறங்கிவிட்டார், பாரதிராஜா.
அரசு கேபிள் டி.வி-க்கும், தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஆங்காங்கே குடுமிபிடிச் சண்டை. அதனால் புதிய படங்களின் திருட்டு விசிடி விற்பனையை அமோகமாக நடத்துகிறார்கள் ஃபேமிலி ஆட்கள்.

0 comments:
Post a Comment