********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அண்ணன் ஜமாத்தின் இடஒதுக்கீடு போராட்டம்;யாருக்காக..இது யாருக்காக...!

Monday, March 5, 2012

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

இன்று 14.2 .2012 அண்ணன் ஜமாஅத் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் நோக்கம், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்- மத்தியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் என்று அண்ணன் ஜமாஅத் சொல்கிறது. நோக்கம் என்னவோ நல்லதாக இருப்பதால் இந்த நோக்கத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனில், இப்போராட்டம் அரசை ஆளும் அதிமுக-காங்கிரஸ் கட்சிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் இப்போராத்தின் நோக்கம் நிறைவேற வாய்ப்புண்டு. இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் போராட்டம் அரசியல்வாதிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யுமா? என்றால் செய்யாது. இதை நாம் சொல்லவில்லை; அண்ணனே சொல்லியுள்ளார்.

அபகரிக்கப்பட்ட வார இதழில், இன்று நடைபெறும் இந்த போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தினால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அண்ணன், ''தேர்தல் நெருங்கும் போதுதான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் மாநில அளவில் மக்களைத் திரட்டி ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால் அது அதிகம் கவனிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற அதிக வாய்ப்புண்டு. இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டத்தை கையில் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

அண்ணனின் இந்த பதிலை கூர்ந்து கவனித்தால், பல விஷயங்கள் அவரால் சொல்லப்பட்டுள்ளன.

  1. இது தேர்தல் நேரமில்லாததால் அரசியல்வாதிகள் போராட்டங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார்.
  2. இப்போது மாநில அளவில் ஒரே இடத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது பயனற்றது என்கிறார்.
  3. தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநில அளவிலான கூட்டம்  கூட பயன் தரும்  என்கிறார்.
நாம் கேட்பது, இப்போது தேர்தல் நேரமில்லாததால் மாநில அளவிலான போராட்டமே அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப் படாது என்றால், மாவட்ட அளவிலான போராட்டம் மட்டும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்து இந்த போராட்டத்தை அறிவித்தார்?

ஏற்கனவே மாநில அளவில் தீவித்திடலை திணறச்[!]செய்து, பிரதமரோடும்-சோனியாவோடும் போட்டோ பிடித்தும் அசைந்து கொடுக்காத காங்கிரஸ், இந்த மாவட்ட அளவிலான போராட்டத்தை கண்டு இடஒதுகீட்டை தூக்கித் தரும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்தார்? 

இப்போது புரிகிறதா? இப்போராட்டத்தின் நோக்கம் என்பது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவ்வப்போது இருப்பைக் காட்டுவதற்காக அண்ணனால் நடத்தப்படும் வழக்கமான போராட்டம் தான் இது என்று.
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

இன்று 14.2 .2012 அண்ணன் ஜமாஅத் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. இப்போராட்டத்தின் நோக்கம், தமிழகத்தில்
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்- மத்தியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் என்று அண்ணன் ஜமாஅத் சொல்கிறது. நோக்கம் என்னவோ நல்லதாக இருப்பதால் இந்த நோக்கத்தை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனில், இப்போராட்டம் அரசை ஆளும் அதிமுக-காங்கிரஸ் கட்சிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யவேண்டும். அப்போதுதான் இப்போராத்தின் நோக்கம் நிறைவேற வாய்ப்புண்டு. இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் போராட்டம் அரசியல்வாதிகளை கூர்ந்து கவனிக்கச் செய்யுமா? என்றால் செய்யாது. இதை நாம் சொல்லவில்லை; அண்ணனே சொல்லியுள்ளார்.

அபகரிக்கப்பட்ட வார இதழில், இன்று நடைபெறும் இந்த போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்தினால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அண்ணன், ''தேர்தல் நெருங்கும் போதுதான் போராட்டங்களை அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனிப்பார்கள். அந்த நேரத்தில் மாநில அளவில் மக்களைத் திரட்டி ஒரே இடத்தில் போராட்டம் நடத்தினால் அது அதிகம் கவனிக்கப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற அதிக வாய்ப்புண்டு. இப்போது தேர்தல் எதுவும் இல்லாததால் ஒரே இடத்தில் மக்களைத் திரட்டும் வகையிலான போராட்டத்தை கையில் எடுக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

அண்ணனின் இந்த பதிலை கூர்ந்து கவனித்தால், பல விஷயங்கள் அவரால் சொல்லப்பட்டுள்ளன.

  1. இது தேர்தல் நேரமில்லாததால் அரசியல்வாதிகள் போராட்டங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் என்கிறார்.
  2. இப்போது மாநில அளவில் ஒரே இடத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது பயனற்றது என்கிறார்.
  3. தேர்தல் நேரத்தில் மட்டுமே மாநில அளவிலான கூட்டம்  கூட பயன் தரும்  என்கிறார்.
நாம் கேட்பது, இப்போது தேர்தல் நேரமில்லாததால் மாநில அளவிலான போராட்டமே அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப் படாது என்றால், மாவட்ட அளவிலான போராட்டம் மட்டும் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்து இந்த போராட்டத்தை அறிவித்தார்?

ஏற்கனவே மாநில அளவில் தீவித்திடலை திணறச்[!]செய்து, பிரதமரோடும்-சோனியாவோடும் போட்டோ பிடித்தும் அசைந்து கொடுக்காத காங்கிரஸ், இந்த மாவட்ட அளவிலான போராட்டத்தை கண்டு இடஒதுகீட்டை தூக்கித் தரும் என்று அண்ணன் எப்படி முடிவு செய்தார்? 

இப்போது புரிகிறதா? இப்போராட்டத்தின் நோக்கம் என்பது முஸ்லிம்களின் இடஒதுக்கீடு என்று வெளியில் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவ்வப்போது இருப்பைக் காட்டுவதற்காக அண்ணனால் நடத்தப்படும் வழக்கமான போராட்டம் தான் இது என்று.

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010