********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஓடி ஒளிவது சல்மான் ருஷ்டியா? அண்ணன் பீஜேயா?

Monday, March 5, 2012

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபல நரகல் நடை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு அந்த விழா ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து  முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவரது வருகை மத்திய அரசால் ரத்து செய்யப்ப்பட்டது. சல்மான் ருஷ்டியின் வருகைக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததற்கு காரணம் முஸ்லிம்கள் எதிர்ப்பு மட்டுமல்ல; நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் வாக்கு வங்கியும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ருஷ்டி தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதனால் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்து விட்டதாக அவர் கூறியதாக கூறப்படுகிறது. இவ்வாறு ருஷ்டியின் இந்திய வருகை ரத்தானதற்கு பல்வேறு காரணங்கள் உலா வருகையில், அண்ணன் ஜமாஅத் வேறு ஒரு காரணத்தை சொல்கிறது.

''ததஜ ருஷ்டிக்கு விவாத அழைப்பு விடுத்து பல ஆண்டுகள் ஓடிவிட்டது. இந்த அறைகூவலை சந்திக்க இன்றுவரை ருஷ்டிக்கு தைரியம் பிறக்கவில்லை. ஓடி ஒளிந்து வருகிறார். இந்த தோல்வியை மறைக்கவே, கூலிப்படையை வைத்து அடிப்படைவாதிகள் தன்னைக் கொல்லப் போவதாக உளவுத்துறை சொல்வதாக, உளவுத்துறை மீது பழிபோட்டு, முஸ்லிம்களை இழிவு படுடுத்துகிறார் ருஷ்டி'
என்று கூறுகிறது அண்ணன் ஜமாஅத். அதாவது ருஷ்டி தனது இந்திய வருகையை ரத்து செய்ததற்கு காரணம் எங்களை விவாத களத்தில் சந்திக்க பயந்ததுதான் என்று படு பயங்கரமான 'ஜோக்'கை விடுத்துள்ளது அண்ணன் ஜமாஅத்.

முதலில் ஒருவர் விவாதத்தில் இருந்து ஓடி ஒளிகிறார் என்று எப்போது சொல்லமுடியும் என்றால், நமது விவாத அழைப்பை கடிதம் மூலமாகவோ, தொலைபேசி, மின்னஞ்சல், பேக்ஸ் மூலமாகவோ, அல்லது நேரடியாக சந்தித்தோ ஒருவருக்கு விடுத்தும் அவர் வரவில்லையானால், அல்லது அவர் படிக்கும்- பார்க்கும் ஒரு மீடியா மூலமாக விவாத அழைப்பு விடுத்து அந்த மீடியா செய்தி அவரை உறுதியாக சென்றடைந்தும் அவர் வரவில்லையானால் ஓடி ஒளிந்து விட்டார் என்று சொல்லலாம். அண்ணனின் தம்பிகளுக்கு இலகுவாக புரியும் வகையில் சொல்வதாக இருந்தால், அண்ணனை கால் நூற்றாண்டாக அபு அப்துல்லா விவாதத்திற்கு அழைக்க, அண்ணன் ஓடி ஒளிகிறாரே அதுபோன்று, சல்மான் ருஷ்டிக்கு முறையாக அண்ணன் ஜமாஅத் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லையானால் ஓடி ஒளிந்து விட்டார் என்று சொல்லலாம். அப்படி நேரடியாக முறையாக சல்மான் ருஷ்டிக்கு விவாத அழைப்பு விடாத அண்ணன் ஜமாஅத், 'எங்களுக்கு பயந்துதான் இந்தியா வராமல் ஓடி விட்டார்' என்று சொல்வது எலியை பார்த்து பூனை ஓடி விட்டது என்று சொல்வது போன்றதாகும் என்பதை அண்ணன் ஜமாஅத் விளங்கிக்கொள்ளட்டும். 

சரி.இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். கிறிஸ்தவ விவாதத்தில் ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை பொய்யானது என்று அண்ணன் சொன்னாரே! அது எந்த வகையில் பொய்யானது என்று கேட்டு பல நாட்கள் ஓடிவிட்டதே! இன்னும் அண்ணன் மூச்சு விடக் காணோமே?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010