ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி; கடந்த முறை ஆட்சியில் இருந்த போது, அனைத்து ஆண் குழந்தைகளுக்கும் கத்னா செய்யுமாறு ஜெயலலிதா
உத்தரவிட்டாராமே? உண்மையா?
உத்தரவிட்டாராமே? உண்மையா?
பதில்; ஆட்சிக்கு வரும்வரை மதசார்பற்றவராக காட்டிக்கொள்ளும் ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தவுடன் தனது இந்துத்துவா சிந்தனையை காட்டத் தொடங்கிவிடுவார் என்பது ஜெயலலிதா பற்றிய அண்ணன் ஜமாத்தின் நிலையாகும். அப்படிப்பட்ட ஜெயலலிதா, 'கடந்த முறை முதல்வராக பொறுப்பு ஏற்றிருந்த நேரத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து ஆண் குழந்தைகளுக்கும் கத்னா செய்வதற்கு உத்தரவிட்டார்' என்ற செய்தியை ஆகஸ்ட் 26 -செப் 01 தேதியிட்ட அபகரிக்கப்பட்ட உணர்வு வாரஇதழ் வெளியிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்காலம் என்பது 2001 -2006 காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் தான் முஸ்லிம்களை குறிவைத்து பொடாசட்டம், கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை ஜெயலலிதா கொண்டுவந்தார். அப்படிப்பட்ட ஜெயலலிதா கத்னாவை செய்யுமாறும், அதுவும் அரசு மருத்துவமனையில் பிறக்கும் [அனைத்து மத] அனைத்து ஆண்குழந்தைகளுக்கும் செய்யுமாறு உத்தரவிட்டார் என்று அபகரிக்கப்பட்ட வாரஇதழ் கூறுகிறது என்றால், இவர்களின் பத்திரிக்கை நடத்தும் லட்சணத்தை அறிந்து கொள்ளுங்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் அடுத்தவர்களின் பத்திரிக்கையை வேறு விமர்சிக்கிறார்கள். இவர்களின் இந்த செய்தி சரிதான் என்றால் ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையை அபகரிக்கப்பட்ட வாரஇதழ் வெளியிடட்டும்.
மேலும், களவாண்ட பத்திரிக்கை ஒன்று; கள்ள பத்திரிக்கை ஒன்று என்ற கீழ்கண்ட ஒரு குற்றச்சாட்டை இதஜ பத்திரிக்கையான சமுதாய மக்கள் ரிப்போர்ட் வெளியிட்டது. பல மாதங்களாகியும் அதற்கும் பதில் சொல்லவில்லை. எனவே இதற்கும் சேர்த்து கொஞ்சம் பதில் சொன்னால் நல்லாயிருக்கும்.
0 comments:
Post a Comment