ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
மக்களிடம் எந்த பணிக்காக நன்கொடைகளை வாங்கினோமோ அது அல்லாத மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கூடுமா? என்ற கேள்விக்கு அபகரிக்கப்பட்ட வார இதழில் பதிலளித்துள்ள அண்ணன், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்)விசாரிக்கப்படும்என்ற வசனத்தை மேற்கோள் காட்டி,
''எனவே எந்த காரியத்தை சொல்லி நிதி திரட்டப்பட்டதோ அந்தப் பணிக்குத் தான் செலவிடவேண்டும். நோன்புக்கஞ்சிக்காக நிதி திரட்டி பள்ளிவாசல் கட்டுவதற்கு செலவிட்டாலும் அது மோசடியாகும். குறிப்பிட்ட பணியை சொல்லாமல் நோன்புக்கஞ்சி மற்றும் சமுதாயப் பணி வகைக்கு என்று தெளிவு படுத்தி நிதி திரட்டினால் மற்ற சமுதாயப் பணிகளையும் சொல்லி நிதி திரட்டினால் அதில் எந்த மோசடியுமில்லை என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் அண்ணன் சொல்ல வருவது இரண்டு விஷயங்கள்.
- ஒரு பணியை மேற்கோள் காட்டி வசூலித்தால் அந்த பணிக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். வேறு வகைக்கு பயன்படுத்தக் கூடாது. அது வாக்குமீறல் மற்றும் மார்க்கத்திற்கு முரணானது.
- குறிப்பிட்ட பணியை சொல்லாமல் நோன்புக்கஞ்சி மற்றும் சமுதாயப் பணி வகைக்கு என்று தெளிவு படுத்தி நிதி திரட்டினால் மற்ற சமுதாயப் பணிகளையும் சொல்லி நிதி திரட்டியதால் அதில் எந்த மோசடியுமில்லை.
அண்ணனின் மேற்கண்ட விளக்கம் நூறு சதவிகிதம் உண்மைதான். வரவேற்கிறோம். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அண்ணன் ஜமாஅத் நடந்து கொள்கிறதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக என்று சொல்லி நிதி திரட்டிய அண்ணன் ஜமாஅத், அந்த தொகையிலிருந்து,
உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
கேமரா வாடகை 60,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
ததஜ பனியன், தொப்பிக்கு 20,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
இதெல்லாம் மேற்கண்ட வசனத்திற்கு முரணில்லை என்று அண்ணன் விளக்குவாரா?
இல்லையென்றால் 'நீங்கள் தரும் சுனாமி நிதியில் இதற்கெல்லாம் நாங்கள் எடுத்துக் கொண்டு, மிச்சம் மீதியைத் தான் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்போம் என்று சொல்லித்தான் வசூல் பண்ணினோம் என்று அண்ணன் ஜமாஅத் ஆதாரத்தை காட்டுமா?
இல்லை நாங்கள் செய்தால் சரி. அடுத்தவன் செய்தால் தவறு என்று அர்ச்சனையை தொடருமா?
0 comments:
Post a Comment